மிருகசீரிடம்

மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசீகரமான தோற்ற முடையவர்கள். பலசாலிகள். தான் விரும்பிய விஷயங்கள் இன்னும் கிடைக்கவில்லையே என்னும் மனக்குறையுடன் எப்போதும் இருப்பார்கள். கூட்டுக்குடும்பமாக வாழ்வதில் விருப்பமுள்ளவர்கள்.

பலர் சமூக ஆர்வலர்களாக இருப்பார்கள். தான் செய்யும் காரியங்களில் மிகவும் அக்கறை கொண்டவர்கள். பலரது மனம் எப்போதும் அலை பாய்ந்த வண்ணம் இருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் நியாயவாதி களாக இருப்பார்கள். இசைப் பிரியர்கள். கலைஞர்களாகவும் இருப்பார்கள். திறமையான வணிகர்களாக விளங்குவார்கள். ஆராய்ச்சி யாளராகவும் பலர் இருப்பார்கள். சிலர் மற்றவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடிய குணம் படைத்தவர்கள். பலரையும் கட்டியாளும் திறமை மிக்கவர்கள். உதவி செய்யும் குணமும் இருக்கும்.

27stars

Advertisment

இந்த நட்சத்திரத்தின் பிறந்தவர்கள் 'ய, ஞ' ஆகிய ஆங்கில எழுத்துகளில் ஆரம்பிக்கும் பெயரை சூட்டிக்கொள்ள வேண்டும்.

யோனி- சர்ப்பம்; கணம்- தேவ கணம்; நாடி- மத்திம நாடி. நட்சத்திர அதிபதி- சந்திரன்.

மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது 30 நாட்களுக்கு நீடிக்கும். நோய் குணமாக "இம் தேவேதி' மந்திரத்தைக் கூறவேண்டும். எள் தானம் செய்யவேண்டும். செங்கருங்காலி மரத்தை வழிபட்டால் நோய் குணமாகும். நட்சத்திரத்திற்குரிய கிரகம் செவ்வாய். பிறக்கும்போது ஜாதகத்தில் செவ்வாய் 12-ல் இருந்தால் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வரும். செவ்வாய் 1, 4, 7, 8, 12-ல் இருந்தால் அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். அவர்கள் எல்லாரிட மும் கடுமையாக நடந்துகொள்வார்கள். வீட்டில் கிணறு, நீர்த்தொட்டி ஆகியவை தெற்கு மத்தியப் பகுதி அல்லது தென் கிழக்கில் இருந்தால், அந்த வீட்டில் பிறக் கும் குழந்தைக்கு அடிக்கடி நோய் வரும்.

ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாக இருந்தால் அல்லது குருவுடன் இருந்தால் அந்த ஜாதகர் பிறரது சொத்துகளை தனது சொத்தாக நினைத்து செயல்படுவார். பிறர் பணத்தில் மகிழ்வுடன் வாழ்வார். சந்திரன், செவ்வாயுடன் நல்ல நிலையில் இருந்து அதை குரு பார்த்தால், அந்த ஜாதகர் அரசியல்வாதியாக இருப்பார். நன்கு பணம் சம்பாதிப்பார். மகிழ்வுடன் வாழ்வார்.

திருவாதிரை

இதற்கு ஆருத்ரா நட்சத்திரம் என்றும் பெயருண்டு. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல மொழிகளை அறிந்தவர் கள். எப்போதும் அதிகாரத் தோரணை யுடன் இருப்பார்கள். சுய கௌரவத்தைப் பெரிதாக நினைப்பார்கள். நல்ல தோற் றத்தை உடையவர்கள். ஆண்களுக்கு முகத்தின் தாடைப்பகுதி பெண் களைப்போல சிறிதாக இருக்கும்.

பலர் கற்பனை வளம் கொண்டவர்கள். கடுமையான உழைப்பாளிகள். கொள்கைகளை விட்டுத்தர மாட்டார்கள். இரக்க சுபாவம் உடையவர்கள். பணவசதிகளுடன் வாழ்வார்கள். பலர் உரிய நேரத்தில் உணவுண்ண மாட்டார்கள். தாராளமாக செலவழிக்கக் கூடியவர்கள். பிறரிடமுள்ள குறைகளை அறிந்துகொள்ளும் திறமையுடையவர்கள். முன்னோர்களின் சொத்தை நன்கு அனுபவித்து மகிழ்வுடன் இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் "ஃ, உ, ஈ'ஆகிய ஆங்கில எழுத்துகளில் தொடங்குமாறு பெயரை அமைத்துக் கொள்ளவேண்டும்.

யோனி- நாய்; கணம்- நர கணம்; நாடி- ஆதிநாடி. நட்சத்திர அதிபதி- ருத்ரன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய்வந்தால் அது குணமாக 18 நாட்களாகும். "நமஸ்தே ருத்ர இத்தி' என்னும் மந்திரத்தைக் கூறிவந்தால் நோய் குணமாகும். புன்னை மரத்தை வழிபடவேண்டும். இந்த நட்சத்திரத் தின் கிரகம் ராகு.

பிறக்கும்போது ராகு கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றில் ஒன்றில் இருந்தால் நன்மைகள் நடக்கும். அதே ராகு 8-ல் இருந்து சந்திரனும் உடனிருந்தால் பிறக்கும் குழந்தைக்கு சுவாசநோய் ஏற்படும். ஜாதகத்தில் செவ்வாயுடன் ராகு 6, 8, 12-ல் இருந்தால் அந்த ஜாதகருக்கு அடிக்கடி காய்ச்சல் வரும். 10-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகர் இளம்வயதில் துன்பப்படுவார். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.

ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இல்லாமலிருந்தால் வீட்டில் பல தோஷங்கள் இருக்கும். தேவையற்ற பொருட்களை வீட்டில் சேர்த்துவைத்தால் அங்குள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் வரும். மகிழ்ச்சியான சூழல் இருக்காது.

3-ல் ராகு இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். 9-ல் ராகு இருந்தால் இளமை யில் துன்பப்பட்டாலும் வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும். 10-ல் ராகு இருந்து அதை குரு பார்த்தால் ஜாதகர் பெரிய அரசியல்வாதி யாக வருவார்.

(தொடரும்)

செல்: 98401 11534