துலாம்

துலா ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த குரோதி புது வருடத்தில் சுக்கிரன் உச்சமாகியுள்ளார்.

ஆனாலும் அவர் 6-ஆமிடம் எனும் மறைவு ஸ்தானத்தில் உச்சம். அதனால் ஏது பயன் என எண்ணுவீர்கள். அதில் இன்னொரு நன்மை கிடைக்கிறது. சுக்கிரன் உங்களின் 8-ஆம் அதிபதியாக 6-ல் மறைவு. எனவே, அங்கு ஒரு விபரீத ராஜ யோகம் வந்து ராசியாதிபதியை பலப்படுத்துகிறது. எனவே இந்த வருடம் துலா ராசியினர் எந்த இன்னல் வந்தாலும், அதை ஜஸ்ட் லைக் தட் ஊதிவிட்டு, ஜாலியாக இருப்பர். நல்ல காலத்திலேயே இந்த துலா ராசியினர் மனிதர்களிடம் பழக ஆயிரம் முறை யோசிப்பர். இந்த வருடம் தங்கத்தை உரசி தரம் பார்ப்பதுபோல் மனிதர்களை அளந்து பார்த்து சந்திக்க இசைவர். நல்ல காலத்திலேயே ரொம்ப கெத்து காட்டும். இப்போ சொல்லவே தேவையில்லை. வருமானத்திற்கு குறைவிருக்காது. உங்கள் வருமானத்திற்குரிய அதிபதியும், யோகாதிபதியும் ஒன்றுகூடி குதூகலிக்கிறார்கள்.

இரு கிரகமும் செம பாவிகள். எனினும், நல்ல பாவாதிபதி கள். எனவே வருமானம் என்பது மென்மையான வழிகளை கொண்டிராமல், பலவந்தமான பணவரவு வரும். வாரிசுகள் வரும்படி கொணர்வர். கொஞ்சம் கட்டப் பஞ்சாயத்து மூலமும் பணவரவு உண்டு. இப்போது நடக்கும் திருமணம் அதீத வருமானம் தரும். மனைமூலம் காசு வந்துசேரும்.

Advertisment

உங்களில் நிறைய ஜாதகர்கள் பணத்தை கொடுத்து அரசு வேலையை வாங்கி விடுவீர்கள்.

வேறு சிலர் வெளிநாட்டு வேலைக்குச் செல்வீர்கள். சிலர் சினிமா, டி.வி.யில் நடிக்கச் சென்றுவிடுவீர்கள். சிலர் விளம்பர மாடலாக மாறுவீர்கள். உங்களில் சிலருக்கு மேற்கல்வி கற்கும் போதே வேலையும் பார்க்கும் வாய்ப்பு வரும்.

இந்த வருடம் உங்கள் பலம் உச்சமடைந்து இருப்பது போல் உங்கள் எதிரிகளின் பலமும் பலமானதாக இருக்கும். நீங்கள் வேண்டுமன்றே உங்கள் எதிரி இருப்பிடம் சென்று உரண்டை இழுக்க வேண்டாம். இரண்டுபேருக்கும் சேதாரம் சமமாக இருக்கும். சண்டையில் இருவர் சட்டை மட்டுமல்ல பாடியும் கிழிந்துவிடும்; ஜாக்கிரதை.

Advertisment

திருமணம் வேண்டுவோருக்கு கல்யாணம் கன்ஃபார்ம். அது காதல் அல்லது கலப்பு கல்யாணமாக அமையும். சிலரின் திருமணத்தில் அரசியல் குடும்பம் தொடர்பு இருக்கும். சிலரின் இணை அரசு சார்ந்து இருக்கும். திருமணம் நிறைய வரும்படி கொண்டு வருவதால் இருவீட்டாரும் கன மகிழ்ச்சியோடு இருப்பர். சில பாதகங்களும் திருமணம்மூலம் வரும்.

அதனை சகித்துக்கொள்ள எழும்.

கிரக அமைப்புபடி வரும் துன்பங்கள் சூரியனைக்கண்ட பனிபோல் நீங்கி மறைந்துவிடும். ஏற்றுமதி- இறக்கு மதியில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், அதன் தரவுகளை கவனமாக கையாளவும்.

உங்கள் வேலையில் நல் யோகம் கிடைக்கும். உங்களில் பலர் வெளிநாட்டு வேலை கிடைக்கப்பெற்று அதிர்ஷ்ட வாய்ப்பு பெறுவர். உங்களில் சிலர் சேவை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அழைத்து வரும். யோகம் சில தடங்கல்களுடன் வந்து சேரும். வெளிநாடு செல்லும் போது சிற்சில வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. துலா ராசி குழந்தைகளின் தந்தை ஏற்றமிகு வேலை கிடைக்க வாய்ப்பு பெறுவார்.

தர்மகர்மாதிபதி யோகம் கிடைக்கிறது. எனவே தொழில் மிக எளிதாக ஏற்றம் காணும். தொழிலில் வெளிநாட்டு சம்பந்தம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியால் உங்கள் அந்தஸ்து பெருகும். உங்களில் சிலர் மதுபானம் சம்பந்த தொழிலில் ஈடுபடுவீர்கள்.

காசு, மணி பெருக்கம் உண்டு. அதைவிட மனிதர்களின் சந்திப்பும், அது சார்ந்த விளைவுகளும் மிகப்பெரிய லாப முன்னேற்றம் தரும். பிற மனிதர் களின் தொடர்பு அரசியல்வாதிகளின் அறிமுகம், அரசு அதிகாரிகளின் அனுகூலம் இவை உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பலன் தரும். பெரும் லாபமல்லவா. இது இந்த வருடம் கைகூடும்.

அரசியல் ஈடுபாடு, பங்கேற்பது என இவை அதிகரிக்கும். சிலர் வாழ்க்கைத்துணையை அரசியலில் ஈடுபடச் செய்வீர்கள். அலைச்சலும், செலவும் மிக அதிகரிக்கும். அரசியல், தேர்தல் சார்ந்த பணிகள் உண்டு. தேர்தலில் பங்கெடுத்தால் எதிரிகளை சமாளிப்பது பெரும் கஷ்டமாக இருக்கும்.

