மூலம்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழுடன் திகழ்வார்கள். எதிலும் வெற்றிபெறக் கூடியவர்கள். பிறருக்கு நன்மை செய்பவர்

கள். கலைத்துறையில் நிபுணர்கள். சிலர் விஞ்ஞானிகளாக இருப்பார்கள். அரசியல் வாதிகளாகவும் ஆராய்ச்சியாளர் களாகவும் சிலர் இருப்பார்கள். நினைத்த காரியங்களை முடிக்கக்கூடியவர்கள் சராசரி நிறம், சராசரி உயரம் கொண்டவர்கள்.

உடல்வலி-மை மிக்கவர்கள். கடுமையான உழைப்பாளிகள். நல்லகுணம் கொண்டவர்கள். சிலர் காமவேட்கை மிக்கவர்களாக இருப்பார் கள். பரந்தமனம் உள்ளவர்கள். தைரியசாலி-கள். எதையும் நேர்மையுடன் செய்துமுடிப்பார்கள்.

Advertisment

27

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 'வ, இ' ஆகிய ஆங்கில எழுத்துகளில் பெயர் ஆரம்பிக்கவேண்டும்.

யோனி- ஸ்வான் (நாய்); கணம்- ராட்சஸ கணம்; நாடி- ஆதிநாடி; அதிபதி- கேது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது குணமாக ஒன்பது முதல் 15 நாட்கள் வரையாகும். நோய் குணமாக "மாதா புத்ரேதி' மந்திரத்தைக் கூறவேண்டும். வெள்ளிப் பாத்திரம் தானமளித்தல் நன்று. வெண் குங்கிலி-ய மரத்தை வழிபடவேண்டும்.

பிறக்கும்போது லக்னத்தில் கேது இருந்து அதை குரு பார்த்தால், ஜாதகர் தைரியமாகப் பேசுவார். செவ்வாயுடன் கேது இருந்தால் இளம்வயதில் உடல்நல பாதிப்பு ஏற்படும். மணவாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும்.

கேது 2-ல் இருந்தால் பிறரை மதிக்க மாட்டார்கள். கேது, சனி, செவ்வாய் சேர்க்கை 6-ல் இருந்தால் காலி-ல் நோய் ஏற்படும். 8-ல் இருந்தால் திருமணத்தில் பிரச்சினைகள் ஏற்படும். உடல்நல பாதிப்பு உண்டாகும். 3-ல் கேது இருந்தால் அறிவாளிகளாக இருப்பார்கள். ஆனால் இளம்வயதில் துன்பங்கள் ஏற்படும். கேதுவை குரு பார்த்தால் கடவுள் அருளால் மனதில் எண்ணியதை முடிப்பார்கள்.

கேது, சுக்கிரன் 2 அல்லது 12-ல் இருந்தால் கண்களில் நோய் வரும். கேது, சூரியன், சனி சேர்க்கை 12-ல் இருந்தால் பித்ருதோஷம் உண்டாகும். கோபம் அதிகமாக வரும். கேது, சனி, சூரியனுடன் 9-ல் இருந்தால் தந்தையுடனான உறவு சரியாக இருக்காது.

பூராடம்

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பலர் பெண்மோகம் கொண்டவர்களாக இருப்பார் கள். நன்கு படித்தவர்கள். நிறைய பேசுவார்கள். தைரியசாலி-கள். கடுமையாக உழைப்பார்கள். எண்ணியதை எப்படியும் நிறைவேற்றும் முயற்சியுடையவர்கள். பலர் காதல் உணர்வுடன் இருப்பார்கள்.

சட்டத்தை உருவாக்கும் திறன்மிக்கவர்கள். வீட்டிலும் நாட்டிலும் சமாதானத்தைப் பேசக்கூடியவர்கள். ஆனால் அதில் சுயநலம் கலந்திருக்கும். அதிர்ஷ்டசாலி-கள். நிறைந்த மனம் கொண்டவர்கள். பிறரை ஈர்க்கும் தன்மை மிக்கவர்கள். தன்னைத் தலைவராக எண்ணிக்கொள்வார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 'இ, எ' ஆகிய ஆங்கில எழுத்துகளில் பெயர் தொடங்கவேண்டும்.

யோனி- குரங்கு; கணம்- நர கணம்; நாடி- மத்திம நாடி; அதிபதி- சுக்கிரன்.

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால் அது குணமாக 10 முதல் 24 நாட்கள்வரை ஆகும். நோய் நீங்க "ஆபோத மேதி' மந்திரத்தைக் கூறவேண்டும். பசு, முத்து ஆகியவற்றை தானமளிக்கவேண்டும். எருக்கன் செடியை வழிபடவேண்டும்.

பிறக்கும்போது ஜாதகத்தில் சுக்கிரன் 8-ல் இருந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும். சந்திரன், சுக்கிரன் சேர்ந்து 6, 8-ல் இருந்தால் அடிக்கடி வயிற்றுப்போக்கு உண்டாகும். காய்ச்சல் வரக்கூடும். சுக்கிரன் 2, 6, 12-ல் இருந்தால் காம வேட்கை அதிகமாக உண்டாகும். பணவசதி இருக்கும். சுக்கிரன், செவ்வாயுடன் சேர்ந்து 12-ல் இருந்தால் ஜாதகருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்படும்.

சுக்கிரன் 2-ல் இருந்து அதை குரு பார்த்தால் நல்ல பணவரவு இருக்கும். தைரியமாகப் பேசுவார்கள். சுக்கிரனும் குருவும் 4 அல்லது 9, 10-ல் இருந்தால் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். புகழுடன் வாழ்வார்கள்.

4-ல் சுக்கிரன் இருந்து அதற்கு கேந்திரத்தில் சந்திரனும் குருவும் இருந்தால், வீட்டில் பல வாகனங்கள் இருக்கும். அனைத்து வசதிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். சுக்கிரன் சனியுடன் 5-ல் இருந்து அதை செவ்வாய் பார்த்தால் சிலருக்கு ஆண்மைக்குறைவு ஏற்படக்கூடும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை தோன்றலாம். சுக்கிரன் நீசமாகவோ அஸ்தமனமாகவோ சூரியன், சனியுடன் சேர்ந்து 12-ல் இருந்தால், பெண் சாபத்தால் பெண்ணின் திருமண விஷயத்தில் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்குத் திருமணம் நடைபெற்றாலும் மணவாழ்வு மகிழ்ச்சியாக இருக்காது.