Advertisment

2024 பணமழையில் நனையப் போகும் ராசிகள்! பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

/idhalgal/balajothidam/2024-zodiac-signs-will-be-soaked-money-rain-prasanna-astrologer-anandhi

னுபவத்துக்கும் அறிவுக்கும் நடக்கும் கிரகயுத்தமே மனித வாழ்க்கை. இந்த போராட்டத்தின் இறுதியில் அனுபவமே அறிவின் துணைக்கொண்டு வெற்றியடையும். இதை புரிந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். இது புரியாமல் பணம் எனும் அதிர்ஷ்ட குதிரையின் வாலைப்பிடித்து வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் அதிகம். சாதராண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள்வரை அனைவரின் பிரதான தேவை பணம். பணமே பிரதான காரணியாக இருக்கும் இந்த காலத்தில் பணம் படைத்தவர்கள் ஏதேனும் ஒருவகையில் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள்.

Advertisment

ஜோதிடத்தில் 2, 5, 8, 11 ஆகிய பணபர ஸ்தானங்கள் பணவரவைக் குறிக்கும் பாவகங்களாகும். இதில் இரண்டாம் பாவகம் என்பது ஜாதகரின் பண வருவாய் நிலையையும், ஐந்தாம் பாவகம் என்பது பூர்வப்புண்ணியப் பலனால் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய தனத் தின் நிலையையும், எட்டாம் பாவகம் என்பது, எதிர்பாராத அதிர்ஷ்டம், மறைமுகமான தன லாபத்தையும், பதினொன் றாம் பாவகம் என்பது, 5-க்கு 7 என்ற முறையில், பூர்வப்புண்ணியப் பலனை பதினோராம் பாவத்தில் லாபமாக, 10-க்கு 2 என்ற முறையில் பத்தாம் வீட்டிற்கு லாபகரமான தன நிலையை குறிக்கும். 2, 11-ஆம் பாவகத்துடன் ஒரு ஜாதகத்தில் 5, 8-ஆம் பாவகங்கள் தொடர்புபெற்று சம்பந்தப்பட்ட தசை வரும்பொழுது, நிச்சயம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

Advertisment

ஒரு ஜாதகத்தின் யோகத்தை நிர்ணயம் செய்வதில் கோட்சார கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. கிரகங்களில் வருட கிரகங்களான குரு, ராகு- கேது, சனி இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால் அவற்றால் ஏற்படும் சுப- அசுப பலன்கள் வருடக்கணக்கில் ஜாதகரை பாதிக்கும். பூமியில் பிறக்கும் அனைவருக்கும், அவரவர் பூர்வஜென்ம வினைகளே கிரகங்களாக மாறி ஜாதக கட்டத்தில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து கோட்சார கிரக சஞ்சாரம்மூலம் வினைகளுக்கு ஏற்றபடி வாழ்வு அமைகிறது.

ஜனன ஜாதகத்தில் ஒரு சம்பவம் நடப்பதற்கான யோக அமைப்பு இருந்தால் கோட்சார கிரகங்கள் அதன் தசாபுக்தி காலத்தில் சம்பவத்தை நடத்திவைக்கும். ஜனன ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தி தராது.

ஒருவரின் ஆசை மற்றும் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை அடையும் பாக்கியப் பலன். ஜனனகால ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே கோட்சார கிரகங்களும் தசா புத்தியும் உதவும். ஒரு தனிநபரின் ஜாதகத்தினைக்கொண்டு நிர்ணயம் செய்யப்படும் கோட்சார பலனே துல்லியமாக இருக்கும் தசாபுக்திகளுடன், சம்பந்தம்பெறும் கோட்சாரம் சம்பவத்தை 100 சதவிகிதம் கச்சிதமாக நடத்தி தரும். சுய ஜாதகத்தில் குரு, சனி, சுக்கிரன் பாவ கிரக சேர்க்கைப்பெறாமல் நல்ல ஸ்தான பலத்துடன் இருக்கும்பொழுது, நிச்சயம் பொருளாதார ம

னுபவத்துக்கும் அறிவுக்கும் நடக்கும் கிரகயுத்தமே மனித வாழ்க்கை. இந்த போராட்டத்தின் இறுதியில் அனுபவமே அறிவின் துணைக்கொண்டு வெற்றியடையும். இதை புரிந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். இது புரியாமல் பணம் எனும் அதிர்ஷ்ட குதிரையின் வாலைப்பிடித்து வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் அதிகம். சாதராண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள்வரை அனைவரின் பிரதான தேவை பணம். பணமே பிரதான காரணியாக இருக்கும் இந்த காலத்தில் பணம் படைத்தவர்கள் ஏதேனும் ஒருவகையில் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள்.

Advertisment

ஜோதிடத்தில் 2, 5, 8, 11 ஆகிய பணபர ஸ்தானங்கள் பணவரவைக் குறிக்கும் பாவகங்களாகும். இதில் இரண்டாம் பாவகம் என்பது ஜாதகரின் பண வருவாய் நிலையையும், ஐந்தாம் பாவகம் என்பது பூர்வப்புண்ணியப் பலனால் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய தனத் தின் நிலையையும், எட்டாம் பாவகம் என்பது, எதிர்பாராத அதிர்ஷ்டம், மறைமுகமான தன லாபத்தையும், பதினொன் றாம் பாவகம் என்பது, 5-க்கு 7 என்ற முறையில், பூர்வப்புண்ணியப் பலனை பதினோராம் பாவத்தில் லாபமாக, 10-க்கு 2 என்ற முறையில் பத்தாம் வீட்டிற்கு லாபகரமான தன நிலையை குறிக்கும். 2, 11-ஆம் பாவகத்துடன் ஒரு ஜாதகத்தில் 5, 8-ஆம் பாவகங்கள் தொடர்புபெற்று சம்பந்தப்பட்ட தசை வரும்பொழுது, நிச்சயம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

Advertisment

ஒரு ஜாதகத்தின் யோகத்தை நிர்ணயம் செய்வதில் கோட்சார கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. கிரகங்களில் வருட கிரகங்களான குரு, ராகு- கேது, சனி இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால் அவற்றால் ஏற்படும் சுப- அசுப பலன்கள் வருடக்கணக்கில் ஜாதகரை பாதிக்கும். பூமியில் பிறக்கும் அனைவருக்கும், அவரவர் பூர்வஜென்ம வினைகளே கிரகங்களாக மாறி ஜாதக கட்டத்தில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து கோட்சார கிரக சஞ்சாரம்மூலம் வினைகளுக்கு ஏற்றபடி வாழ்வு அமைகிறது.

ஜனன ஜாதகத்தில் ஒரு சம்பவம் நடப்பதற்கான யோக அமைப்பு இருந்தால் கோட்சார கிரகங்கள் அதன் தசாபுக்தி காலத்தில் சம்பவத்தை நடத்திவைக்கும். ஜனன ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தி தராது.

ஒருவரின் ஆசை மற்றும் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை அடையும் பாக்கியப் பலன். ஜனனகால ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே கோட்சார கிரகங்களும் தசா புத்தியும் உதவும். ஒரு தனிநபரின் ஜாதகத்தினைக்கொண்டு நிர்ணயம் செய்யப்படும் கோட்சார பலனே துல்லியமாக இருக்கும் தசாபுக்திகளுடன், சம்பந்தம்பெறும் கோட்சாரம் சம்பவத்தை 100 சதவிகிதம் கச்சிதமாக நடத்தி தரும். சுய ஜாதகத்தில் குரு, சனி, சுக்கிரன் பாவ கிரக சேர்க்கைப்பெறாமல் நல்ல ஸ்தான பலத்துடன் இருக்கும்பொழுது, நிச்சயம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

tt

மனிதர்களின் அத்தியாவசியத் தேவையான பணம் 2024-ஆம் ஆண்டில் யாருக்கு தங்கு தடையின்றி கிடைக்கப் போகிறது என்பதைக் பார்க்கலாம்.

மேஷம்

கொள்கை பிடிப்பு நிறைந்த மேஷ ராசியினர் எப்பொழுதும் கை நிறைய, பை நிறையப் பணம் வைத்திருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். இந்த ஆங்கிலப் புத்தாண்டின் துவக்கத்தில் ஜென்ம குருவாக ராசியில் நின்று 5, 7, 9-ஆமிடங்களை பார்வையிடுகிறார். ஏப்ரல் 21, 2024-க்குப் பிறகு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்குச் சென்று 6, 8, 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஆண்டு முழுவதும் தொழில் ஸ்தான அதிபதி சனிபகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சிப்பலம் பெற்று 1, 5, 8-ஆமிடங்களைப் பார்வையிடுகிறார். ராகுபகவான் விரய ஸ்தானத்திலும் கேதுபகவான் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார். கோட்சார குரு, சனி இவர்களின் சம்மந்தம் 2, 5-ஆமிடங்களுக்கு இருப்பதால் அதிர்ஷ்ட லட்சுமி உங்களுக்கு பண மழை பொழிவாள். விரய ஸ்தான ராகுவால் தேவையற்ற வீண் விரயங்கள் உண்டாகும். நன்மையை அதிகரிக்க சிவ வழிபாடு செய்யவும்.

ரிஷபம்

வசீகரமான ரிஷப ராசியினருக்கு பணப்புழக்கம் சீராக இருந்தால் மட்டுமே முகம் தேஜசாக இருக்கும். இவர்களுக்கு 2, 5-ஆம் அதிபதி புதன் என்பதால் புத்தியை தீட்டி ஏதாவது ஒருவகையில் பணம் சம்பாதித்து விடுவார்கள். ஆண்டின் துவக்தத்தில் விரய ஸ்தானத்தில் நிற்கும் குருபகவான் 4, 6, 8-ஆமிடங்களைப் பார்வையிடுகிறார். ஏப்ரல் 21-ல் ஜென்ம ராசிக்குள் நுழையும் குருபகவான் 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்வையிடுகிறார். ஆண்டு முழுவதும் 10-ல் நிற்கும் சனிபகவான் 12, 4, 7-ஆமிடங்களைப் பார்வையிடுகிறார். லாப ஸ்தானத்தில் ராகுவும் பஞ்சம ஸ்தான கேதுவும் நிற்கிறார்கள். கோட்சார கிரகங்களின் சம்பந்தம் பணபர ஸ்தானமான 2, 5, 11-ஆம் இடங்களுக்கு இருப்பதால் தாராள தன வரவு இருந்துகொண்டே இருக்கும். ஏப்ரலுக்குப் பிறகு பணம் கையில் தங்கும். மேலும் தன வரவை அதிகரிக்க மகாவிஷ்ணுவை வழிபடவும்.

மிதுனம்

அறிவாற்றல் நிறைந்த மிதுன ராசியினர் தங்களின் வாழ்க்கைத்துணை மூலம் எப்பொழுதும் தாராள தன வரவை பெறுவார்கள். சுய வருமானத்தை விட வாழ்க்கைத்துணைமூலம் கிடைக்கும்பெறும் வருமானம் அதிகமாக இருக்கும். இந்த புதிய வருடத்தில் வருட கிரகமான குருபகவான் ஆண்டின் துவக்கத்தில் லாப ஸ்தானத்தில் நின்று 3, 5, 7-ஆமிடங்களுக்கு சுபிட்சம் வழங்குகிறார். ஏப்ரல் 21, 2024-ல் விரய ஸ்தானம் செல்லும் குருபகவான் 4, 6, 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவான் 11, 3, 6-ஆமிடங்களை சஞ்சரிக்கிறார். ராகு தொழில் ஸ்தானத்திலும் கேது சுக ஸ்தானத் திலும் நிற்கிறார்கள். குருபார்வையால் சனி பலத்தால் குலதெய்வ அருளால், முன்னோர் கள் நல்லாசியால் பணபர ஸ்தானங்களும் உப ஜெய ஸ்தானங்களும் வலுவாக இயங்கு கிறது. தொட்டது துலங்கி பண வெள்ளத் தில் மிதக்கும் நாள் வந்துவிட்டது. மேலும் சுபப்பலன் அதிகரிக்க மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.

