Advertisment

2024 நல்லவனா? கெட்டவனா? முனைவர் ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/2024-good-bad-dr-r-mahalakshmi

2024-ஆம் வருடம், மார்கழி 16-ஆம் தேதி, ஜனவரி, 1 ஆக பிறக்கிறது. பொதுப்பலன் எனக் கூறும்போது, காலபுருச தத்துவத்தை கையிலெடுத்துக் கொள்ளவேண்டும்.

Advertisment

ஜனவரி 1, 2024 அன்று, காலபுருசனின் அதிபதியின் வீடான, மேஷ செவ்வாயும், தனுசு குருவும் பரிவர்த்தனை ஆகியிருக்கி றார்கள். காலபுருசனின் 6-ஆம் அதிபதியான புதன், 8-ஆம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜயோகம் பெறுகிறார். சனி, தனது சொந்த வீட்டில் இடம்பெற்றுள்ளார்.

Advertisment

அவர், சிம்மத்தின் சந்திரனை பார்த்து, புனர் பூ யோகம் உண்டாக்குகிறார். சனி தனது சொந்த வீடான, கும்பத்தில் அமர்ந்து சச யோக பெறுகிறார்.

24

2024-ன் அரசியல் நிகழ்வுகள்

இந்த வருடம் அரசியலில் நிறைய மாற்றம் ஏற்படும். கட்சிவிட்டு கட்சி மாறுவர். இன்னும் ஒருபடி மேலே போய், உன் கட்சி எ

2024-ஆம் வருடம், மார்கழி 16-ஆம் தேதி, ஜனவரி, 1 ஆக பிறக்கிறது. பொதுப்பலன் எனக் கூறும்போது, காலபுருச தத்துவத்தை கையிலெடுத்துக் கொள்ளவேண்டும்.

Advertisment

ஜனவரி 1, 2024 அன்று, காலபுருசனின் அதிபதியின் வீடான, மேஷ செவ்வாயும், தனுசு குருவும் பரிவர்த்தனை ஆகியிருக்கி றார்கள். காலபுருசனின் 6-ஆம் அதிபதியான புதன், 8-ஆம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜயோகம் பெறுகிறார். சனி, தனது சொந்த வீட்டில் இடம்பெற்றுள்ளார்.

Advertisment

அவர், சிம்மத்தின் சந்திரனை பார்த்து, புனர் பூ யோகம் உண்டாக்குகிறார். சனி தனது சொந்த வீடான, கும்பத்தில் அமர்ந்து சச யோக பெறுகிறார்.

24

2024-ன் அரசியல் நிகழ்வுகள்

இந்த வருடம் அரசியலில் நிறைய மாற்றம் ஏற்படும். கட்சிவிட்டு கட்சி மாறுவர். இன்னும் ஒருபடி மேலே போய், உன் கட்சி எனக்கு, என் கட்சி உனக்கு என பண்டமாற்றம் செய்துகொள்வர். இதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. இந்த 2024-ஆம் வருடம் தேர்தல் வந்தால், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரண்டும், வெற்றி- தோல்வியில் சமபங்காக இருக்கும். எதிர்க்கட்சி விபரீத ராஜயோகம் எனும் அளவில், ஏதோ ஒரு எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடந்து, வெற்றிக்கோட்டை தன் பக்கம் இழுக்கும். ஆளும் கட்சியும் சிலபல பரிமாற்றங்கள்மூலம், வெற்றி கோட்டை தனதாக்கிக்கொள்ள முயலும். எனவே இச்சூழ்நிலையில் அரசியல்வாதிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு கட்சி என மாறுவதில் வியப்பு ஏதுமில்லை. இந்த வருடம் தேர்தல் வந்தால், சில இடத்து வெற்றி- தோல்வியை இரு அணியினரும், ஒத்துக்கொள்ளாமல் மறு தேர்தல் ஏற்படுத்துவர். இதனால் தேர்தல் அமைப்பு அதிகாரிகள், மண்டை காய்ந்து, பைத்தியம் பிடித்து அலைவர். இந்த வருட தேர்தல் அதகளமக இருக்கும்.

மேலும், ஒரு அரசியல் தலைவர் உடல்நிலை பலவீனப்படுவதால், அவரின் வாரிசு, கட்சி தலைமையை ஏற்றுக்கொள்வார்.

இந்த வருடம் திருமணமும், குழந்தை பிறப்பும் அதிகமாக இருக்கும்.

பெண்கள் சற்று சிரமப் படுவர். வேலை கிடைப்பது என்பது எளிதான ஒரு செயல் ஆகிவிடும். எனவே அடிக்கடி வேலை மாறுவார்கள்.

கலையுலகை சேர்ந்த, நடிகர் ஒருவர் அரசியலில் நுழைவார். ஆனால் கடும் தோல்வி ஏற்பட்டு, ஓடி மறைந்துகொள்ளும் நிலை அவருக்கு ஏற்படும்.

இந்த ஆண்டு, ஒரு புதிய ஆற்றல் கருணைமிகுந்த மதத்தலைவர் உண்டாவார்.

நம் நாட்டு உயர்க்கல்வி மாணவர்கள் வெளிநாடு செல்வதும், வெளிநாட்டு மாணவர்கள், இங்குவந்து கல்வி பரிமாற்றம் செய்வதும் நடக்கும்.

சில நோய்கள் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அவை சரியான மருந்து களாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாலும் தடுக்கப்படும்.

நமது நாடு, வெளிநாடுகள் சம்பந்த இனங் களில் மிகவும் பெருமையும், முதன்மையும் பெறும்.

2024-ஆம் வருட தட்பவெப்ப நிலை இந்த வருடத்தை தாராளமாக, மழை புயல் வருடம் எனக் கூறலாம். 12-ல் மீன ராசியில் ராகு இருப்பதும், இடம் கொடுத்த குரு பலமாக இருப்பதாலும் மழை அடித்து நொறுக்கும். வருட பிறப்பின்போது, நீர் ராசியான மீனத்தில் ராகுவும், விருச்சிக ராசியில் நீர் கிரகமான சுக்கிரனும், இன்னொரு நீர் கிரகமான சந்திரன், சனியின் பார்வையை பெறுவதாலும், காற்றும் மழையுமாக நாட்கள் நகரும்.

2024 ஜனவரி- பிப்ரவரி

2024 ஏப்ரல்- மே

2024 ஜூலை- ஆகஸ்ட்

2024 அக்டோபர்- நவம்பர்.

ஆக, மேற்கண்ட மாதங்களில், மழை மற்றும் புயல் ஏற்படும். மிச்ச மாதங்களில் அவ்வப்போது மழை தலையைக் காட்டிவிட்டுபோகும். 2024- ஏப்ரல் மாதம் வேறுபாடான சீதோஷ்ணம், வேண்டாத பூமி நிகழ்வுகள் உண்டு.

இந்த 2024-ஆம் வருடம் மக்களிடம் நல்ல காசு பணப்புழக்கம், வெளிநாட்டு பணவரவு என இருந்தாலும், அதனை நூறு சதவிகிதம் மகிழ்ச்சியாக செலவழிக்க முடியாத நிலை ஏனோ உண்டாகும்.

2024-ஆம் வருடத்தைப் பார்த்து, மக்கள் கேட்பார்கள். "நீ நல்லவனா, கெட்டவனா' எனக் கேட்பார்கள். அந்த அழகில்தான் 2024-ஆம் வருடம் ஓடும்.

இந்த 2024-ஆம் வருடம், குரு மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையாகி இருப்பதால், வெற்றியை விரும்புவோர், திருச்செந்தூர் முருகனை நன்கு வழிபடுங்கள். தினமும் சஷ்டி கவசம் கூறுங்கள். வியாழன், செவ்வாய்க்கிழமை விரதமிருப்பது சிறப்பு. குரு ஹோரையை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

செல்: 94449 61845

bala050124
Show comments
Read more...
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe