ஜோதிடத்தில் முக்கிய அங்கமான பஞ்சாங்கம் ,ஆகிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம், ஆகியவற்றின் நான்காவது அங்கமாகிய யோகங்கள் மொத்தம் 27 ஆக வகுக்கப்பட்டுள்ளது.
27 நாம யோகங்களும் ,மனித வாழ்வின் முக்கிய நிகழ்வுகளான சுப காரிய நிகழ்வுகளுக்கு பெரும் பங்குவகிக்கின்றது.
அமைக்கப்பட்டுள்ள 27 யோகங்களில் சில யோகங்கள், அசுப யோகங்கள் ஆகும். இவற்றை நம் ஜோதிட அமைப்பாளர்கள் முகூர்த்தங்களில் இருந்து விலக்கப்பட்டு உள்ளனர். அவைகளானவை விஷகம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகாதம், வஜ்ரம், வியாதிபாதம், வைதீருதி போன்ற யோகங்கள் ஆகும்.
மற்ற நாம யோகங்கள், சுபமானதாகி, முகூர்த்தங்கள் அமைக்க பயன்பட்டு வருகின்றன.
யோகங்களுக்கும், நட்சத்திரங்கள், ராசிகள் போன்று ஜோதிட பலன் அமைக்கப்பட்டுள்ளதோடு, இந்த நாமத்தில் பிறந்தால் அவர்களின் குணமும், சுற்றத்தாரும், சில வாழ்வியல் வழக்கங்களும், இவ்வாறே அமைந்து இருக்கும்.
நாம யோகங்கள் மொத்தம் 27.
1. விஷ்கம்பம்
இந்த நாம யோகத்தில் பிறந்தவர்களுக்கு யோகி கிரகம் சனியாகவும், யோகி நட்சத்திரம் பூசம் ஆகவும் வரும். அவயோகி சந்திரனாகவும், நட்சத்திரம் திருவோணமாகவும் வரும். இவர்கள் கல்வியில் நல்ல யோகமுடையவர்கள், அதேசமயம் முதலீடு போட்டு செய்யும் தொழிலில், ஏமாற்றம், திருட்டுபோதல் போன்ற சூழ்நிலை உருவாகலாம். தொழில் செய்யக்கூடியவர்கள் சில ஏமாற்றங்களை சந்திப்பார்கள். இவர்களின் வீட்டில் ஆசிரியர் படிப்பு படித்தவர்கள், லிட்ரேச்சர் படித்தவர்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம். மருத்துவம் சார்ந்த பணி, மருந்து கடை, மெடிக்கல், இன்சூரன்ஸ், ரத்தவங்கி, டிராவல்ஸ், மிஷனரி, தறி, கவர்மெண்ட் தொழில், இவர்களுக்கு சிறப்பினை தரும். இவர்களின் வாழ்வில் குழந்தை சம்பந்தப்பட்ட ஏக்கமோ அல்லது பிரச்சி னைகளோ, இருக்க வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களை பயமுறுத்தும் தோரணைகளில் இவர்கள் இருப்பார் கள். பின்னாளில் நடப்பவனவற்றை முன்கூட்டியே அறியும் திறனும் இவர்களுக்கு இருக்கும்.
2. ப்ரீதி
யோகி புதன் நட்சத்திரம் ஆயில்யம், அவயோகி செவ்வாய், நட்சத்திரம் அவிட்டம். இது சுப யோகமாக கொடுக் கப்பட்டுள்ளது. இந்த யோகத்தினர்களுக்கு கண் சார்ந்த, ஜவ்வு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்களின் சுற்றத்தார் மற்றும் குடும்பத்தில் ஆசிரியர், நடிகர், ஜோதிடர், பொறியாளர், போன்றவர் களும் இருக்க வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு கல்வியின் நிலை சிறப் பானதாக அமைந்திருக்கும். உணவகம் சார்ந்த தொழில், ஆசிரியர், நடுவர், பொறியியல், ஓவியம், இசை, பாட்டு, கவிதை, கட்டுரை, போன்றவற்றின்மூலம் சிறப்படைவார்கள். இவர்களின் தந்தைவழியில் இளம்வயதில் இறந்த பெண் ஒருவர் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இந்த யோகத்தினர் கையில் வெள்ளி காப்பு அணிவது பெரும் சிறப் பினை தரும்.