வேலை, தொழில் எல்லாமே ரொம்ப அலைச்சலைத் தரும். எனினும் நீங்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாக அலைச்சலை மற்றவருக்கு பகிர்ந்து கொடுத்துவிடுவீர்கள். அல்லது இந்த இடத்தில் இருந்தே கமப்யூட்டர், கைபேசி மூலம் பாதி வேலையை முடித்துவிடுவீர்கள். மொத்தத்தில் பணமும், பலனும் இருந்தால் மட்டுமே அலைவீர்கள். இல்லையென்றால் அலைச்சலுக்கு நோதான்.

பரிகாரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியை வணங்கவும். செவ்வாய் + சனி சேர்க்கைக்கு வெள்ளிக் கிழமை வெண் தாமரை பூமாலை, தேன் கலந்த பேரிச்சம்பழம் மற்றும் அகல் விளக்கில் சிகப்பு நிற துணியில் 24 மிளகை மூட்டை கட்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சிகப்பு திரி போட்டு தீபம் ஏற்றவும். உங்களிடம் பணிபுரிபவரின் திருமணத் திற்கு முடிந்த உதவிச் செய்யுங்கள்.

விருச்சிம்

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த வருடம் உங்களின் எப்போதும் உள்ள சுறுசுறுப்பு குறையும். உடல் சற்று சுணக்கம் காணும். ஆனால் உண்மை யான காரணம் உடலில் சற்று பழுது தென்படுவதை ஆகும். இந்த வருடம் ஆரம்பித்தவுடன் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இது ஒரு முன்னெச் சரிக்கை நடவடிக்கையாகும். பண வரவு இருக்கு; ஆனா இல்லை கதைதான். மழை வரவும் செலவும் அதிகமாக இருப்பதால் பணம் வந்த சுவடு தெரியாமல் மறையும். மேலும் உங்கள் தொழில் சார்ந்து கடன் வாங்கவேண்டி இருப்பதால் அது ஒரு காரணமாக பணவரவு கணக்கை இடிக்கும்.

உங்களில் சிலர் சொந்த வீட்டை விட்டு, வாடகை வீட்டிற்கு செல்வீர்கள். சிலர் பூர்வீகம் நோக்கி நகர்வீர்கள்.

சிலர் சொந்த வீட்டை வாடகைக்கு விடுவீர்கள். வீட்டின்மீது கடன் வாங்கவும் கூடும். வேளாண் சம்பந்த வாகனம் வாங்க இயலும். உங்கள் தாயார் அவ்வப்போது வயிறு சரியில்லை என்பார். மீனவர்கள் தங்களின் மிகப் பழமையான முறையையும். புதுமையையும் இணைத்து மீன் பிடி தொழிலை செய்வர். விவசாயிகள் நிறைய ஆட்களை வேலைக்கு நியமிப்பர்.

இந்த வருடம் வாரிசு பற்றிய மருத்துவ உதவி ப−தமாகி, கரு தங்கும். சிலரின் வாரிசுகள் வேலையின் பொருட்டு இடம் பெயர்வர். உங்களில் சிலர் முன்பு பார்த் துக்கொண்டிருந்த வேலையின் அடிப்படையில் அரசு உதவியுடன் சொந்தத் தொழில் தொடங்கிவிடுவீர்கள். பிறர் உங்கள் வாரிசுகளுடன் சேர்ந்து, குழந்தை கள் ஆரோக்கிய உணவு தயாரிப்பீர்கள்.

இந்த வருட இடையூறு, துன்பமெல்லாம் உங்கள் ஆரோக்கியம் சம்பந்தமானதாக இருக்கும். வயிற்று வலி, அஜீரணக் கோளாறு மற்றும் பாதத்தில் நரம்புகள் இழுத்தல் என இவற்றால் சிரமம் ஏற்படும். ஒருசிலரின் தாய்- தந்தை சற்று உடல் நலக்குறைவை சந்திப்பர்.

உங்களில் சிலருக்கு யோக வரவுகள் என்பது வெளிப்படையாக தெரியாமல், பெண் வாசல் வழியாக, ரகசியமாக கிடைக்கும். அதனை நீங்கள் முழுமையாக அனுபவிக்க இயலாது. வேறு சிலருக்கு அதிர்ஷ்ட நிகழ்வுகள் என்ற விஷயம் அடைபட்டு மறைந்துவிடும். எல்லாம் போன ஜென்மத்து பாவம் என நொந்து கொள்வீர்கள். இது 9-ஆம் அதிபதி 8-ல் மறைவதால் வரும் வினையாகும்.

நீங்கள் நடத்திவரும் தொழிலில் முழு கவனம் செலுத்த இயலாமல் போய்விடும். அது உடல்நலம் சார்ந்து இருக்கும். எனவே உங்கள் வாரிசு அதில் ஈடுபட்டு உழைப்பார். வேறு சிலர் தாங்கள் இதுவரை யில் பார்த்து வந்த வேலையை தனது சொந்தத் தொழிலாக மாற்றிக்கொள்வர். இதில் அரசு மானியமும் சிலருக்கு கிடைக்கும். சிலர் கற்ற கல்வி அடிப்படையில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆரம்பிக்ககூடும். சிலர் உங்கள் வீட்டின் ஒரு பகுதியில் கைத்தொழில் முறையில் சிறு வணிகம் தொடங்குவீர்கள்.

உங்கள் லாபாதிபதி நீசபங்கம் ஆகியுள் ளார். எனவே உங்களின் எதிர்பாராத வருமானம் சர்ச்சை இழுத்தடித்துவிட்டு பின்தான் கிடைக்கும்.

சற்று தடங்கல் ஏற்படும். சமையல் காண்ட்ராக்டர்கள், இந்த வருடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

சமையலில் சிறு தவறு ஏற்பட்டு, பின் திருத்தப்பட வேண்டி நிகழும்.

சீட் கிடைப்பதே பெரிய இழுபறியாக அமையும்.

அட சீட் கிடைத்தாலும், வெற்றி அடைவதற்குள் பெரும்பாடு ஆகிவிடும். உங்க அம்மா கொடுத்த சீனி தண்ணி வெளியே வந்து நாக்கு தள்ளிவிடும். பிறந்த ஜாதக தசா புக்திகள் அருமையாக நடந்தால் தேர்தலில் நிற்க முயலுங்கள். இல்லையென்றால் அரசியல் ஆணியே புடுங்கவேண்டாம். செலவு கட்டுக்கடங்காமல் இருக்கும் செலவும் ஆடம்பரமாக அமையும். செலவுகள் அநேகமாக உங்கள் வாரிசு சம்பந்தமான சுபச் செலவுகளாக இருக்கும் அல்லது உங்களது திருமண செலவாக இருக்கும்.

சிலரின் மருமகன் பெரிய தொகை அல்லது சொத்து கேட்டு அடம்பிடிப்பார். வெகுசிலர், ஆரோக்கியம் சார்ந்து வெளிநாடு, வெளியூர் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும் செலவாக இருக்கும். இந்த வருடம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுப செலவுகள் நிறைந்த வருடமாக அமையும். பணம் கரைந்தாலும், மனம் நிறையும். ஆரோக்கியம் மட்டும் சற்று நொண்டுகிறது;

பரிகாரம்: உங்கள் விருச்சிக செவ்வாய், சனியுடன் கூடி நிற்கிறார். உங்களுக்கு இஷ்ட மான முருகரை வணங்கவும். சனி+ செவ்வாய் சேர்க்கைக்கு செவ்வாய்க் கிழமையில் கொள்ளு சுண்டல், செம்பருத்தி பூ இவற்றுடன் அகல் விளக்கில் சிகப்பு துணியில் 25 மிளகாய் பொட்டலம் கட்டி, நெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஊற்றி சிகப்பு திரையில் தீபம் ஏற்றவும். பள்ளி குழந்தைகளுக்கும் பள்ளி கட்டட செலவுக்கும் உதவலாம்.

தனுசு

இந்த வருடம் நிஜமாகவே உங்களுக்கு மிக யோகம் தரும் வருடமாகும். உங்கள் ராசியாதிபதி குரு உச்ச சூரிய சாரம் வாங்கி, உச்ச சூரியனுடன் உள்ளார். 5-ஆமிடத்தில் 9-ஆம் அதிபதியுடன் நிற்பதாக ஆகிறது. எப்போதும் 5+9 ம் அதிபதிகள் சேர்க்கை மிக நன்று. அதிலேயும், 9-ஆம் அதிபதி உச்சமாக ராசிநாதனுடன் நிற்பது எத்தனை மேன்மை. எனவேதான் இந்த வருடம் குருவருளும், இறையருளும் நிறைந்த வருடமாக அமையப்போகிறது. நல்லன எல்லாம் நடக்கும் நேரத்தில், தீயனவற்றை விளக்கித் தள்ளும் சத்தியம் வந்து சேர்ந்துவிடும்.

உங்களுக்கு பணவரவு வெள்ளையாகவும், கருப்பாகவும் நன்றாகவே வரும். எனினும் பணம் வரவர சுப செலவழியும் நிலையும் உண்டு. எனவே பண வரவு கையில் வந்தவுடன், அதனை பூர்வீகத்தில் முதலீடாகவோ, வாரிசுகளின் பெயரில் எஉயாகவோ, மனை வாங்கி விடவோ வேண்டும். இல்லையெனில் வந்த பணம் மொத்தமும் செலவழிந்து விடும்.

ss

இந்த தனுசு ராசியார், இந்த வருடம் கண்டிப்பாக வீடு வாங்க இயலும். நீங்கள் வாழ்வின் எந்த தளத்தில் இருப்பினும் வீடு வாங்குவீர்கள். சிலர் அரசு சார்ந்த வீடு கிடைக்க பெறுவீர்கள். சிலர் பூர்வீகத்தில் வீட்டைக் உருவாக்குவீர்கள். சிலரின் வாரிசுகள் உங்களுக்கு வீட்டை பரிசளிப்பர். இப்போது கிடைக்கும் வீடு தெய்வீக தன்மையுடன் அமையும். அனேகமாக அவ்வீடு ஒரு கோவில் அருகில் இருக்கும். எலி வலை ஆனாலும் தனி வலை அல்லவா. உங்கள் பெயரில் ஒரு வீடு ரெஜிஸ்டர் பண்ணுவது பெரிய பாக்கியம்தான். இது உங்கள் குலதெய்வ அருளால் கிடைக்கும். எங்க வீட்டு கிரகப்பிரவேசத்தில் உங்கள் பெற்றோர் அமர்ந்து யாகம் செய்து மகிழ்வர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசின் பாராட்டு பத்திரம் பெறுவர். இதுவரையில் குழந்தை வரம் வேண்டியவர்களின், பிரார்த்தனைகள் நிறைவேறி, அனேகமாக ஆண் குழந்தை பிறக்கும்.

உங்களுக்கு இந்த வருடம் நிறைய நன்மைகள் கிடைத்தாலும், நோய் வரும். நிறைய தனுசு ராசிக்காரர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும். ஏனெனில் நீரழிவு நோய் வரும் வாய்ப்புள்ளது. வருமுன் காப்பதுபோல், உடற்பயிற்சி நடை பயிற்சி என முன்கூட்டியே ஆரம்பித்துவிடுங்கள். இனிப்பை தவிர்க்கவும்.

உங்கள் எதிரிகள் பலம் அதிகரிக்கும். மறைந் திருந்து தொல்லை கொடுப்பர். எனினும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உதவியால் எதிரிகளிட மிருந்து விடுபடுவீர்கள்.

இப்போது கிடைக்கும் வேலை நிறைய மனிதர்களை சந்திப்பது அல்லது வேலை செய்பவரை கண்காணித்து கட்டுப்படுத்துவது என அமையும்.

உங்கள் தாய்வழியில் பெண், பையன் அமைவர்.

அவர் வெளிநாட்டில் வேலை பார்க்கக்கூடும்.

திருமணம் உங்களின் பிறந்த ஊரில் நடக்கும். மிக புதுமையான- மேன்மையான, மிகச் சிறப்பாக திருமண விழா கொண்டாடப்படும். எனினும் திருமண விழாவில் ஒரு அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது; கவனம் தேவை.

இப்போது கிடைக்கும் வணிக பங்குதாரர் மெத்த படித்தவராக கொஞ்சம் குசும்பு பண்ணுகிறவராக அமைவார். சிலசமயம் ஏதேனும் வேண்டாத்தனம் செய்து, உங்களை மிரள செய்வார்.

வயதான பெண்கள் உங்களுக்கு துன்பம் தருவர்.

அவர்களின் சில அண்டர் கிரவுண்ட் வேலைகள், உங்களை கலங்கடிக்கும். உங்கள் வீட்டின் கௌரவத்தைக் குலைக்கும் விதமாக நடந்துகொள்வார். முக்கியமாக, உங்கள் திருமண நிகழ்வுகளில் ரொம்ப வம்பு பேசி கலகம் இழுத்துவிடுவார்.

உங்கள் அதிர்ஷ்ட அதிபதி உச்சம்பெற்று அமர உங்கள் ராசியாதிபதி அவரின் சாரம் பெற்று அமர்ந் துள்ளார். இந்த மாதிரி கிரக அமைப்பு எப்போதாவது தான் அமையும். எனவே நீங்கள் அதிர்ஷ்டத்தை தேடி போக வேண்டாம். அதிர்ஷ்டமே உங்களை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சும். வேறென்ன வேண்டும். அனைத்து செயல்களும் வளமையும், நிறைமையும் உடையதாக இயங்கும். இந்த மாதிரி கால கட்டத்தை தனுசு ராசியார் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. நீங்கள் அரசு பதவி மேன்மை அல்லது அரசியலில் முதன்மைக்கு ஆசைப்பட் டால், அதனை இந்த வருடம் நிறைவேற்றி விடுங்கள். காலத்துக்கும் அதன் பயனை அனுபவிக்க லாம்.

உங்கள் தொழிலுக்குரிய அதிபதி நீசபங்க ராஜயோகம் வந்ததால் மிகப்பெரிய தொழில் மேன்மையும், சிறு தடங்கலுக்குப் பிறகு நடக்கும். மேலும் உங்கள் தொழில் ஏற்றம், எதிரிகளை வெகுளச் செய்து துன்பம் தர முனைவர். எனவே எதிரிகளிடம் கவனமாக இருந்தால், தொழில் அமர்க்களமாக நடக்கும். உங்களின் லாபாதிபதி உச்சம். எனவே ரியல் எஸ்டேட், வணிக கல்வி, கலை என இவ்வினங்கள் நல்ல லாபம் தரும்.

இந்த வருடம் பயணம் என்பது இருந்துகொண்டே இருக்கும். அது சிறுதூரப் பயணம் அல்லது வெளியூர் வெளிநாட்டு அலைச்சல் இருக்கும். இதுபோல் செலவும், பணியாளர், கைபேசி, வாரிசு என செலவும் இருக்கும்.இந்த விரயம் உச்ச மகிழ்ச்சியே தரும்.

பரிகாரம்: சூரியனார் கோவில் சென்று சேமிக்கவும். சனி+ செவ்வாய் இரவுக்கு வியாழக்கிழமை சாமந்தி பூ மாலை, சர்க்கரை பொங்கலுடன், அகல்விளக்கில் மஞ்சள் நிற துணியில் 21 மிளகாய் மூட்டை கட்டி, விளக்கெண்ணெய் பூச்சி பஞ்சு திரியில் தீபம் ஏற்றவும்.

இந்த வருடம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிக யோகமான வருடம்.

இந்த வருடம் நீங்களே, நிறைய கோவில்கள், பசுமடங்களுக்கு தான தர்ம உதவி செய்வீர்கள். அதனால் தனிப்பட்ட பரிகாரம் தேவையில்லை.

மகரம்

s மகர ராசியின் அதிபதி சனி. இந்த தமிழ் புது வருடத்தில், அவர் 2-ஆமிடத்தில் அமர்ந்துள்ளார். கூடவே லாபாதிபதி செவ்வாயும். எனவே இந்தவருடம் காசு, பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். அதோடு உங்களின் எண்ணங்கள் அனைத்தும் அழகாக நிறைவேறும். இது முக்கியமல்லவா. ஒருமனிதனின் ஆசைகள் ஈடேறும்போது அவன் பன்மடங்கு மகிழ்ச்சி அடைவான். அது இந்த வருடம் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த மகர ராசியினர், பேசுவதற்கே ரொம்ப யோசிப்பர்.

வீண் பழி வந்துவிடுமோ என்னும் அச்சமும், கொஞ்சம் மந்த குணமும் உண்டு. 2-ஆம் அதிபதி சனி என்பதால் இவ்விதம் இருக்கும். ஆனால் இந்த வருடம் வெட்டு ஒன்று, துண்டு நூறு எனும் விதத்தில் பேசி கலங்கடிப் பார். இதற்கு 2-ஆமிடத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் காரணமாவார்.

எப்போதும் பணத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்காத ராசி மகர ராசி. ஆனால், இந்த வருடம் 2-ஆமிடத்தில் அமர்ந்த செவ்வாய், இந்த மகர ராசியினரை பணம் சம்பாதிச்சால்தான் ஆச்சு என அடம் பிடிப்பார். இந்த செவ்வாய் தரும் அதீத நச்சரிப்பால் இவர்களும் பணம் பற்றி ரொம்ப பேசுவார்கள். இவர் எப்போதும் காசு பணத்திற்கு வெயிட் தரமாட்டார். இப்போ சார் ரொம்ப மாறிட்டார் என மற்றவர் உள்நாட்டு பணம் மட்டுமல்ல வெளிநாட்டு பணத்தையும் அக்கவுண்ட்டுக்குள் கொண்டுவர முயற்சிசெய்து கொண்டுவந்தும் விடுவார்.

