27 நட்சத்திர சிறப்பம்சங்கள்!

/idhalgal/balajothidam/27-star-highlights-0

கிருத்திகை

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுயமரியாதை கொண்டவர்கள். புகழுடன் வாழ்வார்கள். நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். பேச்சாற்றல் உள்ளவர்கள். பலர் சிறந்த சொற்பொழிவாளராக இருப்பார்கள். சுகமாக வாழும் ஆசையுடையவர்கள். பேச்சில் ஒரு கம்பீரம் இருக்கும்.

27stars

சிலர் பல பெண்களுடன் பழகவேண்டு மென்னும் மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் காமவேட்கை மிக்கவர்களாக இருப்பார்கள். நல்ல உழைப்பாளிகள். பண விஷயத்தில் கறாரானவர்களாக இருப்பார்கள். பலரைக் கட்டியாளக்கூடிய தலைமைப் பொறுப்பில் விளங்குவார்கள். ஏற்றுக்கொண்ட வேலையை சீராக முடிக்கக்கூடியவர்கள். நியாயவாதிகள். கற்பனையாற்றல் மிக்கவர்கள். பயணம் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

இந்த நட்சத்திரத்தைச்

இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மேஷ ராசி என்றால், பெயரின் முதலெழுத்து A என்னும் ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கவேண்டும். ரிஷப ராசி என்றால் "A,B,U' என்னும் ஆங்கில எழுத்துகளில் ஆரம்பிக்கவேண்டும்.

யோனி- ஆடு; கணம்- ராட்சசம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய்வந்தால் அது குணமாக 11 நாட்களாகும். நோய் குணமாக அக்னி மந்திரத்தைக் கூறவேண்டும். தங்கத்தை தானமளிக்கவேண்டும். அத்திமரத்தை வழிபட்டால் நோய் குணமாகும்.

இந்த நட்சத்திரத்தின் கிரகம் சூரியன். பிறக்கும்போது ஜாதகத்தில் சூரியன் லக்னம், 3, 6, 11 ஆகியவற்றில் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 12-ல் இருந்து அதை சனி பார்த்தால் தந்தைக்குத் தொல்லைகள் உண்டாகும். சிலருக்கு தந்தையே இருக்கமாட்டார்.

சூரியனும் சுக்கிரனும் சனியுடன் சேர்ந்து 12-ல் இருந்தால் கண்களில் நோய் வரும். சூரியன் குருவுடன் இணைந்து 5, 9, 10-ல் இருந்தால் ஜாதகர் பெரிய பதவியில் இருப்பார். மகிழ்வுடன் வாழ்வார்.

சூரியன், புதன், குரு, சந்திரன் இணைந்து 5-ல் இருந்தால் அந்த ஜாதகர் ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் படித்து உயர்பதவியில் இருப்பார்.

ரோகிணி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மரியாதையுடன் வாழக்கூடியவர்கள். இவர்களைப் பிறர் மதிப்பார்கள். தன் சொந்தப் பணத்தைப் பிறருக்கு செலவிடுவார்கள். மற்றவர்கள் பொருள்மீது ஆசைகொள்ள மாட்டார்கள். அழகுரசனை கொண்ட வர்கள். ஆடம்பரப் பொருட்களை அடைந்து மகிழ்வுடன் வாழ்வார்கள்.

சிலருக்கு காம இச்சை அதிகமிருக்கும். இனிமையாகப் பேசக்கூடியவர்கள். எதையும் ஆதாரத்துடன் பேசுவார்கள். சராசரி உயரம் கொண்டவர்கள். விவாதங்களில் வெற்றிபெறுவார்கள். தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களைக்கண்டு பொறாமை கொள்வார்கள்.

மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டு மென்னும் எண்ணம் கொண்டவர்கள். மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு "O, V' என்னும் ஆங்கில எழுத்துக்களில் பெயர் ஆரம்பிக்கவேண்டும்.

யோனி- சர்ப்பம்; கணம் நரகணம்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய்வந்தால் அது ஏழு நாட்கள் நீடிக்கும். நோய் குணமாக பிரம்மயேத்தி மந்திரத்தைக் கூறவேண்டும். நெய் தானமளிக்கவேண்டும். நாவல் மரத்தை வழிபடுவது சிறப்பு.

இந்த நட்சத்திரத்தின் கிரகம் சந்திரன். பிறக்கும்போது சந்திரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் ஏழையாகப் பிறந்தாலும் மகிழ்வுடன் வாழ்வார். வாழ்க்கையின் பிற்பகுதி மகிழ்ச்சிகரமாக இருக்கும். அந்த சந்திரனை குரு பகவான் 5 அல்லது 7 அல்லது 9-ல் அமர்ந்து பார்த்தால் வாழ்க்கையில் பல சுகங்களை ஜாதகர் அனுபவிப்பார். சந்திரனும் குருவும் லக்னத்தில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும். ஜாதகர் மன்னரைப்போல வாழ்வார்.

சந்திரன் 6, 8-ல் இருந்தால், பிறந்ததிலிருந்து இரண்டரை ஆண்டுகள்வரை சிறியசிறிய நோய்கள் வரும். அடிக்கடி ஜுரம் வரும். வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி, கிணறு போன்றவை இருப்பது நல்லதல்ல.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் சிலர் ஜோதிடர்களாகவும் எண்கணித நிபுணர்களாகவும் இருப்பார்கள். கடவுள் அருள் பெற்றவர்கள்.

(தொடரும்)

செல்: 98401 11534

bala190321
இதையும் படியுங்கள்
Subscribe