3. ஆயுஷ்மான்
யோகி கேது நட்சத்திரம் மகம். அவயோகி ராகு நட்சத்திரம் சதயம். பொதுவாக இந்த யோகத்தில் ஜாதகர் கடுமையாக போராடி முன்னேறும் அமைப்பு இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானம் உடையவராக இருப்பார். வேகமாக செயல்பாடு கொண்டவர்களாக இருப்பார். விவசாயத்தில் நாட்டமும், வட்டித் தொழில் போன்றவற்றில் நாட்டமும் அமைய பெற்று வராக இருப்பார். இவர்களின் வீட்டில் தண்ணீர் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் இருக்கும். தாயார் கடுமையான உழைப்பாளியாக இருப்பார், இவர்களுக்கு நண்பர்கள் சார்ந்த நெருடல்கள் அமையும். இவர்களுக்கு எமகண்டம், குரு ஓரையில், செயல்களை செய்ய சிறப்பினை தரும்.
4. சௌபாக்கியம்
யோகி சுக்கிரன் நட்சத்திரம் பூரம் அவயோகி குரு நட்சத்திரம் பூரட்டாதி இந்த யோகம் அனைத்து பாக்கியங்களையும் தரக்கூடியது. இவர்களும் இவர்களை சார்ந்தவர்களும் ஆசிரியர் பணியில் இருப்பார்கள். இவர்கள் செய்யும் செயல் புகழ்பெற்றதாகவும் அல்லது மற்றவர்களால் கவனிக்கத்தக்கதாகவும் இருக்கும். இவர்களின் வம்சாவழியில் குழந்தைக்கு ஒரு சிறிய ஊனம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. கதை, கவிதை, கட்டுரை, பொருளாதாரம் மருத்துவம் போன்ற துறையில் இவர்கள் சிறப்பினை அடைவார்கள். இவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட அல்லது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்கள் அதிக உணவு பிரியர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் 40 வயதுவரை போராட்டமான வாழ்க்கையை வாழ்வார்கள் திருமணமாகி ஏழு ஆண்டு வரை போராட்டம் இருக்கும். அதற்கு பின்பு வாழ்க்கை சிறப்பினை அடையும்.
5. அதிகண்டம்
யோகி சந்திரன், நட்சத்திரம் ஹஸ்தம். அவ யோகி புதன் நட்சத்திரம் ரேவதி.இவர்கள் ஆளுமை மிக்கவர்களாக திகழ்வார்கள் குழந்தை பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் நட்சத்திரமாக இந்த நட்சத்திரம் அமைந்திருக்கும். மருத்துவ அறிவுமிக்கவர்கள். தன் இருப்பை உறுதிசெய்ய போராடிக்கொண்டே இருப்பார்கள். வாகனம் ஓட்டுவதில் அதீத பிரியம் உடையவர்கள். பிறருக்கு உபதேசம் செய்வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சிறந்ததொரு கைத்தொழிலினை கற்று வைத்திருப்பவர்களாக இருப்பார்கள் . மற்றவர்களை அதற்றி வேலை வாங்குபவர்களாக இருப்பார்கள் இவர்களின் வீட்டில் அல்லது குடும்பத்தில் இரட்டைக் குழந்தையின் பிறப்புகள் இருக்கும். இவரின் தாயாருக்கு கண் சார்ந்த பிரச்சினை, கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தாயாரிடம் ஆசிபெறுவதில் மிகப்பெரிய வாய்ப்புகளை இவர்களால் பெறமுடியும் மேலும் மரகதலிங்க வழிபாடு சிறப்பினை தரும். இவர்களின் வீட்டில் தென்மேற்கு மூலையில் பிரச்சினைகள் இருக்கும்.
7. சுகர்மம்
யோகி செவ்வாய் நட்சத்திரம் சித்திரை அவயோகி கேது நட்சத்திரம் அஸ்வினி. பெயரிலேயே கர்மம் அமைந்த ஒரு யோகமாகும். சுகம் அடைவதற்காக சில போராட்டங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பெண் குழந்தைகள்மேல் அதீத ஆர்வம் உடைய யோகமாக இது திகழ்கின்றது. ஆண் குழந்தைகளின்மூலம் பிரச்சினைகளை அணுகவும் நேரும். ஆசிரியர் யோகம், வெளிநாட்டு யோகம், இவர்களுக்கு உண்டு. என்ஜினியர் ஊரைவிட்டு வெளிநாடு, வெளியூர் செல்லும் யோகம், கலைகளை கற்கும் யோகம் இவர்களுக்கு அமைய பெற்றிருக்கும். திடமான மனம் கொண்டவர்கள். சுரங்கம் சம்பந்தமான பணிக்கும் செல்வார்கள். மிகவும் பணிவாக பேசுபவர்களாக இருப்பார்கள் இவர்களின் வம்சாவழியில் மாறு கண் இருப்பதற்கு வாய்ப்புகளும், டிஎன்ஏ பிரச்சினைகளும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். தாயாருக்கு கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். சிறுவயதில் இறந்தவர்கள் தாய் வீட்டில் இருப்பார்கள். வியாக்கர பாதர் புலிக்கால் சித்தர் வழிபாடு இவர்களுக்கு சிறப்பினை தரும். மேலும் புலித்தோல் போற்றிய சிவன் வழிபாடு சிறப்பினை அளிக்கும். இவர்களுக்கு இரண்டு பெயர்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
8. திருதி
யோகி ராகு நட்சத்திரம் சுவாதி அவயோகி சுக்கிரன் நட்சத்திரம் பரணி. அரசியல் அரசாங்க ஈடுபாடுகள் இருக்கும் இவர்களின் தந்தை அரசாங்க வேலை அல்லது மின்சாரம வேலையில், இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். கண் பாதிப்பு மற்றும் தோள்பட்டை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும், குரல் சார்ந்த தொந்தரவுகளும், இவர்களுக்கு வரும் கட்டடம் சார்ந்த துறை, கான்கிரீட், கமிஷன், போக்குவரத்து, வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி பத்திரிகை, கம்ப்யூட்டர், சம்பந்தப்பட்ட படிப்பும் திடீர் உபாசனை மூலம் மந்திரங்களும், சித்தியாகலாம். இவர்களின் வீட்டில் நாத்திகம் பேசுபவர்கள் இருப்பார்கள். இவர்களின் வழியில் பெண் குழந்தைகளுக்கு அல்லது அத்தைக்கு மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். திருமணமாகி 9 வருடங்கள் பொறுத்து ஒரு யோகமான வாழ்க்கை அமையும். காதல் திருமணம் அல்லது கலப்பு திருமணம் இவர்களின் வம்சாவழியில் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
9. சூலம்
யோகி குரு நட்சத்திரம் விசாகம் அவயோகி சூரியன், நட்சத்திரம் கிருத்திகை. எழுத்து சார்ந்த விஷயத்தில் வெற்றிபெறுவார்கள் அரசு சார்ந்த பணியில் வெற்றிவாகை சூடுவார்கள். இவர்கள் கை வலிமை பெற்றவர்களாக இருப்பதினால் விளையாட்டுத் துறையில் திறமை அதிகமாக இருக்கும். சிற்பி, ஹாக்கி, கிரிக்கெட் இவர்களுக்கு சிறப்பினை தரும். ஒரு தழும்பு வர வாய்ப்புகள் இருக்கும். இவர்களின் வம்சாவளிகளில் காதல் திருமணம் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தந்தைக்கும் இவர்களுக்கும் கருத்து வேறுபாடு வரும். பெரும் பணம் கிடைத்தாலும் அதை சேமிக்க முடியாத சூழ்நிலையில் இவர்கள் இருப்பார்கள். யாரையும் சீக்கிரம் நம்பமாட்டார்கள். சூலம் நாமயோகத்தில் பிறந்தவர்கள் தெருகுத்து உள்ள சொத்துக்களை வாங்கினால் ஜெயிக்கலாம்.
10. கண்டம்
யோகி சனி நட்சத்திர அனுஷம் அவயோகி சந்திரன் நட்சத்திரம் ரோகினி.இவர்களின் செயலில் ஒரு மறைமுகத் தன்மை இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பெரும்பாலும் குளம், ஏரி அருகிருள்ள இடத்தில் வசிப்பார்கள். இவர்களின் இல்லத்தில் தாமரை என்ற பெயரில் யாரேனும் இருக்க வாய்ப்புகள் உண்டு. திருமணம் ஆனபிறகு யோகத்தை அடையும் யோகம் உள்ள நபர்களாகும். நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கால் சார்ந்த பிரச்சினை எலும்பு சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். இவர்களின் தந்தைவழி பாட்டனார் முறையில் சுதந்திரப் போராட்ட தியாகி யாரேனும் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்கள் எதிர்பாலினத்தை ஈர்க்கும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் இல்லத்தில் சிறு வயதில் இறந்த குழந்தை ஒன்று இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தந்தையாருக்கு உடல் சார்ந்த பிரச்சினைகளும் தாயாருக்கு நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். திருவண்ணாமலை ஸ்தலம் இவர்களுக்கு சிறப்பினை தரும். தாய்- தந்தை இல்லாது விடுதியில் படிக்கும் குழந்தைக்கு ஒரு வருடத்திற்கான செலவு செய்வதன்மூலம் இவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை அடைவதை கண்கூடாக காணமுடியும்.
11. விருத்தி
யோகி புதன் நட்சத்திரம் கேட்டை அவயோகி செவ்வாய் நட்சத்திரம் மிருகசீரிடம். விருத்தியற்ற குடும்பத்தில் விருத்தி யோகத்தில் ஒரு குழந்தை பிறக்க, அந்த குடும்பம் விருத்தியாகும் என்பது பழமொழி. கட்டடம், வீடு, விவசாயம் போன்றவற்றின்மூலம் வருமானம் வரும். இவர்களுக்கு வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். இவர்களின் சொத்தில் கட்டாயமாக ஒரு வாஸ்து பிரச்சினை அல்லது கிணறு தோண்டுதலில் பிரச்சினை போன்றவை இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. எண்ணெய் வித்துக்களின் மூலம் வருமானம் இருக்கும். தாயாரின் வம்சாவழியில் இரண்டு தாரங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு. தாயாருக்கு இதயம் சார்ந்த பிரச்சினைகளும் தாய்- மாமனால் ஒரு பிரச்சினையும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்கள் விருதகிரீஸ்வரர் ஆலயம் செல்வது அதிகாலை நேரத்தில் எழுந்து சூரிய வழிபாடு காயத்ரி மந்திரம் ஜெபித்தல், தந்தையிடம் ஆசி, வாங்குதல் போன்றவை சிறப்பினை அளிக்கும். மேலும் இயலாதவர்களுக்கு செருப்பு வாங்கி தருவதன்மூலம் நேரவிருக்கும் கண்டம் விலகும்.
12. துருவம்
யோகி கேது நட்சத்திரம் மூலம் அவயோகி ராகு நட்சத்திரம் திருவாதிரை.இந்த யோகம் ஒரு அசுபயோகமாக அமைந்துள்ளது. இவர்கள் வியாபார தந்திரம் மிக்கவர்களாக இருப்பார்கள். துருவம் எனில் துருவி துருவி ஆராய்வதுதான் துருவம். சீக்கிரம் வெளியில் வரமுடியாத எந்த துறையில் போனா லும் நன்கு ஆராய்ந்து அதன் உச்சத்தை எட்டும். தலை சார்ந்த நோய் உடையவர்களாக இருப்பார்கள் அமர்ந்த இடத்திலேயே பணம் சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். அறிவியல் நன்றாக இவர்களுக்கு பிடிபடும், கணக்கு சார்ந்த துறையில் பெரிய நிலையை எட்டுவார். அதிகபட்சமாக இந்த துருவ நாம யோகத்தில் பிறப்பது ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். தந்தைக்கும் இவர்களுக்கும் ஒரு கருத்து வேறுபாடு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம், இவர்களின் வம்சாவழியில் தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் இருப்பார்கள், துணி சார்ந்த பணியில் இருப்பார்கள். விவசாயம், தங்க நகை செய்வது, போன் சர்வீஸ், கணினி சம்பந்தப்பட்ட பணியில் தன்னை ஈடுபடுத்தி வருமானத்தை பெருக்கிக் கொள்வார்கள். இவர்களின் வீட்டில் லேப் டெக்னீசியன் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் இருப்பார்கள் பூமாதேவி மற்றும் விநாயகரை வழிபட பெரும் சிறப்பினை பெறுவார்கள்.
13. வியாகாதம்
யோகி சுக்கிரன் நட்சத்திரம் பூரம் அவயோகி குரு நட்சத்திரம் புனர் பூசம். இந்த வியாகாதம் ஒரு பிரச்சினை சார்ந்த யோகம் இவர்களுக்கும் இவர்களின் துணைக்கும் உடல் சார்ந்த பிரச்சனை ஏதேனும் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்களின் தாய்- தந்தைக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஜாதகர் தனது அரசாங்க பணி அல்லது இவர்கள் என்னபடி ஏதாவது ஒரு தொழில் அமைத்துக்கொள்வார்கள். வெளிநாட்டு யோகம் உண்டு. பேக்கரி, கார் கம்பெனி, டிராவல்ஸ் சினிமா போன்ற துறைகளில் பெரும் சிறப்பினை அடைவார்கள். இது ஒரு பிரச்சினைக்குரிய யோகம் என்பதால் உடல் சார்ந்த தானம் ஏதேனும் செய்யும்பொழுது இதிலிருந்து விடுபடமுடியும்.
14 ஹர்ஷனம்
யோகி சூரியன் நட்சத்திரம் உத்திராடம் அவயோகி சனி நட்சத்திரம் பூசம். இயற்கையிலேயே அறிவுமிக்கவர்கள். கண்ணாடி அணியவேண்டிய சூழ்நிலை தரும். அரசு வேலை தந்தைக்கு அல்லது தந்தைவழியில் இருப்பவர்களுக்கு அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு. 12 வயதில், விளையாட்டில் படிப்பில் பரிசு மற்றும் ஒரு வெகுமதிபெற வாய்ப்புகள் உண்டு. ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், இன்ஜினியர், டெக்னாலஜி போன்ற துறையில் பெரும் சிறப்பினை அடைவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் காது வித்தியாசமாக அமைந்திருக்கும். கல்வியில் ஒரு சிறு தடைவருவதற்கு வாய்ப்பு உண்டு. இவர்களின் குடும்பத்தில் நெருப்பு சம்பந்தப்பட்ட கண்டங்கள் உருவாகி இருக்கலாம்.
15. வஜ்ரம்
யோகி சந்திரன் நட்சத்திரம் திருவோணம் அவயோகி புதன் நட்சத்திரம் ஆயில்யம். வஜ்ரம் என்றால் உறுதியான நிலையான போராட்ட குணம் உடைய என்று அர்த்தம். இந்த யோகத்தின் இயல்பு விடாமுயற்சி, அதிக தன்னம்பிக்கை உடையவர்கள். அதிக வேகமானவர்கள். எந்த தோல்வி வந்தாலும் அதை தாண்டி ஓடுபவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் இந்த யோகத்தில் பிறந்தவர்களாக இருக்கின்றனர். அமானுஷ்ய சக்தி உடையவர்கள். பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் அதிகம் கணக்கு போடுவார்கள். இவர்களுக்கு இஎன்டி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். இவர்களின் வம்சத்தில் செய்துவந்த தொழிலினை மாற்றி புதிய தொழில்நுட்பத்தினை கையாளுபவர்களாக இருப்பார்கள். பனங்கருப்பட்டி பால் இவர்கள் குடிப்பது அல்லது தானம் தருவது வீட்டில் விசேஷ தருணத்தை உருவாக்கும்.
16. சித்தி
யோகி செவ்வாய் நட்சத்திரம் அவிட்டம், அவயோகி கேது நட்சத்திரம் மகம் இவர்கள் கோபமான குணம் உடையவர்களாக இருப்பார்கள். .ஆனால் கோபத்தை வெளிக்காட்ட மாட்டார்கள். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம், எந்தத் துறையை கையாளுகின் றார்களோ அதில் உச்சத்தை அடைவார்கள். வெளியூர், வெளி வருமானம் கிடைக்கக்கூடிய அமைப்பு இவர்களுக்கு உண்டு. வீட்டில் வாரிசு வேலை கிடைப்பதற்கான சூழ்நிலைகளும் அமையும். சிறுவயதிலேயே உழைத்து வருமானம் ஈட்டுபவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு ஏணியாக உதவி புரியக்கூடிய அமைப்பு இவர்களில் பலருக்கு அமைந்திருக்கின்றது. வல்லப கணபதி சித்தி புத்தி கணபதி போன்ற தெய்வங்களை வழிபட சிறப்பினை அடையலாம்.
17. வியாதிபாதம்
யோகி ராகு நட்சத்திரம் சதயம் அவயோகி சுக்கிரன் நட்சத்திரம் பூரம். கடுமையான ஒரு யோகமாகும். இவர்கள் செய்யாத தவறுக்கு பழி ஏற்கும் கட்டாயம் ஏற்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் கர்ம பதிவுகள் அதிகமாக இருந்தாலே பிறக்க முடியும் அசைவம் சார்ந்த உணவுகள் தவிர்த்துவிடலாம். கர்மாவை தவிர்க்க சைவம் சாப்பிடலாம். அதிக பயங்கர மூளை புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை இவர்களின்மூலம் உருவாக்கப்படும். இவர்கள் எந்த உயிருக்கும் தீமை செய்யக்கூடாது.
18. வரியான்
யோகி குரு நட்சத்திரம் பூரட்டாதி அவயோகி சூரியன் நட்சத்திரம் உத்திரம். வீட்டில் மருத்துவம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் இருப்பார்கள். இவரின் தந்தை அரசியல் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பயணிப்பார். இதே சமயம் வாகன துறையில் முன்னேற்றம் சொத்து சார்ந்த பிரச்சினைகள் உடையவர்களாக இருப்பார்கள். இதயம் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு சிங்கம் சார்ந்த அம்மனை வழிபடுவதன்மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.
19. பரிகம்
யோகி சனி நட்சத்திரம் உத்திரட்டாதி அவயோகி சந்திரன் நட்சத்திரம் அஸ்தம். இவர்கள் ஒரு செயலை அணுகும்பொழுது சந்தேகத்துடன் அணுகுவார்கள். அதைத்தாண்டி பெரிய சாதனை செய்வார்கள் கவிதை, எழுத்து, கட்டுரை, டிரான்ஸ்போர்ட், வாடகை, இதன்மூலம் வருமானத்தை அடைவார்கள். தாயார்மேல் பாசமாக இருப்பார்கள் . இவர்களின் வம்சாவழியில் தீ விபத்து அல்லது மனக்கோளாறு சம்பந்தப்பட்டவர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இவர்களின் சொத்தில் ஏதாவது சிறு வில்லங்கம் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. சுப்ரமணிய வழிபாடு சிக்கலை தீர்க்கும்.
20. சிவம்
யோகி புதன் நட்சத்திரம் ரேவதி அவயோகி செவ்வாய் நட்சத்திரம் சித்திரை. ஜாதகர் இளமை தோற்றம் உடையவர். முடி சம்பந்தமான தொந்தரவு இருக்கும். கண் வித்தியாசமான நிறத்தில் அமையப்பெற்று இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. பாரம்பரியமான குலத்தொழிலில் இருப்பார்கள். தண்ணீர் வண்டி, செருப்பு வியாபாரம், செல்போன், கம்ப்யூட்டர், கேபிள் போடுவது போன்றவை இவர்களுக்கு பெரும் சிறப்பினை அளிக்கும். தாயுடன் கருத்து வேறுபாடு இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. விவசாயம், வாகனத்துறை, வெளிநாடு, வெளி மாநிலம் போன்றவற்றின் சிறப்பு அடைவார்கள். இவர்களின் சிலருக்கு சிவயோகம், சிவா என்ற பெயரும் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்கள் சிவ வழிபாடு செய்வதன் மூலமாகவும் குருவாயூர் சென்று வருவதன் மூலமாகவும் முன்னேற்றத்தை அடைய முடியும்.
21. சித்தம்
யோகி கேது நட்சத்திரம் அஸ்வினி அவயோகி ராகு நட்சத்திரம் சுவாதி. ஜாதகர் தனக்குத்தானே உழைத்து முன்னேறக்கூடியவர். மற்றவர்களுடைய உதவியோ அல்லது துணையோ எதிர்பார்க்க மாட்டார். எல்லா செயலுக்கும் விட்டுக் கொடுத்து செல்வார், கல்வி, கலை, விளையாட்டு மலர் மருத்துவம், ஹோமியோ போன்றவற்றில் உச்சத்தை எட்டுவார். இவரின் தந்தை கடின உழைப்பாளியாக இருப்பார். இறுதிவரை ஏதேனும் ஒன்றை படித்துக் கொண்டே இருப்பார். இவர்களின் வீட்டில் கட்டாயமாக ஒரு மருத்துவர் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. கவிதை, சினிமா, ஜூவாலஜி, அக்ரி போன்ற துறையில் இவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பயணிப்பார்கள். அன்னாசிப்பழம் தானம் மற்றும் உண்டு வர சில பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
22. சாத்தியம்
யோகி சுக்கிரன் நட்சத்திரம் பரணி அவயோகி குரு நட்சத்திரம் விசாகம். இந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு பிடிவாத குணம் இருந்து கொண்டே இருக்கும். போராட்ட குணமும் இருக்கும். இவர்கள் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பார்கள். சிறுவயதிலேயே பொருளாதாரத்தில் வளமுடையவர்களாக வாழ்ந்திருப்பார்கள். தலைமை பதவியில் இவருக்கு தொந்தரவு இருக்கும். படிப்பு சார்ந்த விஷயத்தில் கொஞ்சம் தாமதமான சூழ்நிலையை சந்தித்து இருப்பார்கள். இவர்களின் தந்தைவழியில் ஒரு காதல் திருமணமோ அல்லது கலப்பு திருமணமும், இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு தங்கத்தின்மூலம் ஒரு சிறு பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எல்லையில் அமைந்துள்ள அம்மனின் வழிபாடு பெரும் சிறப்பினை தரும்.
23. சுபம்
யோகி சூரியன் நட்சத்திரம் கிருத்திகை அவயோகி சனி நட்சத்திரம் அனுஷம். இவர்களுக்கு ஜோதிடம், அமானுஷ்யம், கவிதை, கட்டுரை போன்றவை சித்திக்கும். கல்வியில் தடை வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. போஸ்டலில் படிப்பார்கள், இவர்களின் வாழ்க்கை துணைக்கு பல் சார்ந்த பிரச்சினை இருக்கும். இவர்களின் வம்சாவழியில் ஓர் ஆண் குழந்தை சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும். இவர்கள் தங்களது ராசியின் சின்னத்தை அணிந்து கொள்வதன்மூலமும் மடக்கு விளக்கு ஏற்றுவதன்மூலமும் வாழ்விலுள்ள பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாம்.
