மேஷம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே,

உங்கள் ராசிக்கு வரும் 2024-ஆம் ஆண்டில் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம், கடந்தகால பிரச்சினைகள் விலகக்கூடிய அமைப்புகள், வம்பு, வழக்குகள் விலகி அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடிய யோகம் உண்டு. தொழில் அபிவிருத்திக் காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத்தரும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை எளிதில் பெற்று மனநிம்மதியுடன் தொழில் புரியமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமை களை வெளிப்படுத்தக்கூடிய ஒரு வாய்ப்புகளும், எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமும், விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சர்ப கிரகமான கேது 6-லும், ராகு 12-லும் சஞ்சரிப்பதால் வெளியூர்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். குருபகவான் ஜென்ம ராசியில் 1-5-2024 முடிய சஞ்சரிப்பதால் முதல் 4 மாத காலங்கள் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 5, 7, 9-ஆம் வீடுகளை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துவழியில் அனுகூலம் ஏற்படும். 1-5-2024-க்குபிறகு குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். குருப் பெயர்ச்சிக்குப்பிறகு குடும்பத்தில் மங்கள கரமான சுபகாரியங்கள் கைகூடிய அமைப்புகள், குழந்தைகள் வகையில் மகிழ்ச்சி, மறக்கமுடியாத இனிய நிகழ்வு கள் நடக்கக்கூடிய யோகம், கடன்கள் முழுமையாக விலகக்கூடிய ஒரு அதிர்ஷ்டங் கள் உண்டு. வரும் ஆண்டில் மேலும் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு, துர்க்கையம்மனை தரிசிப்பது மிகவும் நல்லது.

ரிஷபம்

Advertisment

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே,

உங்கள் ராசிக்கு வரும் 2024-ஆம் ஆண்டில் சனி 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் தவறவிடாமல் சரிவர பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. உடன் இருப்பவர்கள் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய லாபங்கள் தடைப்படும். ஒருசிலருக்கு தேவையில் லாத சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது பொறுமையோடு பேசுவது நல்லது. கேது பகவான் 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்து இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. தனக்காரகன் குருபகவான் 2024-ஆம் ஆண்டில் ஏப்ரல் இறுதிவரை விரைய ஸ்தானத்திலும் அதன்பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க இருக்கிறார். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத் தோடு இருந்து ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. மே-1 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய குரு 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பார் என்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகளும் ஒருசில பொருளாதார உதவிகள் கிடைக்கக்கூடிய யோகமும் உண்டு. மனைவி, பிள்ளைகளுடைய ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் ராகு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்க முடியும். 2024-ஆம் ஆண்டில் சனிக்கு எள் தீபமேற்றி வழிபடுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மிதுனம்

Advertisment

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே,

உங்கள் ராசிக்கு வரும் 2024-ஆம் ஆண்டில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால்போட்ட முதலை எடுக்கமுடியும். எதிலும் ஈடுபாட் டோடு செயல்பட்டு சமுதாயத்தில் ஒரு நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக மேற் கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு அரசு வழி ஆதரவுகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சிறப்பாக செய்து முடிக்கமுடியும். மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த வீண் மருத்துவச் செலவு குறையும். சர்ப்ப கிரகமான கேது 4-ஆம் வீட்டிலும் ராகு 10-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், தாய்வழியில் தேவையற்ற கவலை, அசையும்- அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 11-ல் குரு பகவான் ஏப்ரல் 30 வரை சஞ்சரிப்பதால் முதல் 4 மாதத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், உங்கள் பொருளாதாரநிலை மிகச் சிறப் பாக இருக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள், பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மே மாதம் முதல் குரு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. குரு சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் சனி சாதகமாக இருப்பதால் ஏற்றம் மிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மேலும் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கடகம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே,