கடகம்

தாயன்பு நிறைந்த கடக ராசியினருக்கு அரசாங்க உத்தியோகம், அரசியல் துறை, வெளிநாட்டு வேலை, தொழில்மூலம் பொருள் வரவு எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கும். இந்த புத்தாண்டில் குருபகவான் எப்ரல் 21 வரை 10-ஆமிடத்தில் நின்று 2, 4, 6-ஆமிடங்களை பார்வையிடுகி றார். ஏப்ர-ல் குருப்பெயர்ச்சிக்கு பின் லாப ஸ்தானம் சென்று 3, 5, 7-ஆமிடங்களைப் பார்வையிடுகிறார். சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் நின்று 2, 5, 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். ராசிக்கு 3-ல் கேதுவும் 9-ல் ராகுவும் அமர்ந்து இருக்கிறார்கள். பணபர ஸ்தானங்களான 2, 5, 8-ஆமிடங் கள் வலிமையாக இயங்குவதால் அஷ்டமச் சனியை மீறிய பணப்புழக்கம் இருக்கும். மேலும் சுபப் பலனை அதிகரிக்க சிவ சக்தியை வழிபடவும்.

சிம்மம்

ஆளுமைத் திறன் நிறைந்த சிம்ம ராசியி னர் தங்களின் நிர்வாகத்திறனால் பணம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வார்கள். ஆண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 21 வரை பாக்கிய ஸ்தானத்தில் நின்று 1, 3, 5-ஆமிடங்களைப் பார்வையிடுகிறார். குருப்பெயர்ச்சிக்குபின் தொழில் ஸ்தானம் சென்று 2, 4, 6-ஆமிடங்களை புனிதப்படுத்து கிறார். சம சப்தம ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவான் 1, 4, 9-ஆமிடங்களுக்கு தனது பார்வையை பதிக்கிறார். ராகுபகவான் அஷ்ட ஸ்தானத்திலும் கேதுபகவான் தனம், வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார் கள். கோட்சார கிரகங்களின் சம்பந்தம் 2, 5, 8-ஆமிடங்களுக்கு இருக்கிறது. சுய ஜாதகத்தில் ராகு தசை நடப்பவர்களுக்கு விபரீத ராஜயோக அடிப்படையில் பணம் கூரையை பிய்த்துக்கொட்டும். மேலும் சுபப் பலனை அதிகரிக்க ராகு வழிபாடு செய்யவேண்டும்.

கன்னி

இளமைப் பொழிவு நிறைந்த கன்னி ராசியினர் வங்கிப்பணி, ஆசிரியப் பணி, ஆடிட்டிங், மார்க்கெட்டிங் மற்றும் புதுமையான எண்ணங்கள்மூலம் வருவாயை பெருக்குவார்கள். ஆண்டின் துவக்கத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் 2, 4, 12-ஆமிடங்கள் விருத் தியடையும். ஏப்ரலுக்குப்பிறகு பாக்கிய ஸ்தானம் செல்லும் குருபகவானால் 1, 3, 5-ஆமிடங்கள் புனிதமாகும். ஆண்டு முழுவதும் 6-ல் நிற்கும் சனிபகவான் 8, 12, 3-ஆமிடங்களைப் பார்க்கிறார். ராசியில் கேது 7-ல் ராகு. கோட்சார கிரகங்கள்மூலம் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதி கடனுக்கே சென்றுவிடும். கடனை கட்டுக்குள் வைத்தால் மட்டுமே இந்த ஆண்டை சமாளிக்கமுடியும். பண புழக்கத்தை அதிகரிக்க மகாலட்சுமியை வழிபடவேண்டும்.

துலாம்

நியாயமும், நேர்மையும் நிறைந்த துலா ராசியினர் நியாயமான நேர்மைமையான வழியில் சம்பாதிக்கவேண்டும் என்று விரும்புவார்கள். குருபகவான் ஆண்டின் துவக்கத்தில் சம சப்தம ஸ்தானத்தில் நின்று 11, 1, 3-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஏப்ரல் 21-ல் குருபகவான் அஷ்டம ஸ்தானம் சென்று 12, 2, 4-ஆமிடங்களைப் பார்க்கி றார். பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் 7, 11, 2-ஆமிடங்களை பார்க்கிறார். 6-ல் ராகுவும் 12-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார். கோட்சார சனி, குருவால் தன, லாப ஸ்தானம் பலமடைந்தாலும் ராகு- கேதுவால் கடனும், மிகுதியான விரயமும் இருக்கும். பணம் வந்தவழியும், சென்றவழியும் தெரியாது. தினமும் ராகு காலத்தில் துர்க்கை, காளியை வழிபட வீண் விரயம், கடன் சுமை குறையும்.

விருச்சிகம்

உதவி செய்வதில் உயர்ந்த விருச்சிக ராசியினர் தங்களுக்கு கிடைக்கும் பொருளாதாரத்தை வருவாய்க்கு மீறிய செலவுசெய்து அழித்துவிடுவார்கள். விரும்பியதை மன பலத்தால் அடையும் சக்தி படைத்தவர்கள் என்பதால் தங்களுக் குத் தேவையான வருமானத்தை குறுக்கு வழியிலும் சம்பாதிக்க தயங்கமாட்டார்கள். ஆண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 21 வரை குருபகவான் 6-ஆம்மிடத்தில் நின்று 10, 12, 2-ஆமிடங்களையும் ஏப்ரலுக்குப் பிறகு 7-ஆமிடம் சென்று 11, 1, 3-ஆமிடங்களைப் பார்வையிடுகிறார். ஆண்டு முழுவதும் அர்த் தாஷ்டமச் சனியாக பலன் தந்தாலும் 6, 10, 1-ஆமிடங்களைப் பார்க்கிறார். 5-ல் ராகுவும் 11-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார் கள். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் 5-ஆமிட ராகு மிகுதியான அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவார். புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டால் கடன் அடைத்து உபரி லாபத்தை எதிர்காலத்திற்கு சேமிக்கமுடியும். உபரி லாபத்தால் பயன்பெற முருகனை வழிபடவும்.

தனுசு

ஆன்மிக நாட்டம் நிறைந்த தனுசு ராசியினர் தங்கள் சம்பாதித்த வருமானத்தை கோவில் கொடைதான, தர்மத்திற்குச் செலவு செய்வதுடன் கடன் வாங்கியும் தான, தர்மம் வழங்குவதில் வல்லவர்கள். 2024 ஆங்கிலப் புத்தாண்டு துவக்கத்தில் குரு பஞ்சம ஸ்தானத் தில் நின்று 1, 9, 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஏப்ரல் 21-ல் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு 6-ஆமிடத்திற்குச் சென்று 10, 12, 2-ஆமிடங் களைப் பார்க்கிறார். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஆட்சி பலம் பெற்ற சனிபகவான் 5, 9, 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். நவ கிரகங்களில் நிழல் கிரகமான ராகு பகவான் சுக ஸ்தானத்திலும் கேது பகவான் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். ஏப்ரல் வரை 5-ஆமிட குருபகவானால் தாராள தன வரவை ஏற்படுத்துவார். ஏப்ரலுக்குப் பிறகு லாபம் குறைந்து விரயம் மிகுதியாகும். எனவே பணம் கிடைக்கும் காலத் தில் சேமித்து பிற்காலத்திற்கு பயன்படும் வகையில் திட்டமிட வேண்டும். நிலையான பண வரவை அதிகரிக்க ஆஞ்சனேயரை வழிபடவும்.

மகரம்

விடாமுயற்சி நிறைந்த மகர ராசியினருக்கு உழைப்பில் ஆர்வம் அதிகம். சளைக் காமல் உழைத்து முன்னேறுவார்கள். குருப் பெயர்ச்சிக்குமுன் 4-ஆமிடமான சுக ஸ்தானத் தில் சஞ்சாரம் செய்யும் குருபகவான் 8, 10, 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஏப்ரல் 21 குருப்பெயர்ச்சிக்குப் பின் 5-ஆமிடம் சென்று 9, 11, 1-ஆமிடங்களைப் பார்வையிடுகிறார். ஏழரைச்சனியின் மூன்றாம் பாகம். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி 4, 8, 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். ராகு பகவான் 3-ஆமிடமான முயற்சி ஸ்தானத்தி லும் கேதுபகவான் 9-ஆமிடமான பாக்கிய ஸ்தானத்திலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்கிறார்கள். ஏப்ரல்வரை பொருளாதாரத்தில் சிறுசிறு ஏற்ற இறக்க மிருந்தாலும், ஏப்ரலுக்குப்பிறகு பணப்புழக் கம் அதிகரிக்கும். தினமும் மாலை நேரத்தில் நரசிம்மரை வழிபட இழப்புகள் குறைந்து சேமிப்பு உயரும் .

கும்பம்

கும்பத்தைபோல் உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினர் கவுரவமான தொழில், உத்தியோகம்மூலம் வாழ்வா தாரத்தை உயர்த்தும் ஆர்வம் நிறைந்தவர்கள். குருபகவான் ஏப்ரல் 21 வரை 3-ஆமிடத்தில் நின்று 7, 9, 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஏப்ரல் 21-க்குப் பிறகு 4-ஆமிடம் செல்லும் குருபகவான் 8, 10, 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் நிற்கும் சனிபகவான் 3, 7, 11-ஆமிடங்ளைப் பார்க்கி றார். ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். சனி மற்றும் குருவினால் ஓரளவு வருமானம் வரும். வழக்கிற்கு காரக கிரகமான கேது அஷ்ட ஸ்தானத்தில் நிற்ப தால் தேவையற்ற வம்பு, வழக்கால் தீராத கடன் உருவாகும். காலபைரவரை வழிபடவும்.

மீனம்

சாந்த குணம் நிறைந்த மீன ராசியினர் சாமர்த்தியமான பேச்சினால் சம்பாதிப்பதில் வல்லவர்கள். ஆண்டின் துவக்கத்தில் ராசி அதிபதி குரு, தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத் தில் நின்று 6, 8, 10-ஆமிடங்களைப் பார்க்கி றார். ஏப்ரலுக்குப் பிறகு 3-ஆமிடம் சென்று 7, 9, 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். சனி பகவான் விரய ஸ்தானத்தில் நின்று 2, 6, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் நிற்கிறார்கள். கோட் சார குருவால் பொருள் வரவு உண்டாகும். ராசியிலுள்ள ராகு மற்றும் விரயச்சனியால் அதீத விரயம் உண்டாகும் என்பதால் திட்டமிட்டு செயல்படவும். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்தியை வழிபட விரயம் சுபமாகும். பணம் என்பது ஒரு மாயை. அது தான் விருப்பப்பட்ட இடத்திற்கு நகரும் தன்மைகொண்டது. அதனால்தான் அதற்கு செல்வம் என்று பெயரிட்டார்கள். நன்கு தாராள பணப்புழக்கமுள்ள காலத்தில் .திட்ட மிட்டு செயல்பட்டால் வாழ்க்கை வளமாகும்.

செல்: 98652 20406

bala050124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe