அவிட்டம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சராசரி உயரத்தைக் கொண்டிருப்பார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசுவார்கள். சந்தோஷமாக இருக்கமாட்டார்கள். பிடிவாத குணமுள்ளவார்கள்.
பலர் கடுமையான உழைப்பாளி களாக இருப்பார்கள். சுயமரியாதையை எதிர்பார்ப்பார்கள். அதிகமாகப் பேசக் கூடியவர்கள். சூழலைப்பற்றி கவலையே படாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். தலைவரைப்போல வாழ்வார்கள்.
பயணத்தில் விருப்பமுள்ளவர்கள். வெளிநாடுகளுக்குக்கூட பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல பணவசதி உள்ளவர்களாக இருப்பார்கள். அதிகமாக செலவு செய்யக் கூடியவர்கள். இசை ரசிகர்கள். மற்றவர்களை எப்போதும் குறை கூறக் கூடியவர்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு "ஏ' என்ற ஆங்கில எழுத்தில், ஏங்,ஏஹ என்று பெயர் ஆரம்பிக்கவேண்டும்.
யோனி- சிம்மம்; கணம்- ராட்சசம்; நாடி- மத்திமநாடி; கிரகம்- செவ்வாய்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டால், அது குணமாவதற்கு 15 முதல் 20 நாட்க
அவிட்டம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சராசரி உயரத்தைக் கொண்டிருப்பார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசுவார்கள். சந்தோஷமாக இருக்கமாட்டார்கள். பிடிவாத குணமுள்ளவார்கள்.
பலர் கடுமையான உழைப்பாளி களாக இருப்பார்கள். சுயமரியாதையை எதிர்பார்ப்பார்கள். அதிகமாகப் பேசக் கூடியவர்கள். சூழலைப்பற்றி கவலையே படாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். தலைவரைப்போல வாழ்வார்கள்.
பயணத்தில் விருப்பமுள்ளவர்கள். வெளிநாடுகளுக்குக்கூட பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல பணவசதி உள்ளவர்களாக இருப்பார்கள். அதிகமாக செலவு செய்யக் கூடியவர்கள். இசை ரசிகர்கள். மற்றவர்களை எப்போதும் குறை கூறக் கூடியவர்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு "ஏ' என்ற ஆங்கில எழுத்தில், ஏங்,ஏஹ என்று பெயர் ஆரம்பிக்கவேண்டும்.
யோனி- சிம்மம்; கணம்- ராட்சசம்; நாடி- மத்திமநாடி; கிரகம்- செவ்வாய்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டால், அது குணமாவதற்கு 15 முதல் 20 நாட்கள்வரை ஆகும். நோய் குணமாவதற்கு "வஸு பவித்ரேதி' மந்திரத்தைக் கூறவேண்டும். உணவு, குதிரை ஆகியவற்றை தானமளிக்க வேண்டும். தென்னை மரத்தை வழிபட வேண்டும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜாதகத்தில், லக்னத்தில் செவ்வாய் சுய வீட்டிலோ உச்சத்திலோ இருந்தால், அவர்கள் தைரியசாலி-களாக இருப்பார் கள். பூமி, வாகனம் இருக்கும். புகழ் பெற்றவர்கள்.
செவ்வாயை குரு பார்த்தால் ருசக யோகத்தால், இராணுவம், காவல் துறை ஆகியவற்றில் பெரிய பதவிகளில் இருப்பார்கள். செவ்வாய் புதனுடன் லக்னத்தில் அல்லது 5-ல் இருந்து, அதை குரு பார்த்தால், பெரிய விவசாயிகளாக இருப்பார்கள்.
செவ்வாய் 2-ல் இருந்து, அதை குரு பார்த்தால், சிலருக்கு சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. ஆனால் பூமி, வாகனம் ஆகியவை இருக்கும். செவ்வாய் சனியுடன் லக்னம் அல்லது 4, 7, 8, 12-ல் இருந்தால், திருமணத்தில் பிரச்சினை உண்டாகும். சிலருக்கு அதிகமாக கோபம் வரும்.
செவ்வாய், குரு, சூரியன், புதன் 5-ல் இருந்தால், அரசாங்கத்தில் பெரிய பதவிகளில் இருப்பார்கள். செவ்வாய், குரு, சூரியன் 10-ல் இருந்தால் பெரிய தலைவராக இருப்பார்கள்.
செவ்வாய், ராகு, சூரியன், சனி 6-ல் இருந்தால் வயிற்றில் நோய் இருக்கும். சிலர் அதிகமாக கோபப்படுவார்கள்.
சிலருக்கு தூக்கம் சரியாக வராது. சிலருக்கு மறுமணம் நடக்கும்.
சதயம்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் பலர் காமசிந்தனை உள்ளவர்கள்.
அனைத்து சுகங்களும் கிடைக்கவேண்டு மென்று ஆசைப்படுவார்கள். புகழுடன் இருப்பார்கள். கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருப்பார்கள்.
வயதானவர்களுக்கு சேவை செய்வார்கள். சட்டத்தை உருவாக்குபவர்களாக இருப்பார்கள். எப்படி வாழவேண்டு மென்று பிறருக்கு வழிகாட்டுவார்கள். அறிவாளிகள். மற்றவர்களைப் பாராட்டக் கூடியவர்கள்.
கடுமையான உழைப்பாளிகள். பிறருக்கு நன்மை செய்பவர்களாக இருப்பார்கள். மனதில் காதல் உணர்வு கொண்டவர்கள். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். எப்போதும் உற்சாகம் நிறைந்திருக் கும். தனிமையில் இருப்பதை விரும்புவார்கள். எதையும் ஆராய்ந்து பார்க்கக் கூடியவர் கள். நல்ல பணவசதியுடன் இருப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு "ஏ, ந' ஆகிய ஆங்கில எழுத்துக்களில் பெயர் ஆரம்பிக்கவேண்டும்.
யோனி- அஸ்வ யோனி; நாடி- ஆதி நாடி; கணம்- ராட்சசம்; கிரகம்- ராகு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால், அது குணமாக மூன்றுமுதல் 22 நாட்கள்வரை ஆகும். நோய் குணமாக, "வருண ஸ்தம்பவேதி' மந்திரத்தைக் கூறவேண்டும். உணவை தானமளிக்கவேண்டும். மாமரத்தை வழிபடவேண்டும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் ஜாதகத்தில் ராகு உச்சமாக இருந்தால், தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். தன் காரியத்தில் மிகுந்த கவனம் உள்ளவர்கள். லக்னத்தில் ராகு இருந்து அதை குரு பார்த்தால், அவர்கள் ஆராய்ச்சி மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். சிலருக்கு கோபம் அதிகமாக வரும்.
ராகு, சூரியன், சந்திரனுடன் லக்னத்தில் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் நிறைய கஷ்டங்களை அனுபவிப்பார்கள். ஆனால், பிற்பகுதி மிகவும் சந்தோஷமானதாக இருக்கும்.
ராகு, லக்னாதிபதியுடன் 12-ல் இருந்தால், சிலருக்கு தலைவலி- வரும். வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கும். ராகு, சுக்கிரனுடன் 3, 6-ல் இருந்தால், திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. ராகு, சுக்கிரன், செவ்வாய் 8-ல் இருந்தால், ஏற்கெனவே திருமணமான ஆண் அல்லது பெண்ணுடன் திருமணம் நடக்கும்.
ராகு 8-ல் இருந்து அதை செவ்வாய் பார்த்தால், ராகு தசையில் வயிற்றில் கட்டி உருவாகும் அல்லது வயிற்றில் நோய் இருக்கும்.
ராகு 10-ல் இருந்து, லக்னாதிபதி வலுவாக இருந்தால், அவருக்கு ராகு தசை நடக்கும்போது புகழுடன் வாழ்வார்.
9-ல் ராகு இருந்து, லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில், 27 வயதுவரை கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். பிற்பகுதி நன்றாக இருக்கும்.
ராகு 11-ல் சனியுடன் இருந்தால், ராகு தசை நடக்கும்போது பணம் வந்துசேரும். சிலருக்கு ஒரு காலி-ல் நோய் ஏற்படும். ராகு, செவ்வாய், சூரியன் 2-ல் இருந்தால், பேச்சால் நல்ல சூழலைக் கெடுத்துவிடுவார்கள்.
அதன்மூலம் தன் காரியம் கெடுமள விற்கு நடந்துகொள்வார்கள்.
செல்: 98401 11534