27 நட்சத்திரங்களும் ஜென்ம நட்சத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்! அனுஷம் முதல் மூலம் வரை 

/idhalgal/balajothidam/27-nakshatras-and-remedies-janma-nakshatra-dosha-anusham-byla

27 Nakshatras and Remedies for Janma Nakshatra Dosha! From Anusham to Byla

அனுஷம்

27 நட்சத்திரங்களில் 17-ஆவது நட்சத்திரம் அனுஷம். இந்த நட்சத்திரம் செவ்வாய் பகவானின் மற்றொரு வீடான விருச்சிக ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். அனுஷம் என்றால் சமஸ்கிருதத்தில் வெற்றி என்று பொருள். இதற்கு அனுராதா என்ற பெயரும் உண்டு. இந்த நட்சத்திரம் வானில் பனை மரம், குடை அல்லது தாமரைபோல் தெரியும். இதன் தமிழ் பெயர் பனை. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை லட்சுமி. இதன் வசிப்பிடம் அழிந்த காடுகள். காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு விருச்சிகம் எட்டாவது வீடாகும். எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம்.

பெண்ணிற்கு மாங்கல்ய ஸ்தானம் எனப்படும். உடலில் கழிவு உறுப்புகளைக் குறிக்கும் இடம். இந்த நட்சத்திரத்தில் விவாகம், ருது சாந்தி, சாந்தி முகூர்த்தம், கர்ப்பதானம் செய்யலாம். முதன்முதலில் அரைஞான் கட்டலாம். கிரகப்பிரவேசம் செய்வதற்கு, கிரக ஆரம்பம் செய்வதற்கு உகந்த நாளாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஹிப்னாடிசம், மந்திரம், தந்திரம் செய்தல், ஜோதிடம், உளவு பார்த்தல், புகைப்படக்கலை, சினிமா, இசை மற்றும் கலை தொடர்பான தொழில், கவுன்சிலிங், சைக்காலஜி, அறிவியல், எண்கணிதம், கணிதவியல், நிர்வாகம் தொடர்பான பணிகள், தொழிற்சாலை நடத்துதல், சுற்றுலா துறை தொடர்பான பணிகள் சிறப்பாக இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான் நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள். பல்வேறு சிறப்பு அம்சங்கள் இவரின் ஜாதகத்தில் நிறைந்துள்ளதால் இவர் உலகப்புகழ் பெற்றுள்ளார். உலகெங்கும் அவரது புகழ் பரவி அந்தஸ்து கௌரவம் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதனால்தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் வெற்றி மழையில் நனைந்து வருகிறார். இவரது ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தின் தாரை வடிவமான தாமரை சின்னமும் வெற்றிக்கு உதவிசெய்கிறது. இந்த நட்சத்திரம் நாளில் திருநெல்வேலியிலுள்ள நெல்லையப் பரை வழிபட்டால் பூர்வஜென்ம பாவங்கள் விலகும். ஆயுள் விருத்தி யாகும். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் தொல்லை குறையும். அபிச்சார தோஷங்கள் விலகும். ஆயுதம் பயில, ஆயுதப் பிரயோகம் செய்யவும் உகந்த நாளாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை அடைய விரும்புபவர்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் பைரவரை வழிபட்டு புதிய முயற்சிகளைத் துவங்கலாம். இந்த நட்சத

27 Nakshatras and Remedies for Janma Nakshatra Dosha! From Anusham to Byla

அனுஷம்

27 நட்சத்திரங்களில் 17-ஆவது நட்சத்திரம் அனுஷம். இந்த நட்சத்திரம் செவ்வாய் பகவானின் மற்றொரு வீடான விருச்சிக ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். அனுஷம் என்றால் சமஸ்கிருதத்தில் வெற்றி என்று பொருள். இதற்கு அனுராதா என்ற பெயரும் உண்டு. இந்த நட்சத்திரம் வானில் பனை மரம், குடை அல்லது தாமரைபோல் தெரியும். இதன் தமிழ் பெயர் பனை. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை லட்சுமி. இதன் வசிப்பிடம் அழிந்த காடுகள். காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு விருச்சிகம் எட்டாவது வீடாகும். எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம்.

பெண்ணிற்கு மாங்கல்ய ஸ்தானம் எனப்படும். உடலில் கழிவு உறுப்புகளைக் குறிக்கும் இடம். இந்த நட்சத்திரத்தில் விவாகம், ருது சாந்தி, சாந்தி முகூர்த்தம், கர்ப்பதானம் செய்யலாம். முதன்முதலில் அரைஞான் கட்டலாம். கிரகப்பிரவேசம் செய்வதற்கு, கிரக ஆரம்பம் செய்வதற்கு உகந்த நாளாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஹிப்னாடிசம், மந்திரம், தந்திரம் செய்தல், ஜோதிடம், உளவு பார்த்தல், புகைப்படக்கலை, சினிமா, இசை மற்றும் கலை தொடர்பான தொழில், கவுன்சிலிங், சைக்காலஜி, அறிவியல், எண்கணிதம், கணிதவியல், நிர்வாகம் தொடர்பான பணிகள், தொழிற்சாலை நடத்துதல், சுற்றுலா துறை தொடர்பான பணிகள் சிறப்பாக இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான் நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள். பல்வேறு சிறப்பு அம்சங்கள் இவரின் ஜாதகத்தில் நிறைந்துள்ளதால் இவர் உலகப்புகழ் பெற்றுள்ளார். உலகெங்கும் அவரது புகழ் பரவி அந்தஸ்து கௌரவம் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதனால்தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் வெற்றி மழையில் நனைந்து வருகிறார். இவரது ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தின் தாரை வடிவமான தாமரை சின்னமும் வெற்றிக்கு உதவிசெய்கிறது. இந்த நட்சத்திரம் நாளில் திருநெல்வேலியிலுள்ள நெல்லையப் பரை வழிபட்டால் பூர்வஜென்ம பாவங்கள் விலகும். ஆயுள் விருத்தி யாகும். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் தொல்லை குறையும். அபிச்சார தோஷங்கள் விலகும். ஆயுதம் பயில, ஆயுதப் பிரயோகம் செய்யவும் உகந்த நாளாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை அடைய விரும்புபவர்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் பைரவரை வழிபட்டு புதிய முயற்சிகளைத் துவங்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் தாமரை மலரில் அமர்ந்த நிலையிலுள்ள மகாலட்சுமியை வழிபட, செல்வச் செழிப்பு மிகுதியாகும். நம்முடன் வாழ்ந்து மறைந்த மகான் ஸ்ரீ காஞ்சி மகானை அனுஷம் நட்சத்திரத்தில் வழிபட்டால் பிறவிப் பயன் நீங்கி சுபிட்சம் உண்டாகும். ஜாதகத்திலுள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

கேட்டை

ராசி சக்கரத்தில் 18-ஆவது நட்சத்திரம் கேட்டை. இதன் சமஸ்கிருத பெயர் ஜேஷ்டா என்பதாகும். ஜேஷ்டா என்றால் மூத்தது என்று பொருள் இதன் வடிவம் வானில், ஈட்டி, குண்டலம், குடை போன்று ஒளி மிகுந்து தெரியும். இந்த நட்சத்திரம் விருச்சிக ராசியில் அமைந்துள்ளது. இதன் ராசி அதிபதி செவ்வாய்.இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் கடைகள் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை தேவேந்திரன். இது புதனின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் உச்சம் அடையும் கிரகம் கேது. நீசம் அடையும் கிரகம் ராகு.

கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி பல இடங்களில் வெவ்வேறு கருத்து நிலவுகிறது. "கெட்ட குடிக்கு ஒரு கேட்டை' என்று கூறுவர். அதாவது ஒரு குடும்பம் கெடப்போகிறது என்றால் அக்குடும்பத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறக்கும் என்பது இதன் பொருள். அதேபோல், "கேட்டை நட்சத்திரம் கோட்டையை இடித்துக் கட்டும்' என்ற பழமொழியும் உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு புதனுடன் யோகாதிபதிகளின் சேர்க்கை இருந்தால், அந்த ஜாதகர் கோட்டை கட்டி ஆள்வார். புதனுக்கு வெகு அருகில் இருக்கக்கூடியது சூரியன். எனவே, சூரியனும், புதனும் வலுவாக அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் கோட்டைகட்டி ஆள்வார்.

அனுபவத்தில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பலர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் அதிகார பதவியில் உள்ளார்கள். அரசாணை பிறப்பித்தல், நலத்திட்டங்கள் அறிவித்தல் என அரசை ஆளும் நபர்களாக வும் இருக்கிறார்கள். பொதுவாக இவர்கள் இளகிய மனதும், நன்றாகப் பழகும் குணமும் உடையவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் மனக் கோட்டையையும் இவர்கள் ஆள்வார்கள். எதையும் ஆட்சிசெய்யும் தன்மையைப் பெற்றிருந்தாலும், கொடுங்கோல் ஆட்சிசெய்ய விரும்பமாட்டார்கள். எப்போதும் இவர் களைச் சுற்றி ஒரு நட்பு வட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

எனவே, கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி. அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த ஜாதகருக்கு புதன் நீசம் பெறாமல், பகை வீட்டில் அமராமல், பகை கிரகங்களுடன் சேராமல் 6, 8-க்கு உரியவனுடன் சேராமல், நல்ல ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் கோட்டையைப் ஆள்வார் கேட்டை நட்சத்திரம் ஆயுதங்களைக் குறிக் கும் செவ்வாயின் வீட்டில் அமைந்துள்ளது. இதன் அதிபதி புதன் என்பதால் வித்யாகாரகன் என்பதால் ஆயுதம் பயிலவும் ஆயுதப் பிரயோகம் செய்யவும் உகந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் விவாகம், ருது சாந்தி, சாந்தி முகூர்த்தம், கர்ப்பதானம்கிரகப்பிரவேசம் செய்யலாம். ஜோதிடம் மருத்துவம் மாந்திரீகம் போன்ற விஷயங்களை கற்க துவங்கினால் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.

மாந்திரீக தகடுகள் எழுந்த உகந்த நட்சத்திரம். செவ்வாயின் வீட்டில் அமைந்த புதனின் நட்சத்திரம் கேட்டை என்பதால் இந்த நட்சத்திரம் வரும்நாளில் வித்யாரம்பம் செய்யக்கூடாது. ரகசிய ஒப்பந்தங்கள் செய்யலாம். கேது உச்சமடையும் கிரகம் கேட்டை என்பதால் ஜோதிடம், மருத்துவம், ஆன்மிகம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடலாம். நீசம் அடையும் கிரகம் ராகு என்பதால் ஆயுள் தோஷ பரிகாரம் நோய் நீக்கும் பரிகாரம் செய்யலாம். கல்வியில் தடை உள்ளவர்கள் கேட்டை நட்சத்திரம் வரும்நாளில் நவதிருப்பதிகளை வழிபட கல்வித்தடை விலகும். அருகம்புல் கேட்டை நட்சத்திர வடிவமாகும். மூல வடிவம் விநாயகராகும். கேட்டை நட்சத்திர நபர்கள் தினமும் புதன் ஓரையில் விநாயகருக்கு அருகம்புல் சமர்பித்து வணங்க செல்வம், புகழ் வளம் பெருகும்.

மூலம்

மூலம் காலபுருஷ 9-ஆம் ராசியான தனுசு வீட்டில் அமைந்துள்ளது. ராசி சக்கரத்தின் 19-ஆவது நட்சத்திர மாகும். இந்த ராசியின் அதிபதி குரு. இதுஞானத்தை வழங்கும் கேதுவின் நட்சத்திர மாகும். இதன் வடிவம் அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கைபோல் இருக்கும். இந்த நட்சத்திரம் குருத்துபோல் இருப்பதால் இதன் தமிழ் பெயர் குருது. இதன் இருப்பிடம் குதிரை லாயம். அதிதேவதை அசுர தேவதை கள். இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சனேயர். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது என்பதால் தியானம் செய்ய, தீட்சை பெற மந்திர உபதேசம் பெற உகுந்ததாகும். மூல நட்சத்திரம் காலபுருஷ லக்னமான மேஷத் திற்கு ஒன்பதாம் வீடான தனுசில் அமைந் துள்ளதால் ஆலய திருப்பணி குரு உபதேசம் செய்ய, கீர்த்த யாத்திரை, ஆலயப் பணி துவங்க, குரு உபதேசம் பெற உகந்ததாகும். கேது கயிறைக் குறிக்கும் என்பதால் தாலிக் கயிறு வாங்கவும் விவாகத்திற்கு உகந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் வடிவம் துதிக்கை போன்று மிருகங்களுடைய அமைப்பில் உள்ளதால் ஆடு, மாடுகள் வாங்கலாம். சில குறிப்பிட்ட நட்சத்திரம் தோஷம் என்று அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யக்கூடாது என்ற ஆழ்ந்த நம்பிக்கை சமுதாயத்தில் நிலவிவருகிறது. குறிப்பாக மூலத்துப் பெண் மாமனாருக்கு ஆகாது."ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்' என்றும் மூலம் மாமனாருக்கு ஆகாது என்றும் மூல நட்சத்திரப் பெண்ணை மாமனார் இல்லாத வீட்டில்தான் மண முடிக்க வேண்டும் என்றும் மூலம் நட்சத்திரம் பற்றிய பல விமர்சனங்கள் உள்ளது. அது மட்டுமா? இதுபோன்ற நட்சத்திர தோஷம் ஆண்களுக்கு இல்லை என்ற போதிலும் சமீபகாலமாக மூல நட்சத்திர ஆண்களும் பாதிக்கப்படவே செய்கிறார்கள். பல பெற்றோர்கள் இதை விடாப்பிடியாக பிடித்துத்கொண்டு தமது பிள்ளைகளின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறார்கள். இந்த பழமொழியை ஆதாரமாக வைத்து பலர் மூல நட்சத்திரப் பெண்களை திருமணம்செய்ய பயப்படுகிறார்கள். மூலத்துப் பெண்ணால் மாமனாருக்கு கண்டம் ஏற்படும் என்ற நம்பிக்கை சமூகத்தில் ஆழமாக பதிந்துள்ளது.

உண்மையில் மூல நட்சத்திரம் தோஷமா? இல்லையா?

மூலத்துப் பெண் மாமனாருக்கு ஆகாது என்றும் இல்லை ஒன்றும் செய்யாது என்றும் பொதுவாகச் சொல்வதை விடுத்து இதிலுள்ள கருத்தை ஆய்வு செய்யலாம்.

1. காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு 9-ஆம் இடமான தனுசில் மூலம் நட்சத்திரம் இடம் பெற்றுள்ளது. இது ஜாதகரின் தந்தையைக் குறிக்குமிடம்.

2. ஒரு ஜாதகத்தில் மாமனாரைக் குறிப்பது 3-ஆம் பாவகம்.

3. காலபுருஷ லக்னமான மேஷத்தை ஜாதகி என வைத்துக்கொண்டால், அதற்கு ஏழாம் வீடான துலாம் ஜாதகியின் கணவனைக்குறிக்கும்.

4. ஏழாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடான மூன்றாம் வீடு (மிதுனம்) கணவரின் தந்தையைக் குறிக்குமிடம். மிதுனத்திற்கு 7-ஆம் வீடு தனுசு ராசியாகும். தனுசிற்கு

அஷ்டமாதிபத்தியம் பெற்ற சந்திரன் இயற்கை பாவியான கேதுவின் நட்சத்திரத்தில் மாரக ஸ்தானமான தனுசில் அமர்வது சிறப்பல்ல.

5. மிதுனத்திற்கு மாரக அதிபதிகள் 2-க்குடைய சந்திரன் மற்றும் 7-க்குடைய குரு. 2-க்குடைய சந்திரன் மற்றொரு மாரக ஸ்தானமான 7-ல் அமர்வதும் மாரக அதிபதிகள் ஒருவருக்கொருவர் மாரக ஸ்தானத்தில் தொடர்பு பெறுவது கடுமையான மாரகத்தை ஏற்படுத்தும்.

6. மேலும் மூலம் நட்சத்திரம் தனுசு ராசியின் கண்டாந்த நட்சத்திரமாகும். பொதுவாக கண்டாந்த நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகள் உறவினரைப் பாதிக்கும் என்பது பொதுவிதி.

7. காலபுருஷ தத்துவப்படி மாமனாரைக் குறிக்கும் மூன்றாமிடமான மிதுன ராசிக்கு ஏழாம் வீடான தனுசு ராசியில் அமைந்துள்ள கண்டாந்த நட்சத்திரம் மூலம் நட்சத்திரமாகும். எனவே காலப்புருஷ தத்துவப்படி மூலம் மாமனாருக்கு கண்டத்தை ஏற்படும் என்பது பொதுவான விதி. மேலே குறிப்பிட்ட அனைத்தும் பொதுவான காரணிகளாகும். காலபுருஷ லக்னமான மேஷத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டவை. பிறந்த லக்னம் மாறுபடும்போது 3-ஆம்மிடம், 9-ஆம்மிடம், அஷ்டமாதிபதி, பாதகாதிபதி என அனைத்தும் மாறுபடும். அதன்படி லக்ன வாரியாக பலன் காணும்போது இதற்கு விதிவிலக்குகள் உண்டு.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் லக்னம் மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் என அமைந்தால் மட்டுமே மாமனாருக்கு தோஷம் உண்டு. மூல நட்சத்திரத்தில் பிறந்த மற்ற லக்னப் பெண்களுக்கு தோஷம் இல்லை. மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் கணவன் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவராக இருந்தால் அவரின் தந்தைக்கு மூல நட்சத்திரப் பெண்ணால் தோஷமுண்டு. பிற லக்னங்களில் பிறந்தவராக இருந்தால் தோஷமில்லை. மூல நட்சத்திரப் பெண்ணின் மாமனார் ரிஷபம், மிதுனம், கடகம் துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்தவராக இருந்தால் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த மருமகளால் தோஷமுண்டு. மற்ற லகனங்களில் பிறந்த மாமனாருக்கு மூல நட்சத்திர மருமகளால் தோஷமில்லை.

எனவே பொதுவிதியை வைத்துக்கொணடு தோஷம் என்று கூறுவது சொல்வது மாபெரும் தவறாகும். இந்த நட்சத்திரம் நாளில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள அகத்தி யர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தடைகளும் நீங்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினமும் ஸ்ரீ ராம ஜெயம் எழுத தீவினைகள் நெருங்காது.

தொடரும்....

செல்: 98652 20406

bala jothidam 050724
இதையும் படியுங்கள்
Subscribe