உங்கள் ராசிக்கு வரும் 2024-ஆம் ஆண்டில் சர்ப்ப கிரகமான கேது 3-லும் ராகு 9-லும் சஞ்சரிப்பதால் மனோ தைரியத்துடன் எதிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். முதல் 4 மாத காலங்கள் சற்று பொறுமையோடு இருந்துவிட்டால் அதன்பிறகு படிப்படியான வளர்ச்சிகளை அடையமுடியும். வெளியூர், வெளி மாநிலங்கள்மூலமாக அனுகூலமான பலன்களையும் ஆதாயம் தரக்கூடிய செய்திகளையும் பெரும் வாய்ப்பு உண்டு. குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பது ஆண்டு தொடக்கத்தில் ஏப்ரல் இறுதிவரை உங்களுக்கு பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை தரக்கூடிய அமைப்பு என்றாலும் 1-5-2024 முதல் குரு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகளும், பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சியும், குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய யோகமும் உண்டாகும். தொழில், வியாபாரம் மே மாதமுதல் மிகச்சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் மே மாதத்திற்குபிறகு பதவி உயர்வுகள், விரும்பிய வாய்ப்புகளை பெறக்கூடிய யோகம் ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு அஷ்டமச் சனி நடக்கிறது. இதன்காரணமாக உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக் கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது, இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக இருந்தாலும் முடிந்தவரை ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வதும் உங்கள் பேரில் கடன் வாங்காமல் இருப்பதும் மிகவும் நல்லது. ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவதுமூலம் நன்மை கிடைக்கும்.

சிம்மம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே,

உங்கள் ராசிக்கு வரும் 2024-ஆம் ஆண்டில் தனக்காரன் குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் ஏப்ரல் இறுதிவரை சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு கள், எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள், தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகம், உத்தியோகரீதியாக உயர்வுகள், குடும்பத்தில் அனுகூலமான பலன்கள் முதல் நான்கு மாத காலங்களில் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் ஏதாவது முக்கியமான செயல்கள் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தால் அதனை ஆண்டு தொடக்கத்தில் செய்வது மிகமிக நல்லது. 1-5-2024-க்கு பிறகு குருபகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் போட்டி கள் சற்று அதிகப்படியாக இருக்கும். எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே நல்லவாய்ப்பு களை பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மே மாதத்திற்குபிறகு வேலையில் நெருக்கடிகள் ஏற்படலாம். எது எப்படி இருந்தாலும் உங்களின் தனி திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, கூட்டாளிகளை அனுசரித்துசெல்வது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும், பேச்சை குறைப்பதும் உத்தமம். வண்டி, வாகனங் களில் செல்கின்றபொழுது எதிலும் பொறுமையோடு செல்வதும், தூரப் பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பதும் நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்லவேண்டும். நம்பியவர்களே நெருக்கடி தருவார்கள். முதல் நான்கு மாத காலங்கள் சிறப்பான நாட்களாக இருக்கும். மேலும் வளமான பலன்களை அடைய சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நன்மையை தரும்.

ff

கன்னி

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே,

உங்கள் ராசிக்கு வரும் 2024-ஆம் ஆண்டில் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனிபகவான் ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் ஆண்டு முழுவதும் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங் களும் பெறுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள், போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய யோகம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு பணியில் இருந்த நெருக்கடிகள் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். அதிகாரியுடன் சுமூகமான நிலை ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள் வேலையை பகிர்ந்து கொள்வதால் எந்த ஒரு காரியத்தையும் சுலபமாக செய்துமுடிக்க முடியும். தனக்காரகன் குருபகவான் முதல் நான்கு மாத காலங்கள் 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருந்துவிட்டால் நற் பலனை அடையமுடியும். 1-5-2024 முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் அனைத்து வகை யிலும் ஒரு வளமான பலன்களை அடையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம், ஆசையா சொத்து களில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி உண்டாகும். மனைவி, பிள்ளைகள் விரும்பி யதை வாங்கித் தரக்கூடிய ஒரு யோகம் ஏற்படும். 2024-ஆம் ஆண்டில் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, கூட்டாளிகளை அனு சரித்து செல்வது, எந்த ஒரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் யோசித்து செயல் படுவது நன்மையை தரும். மேலும் நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவதன் மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.

துலாம்

அன்புள்ள துலா ராசி நேயர்களே,

உங்கள் ராசிக்கு 2024-ஆம் ஆண்டில் சனிபகவான் 5-லும், ராகு 6-லும் சஞ்சரிப்ப தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கி யம் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு கௌரவமான நிலையினை அடைவீர்கள். போட்ட முதலை எடுக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் முன்னேற்றம், விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்ககூடிய அமைப்புகள், வெளியூரில் இருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு வந்து மனைவி, பிள்ளைகளுடன் இணைந்து வாழக்கூடிய யோகம் ஏற்படும். குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் ஏப்ரல் இறுதிவரை சஞ்சரிப்பதால் முதல் நான்கு மாதத்தில் எதிர்பாராத அதிர்ஷ் டத்தை அடையக்கூடிய யோகம், நவீன பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டம், திருமண சுப காரியங்கள் கைகூட கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். உறவினர்கள் மூலமாக சாதகமான பலன்களை பெறுவீர் கள். 1-5-2024 முதல் குரு 8-ஆம் வீட்டுக்கு மாறுதலாவதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஒருசில நெருக்கடிகள் இருந்தாலும் சனி, ராகு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு 3, 6-க்கு அதிபதி என்பதால் அவர் 8-ல் சஞ்சரித்தாலும் பெரிய கெடுதி களை செய்யமாட்டார். உங்களுடைய எண்ணங் களை ஆண்டின் தொடக்கத்தில் செயல்படுத்தி னால் அது எளிதில் நிறைவேறக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, மே மாதமுதல் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிகம்

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே,

உங்கள் ராசிக்கு வரும் 2024-ஆம் ஆண்டில் சனி 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டமச்சனி நடப்பதாலும், ராகு 5-ல் சஞ்சரிப்பதாலும் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேக ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. முடிந்தவரை வேலைப்பளுவை குறைத்துக்கொள்ளவேண்டும். இயற்கை உணவுகளை உட்கொள்வது நற்பலனை தரும். கேது பகவான் இந்த ஆண்டு முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒரு சில அனுகூலங்களைப்பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும்- அசையா சொத்துவகையில் வீண் செலவுகள், தாய்வழியில் கவலை, பூர்வீக சொத்துவகையில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குருபகவான் ஏப்ரல் இறுதிவரை 6-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை ஏற்ற- இறக்கமாக இருக்கும். எதிலும் மிக மிக கவனத்தோடு இருக்கவேண்டிய நாட்களாக முதல் நான்கு மாத காலங்கள் இருக்கும். 1-5-2024-க்கு பிறகு குருபகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்புகள், சுப காரியங்கள் கைகூடக்கூடிய ஒரு அதிர்ஷ்டம் உண்டு. குறிப்பாக முதல் நான்கு மாத காலங்கள் நீங்கள் சற்று கவனத்தோடு இருந்தால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், உழைப்புக்கான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டம், போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள், நெருக்கடிகள் குறைய கூடிய ஒரு அதிர்ஷ்டம் மே மாதத்திற்குபிறகு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொள்வதும், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் கவனத் தோடு செயல்படுவதும் நல்லது. மே மாதத்துக்குபிறகு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம், விரும்பிய இடமாற்றங்களை பெறக்கூடிய யோகம், வாங்கிய கடன்களை குறைத்துக் கொள்ளக்கூடிய பொருளாதார பலம் ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களைபெற உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வது, சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, துர்க்கையம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

தனுசு

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே,

உங்கள் ராசிக்கு வரும் 2024-ஆம் ஆண்டில் சனிபகவான் 3-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் உங்களுக்கு இதுநாள்வரை இருந்துவந்த அனைத்துவிதமான பிரச்சினைகளும் விலகி நல்ல முன்னேற் றம் உண்டாகும். பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை பெற்று உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் ஆதரவு திருப்திகரமாக அமைந்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்டக்கூடிய ஒரு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல சந்தர்ப்பம் அமைந்து சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடையமுடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குருபகவான் முதல் நான்கு மாத காலங்கள் 5-ல் சஞ்சரிப்பதால் ஆண்டு தொடக்கத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள், தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டம் ஏற்படும். மே மாதம்முதல் குரு 6-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. குரு 6-ல் சஞ்சரித்தாலும் சனியின் சாதக சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து பலமான பலன்களை பெறுவீர்கள். சர்ப கிரகமான ராகு 4-லும் கேது 10-லும் சஞ்சரிப்பதால் தாய்வழியில் தேவையற்ற கவலை, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும்- அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் உண்டாகும். வரும் நாட்களில் அம்மன் வழிபாடுகளை மேற்கொள்வது, ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபமேற்றுவது, பாம்பு புற்றுக்குப் பால்விடுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும்.

மகரம்

அன்புள்ள மகர ராசி நேயர்களே,

உங்கள் ராசியாதிபதி சனிபகவான் 2-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடக்கிறது. வரும் 2024-ஆம் ஆண்டில் பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குறிப்பாக ஆடம்பரத்தை சற்று குறைத் துக்கொண்டு எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. சர்ப கிரகமான ராகு 3-லும், கேது 9-லும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஒருசில அனுகூலங்கள், வெளியூர் தொடர்புகள்மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ல் ஏப்ரல் இறுதிவரை சஞ்சரிப்பதால் முதல் நான்கு மாத காலங்கள் பொருளாதாரரீதியாக ஒரு ஏற்ற- இறக்கமானநிலை இருக்கும் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. 1-5-2024 முதல் குரு 5-க்கு செல்ல இருப்பது அற்புதமான அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் மே மாதத்துக்குபிறகு உங்களுக்கு இருக்கக் கூடிய அனைத்துவிதமான நெருக்கடிகளும் குறைந்து தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம், போட்ட முதலை எடுக்கக்கூடிய அதிர்ஷ்டம், இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக் கூடிய பலம் உண்டாகும். உத்தியோகரீதியாக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு இருந்து விட்டால் மே மாதத்துக்குபிறகு பணியில் நல்ல முன்னேற் றம் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகம், வேலைப்பளு குறைந்து மன நிம்மதி யுடன் செயல்படக்கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கூட மே மாதத்திற்கு பிறகு எளிதில் கைகூடி மன மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துவகையில் ஒருசில சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் படிப்படியாக குறைந்து மன நிம்மதி உண்டாகும். கொடுத்த வாக்குறுதி களை காப்பாற்றமுடியும். சனிபகவானுக்கு தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, பைரவர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

கும்பம்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே,

உங்கள் ராசியாதிபதி சனிபகவான் வரும் 2024-ஆம் ஆண்டில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. இது மட்டுமின்றி உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்யயுள்ளனர். உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள், சுலபமாக முடியக்கூடிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலை, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். எதிலும் சட்ட விதிக்கு உட்பட்டு நடந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. அப்படி உடனே முதலீடுகள் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் முடிந்தவரை உங்கள் பெயரில் செய்யாமல் மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் செய்வது நல்லது. கடன் வாங்குவதைத் தவிர்த்து கையிருப்பைக்கொண்டு செலவுசெய்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரியிடம் வீண் வாக்குவாதங் கள் செய்யாமல் இருப்பது நல்லது. குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ல் 1-5-2024 முடியவும், அதன் பின்பு 4-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. 3-ல் சஞ்சரிக்கும் குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமண சுபகாரிய முயற்சிகளை ஏப்ரலுக்குள் மேற்கொண்டால் ஒருசில அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால்தான் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்க முடியும். வரும் நாட்களில் கெடுதிகள் குறைய சனிபகவான் வழிபாடு, துர்க்கைக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மீனம்

அன்புள்ள மீன ராசி நேயர்களே,

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் 2024-ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரையச்சனி நடைபெற இருக்கிறது. அது மட்டுமின்றி ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிக்க இருக்கிறது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, முன் கோபத்தை குறைத்துக்கொள்வது, எந்த ஒரு காரியத்திலும் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வதும், மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவதும் உத்தமம். ராசி அதிபதி குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் 1-5-2024 முடிய சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் ஆண்டின் முதல் நான்கு மாதத்தில் ஒருசில வளமான பலன்களையும், பொருளாதாரரீதியாக அனுகூலங்களையும் அடைய முடியும். உங்கள் திட்டங்களை ஆண்டின் தொடக்கத்தில் செயல்படுத்தினால் நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆண்டின் முற்பாதியில் நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் மே மாதத்துக்குபிறகு குரு 3-க்கு செல்ல இருப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மே மாதத்திற்குபிறகு தேவையற்ற நெருக்கடிகள், எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளை ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்டால் சுலபமாக முடியக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மே மாதத்துக்குபிறகு மிகமிக கவனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைபெற அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைசெய்வது நன்மை தரும்.