24. சுப்பிரமம்
யோகி சந்திரன் நட்சத்திரம் ரோகினி அவ யோகி புதன் நட்சத்திரம் கேட்டை. இவர்களின் குடும்பத்தில் கிருஷ்ணர், பெருமாள் போன்ற பெயர் உடையவர்கள் இருப்பார்கள். இதே யோகத்தில் பிறந்தவர்களும் இருப்பார்கள். ஜாதகர் இளமையாக தென்படுவார், பேச்சு சார்ந்த தொந்தரவு அல்லது கண் சார்ந்த பாதிப்பு இவருக்கு இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்களின் வீட்டில் இருதாரம் அமைந்திருக்கும். இவர்கள் வெளிநாடு, வெளிமாநில வேலையில் சிறப்புடன் இருப்பார்கள். இவர்கள் ஆலமரம் அருகே அமர துன்பங்கள் போகும்.
25. பிராமியம்
யோகி செவ்வாய் நட்சத்திரம் மிருகசீரிஷம் அவயோகி கேது நட்சத்திரம் மூலம். இந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு குருவை தேடும் சூழ்நிலை அமையும். இயற்கையாகவே ஒரு உபதேசம் கிடைக்கும். இவர்களுள் நிச்சயமாக ஒரு மருத்துவர் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு கண் சார்ந்த பிரச்சினைகளும், கருமுட்டை சார்ந்த பிரச்சினைகளும் இருக்கும். வெளி மாநிலம், வெளிநாடு சம்பந்தப்பட்ட வருமானத்தை ஈட்டி சிறப்படைவார்கள். தொழிலைவிட சர்வீஸ் இவர்களுக்கு சிறப்பை தரும். அனாதை விடுதிகளுக்கு தேங்காய் தானம் தர இவர்களின் பிரச்சினைகள் தீரும்.
26. ஐந்திரம்
யோகி ராகு நட்சத்திரம் திருவாதிரை அவயோகி சுக்கிரன் நட்சத்திரம் பூராடம். இவர்கள் கட்டடம் கட்டுதல், இன்ஜினியரிங், விமானம், கப்பல் கட்டுதல் போன்ற தளத்தில் பயணிப்பார்கள். இவர்களின் குடும்பத்தில் தற்கொலையோ அல்லது திடீர் மரணமோ நேர்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கும். அமானுஷ்யம் சார்ந்த விஷயங்களில் பயணிக்க எண்ணம் கொள்வார். ஜாதகருக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும். இந்த யோகத்தில் ஒரு குழந்தை பிறந்தால் பித்ருக்கள் வழிபாட்டில் பெரிய வெற்றியின் பாதைக்கு செல்லலாம். மேலும் தில தர்ப்பணம் செய்ய உதவுவதன்மூலம் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.
27. வைதிருதி
யோகி குரு நட்சத்திரம் புனர்பூசம் அவயோகி சூரியன் நட்சத்திரம் உத்திரம். தான் செய்யும் செயலில் பிடிவாதமாக இருப்பார் .யோகம், மந்திரம், ஆராய்ச்சி, அமானுஷ்யம், ஜோதிடம் போன்ற துல்லியமான விஷயத்தில் சிறப்புதன்மை வாய்ந்திருப்பார்கள். இவர்களின் தந்தை ஆபரணம் சார்ந்த ஒரு தொழிலோ அல்லது அரசியலிலோ இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அரசாங்கத்தில் பென்ஷன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் இருக்கும். கட்டிடம் கட்டுதல், லாரி, பில்டிங், விமானம் போன்றவற்றில் சிறப்புடன் பயணிப்பார்கள் ஜீவசமாதி வழிபாடு இவர்களின் பிரச்சினைக்கு ஒரு பெரிய தீர்வாக அமையும்.
செல்: 80563 79988