மகர ராசியினர் வீடு விஷயமாக ரொம்ப அல்லாடு வீர்கள். கைவசம் இன்னொரு வீட்டை வைத்திருப்பது நலம். மாறுவதற்கு எளிதாக இருக்கும். இதை உங்களை பயம் காட்டுவதற்காக கூறவில்லை. உங்களின் 4-ஆம் வீட்டில் எட்டாம் அதிபதி சூரியன் உச்சம் பெற்று அமர்ந்த்தே காரணமாகும். மற்ற எல்லா ராசியினருக்கும் உச்ச சூரியன் உச்ச பலன் வழங்க மகர ராசிக்கு மட்டும் உச்ச சூரியன் திகிலிடும் பலனை வழங்கப்போகிறார்.

உங்கள் தாயார் நிலைமை அவ்வளவு சிலாக்கியமாக தெரியவில்லை. அவர் எங்காவது அடிபட்டுக்கொள்ள நேரிடும்.

இந்த வருடம் மகர ராசியினர் புது வாகனம் வாங்குவதோ அடிக்கடி வாகன பயணம் செல்வதோ கூடாது. உங்களில் சிலர் மனையை அரசே எடுத்துக் கொள்ளும்.

குழந்தை பாக்கியம் உண்டு. சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் வாரிசுகளால் மிகப் பெரிய புகழ் கிடைக்கும். வாரிசுகள் வெளிநாடு செல்வர். அது வேலை அல்லது கல்வி யின் பொருட்டு அமையும். சிலர் டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வீர்கள். பிற மதக் காதல் வந்த வேகத்தில் விடைபெறும்.

மகர ராசியினருக்கு கண்டிப்பாக தோள்பட்டை, கைகளில் வலி பின்னி எடுக்கும். வெகுசிலர் பாத வலியால் சிரமப்படுவர். மருந்து எடுத்துக்கொண்டால் போவதுபோல் போய்விட்டு, திரும்பவந்து வலி எடுக்கும். கூடியமட்டும் இயற்கை மருத்துவத்தை பின்பற்றுங்கள்.

வேலையில் சேர்வதற்கான ஆர்டர் கிடைத்து விடும். ஆனால் அதற்குரிய விடுப்பு ஆணை அல்லது மற்றய முக்கிய தகவல், தரவுகள் வந்துசேர தாமதம் ஆவதால், வேலை ஒப்பந்த கையெழுத்து போட கால தாமதம் ஆகும்.

திருமணம் நடக்கும். ஒன்று சண்டையுடன் நடக்கும். அல்லது தாய்மாமன் மகளோடு நடக்கும். சிலர் கொஞ்சம் பிரிவு வேறான திருமணம் செய்து கொள்வர். திருமணம் நிறைய கடன் வாங்கச் சொல்லும். உங்களில் சில பெண்கள் வயது குறைந்த ஆணை திருமணம் செய்வீர்கள்.

ஒரு ஜாதகருக்கு துன்பம், கவலை, இடையூறு என இவ்வித பலன்களை தரும் வீடு 8-ஆம் வீடுதான். இதன் அதிபர் பலமின்றி இருப்பது தான் நல்லது. ஆனால் இந்த வருடம் மகர ராசியின் 8-ஆம் அதிபதி உச்சம் பெற்று அமர்ந்து கூடவே 3, 12-ஆம் அதிபதி குரு சேர்ந்திருப்பது டபுள் மடங்கு கெடுதலாகும். துன்பமும் விரயமும் சேர்ந்து நிற்கிறார்கள்.

இவர்கள் இருக்குமிடம் 4-ஆமிடம். எனவே வீடு, தாயார் இவை சம்பந்தமான துன்பங்களே அதிகம் உண்டாகும். கவனம் தேவை; வாகன பயணம் ஜாக்கிரதை.

அதிர்ஷ்ட அதிபதி புதன் நீசபங்கமாகி உள்ளார். எனவே இவர்களின் அதிர்ஷ்டம் சற்று பின் வாங்கி, பின் முன்வந்து நிற்கும். உங்களுக்கு உங்களின் 5-ஆம் அதிபதியும் 9-ஆம் அதிபதியும் சேர்ந்து உள்ளனர். இவர்கள் 3-ஆம் வீட்டில் ராகுவுடன் நிற்கின்றனர். எனவே சற்று எதிர்மறையோடு வெற்றி கிடைக்கும். 3-ஆம் வீட்டை உபஜய ஸ்தானம் என்பர். எனவே மகர ராசியினருக்கு வெற்றி, புகழ், கல்வி மேன்மை, உறுதியான மனத்தின்மை, நல்ல மனதைரியம், நல்ல ஞாபகசக்தி என இதனை அடிப்படையாக வெற்றி உறுதி. எழுத்துத் துறையில் மிளிரலாம். மேற்கண்டவை சார்ந்த நல் யோகம் வரும்.

தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்சம். எனவே தொழில் சார்ந்த நல்ல செய்திகள் கிடைக்கும். கிடைக்கும் தரவுகள் உங்கள் தொழிலை ஒருபடி முன்னேற்றும். உங்களில் சிலர் புது செய்தி பத்தரிகை ஆரம்பிக்கக்கூடும். சிலர் டி.வி. தொடங்கலாம். கம்ப்யூட்டர் சம்பந்த தொழில் உண்டாகும். வீடு வாங்கி விற்கும் கடை திறக்கக்கூடும்.

உங்கள் லாபாதிபதி, காசு பண வீட்டில் உள்ளார். எனவே இந்த வருடம் உங்களின் பணவரவு அதிகரிக்கும்.

சிலர் வீடு, மனையை விற்கும்போது, நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிக லாபம் சேரும். எனவே இந்த வருடம் பணத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம்.

செலவுகள் அதிகமாக ஆகும். நீங்கள் பயணங்களை கூடியமட்டும் கட்டுபடுத்துவது நல்லது. சூரிய பகவானை நன்கு வேண்டிக்கொள்ளவும். ஏனெனில் உங்கள் அலைச்சலின் நோக்கம் சுபமாக இருக்க வேண்டுமல்லா! உங்களில் சிலர் மாமனாரை காணவில்லை என தேட வேண்டியிருக்கும். இந்த வருடம், மகர ராசியினருக்கு நன்மையும் அதிகமாக இருக்கிறது. தீமையும் அதிகமாக இருக்கிறது.

பரிகாரம்: சூரியவழிபாடு கண்டிப்பாக பின்பற்றவேண்டும். சூரியனார் கோவில் சென்றுவரவும். சனி+செவ்வாய் சேர்க்கைக்கு, சனிக்கிழமை கருங்குவளை மாலை, கருப்பு திராட்சை, உடன் அகல் விளக்கில் நில நிறத்துணியில் 26 மிளகைப் பொட்டலம் கட்டி, நல்லெண்ணெய் ஊற்றி, நிலநிறத் துணியில் தீபமேற்றவும்.

எப்போது கோவிலுக்கு சென்றாலும். சூரியன், சிவன், கருடன் என முடிந்த போதெல்லாம் தீபமேற்றி வழிபடுங்கள்.

அது நல்லெண்ணெய் அகல் அல்லது நெய் நிரப்பிய அகல் எதுவானாலும் சரிதான். தீபமேற்றுங்கள். உச்சமாகிய 8-ஆமிட சூரியன்+ 12-ஆமிட குருவின் சேர்க்கையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

கும்பம்

கும்ப ராசியின் அதிபதி சனி. இவர்கள் இயல்பிலேயே ரொம்ப மன இறுக்கம் கொண்டவர்கள். இவர்கள் என்ன எண்ணுவார்கள் என கண்டு பிடிப்பது மகா கஷ்டம். இந்த புது வருடத்தில் அதிரடி செவ்வாய் இவர்கள் ராசியில் அமர்ந்துள்ளார். எனவே இந்த வருடம் இவர்களால் அமைதியாக இருக்க இயலாது.

மனதில் உள்ளதை வெடித்துச் சிதறிவிடுவர். எத்தனை கெட்ட புத்தி இருக்கிறது பார். நல்லவன்னு நினைச்சு ஏமாந்துட்டோம் என புலம்புவர். ஆக எப்போதும்போல் வாய் மூடி மௌனியாகவே இருக்கவும். இல்லாவிடில் கதை கந்தலாகி விடும்.

உங்களின் 2-மிடத்தில் உச்ச சுக்கிரன் அமர்ந்துள்ளார். எனவே பண வரவுக்கு குறைவிருக்காது. உங்கள் பெற்றோர் வகையில் தனவரவு அதிகரிக்கும். வெளிநாட்டு பணத்தை கையாள இயலும். உங்கள் பூர்வீகம், புதையல் போல் ஏதோ ஒரு காசு, பண சேர்க்கைதரும்.

சிலருக்கு வீடு விற்ற அல்லது ஒத்திக்கு விட்ட பணம் கைகளில் புழங்கும்.

வீடு, மனைக்குரிய அதிபதி உச்சம். எனவே வீடு வாங்கமுடியும். அனேகமாக அவை வாரிசுகள் பெயரில் அமையும். வீடு வாங்கும்போது நிறைய கணக்கில் வராத பணம் பயன்படுத்தப்படும். வீடு புதுமையான முறையில் வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்தி கட்டப்படும். சிலர் மனையை விற்று விடுவீர்கள். வாகன யோகம் அதிகம் உண்டு. உங்கள் தாயார் சற்று உடல்நலம் குன்றுவார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிக மேன்மை காண்பர். அறிவுக்கூர்மை பெறுவர்.

உங்களுக்கு இந்த வருடம் வாரிசு உண்டாக நிறைய மருத்துவ கண்காணிப்பு தேவைப்படும். சில வாரிசுகள் வெளிநாடு செல்வர். சில குழந்தைகள் மேற்கல்வியின் பொருட்டு இடம் பெயர்வர். இந்த வருடம் வாரிசுகள்மூலம் பணவரவு கிடைக்கும். சில வாரிசுகள் கொடுக்கும் லஞ்சப்பணம் கணக்கில் வராத பணத்தை நீங்கள் பத்திரப்படுத்துவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமாக சிலர் கடன் வாங்க நேரிடும்.

உங்களுக்கு எதிரி வெளியில் கிடையாது. சொந்தப் பெண் அல்லது குடும்பத்தினரே எதிர்ப்பர். சில சமயம் உங்களின் பேச்சு முதல் எதிரியாகிவிடும். பேச்சைக் சுருக்க எதிரி குறைவர். வழக்கு போட்டோமே அது என்னாச்சு என விசாரிக்கும் நிலையில் வழக்கு இருக்கும்.v இப்போது கிடைக்கும் வேலை ஆரோக்கியம், பண சம்பந்த வங்கிகள், வெளிநாட்டு பண பரிவர்த்தனை, வேற்றுமொழி பேசும் வேலை என அமையும். உங்களுக்கு வேலை கிடைத்தால், தனியாக இருக்கவேண்டி இருக்கும்.

இப்போது நடக்கும் திருமணம் மிக புகழ்பெற்றவருடன் நடக்கும். சிலர் அனைவரும் அறிந்த அரசியல் வாதியாக இருக்கலாம். அல்லது செய்தி, டி.வி. துறையை சர்ந்தவராக அமையலாம். எது எப்படி இருப்பினும், திருமணம் மிகச் சிறப்பாக நடக்கும் என்பதில் ஐயமில்லை. இப்போது கிடைக்கும் வணிக பங்கு தாரர் ஆன்மிகமும் அரசியலும் சார்ந்தவராக அமைவார்.

துன்பம் தரும் எட்டாமிட அதிபதி 2-ஆமிடத்தில் உச்ச நீசபங்கம். எனவே அவர் பலம் பெற்று உள்ளார். இந்த வருட அனுமானம் உங்கள் குடும்பத்தினரால் ஏற்படும். உங்களுடைய சொற்கள் துன்பமாக மாறும். உங்கள் எதிரிகள் மறைமுக தொல்லைத் தருவர். முக்கியமாக பெண் வாரிசுகளிடம் கவனமாக இருந்தாலே, கஷ்டங்கள் நீங்கிவிடும்.

உங்கள் யோக அதிபதி உச்சம். எனவே யோகம், பணவரவு இவற்றிற்கு குறைவிருக்காது. எனினும் சில அதிர்ஷ்டம் சற்று குறைவுபடும். நீங்கள் சற்று யோசனையுடன் இருந்திருந்தால், யோகம் குறைவுபட்டிருக்காதே என மிக வருந்துவீர்கள். இதற்கு காரணம் அதிர்ஷ்ட அதிபதி உச்சமாகி, கூடவே 8-ஆம் அதிபதியும், பலமாக இருப்பதேயாகும்.

உங்கள் தொழில் சம்பந்தமாக நிறைய தரவுகள் கிடைக்கும். அதனை நன்கு ஆராய்ந்து முதலீடு செய்வீர்கள். உங்களின் தொழிலாளர்களும், பணியாளர் களும் தங்களது முழு ஆதரவைதருவர். உங்கள் தொழிலின் வெற்றிக்கு பணியாளர்களே காரண மாவார். சைக்கிள்போன்ற வாகன டீலர்ஷிப் எடுத்து வணிகத்தை மேம்படுத்துவீர்கள். காவல் துறைக்கு வேண்டிய பொருட்களை சிலர் கைபேசி கடை தொடங்குவீர்கள். அல்லது கூரியர் சர்வீஸ் செய்வீர்கள்.

உங்கள் லாபாதிபதி உபஜய ஸ்தானத்தில் உச்ச சூரியனுடன் அமர்ந்துள்ளார். எனவே அவர் குறுகிய அலைச்சல், நிறைய மனிதர் சந்திப்பு என இவ்வகையில் லாபம்தர இயலும்.

மேற்கண்ட வழி என்பது அரசியலைக் குறிக்கிறது.

எனவே இவ்வருடம் உங்களில் பலர் அரசியலில் ஈடுபடுவீர்கள். அதனால் அரசியல் சார்ந்த அலைச்சல் கள் உண்டு.

தொகுதிக்கு உங்கள் பிறந்த இடம் தவிர்த்து, வாழ்க்கைத் துணையின் இடத்தில் நிற்கலாம். அரசியல் வாதிகளுக்கு பயண ஏற்பாடு, எழுதிக் கொடுப்பது, பேச்சை விளம்பரம் செய்வது, கைபேசியில் ஓவராக புகழ்வது என இவ்வகையிலும் நல்ல லாப பணவரவு கிடைக்கும்.

உங்கள் ராசியாதிபதியே உங்களின் விரயாதிபதி. நீங்கள் இந்த வருடம், பிறர் பெருமையாக பேச வேண்டும் என்றே செலவழிப்பீர்கள். நிறைய செலவழித்து நிறைய புகழ் வாங்கிவிடுவீர்கள். அலைச்சலும் ஒரு கட்டுக்குள் தான் அமையும்.

இந்த வருடம் கும்ப ராசியினர் சற்று அடக்கி வாசித்தால் வாழ்வு இனிக்கும். வாழ்வின் வளமை இவர்களிடமே உள்ளது.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சனேயரை வணங்கவும்.

சனி + செவ்வாய் சேர்க்கைக்கு சனிக் கிழமை நாகலிங்க பூ, எள்ளுருண்டை யுடன் அகல் விளக்கில் கருநீல துணியில் 22 மிளகை மூட்டை கட்டி கருநீல திரிஇட்டு, தீபம் ஏற்றவும். குடும்பத்தினரிடம் அனுசரணை யாக செல்லவும்; அதுவே பரிகாரம்.

மீனம்

மீன ராசியின் அதிபதி குரு. இந்த வருடம் இந்த குரு உச்சத்தன்மையுடன் விளங்குகிறார். சாதாரணமாகவே இந்த ராசி ஜாதகர்கள் கம்பீரமாகவும், மரியாதைக்கு உரியவர்களாகவும் இருபபர். இந்த வருட கிரக சேர்க்கை மேலும் கம்பீரத்தை அதிகரிக்கும். மேலும் இவர்களது மீன ராசியில் ஒரு கிரகம் உச்சம் ஒரு கிரகம் நீசபங்கம், உடன் ராகு என்று அமைப் புள்ளது. இவ்வமைப்பு ஜாதகர்களை மிக வித்தியாசமான கோணத்தில் இட்டுச் செல்லும். இவர்கள் செய்யும் சில தவறுகள்கூட, அட இப்படிக்கூட செய்யலாமா என சிந்திக்கச் செய்யும்.

அரசு வேலை கிடைப்பதால், நல்ல தொடர்ச்சியான- உறுதியான வருமான வழி கிடைக்கும். வேலை கிடைப்பதற்காக நிறைய வேண்டுதல் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்காக பணச்செலவும் அதிகமிருக்கும். வேலை மட்டுமல்லாது தொழில் செய்வோருக்கும் ஆர்டர் நிறைய கிடைத்து அதன்மூலமும் பணச்செழிப்பு பெறுவீர்கள். மணிபர்ஸ், கார்டு எல்லாம் நிறைவாக இருக்கும்.

இந்த வருடம் வேறு வழியில்லாமல் கண்டிப்பாக வீடு வாங்கியே தீர வேண்டிய நெருக்கடி ஏற்படுவதால் கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். முன்பு உள்ள வீடு, கடனுக்கு விற்றுவிட்டு மீதி பணத்தில் வீடு வாங்குவீர்கள்.

