செல்வமே வாழ்க்கையின் ஆதாரம். அது இல்லாத வாழ்க்கை சேதாரம். சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும், செல்வம் இல்லாது போகும். வந்தாலும் அது நிலைத்து நில்லாமல் போகும். நாளைக்கு வரப்போகும் வருமானத்தைக் கணக்கிட்டு, இன்றேசெலவு செய்து, கடனில் சிக்கிக்கொள்ளும் நிலையும் சிலருக்கு உருவாகிறது.
ஒரு ஜாதகத்தில் 2-ஆமிடம், 10-ஆமிட அதிபதிகள் எந்தளவுக்கு பலமாக இருக்கிறார்களோ அந்தள வுக்கு உங்களுக்கு வாழ்க்கையில் பணவரவு அதிகமாக இருக்கும்.
சூரியன் ஒரு ஜாதகத்தில் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், அந்த ஜாதகர் வாழ்க்கை யில் பெரும் செல்வத்தை அடைவார்.
இரண்டாம் அதிபதி, 11-ஆமிடத்துடன் தொடர்பு கொள்ளும்போது பணவரவை எதிர்பார்க்கலாம்.
பதினொன்றாம் வீட்டதி பதி ஆட்சி, உச்சமாக இருந்து, பாதகமடையாமலிருந்தால் செல்வச் செழிப்புண்டாகும்.
ராகு- கேது கேந்திரத்திலோ, கோணத்திலோ இருந்து, சுபரின் சேர்க்கையோ, பார்வையோ பெற்றால், தாராள தனயோகம் உண்டாகும்.
லாபாதிபதி சூரியன் சுக்கிரனோடு, பதினொன்றாம் வீட்டதிபதி இணைந்து ஏழில் உச்சம் பெற்றால் செல்வம் வீடு தேடிவரும்.
சூரியன் ஆட்சி வீட்டில் வர்க்கோத்தம பலம்பெற்றால் தொட்டதெல்லாம் பொன்னா கும்.
ரிஷபம் லக்னமாக அமைந்து, பாக்கிய ஸ்தானமான ஐந்தாம் வீடாகிய கன்னி ராசியில் குருவும் கேதுவும் இணைந் திருந்தால், அந்த ஜாதகர் பெரும் செல்வந்த ராவது உறுதி. சிலர் வாய்ப்புகளை சரியாகப் பயன் படுத்தத் தெரியாமலேயே தவறவிடுகின்றனர். ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறியாமல், நல்ல நேரத்தைக் கோட்டைவிடுபவர்களும் உண்டு.
திடீர் தனவரவு
லக்னத்துக்கு 2, 4, 9, 11-ஆம் பாவங் களில் சுபகிரகங்கள் வலிமையுடன் இருந் தால், அதிர்ஷ்டத்தின் பலனைப் பெறலாம்.
9-ஆமிடத்தில் சுபகிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், புதன், சுக்கிரன் நின்றிருந்தால், அதிகப்படியான அதிர்ஷ்டப் பலனைப் பெறக்கூடும்.
ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால், அந்த ஜாதகர் திடீர் தனவரவால் பணக்காரராவார்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 4-ஆவது தசையாக சுக்கிர தசை வருவதால், சுக்கிரன் ஆட்சி, உச்ச வீடுகளில் வர்க்கோத்தமம் பெற்றுவிட்டால் எதிர்பாராத தன யோகம் உண்டாகும்.
தனயோகம் தரும் பரிகாரங்கள்
1. சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை திங்கட்கிழமைகளில் 21 முறை வலம்வந்தால் தரித்திரம் நீங்கும்.
2. மகாலட்சுமி சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் அபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி பூஜைசெய்தால் வறுமை நீங்கும்.
3. யோக நரசிம்மரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபட்டால் கடன் தொல்லை கள் தீரும்.
4. சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் தீபமேற்றி, 48 நாட்கள் சுற்றி வழிபட.செல்வம் பெருகும்.
5. தேய்பிறையில் பைரவரை வழிபட்டால், நிலையான வருவாய்க்கு வழி உண்டாகும்.
6. ராகு காலத்தின் கடைசி அரை மணி நேரமான அமிர்த கடிகை நேரமே சிறப் பான பரிகார நேரம். நெய் விளக்கேற்றவும் உகந்த நேரம். ஞாயிற்று™கிழமை மாலை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறி செல்வம் செழிக்கும்.
7. வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரைத் தண்டு திரிபோட்டு நெய் விளக்கேற்றி வழிபட, குடும்ப சாபம் நீங்கி, வீட்டில் செல்வமும் அமைதியும் பெருகும்.
8. ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிவப்புப் பட்டுத் துணி சாற்றி, சிவப்புத் தாமரையைப் பாதத்தில் வைத்து, குங்குமார்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை பணப்பெட்டியில் வைத்துவர வளமை உண்டாகும்.
9. வெள்ளிக்கிழமை காலையில் கல் உப்பு வாங்கிவந்து பூஜையில் வைக்க, வீட்டுக்குள் மகலட்சுமி காலடி எடுத்துவைப்பாள்.
10. வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் ஐந்துமுகக் குத்து விளக்கேற்றி மகாலட்சுமி வழிபாடு, பூஜை நடத்தினால் வறுமை தலைகாட்டாது.
11. வெள்ளிக்கிழமை காலை லலிதா சகஸ்ரநாமப் பாராயணம், குங்குமார்ச்சனை செய்ய வாழ்வில் மாற்றமும் ஏற்றமும் உண்டு.
12. சனிக்குரிய பூசம், அனுஷம், உத்திரட் டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வதால் வருமானம் பெருகும்.
13. மகாலட்சுமியை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்துவர செல்வச்செழிப்பு கூடும்.
14. வருடம் ஒருமுறையாவது மஹாசுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம் செய்துவர கடன் பிரச்சினைகள் தீரும்.
15. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், வரவேண்டிய பனம் வசூலாகும்.
16. நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடைவாசலில் கட்டி, கல்லாவிலும் போட்டுவைக்க வியாபாரத்தில் நஷ்டம் என்பதே இருக்காது.
17. சுக்கிரனுக்கு உகந்த அத்திமரத்தின் வேரினை சுக்கிர வாரம் நல்ல நேரம் பார்த்து வெட்டியெடுத்து, அதில் சுக்கிரனுக்குரிய மூலமந்திரத்தை உருவேற்றி, அதில் பஞ்சவர்ண நூல்சுற்றி, அதைத் தாயத்தாக அணிந்துகொண்டால் வருமானத்தில் ஏற்படும் அனைத்துத் தடைகளும் விலகும்.
18. பெண்கள் எப்போதும் தங்கள் இடது கையில் வெள்ளி மோதிரத்தை அணிந்தால் பணவரவு தங்குதடையின்றி அதிகரிக்கும்.
19. பௌர்ணமியன்று துளசி, பச்சைச் கற்பூரம், ஏலக்காய் ஆகியவற்றை ஒரு செம்புப் பாத்திரத்தில் போட்டுவைத்தால் தங்க ஆகர்ஷணம் ஏற்படும்.
20. திருவாவடுதுறை சென்று கோமுக்தீஸ் வரரை வணங்குவதால் செல்வம் சேரும்.
21. வெள்ளிக்கிழமை ராகுகால பூஜையில் மகாலட்சுமிக்கு மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜைசெய்யவும். இதனால் செல்வம், வியாபார அபிவிருத்தி ஏற்படும்.
22. தாமரை மணிமாலைகொண்டு மகாலட்சுமி மந்திரங்களை எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் சொல்லிவந்தால் தேவைக் கான பணம் வரும்.
23. தினமும் காலையில் ஒரு பசுமாட்டுக்கு அகத்திக் கீரையையோ வாழைப்பழங் களையோ கொடுக்கவேண்டும். அந்த பசுவின் உடலில் தங்கியிருக்கும் தேவர்களின் ஆசிகள் உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய அனைத்து செல்வங்களையும் வளங்களையும் சேர்க்கும்.
24. தேய்பிறை அஷ்டமியன்று ராகு காலத்தில் சொர்ணாகர்ஷண பைரவரை நெய் தீபமேற்றி வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
25. வீட்டில் குபேரனின் படத்தை தனியாக வைக்காமல், லட்சுமி குபேரர் படத்தை வைத்துப் பூஜிக்கவேண்டும்.
26. மகாலட்சுமி மூலமந்திரம், குபேர மந்திரம், தனதாயட்சினி மந்திரங்களை தினமும் சொல்லிவர, வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றத்தையும், குறைவில்லாத செல்வத்தையும் பெறலாம்.
மகாலட்சுமி மூலமந்திரம்
"ஸர்வக்ஞே ஸர்வ வரதே
ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வ துர்க்க ஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.'
குபேரன் மூலமந்திரம்
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம.'
குபேரனுக்குரிய வடதிசையைப் பார்த்த வாறு அமர்ந்து, இந்த மூலமந்திரத்தை 108 முறை துதிக்கவேண்டும். இதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் செய்துவர, உங்களுக்கு வீண்செலவுகள் ஏற்படாது.
செல்: 77080 20714