புனர்பூசம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயவாதிகளாக இருப்பார்கள். இசையில் விருப்பமுடையவர்கள். நல்ல குணம்கொண்டவர்கள். சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாவார்கள். பலரும் மிக அமைதியான வாழ்க்கையை நடத்துவர். சிலர் பெண்மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மிகப்பெரிய திட்டங்களைத் தீட்டக் கூடியவர்கள். பலருக்கும் வழிகாட்டியாக இருப்பார்கள். அதிகமாக உணர்ச்சிவசப் படுபவர்கள். தன்னம்பிக்கை உள்ளவர்கள். பிறரை உறுதியாக நம்பக்கூடியவர்கள்.
ஆனால் பார்ப்பதற்கு மிக எளிய தோற்றத் தில் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்திற்கான ராசிகள் மிதுனம், கடகம். இதில் பிறந்தவர்கள் "ஃ, ஐ' ஆகிய ஆங்கில எழுத்துகளில் தொடங்கும் வண்ணம் பெயர் அமைக்கவேண்டும்.
யோனி- மார்ஜா (எலி); கணம்

யோனி- மார்ஜா (எலி); கணம்- தேவகணம்; நாடி- ஆதி நாடி. நட்சத்திர அதிபதி- அதிதி.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது குணமாக ஏழு நாட்களாகும். "அதிதி கோ ரித்தி' என்னும் மந்திரத்தைக் கூற நோய் குணமாகும். பித்தளையை தானமளிப்பது நன்று. கருவேல மரத்தை வழிபடவேண்டும். இந்த நட்சத்திரத்தின் கிரகம் குருபகவான்.
பிறக்கும்போது ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருந்தால் ஜாதகர்கள் மகிழ்வுடன் வாழ்வார்கள். குரு ஆறு அல்லது எட்டில் இருந்தால் காலில் அடிபடும். சிலருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும்.
சந்திரனுடன் குரு இருந்தால் ராஜயோகமுண்டு. மிக மகிழ்வுடன் வாழ்வார்கள். சந்திரனுடன் சேர்ந்து குரு உச்சமாக இருந்தால் அரசரைப் போல வாழ்வார்கள்.
செவ்வாயுடன் குரு லக்னத்தில் இருந்தால் பலசாலிகளாக இருப்பார் கள். குரு சனியுடன் சேர்ந்து நான்கில் இருந்தால் பிறந்த வீட்டு உறவு நன்றாக இருக்காது.
ராகுவுடன் குரு 8 அல்லது 12-ல் இருந்தால் குருசண்டாள யோகம் ஏற்படும். பல காரியங்கள் தடைப்படும். கேதுவுடன் குரு 5-ல் இருந்தால் குழந்தை கள் பிறப்பதில் சிக்கல் ஏற்படும். பலருக்கு வாரிசே இருக்காது.
பூசம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள். புலன்களை அடக்கி, சுய கட்டுப்பாட்டு டன் இருப்பார்கள். பணவசதி கொண்டவர் கள். தர்மத்தைக் காப்பாற்றக் கூடியவர்கள். எல்லாரிடமும் நற்பெயர் எடுப்பவர்களாக இருப்பர்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை மற்றவர்கள் அன்புடன் நோக்குவார்கள். சில நேரங்களில் மனதில் சோர்வு ஏற்படும். விரக்தி உண்டாகும். எனினும் கடுமையாக உழைப்பார்கள். எந்த செயலைச் செய்தா லும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள். முன்கூட்டியே பல விஷயங்களை உணரக்கூடியவர்கள். ஆராய்ச்சி மனம் கொண்டவர்கள். நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் விருப்பம்கொண்டவர்கள்.
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் "ஐ, உ' ஆகிய ஆங்கில எழுத்துகளில் தொடங்கும் பெயர்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நட்சத்திரத்திற்குரிய ராசி கடகம்.
யோனி- மேஷம் (ஆடு); கணம்- தேவ கணம்; நாடி- மத்திம நாடி. அதிபதி- சந்திரன். கிரகம் சனி.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நலக்குறைவு உண்டானால் அது குணமாக ஏழு நாட்களாகும். உடல் நலம்பெற குரு மந்திரத்தைக் கூறவேண்டும். எண்ணெய் தானம்செய்தல் நன்று. அரசமரத்தை வழிபடவேண்டும்.
பிறக்கும்போது ஜாதகத்தில் சனி சந்திரனுடன் சேர்ந்து 6, 8-ல் இருந்தால் இரண்டரை வயதுவரை குழந்தையின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி காய்ச்சல் வரும். லக்னத் தில் சனி உச்சமாக இருந்தால் மன்னரைப் போல வாழ்வார்கள். அந்த உச்ச சனியை குரு பார்த்தால் பலரும் மதிக்கத் தக்க வகையில் அரசியல்வாதியாகத் திகழ்வார்கள்.
சனி 4-ல் இருந்து அதை செவ்வாய் பார்த்தால் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். சனி தனித்து 8-ல் இருந்து அதை செவ்வாய் பார்த்தால் அடிக்கடி காலில் அடிபடும். ஆனால் நீண்ட ஆயுள் உண்டு. இருந்தாலும் வாழ்க்கையில் ஏதாவதொரு குறை இருக்கும். சனி ராகுவுடன் லக்னத்தில் இருந்தால் இல்வாழ்க்கையில் தொல்லைகள் ஏற்படும்.