Advertisment

27 நட்சத்திர சிறப்பம்சங்கள்! 13

/idhalgal/balajothidam/27-star-highlights-13

பூரட்டாதி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணவசதி படைத்தவர்கள். தங்களின் வேலைகளை முழுமையாக முடிப்பார்கள். கடுமையான உழைப்பாளிகள். உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். மென்மையான குணம் கொண்டவர்கள். எதையும் வெளிப்படையாகப் பேசுபவர் களாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சரியாக இருக்கமாட்டார்கள். எந்த விஷயத்திலும் திருப்தியே அடையாத வர்கள். எப்போதும் சட்டம் பேசிக்கொண்டி ருப்பார்கள்.

Advertisment

எதையும் கறாராகப் பேசுவார்கள். பலர் காம இச்சை கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் சிந்தனை யிலேயே இருப்பார்கள். பயந்த சுபாவம் உள்ளவர்கள். எதையும் முன்னின்று செய்ய விரும்புவார்கள்.

Advertisment

இந்த நட்சத் திரத்தில் பிறந்தவர்களுக்கு 'S, D' ஆகிய ஆங்கில எழுத்துகளில் பெயர் ஆரம்பிக்க வேண்டும்.

27

யோனி- சிம்மம்; கணம்- நர கணம்; நாடி- ஆதி நாடி; கிரகம்- குரு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால், அது குணமாவ தற்கு 12 முதல் 19 நாட்கள்வரை ஆகும். நோய் குணமாக, "அஹி புத்யேதி' மந்திரத்தைக் கூறவேண்டும். உணவை த

பூரட்டாதி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணவசதி படைத்தவர்கள். தங்களின் வேலைகளை முழுமையாக முடிப்பார்கள். கடுமையான உழைப்பாளிகள். உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். மென்மையான குணம் கொண்டவர்கள். எதையும் வெளிப்படையாகப் பேசுபவர் களாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சரியாக இருக்கமாட்டார்கள். எந்த விஷயத்திலும் திருப்தியே அடையாத வர்கள். எப்போதும் சட்டம் பேசிக்கொண்டி ருப்பார்கள்.

Advertisment

எதையும் கறாராகப் பேசுவார்கள். பலர் காம இச்சை கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் சிந்தனை யிலேயே இருப்பார்கள். பயந்த சுபாவம் உள்ளவர்கள். எதையும் முன்னின்று செய்ய விரும்புவார்கள்.

Advertisment

இந்த நட்சத் திரத்தில் பிறந்தவர்களுக்கு 'S, D' ஆகிய ஆங்கில எழுத்துகளில் பெயர் ஆரம்பிக்க வேண்டும்.

27

யோனி- சிம்மம்; கணம்- நர கணம்; நாடி- ஆதி நாடி; கிரகம்- குரு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால், அது குணமாவ தற்கு 12 முதல் 19 நாட்கள்வரை ஆகும். நோய் குணமாக, "அஹி புத்யேதி' மந்திரத்தைக் கூறவேண்டும். உணவை தானமளிக்க வேண்டும். கடம்ப மரத்தை வழிபடவேண்டும்.

பிறக்கும்போது ஜாதகத்தில் குரு லக்னத்தில் சுய வீட்டிலோ உச்சமாகவோ இருந்தால், ஹம்ச யோகம் உண்டாகும். அதனால் புகழுடன் வாழ்வார்கள். வீட்டில் சந்தோஷம் நிலவும். குரு, சந்திரனுடன் லக்னத்தில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும். அதனால் அவர் பலராலும் மதிக்கப்படுவார்.

5-ல் குரு இருந்து, சனி அல்லது ராகுவால் பார்க்கப்பட்டால் குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும். 5-ல் குரு, புதன், சந்திரனுடன் இருந்தால் புகழுடன் இருப்பார்கள்.

குரு, செவ்வாய் 9-ல் இருந்தால் பூர்வீக சொத்து வந்துசேரும். கடுமையாகப் பேசும் குணமிருக்கும். 6-ல் குரு இருந்து சனியால் பார்க்கப்பட்டாலும், 8-ல் செவ்வாய் இருந்தாலும் காலில் அடிபடும்.

3-ல் குரு இருந்தால் நிறைய பயணம் மேற்கொள் வார்கள். 7-ல் குரு தனித்திருந்தால், திருமண விஷயத்தில் பிரச் சினை இருக்கும். 8-ல் குரு, ராகு, சனி இருந்தால் கல்லீரலில் பிரச் சினை இருக்கும். 10-ல் குரு தனித் திருந்தால், செய்து கொண் டிருக்கும் தொழிலை மாற்றவேண்டிய திருக்கும். நிரந்தர வருமானம் இருக்காது.

10-ல் குரு, சந்திரன், செவ்வாய் இருந்தால், பெரிய பதவிகளில் இருப்பார்கள். சிலர் நீதிபதிகளாகவும், சிலர் அரசியல்வாதிகளாகவும் இருப்பார்கள். 12-ல் குரு இருந்தால் கோபம் அதிகமாக வரும். தன்னைப்பற்றிய ரகசியத்தை யாராவது தெரிந்துகொண்டால் அதிகமாகக் கோபப்படுவார்கள்.

பெண்களின் ஜாதகத்தில் 12-ல் குரு இருந் தால், திருமணத்திற்குப் பிறகு நிறைய பண வசதியுடன் அரசியைப்போல வாழ்வார்கள்.

உத்திரட்டாதி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பலரும் விரும்புவார்கள். தலைமைதாங்கி பல செயல்களையும் செய்வார்கள். அறிவாளிகள். சிலர் அறிவியல் நிபுணர்களாக இருப்பார்கள். கலாரசிகர்கள். சிந்தனையில் ஈடுபடக் கூடியவர்கள். இனிமையாகப் பேசுவார்கள். தன்மானத்துடன் வாழ்பவர்கள். புத்திசாலிகள்.

சிலர் கலைஞர்களாகவும், சிலர் எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள். பலர் எச்சரிக்கையுடன் செயல்படக்கூடிய வியாபாரிகளாக இருப்பார்கள். இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள். எதையும் எடைபோட்டுப் பேசக் கூடியவர்கள்.

வாத, விவாதம் செய்யக் கூடியவர்கள். பழம்பெருமை கொண்ட பொருட் களின்மீது ஈடுபாடு உள்ளவர்கள். பணம், நகைகள் ஆகியவற்றை வீட்டில் சேர்த்து வைப்பவர்களாக இருப்பார்கள். சிலர் பெண்களின்மீது மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு 'உ' என்னும் ஆங்கில எழுத்தில் பெயர் ஆரம்பிக்கவேண்டும்.

யோனி- பசு; கணம்- நர கணம்; நாடி- மத்திம நாடி; கிரகம்- சனி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால், நோய் குணமாவதற்கு 9 முதல் 15 நாட்கள்வரை ஆகும். நோய் குணமாக, "அகிர் புதயேதி' மந்திரத்தைக் கூறவேண்டும். அன்னதானம் செய்யவேண்டும். மருதாணி மரத்தை வழிபடவேண்டும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சனி லக்னத்தில் உச்சமா கவோ சுயவீட்டிலோ இருந்தால், சச யோகம் உருவாகும். அதனால் புகழ்மிக்கவர்களாக இருப்பார்கள். சிலர் புகழ்பெற்ற கலைஞர் களாக இருப்பார்கள். பெண்களாக இருந்தால், கணவரின் தாயுடன் எப்போதும் சண்டை போடவேண்டிய சூழல் இருக்கும்.

சனி, சூரியனால் பாதிக்கப்பட்டால், சிலர் அறிவியல் அறிஞர்களாக வருவார் கள். சிலருக்கு ரத்த அழுத்தம், சிலருக்கு இதயத்தில் பிரச்சினை இருக்கும். சனி இரண்டாம் பாவத்தில் இருந்தால், சிலர் தேவையற்றதைப் பேசுவார்கள். அந்த சனியை செவ்வாய் பார்த்தால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் உண்டாகும்.

5-ல் சனி, செவ்வாய் இருந்தால் சிலருக்கு வயிற்றில் தொந்தரவிருக்கும். சிலருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும். பெண்ணின் ஜாதகமாக இருந்து, 5-ல் சனி, செவ்வாய், ராகு இருந்தால், மாதவிடாய் சரியாக வராது. கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும்.

6-ல் சனி இருந்தால் பகைவர்களே இருக்க மாட்டார்கள். அந்த சனி நீசமாக இருந்தால், சிலருக்கு பித்தநோய் ஏற்படும். சிலருக்கு முதுகுத்தண்டில் நோய் இருக்கும். அஷ்டமத் தில் சனி சுயவீட்டில் இருந்தால், நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். ஆனால் சனி பல வீனமாக இருந்தால் ஏதாவது நோய் வரும்.

10 -ல் சனி இருந்து அது குருவால் பார்க் கப்பட்டால், பெரிய பதவிகளில் இருப்பார் கள். ஆனால் அந்த சனி பலவீனமாக இருந் தால் பல விஷயங்களில் தடைகள் உண்டா கும். சனி, குரு 4 அல்லது 12-ல் இருந்தால் தாய்க்கு உடல்நல பாதிப்பு இருக்கும். சனி, செவ்வாய், சூரியன் 12-ல் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும்.

செல்: 98401 11534

bala040621
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe