தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 6-4-2021, பங்குனி 24, திருவோண நட்சத்திர நாளில் நடக்கிறது.
பொதுப்பலன்கள் எனும்போது, அதனை காலபுருஷ தத்துவத்தில்தான் உரைக்க வேண்டும்.
பொதுத்தேர்தல் எனும்போது, 11-ஆமிடம், 9-ஆமிடம் மற்றும் சூரியனை அவதானிக்க வேண்டும்.
தேர்தல் எனும்போது ஆளுங்கட்சி, எதிர்கட்சி என இரண்டையும்தான் பார்க்கவேண்டும். ஆளுங்கட்சியை கால புருஷனின் 1-ஆம் அதிபதியைக் கொண்டும், எதிர்கட்சியை காலபுருஷனின் 6-ஆம் அதிபதியைக் கொண்டும் கூறவேண்டும்.
இந்தத் தேர்தலில், ஆளுங்கட்சியின் 1-ஆம் அதிபதி செவ்வாய், 2-ஆமிடத்தில் ராகுவோடு அமர்ந்து சுயசாரம் பெற்று, சூரிய அம்சத்தில் உள்ளார். செவ்வாய் 8-ஆமதிபதியும் ஆவார்.
எதிர்கட்சியைக் குறிக்கும் புதன் மீன ராசியில் நீசம்பெற்று, உடனிருக்கும் உச்ச சுக்கிரனால் நீசபங்க ராஜயோகம் பெற்று, சனி சாரத்தில், புதன் அம்சத்தில், உச்சம் பெற்றும் அமர்ந்துள்ளார்.
இரு கிரக அமைப்பையும் நோக்கும் போது, எதிர்கட்சியே வலுவாக இருப்பது போல் தோன்றுகிறது. ஆனாலும் எதிர்க்கட்சி யினர் வெற்றியை சுலபமாக அடைய முடியாது. தோற்பதுபோலிருந்து, பின் தான் வெற்றிகிட்டும் என கிரகநிலை உணர்த்து கிறது. நிறைய செலவும், பதட்டமும், மனக் கிலேசமும் அடைந்து, பின்தான் வெற்றி தேடிவரும். "கண்ணுமுழி பிதுங்கிப் போச்சு', "அம்மா கொடுத்த சீனித்தண்ணி வெளியே வந்துட்டுது,' "தலையாலே தண்ணி குடிச்சோம்' என்னும் அடிமட்ட நிலைக்குப்போய், பின்தான் வெற்றி கிட்டக்கூடும். இந்த வெற்றி பெரும்பான்மையான பெண்களால்தான் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை. 6-ஆம் அதிபதி, சுக்கிரனால்தான் யோகம் பெற்றுள்ளார் என்பதால் இவ்விதம் நடக்கும்.
ஆளுங்கட்சியினரைக் குறிக்கும் செவ்வாய் ராகுவோடு சேர்ந்திருந்து, ஒரு சுபர் பார்வை அல்லது சேர்க்கை யும் பெறவில்லை. மேலும் ஒரு லாபாதி பதி அல்லது அதிர்ஷ்ட அதிபதியின் சம்பந்தமும் இல்லை. இவர்களுக்குப் பதட்டமும் இராது; வெற்றியும் சந்தேகமே. வெளியூர், வெளிமாநில, வெளிநாட்டு நபரால் இவர்களது வெற்றி குறையும். அதற்காக ஆளுங்கட்சியினர் ஒரேயடியாகத் தோற்கமாட்டார்கள். கௌரவமான தோல்வியாக அமைய லாம். சிறிதளவு வெற்றியும் உண்டு.
இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு அமோகமாக இருக்கும். பெண்களின் வாக்கு அதிகமாகும்.
வாக்குப்பதிவன்று நிறைய சட்டப் புறம்பான செயல்- குறிப்பாக பணம் சம்பந்தமான செயல் அதிக குற்றங்களை உண்டாக்கும்.
ஊடகத்துறை, செய்தித்துறை, கைபேசி என அனைத் திற்கும் அதிக கட்டுப்பாடுகள் இருக்கும். அதையும் கடந்து பரபரப்பான செய்திகளை வெளியிடுவர்.
குடும்ப அரசியல்வாதிகளில் ஒருவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படக்கூடும்.
தேர்தல் சம்பந்த ஊழியர்கள், மிக அலைச்சலோடு வேலை செய்வர்.
தேர்தல் நாளில் ஒரு அரசியல்வாதிக்கு வெட்டுக் காயம், ரத்தம் சிந்துதல் நடக்கலாம்.
தேர்தல் அன்று சந்திரன் தன் சுயசாரமான திருவோண நட்சத்திரத்தில் செல்கிறார். தேர்தல் காரகரான 11-ஆம் அதிபதி சனியும் சந்திர சாரம் வாங்கி யுள்ளார். 11-ஆம் வீட்டில் குரு பகவான் அதிசாரமாக செல்கிறார். இந்தத் தேர்தல் நடக்கும் தினம், தேர்தல் நடக்குமா எனும் சந்தேகம் வருமளவுக்கு இருக்கும். ராகுவும் சந்திரன் காலில் செல்வது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக, நிறைய இடங்களில் தங்ஸ்ரீர்ய்ற்ண்ய்ஞ் எனப் படும் மறு வாக்கு எண்ணிக்கை நடக்கும். சில இடங்களில் தேர்தல் ஆணையம், தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஆணையிடும். தேர்தல் திருவிழா, "வரும்- ஆனா வராது', "நடக்கும்- ஆனா நடக்காது' என்ற அளவில், குழப்பமாக நடக்கும். சனியும் சந்திரனும் ஒரே நட்சத்திரக் காலில் செல்வதால், புனர்பூ யோகம் என்ற ஜோதிடவிதியின்படி இவ்விதம் நடக்கும்.
மேலும், அரசிய லைக் குறிக்கும் சூரியனை, அதன் பகை கிரகமான சனி தனது மூன்றாம் பார்வையால் உற்று நோக்குகிறார். சனியின் பார்வை தடை, தாமதம் உண்டாக்கும் என்பது ஜோதிடவிதி. மேலும் சூரியன் 12-ல் மறைவதால், நடப்பு அரசு விரயமாகும் என்று தெரிகிறது.
வெற்றி வாய்ப்புள்ள ராசிகள்
மேஷம்: நிறைய கள்ள ஓட்டு போட்டால் வெற்றிபெறுவர்.
ரிஷபம்: நிறைய செலவு செய்தால் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்: நிறைய உழைத்து, நிறைய செலவழித்தால் வெற்றி கிடைக்கும்.
கடகம்: வேகமான பரப்புரைச் செயல்கள் வெற்றி தேடித்தரும்.
சிம்மம்: தேர்தல் பிரச்சாரத் தின்போது, உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஒருவேளை அதைச் சொல்லியே வெற்றிபெறலாம். அல்லது தேர்தல் களத்திலிருந்து விலக நேரிடும்.
கன்னி: தோல்வி பயம் ஏற்பட்டு, பின் எதிர்பாராத அமோக வெற்றி கிடைக்கும்.
துலாம்: அதீத அலைச்சலும், செலவும் அபரிதமான வெற்றிதரும்.
விருச்சிகம்: இவர்களது வெற்றி, இவர்களின் பேச்சுகளால் பறிக்கப்படலாம்.
தனுசு: இவர்களது வெற்றி மதில்மேல் பூனைபோல் இருக்கும். பிறந்த ஜாதக தசா புக்திகள் நன்றாக இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
மகரம்: வெற்றி இவர் களுடையதாகும். ஆயினும் சிலரின் வெற்றி, மறு எண்ணிக்கை, மறு ஓட்டுப்பதிவுமூலம் உறுதிபடுத்தப்படும்.
கும்பம்: அரிதாகவே வெற்றி கிடைக்கும்.
மீனம்: கூட்டணி களின் தயவால் வெற்றிச் செய்தி கிடைக்கும்.
தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் நடை பெறும் அன்று, சந்திரன் திருவோண நட்சத்திரம், மகர ராசியில் ஓடுகிறார். இதன் அடிப்படையில் மற்ற நட்சத்திரப் பலன்.
அஸ்வினி, மகம், மூலம்: எங்காவது நன்றாக அடிபட்டுத் துன்பப்படுவர்.
பரணி, பூரம், பூராடம்: நன்மைகள் கிடைக்கும். சொந்த தொகுதிவிட்டு, வேறிடம் நிற்பவர்கள் அதிகபட்ச வெற்றிபெறுவர்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்: பரம்பரை அரசியல்வாதிகள், ஏற்கெனவே பதவியில் இருப்பவர்களுக்கு சொந்தத் தொகுதி யில் வெற்றி உறுதி.
ரோகிணி, அஸ்தம், திருவோணம்: சிறப் பான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்: இவர் களுக்கு வெற்றியுடன், அமைச்சர் பதவியும் கிடைக்கும் வாய்ப்புண்டு.
திருவாதிரை, சுவாதி, சதயம்: பயணங் களில் விபத்து ஏற்பட்டு, எங்காவது மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டிருப்பார்கள்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி: நல்ல பலன்கள், நல்ல லாபத்துடன் கிடைக்கும்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி: அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது.
ஆயில்யம், கேட்டை, ரேவதி: இவர்களுக்கு சாதக மாக, விரும்பியபடி தேர்தல் வெற்றி கிடைக்கும்.
கிரகங்களின் காரகங்களும் பலனும்
சூரியன்: இது உதய சூரியனைக் குறிக்கும். தேர்தல் நாளன்று சூரியபகவான் விரயத் தில் நின்றாலும், அவர் சாரம் வாங்கிய புதன் நீசபங்கத்திலும், உடன் உச்ச சுக்கிரன் இருப்ப தாலும், உதயசூரியன் சிறு மேகக்கூட்ட தள்ளாட்டத்துக்குப் பிறகு உதித்துவிடும் எனலாம்.
சந்திரன்: குக்கர் போன்ற சமையல் பாத்திரங்களைக் குறிப்பார். சொந்த மக்களின் வாக்குகளால் கௌரவமான, மதிக்கத்தக்க நிலையுண்டு.
செவ்வாய்: விளையாட்டுப் பொருள், மின் கருவிகளைக் குறிப்பார். விவசாயம், விவசாயிகளையும் குறிப்பார். ஒரு மதம், ஒரு இனத்திற்கு எதிரான வாக்குகள் இவர்கள் கணக்கில் சேரும். குறைந்தபட்ச வெற்றி அல்லது கௌரவமான தோல்வி ஏற்படும்.
புதன்: இவரின் காரகப்படி, புதன் கைகள், இலைகள் ஆகியவற்றைக் குறிப்பார். இவர்களின் வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகளைப் பிடுங்கி எடுக்கக்கூடும். அது பணம், பேச்சு, அலைச்சல் என ஏதோவொன்றாக இருக்கும். தேர்தலன்று புதன் நீசமாகத்தான் உள்ளார். ஏழாம் அதிபதி சுக்கிரன் உச்சத்தினால், புதன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார்.
அதனால் சிலசமயம் எதிர்பாராத வெற்றியும், மிகவும் எதிர்பார்த்த இடத்தில் தோல்வியும் கிடைக்கலாம். இவர்களது வெற்றி கூட்டணிகள் சார்ந்தே அமையும்.
சுக்கிரன்: பழங்களைக் குறிப்பார். சுக்கிரன் உச்சம் பெற்றாலும், சாரநாதர் புதன் நீசம். மேலும் இவர்கள் பங்காளிகளின் துணைக்கொண்டே வெற்றி பெறமுடியும். சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளே எதிரியாக செயல்பட்டு கவிழ்த்துவிடும் நிலையும் உண்டாகலாம்.
ஏப்ரல் 6-ஆம் தேதி கிரகநிலைப் படி, அரசு, அரசியல் கிரகமான சூரியன் 12-ல் மறைந்துள்ளார். எனவே, தேர்தலில் நிற்கும் நபர்கள் சூரியனுக் குரிய சிறப்பான கோவில்களில் வழிபாடு செய்தால் வெற்றி எளிதாகக் கிடைக்கும். சூரியனார் கோவில், திருக் கண்டியூர், திருப்புறவார், திருவண்ணா மலை, காஞ்சி ஏகாம்பரஸ்வரர், சிதம்பரம், சீர்காழி, சங்கரன் கோவில், திருநள்ளாறு, திருக்காளஹஸ்தி, ஆலங்குடி, பேரூர், திருநாகேஸ்வரம், இராமேஸ்வரம், பாபநாசம், ஸ்ரீ வைகுண்டம், காரைக்கால் திருத் தெளிச்சேரி, திருச்சி திருவெறும்பூர், மயிலாப்பூர், திருவாலாங்காடு, குரங்கணில் முட்டம் போன்ற தலங்களில், வேட்பாளர்கள், தங்கள் தொகுதிக்கு அருகிலுள்ள சிவன் கோவிலில் நன்கு வணங்கவும். பித்தளை விளக்கு வாங்கிக்கொடுப்பதாகப் பிரார்த்தனை செய்யவும். ஆங்காங்கே உள்ள சித்தர் மடத்திற்கும், வாய் பேசாத குழந்தைகள் பள்ளிக்கும் ஆவன செய்யவும். வெற்றித்திருமகள் அனுக்கிரகம் செய்வாள்.
மற்றதை மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்.
செல்: 94449 61845