Advertisment

2023 சித்திரை மாதம் தரும் அதிர்வுகள்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/2023-film-month-vibes-r-mahalakshmi

சித்திரை மாதம் 14-4-2023 அன்று பிறக்கிறது. மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதமே சித்திரை எனப்படும். இங்கு சூரியன் உச்சமடைவார் என்பது முக்கியம். இது எப்போதும் நடக்கக்கூடியதுதான். கூடவே புதனும் சுக்கிரனும் முன்- பின்னாக வந்து செல்வர்.

Advertisment

இந்த வருடம் மேஷ ராசியில் ஏற்கெனவே ராகு இருக்கிறார். ஏப்ரல் 22 அன்று குருவும் மேஷத்திற்கு நகர்கிறார். ஆக, முதல் ஒன்பது நாட்களுக்கு சூரியன், ராகு, புதன் சேர்க்கை மேஷத்தில் அமையும். இதுவொரு குற்றமா என நீங்கள் யோசிப்பது தெரிகிறது.

இந்த மூன்று கிரகங்களும் ஒரே நட்சத்திரக் காலில் நிற்பார்கள். ஆம்; அஸ்வினி நட்சத

சித்திரை மாதம் 14-4-2023 அன்று பிறக்கிறது. மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதமே சித்திரை எனப்படும். இங்கு சூரியன் உச்சமடைவார் என்பது முக்கியம். இது எப்போதும் நடக்கக்கூடியதுதான். கூடவே புதனும் சுக்கிரனும் முன்- பின்னாக வந்து செல்வர்.

Advertisment

இந்த வருடம் மேஷ ராசியில் ஏற்கெனவே ராகு இருக்கிறார். ஏப்ரல் 22 அன்று குருவும் மேஷத்திற்கு நகர்கிறார். ஆக, முதல் ஒன்பது நாட்களுக்கு சூரியன், ராகு, புதன் சேர்க்கை மேஷத்தில் அமையும். இதுவொரு குற்றமா என நீங்கள் யோசிப்பது தெரிகிறது.

இந்த மூன்று கிரகங்களும் ஒரே நட்சத்திரக் காலில் நிற்பார்கள். ஆம்; அஸ்வினி நட்சத்திரத்தில் நிற்பர். அஸ்வினி என்பது கேது சார நட்சத்திரம். ஆக, சூரியன், புதன், ராகு என மூன்று கிரகங்களும் கேது சாரத்தில் கிரகயுத்தம் பெற்று நிற்பார்கள். இதில் சூரியன் உச்சமும் பெற்று நிற்பார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த கூட்டணியில் ஏப்ரல் 22-ஆம் தேதி குருவும் வந்துசேர்வார். மேலும் சனி மேஷத்தை, இந்த கிரகங்களைப் பார்ப்பது சற்று கெடுதலாகும்.

cc

Advertisment

அதுவரையில் நிலைமை சற்று களேபரம்தான். உச்ச சூரியன், ராகு, புதன் கேது சாரம். இந்த கிரக நிலையால் ஒரு பழமையான- அரசியலில் புகழ்பெற்ற அரசியல் தலைவர் தீவிரவாதிகளின் சதிச்செயலுக்கு ஆளாகக்கூடும். உச்சபட்ச திரைப்பட நடிகர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு வெளிநாடு செல்வார். பிரபலமான பத்திரிகை அலுவலகம் அல்லது தொலைக்காட்சி சேனல் அலுவலகம் தாக்குதலுக்கு ஆளாகக்கூடும்.

சித்திரை 9 அன்று மேஷத்தில் குரு வந்து அமர்வார். எனவே மேஷத்தில் சூரியன், ராகு, புதன், குரு நிற்க, இவர்களை சனி பார்ப்பது என கிரகநிலை அமைகிறது. மேஷம் ஒரு நெருப்பு மற்றும் ஸ்திர ராசியாகும். இதில் மேற்சொன்ன கிரகங்கள் நிற்கிறார்கள். இவர்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் செல்லும்போது பூமி அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த சித்திரை மாதம் உயர் நிலையில் இருப்பவர்கள், பிரபலமானவர்கள் சற்று அதீத கவனம், பாதுகாப்புடன் இருப்பது நல்லது. புகழ்பெற்ற மடாதிபதி ஒருவர் பாதிக்கப் படுவார்.

மேஷம்- பிரிட்டன், ஜெர்மனி, பாலஸ்தீனம், டென்மார்க், போலந்து; இந்தியாவில் மேற்கு வங்கம், சிக்கிம், மேகாலயா, பீகார், அசாம், அருணாசலப் பிரதேசம், நாகலாந்து போன்ற இடங்களைக் குறிக்கும். தமிழ்நாட்டில் வேலூர், திருவண்ணாமலை, வட ஆற்காடு, செங்கல்பட்டு, குடியாத்தம், ராணிப்பேட்டை, செய்யாறு போன்ற பகுதிகளைக் குறிக்கும். இங்கெல்லாம் பாதிப்பை சந்திக்கும் சூழல் ஏற்படலாம். பத்ரிநாத், கேதாரிநாத், சென்னை போன்ற இடங்களும் பாதிக்கப்படும் சூழல் உண்டு.

2023, ஏப்ரல் 28 அன்று சூரியன் பரணி நட்சத்திரத்திற்கு மாறிவிடுவார். இதனால் நிறைய கிரகங்கள் ஒரே நட்சத்திரக் காலில் நிற்பது மாறுபடும். அது சற்று சகஜ நிலையைக் கொடுக்கும். ஏப்ரல் 20 அன்று சந்திரன் அஸ்வினி நட்சத்திரத்தில் அமர்ந்து கிரகண நிலையும் ஏற்படும். ஆகமொத்தத்தில் இவ்வாண்டு சித்திரை மாதம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்த சித்திரை மாதத்தில் செவ்வாய், புதன் பரிவர்த்தனையும் உள்ளது. அதனால்தான் பூமி சம்பந்தமான குற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

காஞ்சி மகாபெரியவர் கூறியதுபோல அனைவரும் கோளறு பதிகம் பாராயணம் செய்யுங்கள். கிரகங்களின் கோட்சார நிலை குற்றங்கள் குறையக்கூடும்.

செல்: 94449 61845

bala140423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe