பூரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிறைய பயணம் செய்வார்கள். பல ஊர்களுக்கும் செல்வார்கள். இனிமையாகப் பேசக்கூடியவர்கள். பிறருக்கு நன்மை செய்பவர்கள். சுயமரியாதை மிக்கவர்கள். சிலர் பிடிவாத குணமுடையவர்களாக இருப்பார்கள். இசையில் ஈடுபாடு கொண்டவர்கள். கலாரசிகர்கள்.

கல்விக்கு முக்கியத்துவம் தருவார்கள். திட்டங்களைத் தீட்டுவதில் நிபுணர்கள். கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். பலருக்கும் அறிவுரை சொல்பவராக இருப்பார் கள். மனதில் நினைத்ததை செய்யக்கூடியவர்கள். பலரை ஆளுமை செய்யும் திறன் கொண்டவர் கள். பொதுவாக கோதுமை வண்ணம் கொண்ட வர்களாக இருப்பார்கள். கம்பீரமான தோற்றமுடையவர்கள். பணவசதி மிக்கவர்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தை களுக்கு 'ங, ப' என்னும் ஆங்கில எழுத்துகளில் துவங்கும்படி பெயர் சூட்டவேண்டும்.

Advertisment

யோனி- மூசக யோனி; கணம்- நரகணம்; நாடி- மத்திம நாடி; அதிபதி- சூரியன்; கிரகம்- சுக்கிரன்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அது குணமாக 15 முதல் 30 நாட்கள்வரை ஆகும். நோய் குணமாக "பஹ ப்ரணயத்தி' மந்திரத்தைக் கூறவேண்டும். உணவு தானமளிக்க வேண்டும். அசோக மரத்தை வணங்கினால் நோய் குணமாகும்.

பிறக்கும்போது ஜாதகத்தில் சந்திரனுடன் சுக்கிரன் 4, 9, 10, 11-ல் இருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும். மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வீட்டில் பல வாகனங்கள் இருக்கும். 4-ல் சுக்கிரன் இருந்து அதை குரு பார்த்தால், வசதியான குடும்பத்தில் பிறப்பார்கள். சுக்கிரன் ஜாதகத்தில் 8-ல் இருந்து, சந்திரன் பலவீனமாக இருந்தால் இரண்டரை வருடங்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். காய்ச்சல் வரும்.

Advertisment

சுக்கிரன் 2-ல் இருந்து அதை குரு பார்த்தால் பல சாதனைகளைச் செய்வார்கள். அவர்கள் பேசும் சொற்களுக்கு மதிப்பிருக்கும். பணக்காரர்களாக இருப்பார்கள். சுக்கிரன், செவ்வாய், சூரியன் சேர்ந்து 8 அல்லது 12-ல் இருந்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும். திருமண வாழ்க்கையில் தொல்லைகள் இருக்கும்.

sivan

உத்திரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகள். சிந்திக்கக்கூடியவர்கள். புகழ்மிக்கவராக இருப்பார்கள். பரந்தமனம் கொண்டவர்கள். நன்கு படித்தவர்களாக இருப்பார்கள். நாட்டுப்பற்று உள்ளவர்கள். தன் இன மக்களை மதிப்பார்கள். குடும்பப் பெருமையைக் காப்பாற்றக்கூடியவர்கள். பலருக்கும் நன்மை செய்வார்கள். சிலர் ஆசிரியர்களாக இருப்பார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். மாநிறம் கொண்டவர்கள். சராசரி உயரத்துடன் இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறிய குடும்பத்தைக் கொண்டிருப்பார்கள். குறைவாகவே பேசுவார்கள். நன்கு எழுதக் கூடியவர்கள். காதல் உணர்வு கொண்டவர் கள். நல்ல பணவசதி இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ப' என்னும் ஆங்கில எழுத் தில் துவங்கும் பெயரைச் சூட்ட வேண்டும்.

யோனி- கௌ (ஏர்ன்); கணம்- நரகணம்; நாடி- ஆதிநாடி; அதிபதி- சூரியன்; கிரகம் சூரியன்.

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு உண்டானால் அது குணமாக ஏழிலிருந்து 14 நாட்கள்வரை ஆகும். நோய் குணமாக "தத்யா வேதேதி' மந்திரத்தைக் கூறவேண்டும். வன்னிமரத்தை வழிபடுதல் சிறப்பு. உணவு தானமளிக்க வேண்டும்.

பிறப்பு ஜாதகத்தில் சூரியன் 11-ல் இருந்தால் தந்தைக்குப் புகழ் இருக்கும். வீட்டில் பொருளாதார வசதி நிறைந்திருக்கும். குருவுடன் சூரியன் லக்னம், 5, 10, 11-ல் இருந்தால் வாழ்க்கையில் பல சாதனைகளைச் செய்வார்கள். பல வெற்றிகளைக் காண்பார்கள். ராஜயோகம் ஏற்படும்.

சூரியன் சனியுடன் 8 அல்லது 12 இருந்தாலும் அல்லது சூரியன் ராகுவுடன் சேர்ந்து 8 அல்லது 12 இருந்து அதை சனி பார்த்தாலும் உடல்நல பாதிப்பு ஏற்படும்.

பிறக்கும்போது ஜாதகத்தில் 5-ல் சூரியன், குரு, சுக்கிரன் செவ்வாயுடன் இருந்தால் அரசின் உயர் பதவிகளில் இருப்பார்கள். சூரியன், குரு, சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகியவை இணைந்து 10-ல் இருந்தால் புகழ் கிடைக்கும்.

சிலர் புகழ்பெற்ற அரசியல்வாதிகளாகத் திகழ் வார்கள். சிலர் மருத்துவராக இருப்பார்கள்.

சூரியன் சனியுடன் சேர்ந்து 6, 8, 12-ல் இருந்தால் பித்தம், தலைவலி ஏற்படும்.

(தொடரும்)

செல்: 98401 11534