அல்லது ரொம்ப பழுதான வீட்டில் இருக்க இயலாமல் இடித்துவிட்டு புது வீடு கட்டுவீர்கள். எல்லோருக்கும் வீடு கட்டுவது கனவு என்றால் உங்களுக்கு கட்டாயம் என்றாகிவிடும். சிலர் பூர்வீக வீட்டை கொடுத்துவிட்டு வேறு வீடு கட்டவும் இயலும். உங்கள் தாயார் மிக அனுசரணையாக இருப்பார். பிரசவத்திற்காக தாய் வீடு செல்வீர்கள். இப்போது பிறக்கும் குழந்தை ரொம்ப பொல்லாததாக சுட்டிக் குழந்தையாக இருக்கும். உங்களின் சில வாரிசுகள் புதிதாக வணிகம் தொடங்குவர்.

அல்லது வணிகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட தொய்வினை தங்களது புதுமைச் சிந்தனையால் மேம்படுத்துவர். வாரிசுகள் சற்று பாடாய்படுத்திவிட்டு பின் வெகுநன்மை செய்வார்.

உங்கள் 6-ஆம் அதிபதி சூரியன் இந்த வருடம் உச்சத்தில் உள்ளார். எனவே நோய் சீற்றம் அதிகமாக இருக்கும். அதிக நோயின் தாக்கத்தால் பேச்சு குளறுபடியாகும்.

உங்களில் சிலர் தொழில் நிமித்தம் கடன் வாங்கி யிருந்தால் அவை பெருகி விடும். வரும் வருமானம் அதை அடைப்பதற்கே சரியாக இருக்கும்.

உங்களின் இந்த வருட துன்பங்கள் மிக உச்சத்தன்மையுடன் காணப்படுகிறது.

பிற மத பெண்களால் மிகப் பெரிய அவமானம் உண்டாகும். அல்லது நஷ்டம், நோய் போன்றவையும் உங்களை பாடாய்ப் படுத்தும். எனவே இந்த வருடம் நோய்க்குரிய சிகிச்சையை முறையாக எடுத்துக் கொள்வதும், தெரியாத பெண்களிடம் நட்பு பாராட்டு வதைத் தவிர்ப்பதும் மிக பாதுகாப்பு தரும்.

உங்களின் அலட்சியமே உங்கள் கண்ணீருக்கு காரணமாகிவிடும். கவனம் தேவை.

உங்கள் அதிர்ஷ்ட அதிபதி செலவு ஸ்தானத் தில் உள்ளார். அதற்காக இந்த வருடம் யோகம் இல்லவே இல்லை என்று சொல்லமுடியாது. அதிர்ஷ்டம் வரும்தான். வந்த வேகத்தில் சென்றுவிடும். ஒரு கதவை திறந்து வரும் யோகம் உங்களுக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு மறு கதவு வழியாக போயே போய்விடும். அல்லது வந்த அதிர்ஷ்டத்தை கூடவே குந்தி இருக்கும் உங்கள் எதிரிகள் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள். உங்கள் தந்தை சும்மாயிருக்காமல் வெளியூர் செல்கிறேன் என்று கூறிவிட்டு பின் எங்காவது அடிபட்டு விடுவார்.

நீங்கள் ஏற்கெனவே செய்து கொண்டிருந்த வேலையை அடிப்படையாகக் கொண்டு, புது தொழில் ஆரம்பித்துவிடுவீர்கள். அதற்கு அரசுக் கடனும் கிடைக்கும். சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து தொழில் தொடங்குவர். ஏற்கெனவே தொழில் நடத்திக்கொண்டிருந்தவர்கள் வேலை அதிகமாக ஆர்டர் வருவதால், நிறைய தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்க வேண்டிவரும்.

உங்கள் லாபாதிபதி விரயத்தில் உள்ளார். அங்கு அவர் ஆட்சியாக இருப்பதால் லாபம் வரத்தான் செய்யும். வந்த வேகத்தில் கரைந்துவிடும். நீங்களும் நல்ல லாபம்தான் வருகிறதே என்று தண்டச் செலவுகளை அதிகமாக செய்து விடுவீர்கள். எனவே உங்கள் லாபம் சட்டியில் இரூந்து அகப்பைக்கு வருவதற்குள் காலியாகிவிடும்.

நீங்கள் எண்ணிய எண்ணம் நன்கு நிறைவேறும். ஆனால் அதன் பயனும், பலனும் உங்களை வந்துசேராமல், காணாமல் போய்விடும்.

இந்த வருடம் உங்கள் செலவு, பயணம், விரயம், தூக்கம் இவை அனைத்துக்கும் உரிய அதிபதி ஆட்சியாகி விரயத்தில் அமர்ந்துள்ளார். எனவே நிறைய செலவு பயணம் இவை தவிர்க்க முடியாதது. இதனால் இந்த வருடம் உங்கள் விரயம் மனையில் முதலீடாக மாறட்டும். இந்தச் செலவு என்பது ஆதாயச் செலவாகிவிடும் அல்லவா. சூதானமாக இருக்கணும்.

இந்த வருடம் மீன ராசியாருக்கு நிறைய நன்மைகளும், ஒரேயொரு பலத்த அடியும் கிடைக்கும்.

பரிகாரம்: சூரியனார் கோவில் சென்று வணங்கவும். சனி + செவ்வாய் சேர்க்கைக்கு ஞாயிற்றுக்கிழமை தங்கரளி பூமாலை, ஆரஞ்சு பழம் இவற்றோடு அகல் விளக்கில் மஞ்சள் துணியில் 21 மிளகை மூட்டை கட்டி நெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு பைரவருக்கு தீபம் ஏற்றவும். இந்த வருடம் மருத்துவமனைகளுக்கும் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருப்பவர்களுக்கும் தேவையறிந்து உதவுங்கள்.