உத்திராடம்
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகள். சிறந்த பேச்சாளர்கள். தன்மானத்துடன் வாழ்வார்கள். பலர் அரசுப் பதவிகளில் இருப்பார்கள். அதில் புகழ்பெறுவார் கள். கொடுக்கல்- வாங்கல் போன்ற விஷயங்களில் சரியாக இருப்பார்கள். வியாபாரத்திலும் மிக கவனமாக இருப் பார்கள். கலைஞர்கள். அரசியல்வாதிகள். பயணத்தில் விருப்பமுடையவர்கள். சிலர் பிடிவாதகுணம் கொண்டவர்கள்.
நன்கு படித்தவர்கள். சந்தர்ப்ப சூழலுக்கேற்ப செயல்படும் திறமையுள்ளவர்கள். எதிலும் எச்சரிக்கையுணர்வுடன் இருப்பார்கள். எங்கும் தங்களுக்கு மதிப்பிருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 'இ, ஓ' ஆகிய ஆங்கில எழுத்துகளில் பெயர் ஆரம்பிக்கவேண்டும்.
யோனி- நகுல்; கணம்- நர கணம்; நாடி- அனந்த நாடி; அதிபதி- சூரியன்.
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது குணமாக 16 முதல் 24 நாட்கள்வரை ஆகும். நோய் குணமாக "விஸ்வ தேவேதி' மந்திரத்தைக் கூறவேண்டும். உணவு தானமளிக்கவேண்டும். பலா மரத்தை வழிபடுதல் நன்று.
பிறக்கும்போது ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருந்தால் தந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சி இருக்காது. சூரியன் 12-ல் இருந்தால்- அதுவும் கடகத்தில் இருந்தால் ஜாதக ருக்கு சூரியதசை நடக்கும்போது பெரிய அளவில் சொத்தை இழக்கநேரும். சூரியன், ராகு, சனி சேர்ந்து 12-ல் இருந்தால் பித்ரு தோஷம் இருக்கும். தந்தைக்கு பாதிப்பு ஏற்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்போது ஏதாவது இடையூறு கள் ஏற்படும்.
சூரியன், குரு இணைந்து லக்னத்தில் இருந்தால் புகழ்பெறுவார்கள். சூரியன், குரு, புதன், செவ்வாய் இணைந்து 5-ல் இருந்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற உயர்பதவிகளில் இருப்பார்கள்.
10-ல் சூரியன், புதன், குரு இருந்தால் பெரிய பதவிகளில் புகழுடன் திகழ்வார்கள். 11-ல் சூரியன் இருந்தால் ஒரு ஆண் வாரிசு மட்டும் இருக்கும். அந்த வாரிசால் தந்தைக்கு மகிழ்ச்சிகரமான சூழல் அமையும்.
சூரியன், சுக்கிரன், சந்திரன் சேர்ந்து 2 அல்லது 12-ல் இருந்தால் கண்களில் நோய் ஏற்படும். அந்த கிரகங்களை சனி பார்த்தால் அறுவைசிகிச்சை செய்யும் சூழல் ஏற்படும். சூரியன், கேது, செவ்வாய் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் திருமண விஷயத்தில் பிரச்சினைகள் தோன்றும். கோப குணம் அதிகமாக இருக்கும். சூரியன், புதன் இணைவு 3-ல் இருந்து, அதை 9-ல் இருக்கும் குரு பார்த்தால் பெரிய பதவி வகிப்பார்கள்.
சூரியன், சுக்கிரன் சேர்ந்து லக்னத்தில் இருக்க, அதை குரு பார்த்தால் கலைஞர் களாக- பாடகர்களாக புகழுடன் விளங்கு வார்கள்.
திருவோணம்
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு பிறரை ஈர்க்கும் தோற்றம் இருக்கும். நல்ல மனிதர்கள். எல்லாரையும் மதிப்பார்கள். சிவந்தநிறம் கொண்டவர்கள். கலையின்மீது ஈடுபாடிருக்கும். புகழுடன் வாழ்வார்கள். பரந்தமனம் கொண்டவர்கள். நாட்டுப்பற்று இருக்கும். வாழ்க்கையில் முன்னேறக் கூடியவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
அனைவராலும் விரும்பப்படுவார்கள். கடுமையான உழைப்பாளிகள். போராடி வெற்றிகாண்பார்கள். எதையும் பெரிதாக செய்யவே விரும்புவார்கள். பலரையும் ஆளுமை செய்யக்கூடியவர்கள்.
யோனி- குரங்கு; கணம்- தேவ கணம்; நாடி- அனந்த நாடி; அதிபதி- சந்திரன்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது குணமாக 6 முதல் 24 நாட்கள்வரை ஆகும். நோய் குணமாக மகாவிஷ்ணுவின் மந்திரத்தைக் கூறவேண்டும் தேங்காய் தான மளிக்க வேண்டும். வெள்ளெ ருக்கு விருட்சத்தை வழிபட வேண்டும்.
இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு 'ஃ' என்னும் ஆங்கில எழுத்தில் பெயர் தொடங்கவேண்டும்.
பிறக்கும்போது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இந்த நட்சத்திர ராசிக்கு சந்திரன் ஏழாமதிபதி. சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் நன்மைகள் செய்வார். சந்திரன் உச்சமாக இருந் தால் பிறரை ஈர்க்கும் வண்ணம் செயல்படுவார் கள். பேச்சால் மற்றவர்களை அடிபணியச் செய்வார்கள். சந்திரன் சனியுடன் இருந்து அதை செவ்வாய் பார்த்தால் வயிறு சார்ந்த நோய் வரலாம். சந்திரன், செவ்வாய் 11-ல் இருந்தால் பணவசதி நன்றாக இருக்கும். சந்திரன், குரு, புதன், சுக்கிரன் இணைந்து 5 அல்லது 9 அல்லது 11-ல் இருந்தால் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளராக வும் பெரிய பதவிகளிலும் மகிழ்வுடன் வாழ் வார்கள்.
10-ல் சந்திரன், சூரியன், குரு, புதன், செவ்வாய் இணைந்திருந்தால் புகழ்பெற்ற மருத்துவர் களாக விளங்குவார்கள். நான்காம் பாவத்தில் சந்திரன் இருந்து அதை குரு பார்த்தால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சந்திரன், சுக்கிரன் 2 அல்லது 4 அல்லது 9-ல் இருந்து அதை குரு பார்த்தால் அனைத்து வசதிகளுடனும் அருமை யான வாழ்க்கை வாழ்வார்கள்.
.(தொடரும்)
செல்: 98401 11534