சென்ற இதழ் தொடர்ச்சி...
இந்தியா 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபின்பு, 1952-ஆம் ஆண்டு முதன்முதலில் மக்கள் வாக்களிக்கும் முறையில் பொதுத்தேர்தல் நடந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து, ராஜாஜி தமிழ்நாட்டு முதலமைச்சராகப் பதவியேற்றார்.
1954-ல் ராஜாஜி முதல்வர் பதவியைவிட்டு விலகியபின்பு, கர்மவீரர் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
தமிழகத்தை காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் முதல்வர்களாக இருந்து ஆட்சி செய்தனர்.
தமிழக முதல்வர்களாக பதவிவகிக்கும் யோகநிலையை எந்த கிரகங்கள் தந்தன என்று தமிழ்வழி ஜோதிட முறையில் ஆய்வு செய்தபோது, குரு, சனி ஆகிய இரண்டு கிரகங்களும், கடகம், விருச்சிகம், மீன ராசிகளில் அமர்ந்து, முதல்வர் பதவியைத் தந்து, தமிழகத்தை ஆட்சிபுரியவைத்தன. மேலும் அவர்கள் வாழ்க்கைப் பற்றிய இன்னும்பல உண்மைகளையும் அறியவைத்தன.
சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை ஜோதிடத்தில், ஒருவரின் இப்பிறவி விதி, வினை, உயர்வு, தாழ்வு என வாழ்வின் பலன்களை அறிய லக்னம், தசை, புக்தி என எதுவும் பார்க்கத் தேவையில்லை. இனி, இவர்கள் பிறப்பு ஜாதகத்தில் குரு, சனி கிரகங்கள் அமைந்துள்ள நிலையையும், ஆய்வில் தெரிந்த உண்மைகளையும் அறிவோம்.
ராசி சக்கரத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று திரிகோண ராசிகளாகும். இவை ஒரே நட்சத்திர மண்டலத்திலுள்ள ராசிகள். இவர்களின் பிறப்பு ஜாதகத்தில் குரு, சனி கிரகங்கள் இந்த ராசிகளில் அமர்ந்துள்ள ஒற்றுமையையும், தந்த பலன்களையும் அறிவோம்.
காமராஜரின் பிறப்பு ஜாதகத்தில் குரு மீன ராசியில் உள்ளது. மீனத்திலுள்ள குருவின் பலனால் இவர் தமிழக முதல்வரானார். இது குரு தந்த யோகம்.
அண்ணாவின் பிறப்பு ஜாதகத்தில் சனி மீன ராசியில் உள்ளது. கடகத்திற்கு திரிகோண ராசியான மீனத் திலுள்ள சனி, இவரை தமிழக முதல்வர் பதவியை வசிக்கச்செய்தது. இது சனி தந்த யோகம்.
தமிழகத்தில் தனிக்கட்சி ஆரம்பித்து, தேசிய கட்சிகளின் ஆட்சியை, ஆதிக்கத்தை அகற்றிய வர் அறிஞர் அண்ணா.
கருணாநிதியின் பிறப்பு ஜாத கத்தில் விருச்சிக ராசியில் குரு அமர்ந்து, இவருக்கு முதலமைச்சர் பதவியைத் தந்து, தமிழகத்தை ஆட்சி புரியும் யோகத் தையும் தந்தது.
எம்.ஜி.ஆரின் ஜாதகத்தில் கடக ராசியில் சனி அமர்ந்து, அவரை தமிழ் நாட்டின் முதல்வராகப் பதவி வகிக்கச்செய்தது. இது சனி தந்த யோகம்.
ஜெயலலிதாவின் பிறப்பு ஜாதகத்தில் சனி கடக ராசியில் உள்ளது. சனியின் ஆதிக்கப் பலன், இவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கியது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாகப் பதவிவகித்து, ஆட்சிபுரிந்து மறைந்த இவர்களின் ஜாதகத்தில், குரு, சனி ஆகிய இரண்டு கிரகங்களும் கடகம், விருச்சிகம், மீன ராசிகளில் அமர்ந்து, முதல்வர் யோகத்தைத் தந்தன. மேலும் இவர்களின் இப்பிறவி வாழ்க்கைப் பற்றி ஆய்வு செய்தபோது, இன்னும் பல பிரமிப்பு தரக்கூடிய நிகழ்வுகள், ஒற்றுமைகள் இருந்ததையும் அறியமுடிந்தது. அவற்றில் சிலவற்றை சுருக்கமாக அறிவோம்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் காமராஜரும், கருணாநிதியும் தொடர்ந்திருந்து ஆட்சி செய்யமுடியவில்லை. இவர்கள் மரணமடை யும்போது முதல்வர் பதவியில் இல்லை. தங்கள் கட்சித்தலைவராக, மட்டும் இருந்தனர். இவர்களின் பிறப்பு ஜாதகத்தில் விருச்சிகம், மீன ராசிகளில் குரு இருந்ததே இந்த நிலைக்குக் காரணம்.
எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா இருவரும், நீண்டகாலம் முதல்வர் பதவியிலிருந்து ஆட்சி செய்தார்கள். இவர்கள் இருவரும் முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே மரணமடைந்தார்கள். அறிஞர் அண்ணாதுரை குறைந்த காலம் மட்டும் முதல்வர் பதவியில் இருந்த போதும், பதவியில் இருக்கும்போதுதான் மரணமடைந்தார். இவர்கள் மூவரும், தாங்கள் வளர்த்த தாய்க்கட்சியிலிருந்து பிரிந்து வெளியேவந்து, தனியாக கட்சி ஆரம்பித்து, அந்த கட்சியை பலப்படுத்தி, தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆனார்கள். இதற்கு கடகத்திலுள்ள சனி கிரகம் தந்தபலனே காரணம். (எம்.ஜி.ஆர். அவர்களின் மரணத்துக்குப்பின் இடைக் கால முதல்வராக திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். பொறுப் பேற்றார். ஆனால் அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிளவுற்றது. பின்னர் ஜெயலலிதா தன் திறமையால் கட்சியைக் கைப்பற்றினார்.)
இவர்கள் அனைவருமே இளம் வயதில் சிரமமான வாழ்க்கையை வாழ்ந்தாலும், வாழ்வின் இறுதியில் புகழ்பெற்றவர்களாகவே வாழ்ந்து மறைந்தார்கள். காமராஜர், ஜெயலலிதா இருவருக்கும் திருமணம், குடும்பம் இல்லை. அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் மனைவி, குடும்பம் இருந்தாலும், குழந்தைகள் இல்லை.
இதுபோன்று, இன்னும் பல ஒற்றுமைகள் இவர்கள் பிறப்பிலும், வாழ்க்கையிலும் உண்டு. இவர்கள் நம்பிக்கை சார்ந்த செயல்களான பூஜை, யாகம் செய்து முதல்வர் பதவியை அடையவில்லை. தங்கள் இளம் வயதிலிருந்தே தங்கள் மொழி, நாடு, மக்கள் நலம் பெறவேண்டும்; உயர்ந்தவன், தாழ்ந்தவன், சாதி, மதம் இனம் போன்ற வேறுபாடு ஒழியவேண்டும்; அறிவு வளரவேண்டும் என்ற நிலையில் செயல்பட்டு, மக்களோடு மக்களாக இணைந்து வாழ்ந்ததால், குரு, சனி கிரகங்கள், அந்த மக்களால் முதல்வர் பதவியை அடையச் செய்தன என்பதே உண்மை. இன்றும் மக்களால் புகழ்ந்து போற்றப்படுகிறார்கள். இவர்கள் வரலாற்றின்மூலம் ஒரு உண்மையைத் தெளிவாக அறியமுடிகிறது. தமிழ்நாட்டில் ஆன்மிகம், மதம், சாதி, இனம் பேசி ஆட்சியைப் பிடித்து யாரும் முதலமைச்சராக முடியாது என்பதே அந்த உண்மை.
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் தேசியக் கட்சிகளே ஆட்சிசெய்து கொண்டிருந்த நிலையை 1967-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தி.மு.வை வெற்றிபெற வைத்து, தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழ்நாட்டிலிருந்து அகற்றினார் அண்ணா. இனிவரும் காலங்களிலும் தேசியக் கட்சிகளின் நேரடி ஆட்சி தமிழ்நாட்டில் இருக்காது.
கடகம், விருச்சிகம், மீன ராசிகளில் குரு கிரகம் உள்ளவர்களுக்கு அரசியல், உத்தியோகம், பதவிகளிலிருந்து இறக்கம் ஏற்பட்டால், திரும்ப அந்த இடத்தை அடையமுடியாது. தலைமைப் பொறுப்பில் இருந்தால் கொஞ்ச காலமே அந்தப் பதவியை அனுபவிக்க முடியும். வாழ்வின் இறுதியில் சாதாரண மனிதர்களாக வாழநேரிடும். இந்தநிலை மாற சரியான நடைமுறை நிவர்த்தி முறைகளைச் செய்துகொள்வது நன்மை தரும்.
தமிழக அரசியலில், கடகம் விருச்சிகம், மீனத்தில் சனி உள்ள அரசியல் தலைவர்களை, கடகம், விருச்சிகம், மீன ராசிகளிலுள்ள குரு அரசியல் தலைவர்களால் எதிர்த்து வெற்றிபெற்று பதவியை அடையமுடியாது.
இந்த உண்மையை காமராஜர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலநிகழ்வுகளின் அனுபவத்தின்மூலம் அறிந்துகொள்ளலாம்.
இனிவரும் காலங்களிலும், கடகம், விருச்சிகம், மீன ராசிகளில் குரு, சனி உள்ளவர் களுக்கே அவை அமைச்சர், முதலமைச்சர் பதவியைத் தந்து ஆட்சிபுரியவைக்கும்.
செல்: 99441 13267