ரேவதி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல உடல்நலத்துடன், புகழுடன் இருப்பார்கள். பலசா-கள். பலரையும் திருத்துவார்கள். பலராலும் மதிக்கப்படும் நபர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் பிறரை மதிப்பார்கள்.
நாட்டின்மீது பற்றுள்ளவர்களாக இருப்பார்கள். தன் காரியங்களில் மிகவும் கவனமாக இருப்பார்கள். எதையும் திட்டமிட்டு செயல்படுவார்கள். திரைப்படத் துறையில் சிலர் தயாரிப்பாள ராகவோ இயக்குநராகவோ இருப்பார்கள்.
சிலர் வாதம் செய்யக் கூடியவர்கள். ஆராய்ச்சி மனம் கொண்டவர்களாக சிலர் இருப்பார்கள். எதையும் புலன் விசாரணை செய்யக் கூடிய வர்கள்.ஆழமாக சிந்திப்பார்கள். சிலர் அரசிய-ல் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த வர்களுக்கு 'உ, ஈ' ஆகிய ஆங்கில எழுத்துகளில் பெயர் ஆரம்பிக்கவேண்டும்.
யோனி- கஜ யோனி; நாடி- அனந்த நாடி; கணம்- தேவ கணம்; கிரகம்- புதன்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு உண்டானால், அது குணமாவதற்கு 9 முதல் 18 நாட்கள்வரை ஆகும். நோய் குணமாவதற்கு, 'புஷ்நத..வன்' மந்திரத்தைக் கூறவேண்டும். காளையை தானமளிக்க வேண்டும். இலந்தை மரத்தை வழிபடவேண்டும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் புதன் லக்னாதிபதியாக இருந்து, லக்னத்தில் உச்சமாக இருந்தால் பத்ரயோகம் உண்டாகும்.
பத்ரயோகத்தாலும், சுய முயற்சியாலும் அவர்கள் புகழுடன் வாழ்வார்கள். சிலர் இளம் வயதில் நிறைய கஷ்டங்களை அனுபவிப் பார்கள்.
புதன், சூரியனுடன் கேந்திரத்தில் இருந்தால் புதாதித்ய யோகம் உண்டாகும். அதனால் சிலர் கலைத் துறையில் நிபுணர்களாக இருப்பார்கள். சிலர் சிறந்த ஆராய்ச்சியாளராகவும், எழுத்தாளர் களாகவும், பேச்சாளர்களாகவும் இருப்பார்கள். சிலர் சொந்தத்தில் தொழில் செய்வார்கள்.
புதனை குரு நல்லநிலையில் பார்த்தால், சிலர் பெரிய கணக்காளராகவோ ஆடிட்டராகவோ இருப்பார்கள். சிலர் அரசு சம்பந்தப்பட்ட கணக்குகளைப் பார்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
புதன், செவ்வாய், சூரியன் லக்னம் அல்லது 11-ல் இருந்தால், சிலர் பொறியியல் நிபுணர்களாக இருப்பார்கள். சிலர் நகைக்கடை அதிபர்களாக இருப்பார்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள்.
புதன் பலவீனமாக செவ்வாயுடன் அல்லது 12-ல் இருந்தால் தோல்நோய் வரும். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும்.
புதன், சனியுடன் 7-ஆவது பாவத்தில் இருந்தால், உடல்நல பாதிப்பு உண்டாகும். ஆணுறுப்பில் பிரச்சினை இருக்கும்.
புதன்,சுக்கிரனுடன் லக்னத்தில் இருந்து, இளம்வயதில் சுக்கிரதசை நடந்தால், அந்த வயதில் அவர்கள் கெட்டு விடுவார்கள்.
புதன் கெட்டுப்போயிருந்தால், அவர்களுக்கு சகோதரர்கள், மகள்கள், அத்தை ஆகியோருடன் உறவு சரியாக இருக்காது. அந்த பெண்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.
புதன், செவ்வாய், சுக்கிரனுடன் இருந்தால், காம எண்ணங்கள் அதிகமாக இருக்கும். அதனால் சிலரின் பெயர் கெடும்.
புதன் சரியில்லையென்றாலும், 4-ல் ராகுவுடன் இருந்தாலும் பற்களில் நோய் வரும். இளம்வயதில் பற்களில் சொத்தை உண்டாகும்.
ஜாதகத்தில் புதன் சரியில்லையென்றால், வீட்டில் படிக்கட்டிற்குக்கீழே கழிவுநீர் அறை, குளியலறை ஆகியவற்றைக் கட்டுவார்கள். அதனால் தோல்நோய் வரும். மகள்களுக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும்.
ஜாதகத்தில் இரண்டாம் பாவத்தில் சூரியன், சுக்கிரன், சந்திரனுடன் புதன் இருந்தால், அவர்களுக்கு உயிரியல் படிப்பு நன்றாக வரும். சிலர் புகழ்பெற்ற மருத்துவராக இருப்பார்கள். சிலருக்கு கண்ணில் நோய் வரும். அதனால்,கண்ணாடி போடவேண்டிய திருக்கும்.
புதன், சுக்கிரன், சந்திரன்,செவ்வாய் 5-ஆவது வீட்டில் இருந்தால், பித்தப் பையில் நோய்வரும்.
செல்: 98401 11534