2020,2021-கிரக சவாலை வெல்வதெப்படி? 12 ராசியினருக்கும் பலன்கள், பரிகாரங்கள்! -க. காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/20202021-how-win-planet-challenge-12-benefits-and-remedies-zodiacs

ல நூற்றாண்டு களாக நம்முடைய நடைமுறை வாழ்க்கை முறை இயற்கைக்குக் கட்டுப்பட்டு, எதற்கும் நிதானமாக யோசித்து முடிவெடுத்து செயல் படுவதாக இருந்தது. அதனால், குடும்பம், உறவுகள், தொழில், நோய், எதிர்ப்புகள் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை எளிதாக அடையமுடிந்தது.

ஆனால், கடந்த சில வருடங்களாகக் காரணமே இல்லாமல் வேகமாக வாழத் தொடங்கி, இன்று அதி வேகமாக ஓட ஆரம் பித்துவிட்டோம். அதனால், தேவைகள் அதிகரித்து, சொல்ல முடியாத பிரச்சினைகள் ஏற்பட்டு "எதைத் தின்றால் பித்தம் தெளியும்" எனத் தேடும் நிலை வந்துவிட்டது.

மனிதன் "தான் வாழ" எதற்கும் தயாராக இருந் தாலும், இயற்கை தன்னை அழித்துக்கொள்ள விரும்புவதேயில்லை. ஆனால், மனிதர்கள்,""யாரோ, எதுவோ, எப்படியோ போகட்டும். நான் நல்லா இருக்கணும். அதுக்கு வழி சொல்லுங்க"" என்று தான் கேட்கிறார்கள்.

இன்றைய நிலையில், ""கொரோனோ பூமியில இருந்தா என்ன, இல்லன்னா என்ன, எனக்கு மட்டும் வரக்கூடாது'' என நினைப்பவர்கள் ஏராளம். .நிம்மதியான வாழ்க்கை வாழ எண்ணுபவர்கள் பிடிவாத்தைவிட்டு, நிதானமாக, சூழ்நிலையறிந்து தெரிந்து முடிவுகள் எடுத்துக்கொள்வதுதான் ஏமாற்றமின்றி வாழ வழி. (இங்கு தரப்பட்டுள்ள மகர ராசி பலன்களை அனைத்து ராசி வாசகர்களும் பொதுப் பலன்களாக எடுத்துக்கொள்ளலாம்.)

மேஷ ராசி

வருகிற ராகு- கேதுப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் 9-ஆமிட குருவின் பார்வை 2020-ஆம் ஆண்டு இறுதிவரை சுபயோகப் பலன்களைத் தரும். பூர்வ புண்ணிய பலத்தால் வீடு, வாகன யோகம், திருமணம், குழந்தை பாக்கியம் நல்லமுறையில் அமையும். தொழிலில் இருக்கும் மந்தம் நீங்கும். கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நலம். பூர்வீகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நேரம் வந்துவிட்டது. திடீர் அதிஷ்டத்தால் பணவரவு உண்டு. 2021-ஆம் ஆண்டு குருபலன் குறைவாக இருப்பதால், புதிய நபர்களை நம்பி தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. இடமாற்றம், தொழில் மாற்றம், தொழில் மந்தம், பணவரவுக் குறைவு போன்றவை குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படுத்தும். திருமணம், குழந்தை பாக்கியம் சிலருக்கு ஆறுதல் தரும்.

பரிகாரம்: செவ்வாய் ஸ்தலம், பழனி முருகன் வழிபாடு தீமை குறைந் தும், கெட்டது விலகியும், நன்மைகள் நாடிவரும்.

ரிஷப ராசி

2020- ஆம் ஆண்டின் இறுதியில் அஷ்டமச்சனி, அஷ்டம குரு விலகி, புத்தாண்டு 2021 புதிய வாழ்க்கை தரும் பொன்னான ஆண்டாகப் பிறக்கப் போகிறது. ராகு- கேதுப் பெயர்ச்சியால் இடமாற்றம், தொழில் மாற்றம், மனதிற்குப் பிடித்த வாழ்க்கை ஏற்படும். அதுவரை அவசரப்படாமல் நிதானமாக இருப்பது அவசியம். வாய்ப் பேச்சால் குடும்பத்திலும், வெளியிலும் வம்புகள் ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் கவனம் தேவை. பெரியவர்களுக்கு மதிப்பளித்தல், பெரியவர்களின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுவது பலவிதப் பிரச்சனைகளைத் தவிர்க்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு, சுக்கிர ப்ரீதி செய்தால் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறும்.

மிதுன ராசி

2020 ஆண்டு இறுதிவரை குருபலம் இருப்பதால் சுபநிகழ்வுகள் தடையின்றி நடைபெறும். மனை, வீடு, வாகனம், திருமணம், குழந்தை பாக்கியம் என சகல நன்மை கிடைக்கும். அஷ்டமச்சனி, அஷ்டம குரு ஆரம்பிக்கப்போவதால், நண்பர்கள், எதிரிகளிடம் எச்சரிக்கை அவசியம். யாருக்கும் ஜாமின் போடுவது, கொடுக்கல்- வாங்கல் செய்வது, அவசரப்பட்டு சுயதொழில், கூட்டுத்தொழில் தொடங்குவது நஷ்டத்தையே

ல நூற்றாண்டு களாக நம்முடைய நடைமுறை வாழ்க்கை முறை இயற்கைக்குக் கட்டுப்பட்டு, எதற்கும் நிதானமாக யோசித்து முடிவெடுத்து செயல் படுவதாக இருந்தது. அதனால், குடும்பம், உறவுகள், தொழில், நோய், எதிர்ப்புகள் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை எளிதாக அடையமுடிந்தது.

ஆனால், கடந்த சில வருடங்களாகக் காரணமே இல்லாமல் வேகமாக வாழத் தொடங்கி, இன்று அதி வேகமாக ஓட ஆரம் பித்துவிட்டோம். அதனால், தேவைகள் அதிகரித்து, சொல்ல முடியாத பிரச்சினைகள் ஏற்பட்டு "எதைத் தின்றால் பித்தம் தெளியும்" எனத் தேடும் நிலை வந்துவிட்டது.

மனிதன் "தான் வாழ" எதற்கும் தயாராக இருந் தாலும், இயற்கை தன்னை அழித்துக்கொள்ள விரும்புவதேயில்லை. ஆனால், மனிதர்கள்,""யாரோ, எதுவோ, எப்படியோ போகட்டும். நான் நல்லா இருக்கணும். அதுக்கு வழி சொல்லுங்க"" என்று தான் கேட்கிறார்கள்.

இன்றைய நிலையில், ""கொரோனோ பூமியில இருந்தா என்ன, இல்லன்னா என்ன, எனக்கு மட்டும் வரக்கூடாது'' என நினைப்பவர்கள் ஏராளம். .நிம்மதியான வாழ்க்கை வாழ எண்ணுபவர்கள் பிடிவாத்தைவிட்டு, நிதானமாக, சூழ்நிலையறிந்து தெரிந்து முடிவுகள் எடுத்துக்கொள்வதுதான் ஏமாற்றமின்றி வாழ வழி. (இங்கு தரப்பட்டுள்ள மகர ராசி பலன்களை அனைத்து ராசி வாசகர்களும் பொதுப் பலன்களாக எடுத்துக்கொள்ளலாம்.)

மேஷ ராசி

வருகிற ராகு- கேதுப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் 9-ஆமிட குருவின் பார்வை 2020-ஆம் ஆண்டு இறுதிவரை சுபயோகப் பலன்களைத் தரும். பூர்வ புண்ணிய பலத்தால் வீடு, வாகன யோகம், திருமணம், குழந்தை பாக்கியம் நல்லமுறையில் அமையும். தொழிலில் இருக்கும் மந்தம் நீங்கும். கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நலம். பூர்வீகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நேரம் வந்துவிட்டது. திடீர் அதிஷ்டத்தால் பணவரவு உண்டு. 2021-ஆம் ஆண்டு குருபலன் குறைவாக இருப்பதால், புதிய நபர்களை நம்பி தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. இடமாற்றம், தொழில் மாற்றம், தொழில் மந்தம், பணவரவுக் குறைவு போன்றவை குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படுத்தும். திருமணம், குழந்தை பாக்கியம் சிலருக்கு ஆறுதல் தரும்.

பரிகாரம்: செவ்வாய் ஸ்தலம், பழனி முருகன் வழிபாடு தீமை குறைந் தும், கெட்டது விலகியும், நன்மைகள் நாடிவரும்.

ரிஷப ராசி

2020- ஆம் ஆண்டின் இறுதியில் அஷ்டமச்சனி, அஷ்டம குரு விலகி, புத்தாண்டு 2021 புதிய வாழ்க்கை தரும் பொன்னான ஆண்டாகப் பிறக்கப் போகிறது. ராகு- கேதுப் பெயர்ச்சியால் இடமாற்றம், தொழில் மாற்றம், மனதிற்குப் பிடித்த வாழ்க்கை ஏற்படும். அதுவரை அவசரப்படாமல் நிதானமாக இருப்பது அவசியம். வாய்ப் பேச்சால் குடும்பத்திலும், வெளியிலும் வம்புகள் ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் கவனம் தேவை. பெரியவர்களுக்கு மதிப்பளித்தல், பெரியவர்களின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுவது பலவிதப் பிரச்சனைகளைத் தவிர்க்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு, சுக்கிர ப்ரீதி செய்தால் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறும்.

மிதுன ராசி

2020 ஆண்டு இறுதிவரை குருபலம் இருப்பதால் சுபநிகழ்வுகள் தடையின்றி நடைபெறும். மனை, வீடு, வாகனம், திருமணம், குழந்தை பாக்கியம் என சகல நன்மை கிடைக்கும். அஷ்டமச்சனி, அஷ்டம குரு ஆரம்பிக்கப்போவதால், நண்பர்கள், எதிரிகளிடம் எச்சரிக்கை அவசியம். யாருக்கும் ஜாமின் போடுவது, கொடுக்கல்- வாங்கல் செய்வது, அவசரப்பட்டு சுயதொழில், கூட்டுத்தொழில் தொடங்குவது நஷ்டத்தையே தரும். நம்பிவர்களால் துரோகம், வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபம், உடல் நலப் பாதிப்பு, கடன் தொந்தரவு ஏற்படும் என்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. 2021-ஆம் ஆண்டில் எதிலும் கவனமாக இருக்கவேண்டும்.

பரிகாரம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வழிபாடு, புதன் வழிபாடு, பச்சைப்பயறு தானம் ஆகியவை கஷ்டங்கள் தீர்க்கும்.

கடக ராசி

ராகு- கேதுப்பெயர்ச்சி இதுவரையுள்ள சோதனைகளையும் வேதனைகளையும் தீர்க்கும். குருப் பெயர்ச்சி குடும்பத்தில் இருக்கும் பணவீக்கத்தைக் குறைத்து வரவு, வாக்கு கொடுத்ததை நிறைவேற்றும் சூழ்நிலை ஆகியவற்றை உருவாக்கும். தடைப்பட்ட திருமணம், வீடு, வாகன யோகம், பிடித்த இடமாற்றம், சுபநிகழ்ச் சிகள் ஆகியவை நிறைவேறி மனதிற்கு சந்தோஷம் தரும். தொழில் மந்தநிலை மாறி வெற்றிப் பயணம் தொடங்கும். புதியவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் ஈடுபடவேண்டாம். 2021-ன் இறுதியில் கண்டச்சனியால் தாயாருக்கு உடல்தொந்தரவு, அவமானம், பணநஷ்டம், நண்பர்களால் ஏமாற்றம், கூட்டுத்தொழில் நஷ்டம், உடல் நிலை பாதிப்பு, எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஆகியவை ஏற்படும். திருமணத்தில் குழப்பம், மனஸ்தாபம், குழந்தை பாக்கியத் தடை, பிரசவ நேரத்தில் தொந்தரவு போன்றவையும் ஏற்படும்.

பரிகாரம்: அமாவாசை, பௌர்ணமியில் அம்மனுக்குக் கற்கண்டு பொங்கல் வைத்தல், சந்திர தரிசனம், சந்திரனார் வழிபாடு ஆகியவை அனைத்துக் கஷ்டங்களையும் தீர்க்கும்.

சிம்ம ராசி

2020- ஆம் ஆண்டு இறுதிக்குள் திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் மேன்மைக்கான வாய்ப்புகள் என அத்தனையும் கிடைக்கும். அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ராகு- கேதுப் பெயர்ச்சி வீடு, தொழிலில் இடமாற்றம், உறவினர் பகை, தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். குருப்பெயர்ச்சி நோய், எதிரி, கடனைத் தரும் என்பதால் உடல் நிலையில் கவனம் தேவை. நண்பர்களிடம் எச்சரிக்கை, முரட்டுத் தைரியத்தால் அவப்பெயர், புதியவர்களால் நஷ்டம்- நம்பி ஏமாற்றமடைதல் போன்ற பலன்கள் தரும். ஆறாமிட சனி ஏதாவது வழியில் தீமையைத் தடுத்து நன்மை தருவார். 2021-ஆம் ஆண்டில் மிகக்கவனமாக இருக்கவேண்டும்.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம், சூரியனார் கோவில் வழிபாடு, சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

கன்னி ராசி

அர்த்தாஷ்டமச்சனி தந்த இன்னல்கள், தேவையற்ற முடக்கம், உறவினர் பகை நீங்கி உடல்நல முன்னேற்றம் அடைவர். ராகு- கேதுப் பெயர்ச்சி பாக்கியத்தைக் கொடுத்து, பயத்தை நீக்கி நம்பிக்கை தருவார். குருப்பெயர்ச்சி பூர்வ புண்ணிய பலத்தால்- குலதெய்வ அருளால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, வீடு, மனை, புத்திர பாக்கியம், தொழில் லாபம் ஆகியவற்றைப் பெற்றுத் தரும். சனிப் பெயர்ச்சிப் பலனாக உறவினர் பகை நீங்கி நினைத்ததை சாதிக்கலாம். சுயநல எண்ணத்தைக் கைவிட்டு அனைவரின்மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி கிடைக்கும். 2021-ஆம் ஆண்டு நன்மைகள் அதிகரிக்கும் நல்ல ஆண்டு.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு, புதன் ஸ்தலம் சென்று நேர்த்திக்கடன் செய்யவேண்டும்.

துலா ராசி

தனக்கென ஒரு நேர்மையை வைத்துக் கொண்டு, நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப்போகாதவர்கள் இனி, குடும்பத்தில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் தீர்ந்து, புரிந்து வாழக்கூடிய யோக நேரம் ஆரம்பமாகப் போகிறது. ராகு- கேதுப் பெயர்ச்சி குடும்பத்தில் செலவுகள் செய்ய வருமானம் அதிகரிக்கச் செய்வார். அர்த்தாஷ்டமச்சனி வீடு, மனை யோகம், புதிய நம்பிக்கையைத் தரும். தாயார் உடல்நிலை பாதிக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது தடைகளை நீக்கி லாபத்தைத் தரும். குருப்பெயர்ச்சி அலைச்சல், இடமாற்றம், முடக்கத்தைத் தர நினைத்தாலும், குருவின் பார்வை தீமையான பலன்களை மாற்றி சுபவிரயச் செலவு ஏற்படுத்தும். பகை தீர வார்த்தைகளில் கவனம், வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர்க்க உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம், மனக்குழப்பத்தைவிட்டு தன்னம்பிக்கையுடன் செயல்படுவது சிறப்பு தரும்.

பரிகாரம்: சுக்கிர ஸ்தல வழிபாடு, சனிப்ரீதி செய்துகொள்ள வேண்டும். விநாயகர் வழிபாடு அவசியம் தேவை.

vv

விருச்சிக ராசி

2020- ஆம் ஆண்டு இறுதிவரை நினைத்த காரியங்களில் முன்னேற்றம் கிடைக்கும். உள்ளுக்குள் கௌரவமாகவும் கர்வமாகவும் வாழ்ந்தால் யாரும் நெருங்கமாட்டார்கள் என்பதை ஏழரைச்சனி நன்கு புரியவைத் திருப்பார். வீடு, மனை யோகம், குடும்ப முன்னேற்றம் நன்றாக இருக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். தொழில் தடை நீங்கி முன்னேற்றப்பாதைக்குச் செல்வீர்கள். ராகு- கேதுப் பெயர்ச்சி உடல்நலத்தில் அக்கறை செலுத்த வைப்பார். குருப் பெயர்ச்சி கலகத்தை உருவாக்க நினைத் தாலும் நீசக் குரு தடுத்து, எதிர்ப்புகளை தைரியமுடன் சந்திக்க வழிசெய்வார். 2021- ஆம் ஆண்டு நிதானத்துடன் செயல்பட வேண்டும். முதலில் அறிவுரை, ஆலோசனைகளை தனக்குத்தானே வழங்கி, தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்தால் இழப்புகள் ஒவ்வொன்றாக நீங்கி, நிம்மதியான வாழ்க்கை துவங்கும். எதிர்காலப் பலன் சிறப்பாக உள்ளது.

பரிகாரம்: திருநள்ளாறு சென்று முழுக்குப்போட்டு வர தீமைகள், தடைகள் நீங்கும். நேர்த்திக்கடன் செலுத்தவும். திருச்செந்தூர் முருகன் வெற்றிமேல் வெற்றிதருவார்.

தனுசு

ஜென்ம குரு அவமானங்களையும், நல்ல புத்தியையும் வழங்கினார். குருப் பெயர்ச்சி பணப்புழக்கத்தை அதிகரிப்பார். வாக்குவாதங்கள் தீர்ந்து நன்மைகள் நடைபெறும். பாதச் சனி வீடு, மனை யோகம் தரும். கடன் குறையும். உறவினர் பகை கட்டுப்படும். திருமணம் கைகூடும். ராகு- கேதுப் பெயர்ச்சி தோல்விகளில் இருந்து மீள கற்றுக்கொடுக்கும். தன் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்புகள் வழங்கும் நல்லநேரம் நடக்கிறது. சுயநலம் என்றும் வெற்றி தராது. சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் தேவையறிந்து உதவி செய்திருந்தால், இன்று தேவையான நேரத்தில் தேடிவந்து உதவுவார்கள். உடன்பிறப்புகளுக்கும், உடனிருப்பவர்களின் கஷ்டங்களில் கவனம் செலுத்தாமல் பழகியவர்களுக்கும், ஆன்மிகத்திற்கும் செலவுசெய்து "தெய்வமே துணை' என சுயகௌரவத்திற்காக வாழ்ந்தால் தெய்வம் எப்படி உதவி செய்யும்? உதவியை எதிர்பார்ப்பதற்கு முன்பு, நாம் என்ன உதவி செய்தோம் என்பதை யோசிக்கவேண்டும். பிறரை குறைகூறாமல் தன் தவறுகளை திருத்தி, திருந்தி வாழ்ந்தால் 2021-ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: குரு ஸ்தலம், வியாழன்தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்ல புத்தி கொடுத்து நன்மை செய்யும்.

மகர ராசி

ராகு- கேதுப் பெயர்ச்சியால் கஷ்டங்கள் இருந்தாலும், ஏதாவதொருவழியில் லாபத்தைத் தருவார். பூர்வ புண்ணிய ராகுவால்- குலதெய்வ அருளால் கஷ்டங்களிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள். குருப்பெயர்ச்சியின் பார்வையால் குடும்பத்தில் சுபச்செலவுகளான திருமணம், வீடு கட்டுதல், மனை வாங்குதல், நல்ல இடமாற்றம் ஏற்படும். இருந்தபோதும், பொதுவாக ஏழரைச்சனிக் காலம் பல்வேறு சோதனைகளையே கொடுக்கும். 2021-ல் ஜென்மச்சனி, ஜென்ம குரு காலம் என்பதால், நல்லவர்கள் கெட்டவர்கள்போலவும், கெட்டவர்கள் நல்லவர்கள்போலவும் தெரிவார்கள்.உடனிருந்து உதவிசெய்பவர்கள் நம்மிடம் ஏதோ காரியத்திற்காக செய்வதுபோலவும், எந்த உதவியும் செய்யாமல் தொலைவிலிருந்து நாம் புலம்புவதை ரசிப்பவர்களை உயர்ந்தவர்களாகவும் மனம் எண்ணும்.எதார்த்தமாக இருப்பவர்களை சந்தேகப் புத்தியால் பிரியநேரும். காயப் படுத்திய பின்பும் நமக்கு உதவிசெய்ய எதிர்பார்ப்பது நியாயமில்லை. தங்களுடைய திமிரான வாய்ப்பேச்சாலும், யாருடைய உதவியுமின்றி சுயம்புபோல உயர்ந்ததாகப் பேசுவதால், "உனக்குதான் எல்லாம் தெரியுமே, நீயே பார்த்துக் கொள்' என விலகிவிடுவார்கள். தேவைக்குப் பணம் கொடுப்பவர்கள்தான் நல்லவர்கள் என்பதுபோல நீங்கள் பேசினால், அன்பிற்காகப் பழகியவர்களை பிரியநேரும். உங்களை ஏமாற்ற நினைப்ப வர்கள் உங்கள்மேல் அக்கறையாக, அன்பாக இருப்பதுபோல் பழகி ஏமாற்றக்கூடும். புதியவர்களிடம் கவனம் தேவை. கூட்டுத்தொழில், புதிய தொழில் செய்யக் கூடாது. கடன்கொடுத்தால் திரும்ப வராது. யாரை நம்பக்கூடாதோ அவர்களை நம்பவே மனம் வழிகாட்டும். சீட்டுப் பணம் பிடித்தல், பணம் கொடுத்தல்-வாங்குதலில் எச்சரிக்கை தேவை. கூடாநட்பு கேடாய் முடியும். எவ்வளவு பெரிய புத்திசாலியையும் முட்டாளாக்கிவிடும். ""ஏன் பிறந்தோம்?' என வருத்தப்படு மளவு தன்மான இழப்பு, நண்பர்களால் அவமானம், ஏமாற்றம் ஏற்படும். தைரியத்தை இழந்து தற்கொலை செய்யுமளவு மனம் வெறுக்கும். தனக்காக யாருமில்லை என்பதைபோலத் தோன்றும். இவை அத்தனைக்கும் காரணம் நீங்களாகவே இருப்பீர்கள். உங்களை யாராவது ஏமாற்றினால் முழுப்பொறுப்பு நீங்களே. "நம்பி ஏமாந்துவிட்டேன்' என்பது- கெட்டவர்களை நம்பியது உங்களுடைய தவறு. சனி பகவான் தன்னிலை உணரச்செய்வார். எப்படிச் சொன்னால் உரைக்குமோ அப்படிப் புரியவைப்பார். பெரியவர்கள், அனுபவசாலிகள் பேச்சைக்கேட்டுத் திருத்திக் கொள்ளவேண்டும். இல்லை யென்றால், பட்டுத் தெரிந்துகொள்ள நேரும். எனக்கு யாரும் தேவையில்லை என உதாசீனப்படுத்திவிட்டு, யாரும் உதவவில்லை எனப் புலம்புவதால் பயனில்லை.

ஏழரைச்சனிக் காலத்தில் உடனிருப் பவர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பது புரியும் எனச்சொன்னவுடன்தான், ஏமாற்றியவர்களைக் கெட்டவர் எனவும், தன்னிடம் ஏமாற மறுப்பவர்களை சுயநலவாதி எனவும் கூறுகிறார்கள். தன் புலம்பல் களைக் கேட்பவர்கள் நல்லவர்களாகவும், தன்னிடம் ஏமாறுபவர்களை, தன்னைப் புகழ்பவர்களை உண்மையானவர்களாகவும் சொல்வார்கள்.

யாரை, எப்படி வேலை வாங்கவேண்டும் என்கிற ரகசியம் எனக்கு மட்டுமே தெரியும் என்கிற ஆணவக்காரர்களை சனி பகவான் அழித்துவிடுவார்.நேர்மையானவர் களுக்கு ஏழரைச்சனிக் காலத்தில் பாதிப்பு ஏற்படாது. தன்னிடம் இருக்கும் கெட்ட எண்ணங்களை விடுத்து நல்லெண்ணத் துடன் வாழவேண்டும் என்பதைப் புரியவைப்பார். இத்தனை சோதனை களிலும் அடுத்தவர்களை ஏமாற்றாமல் வாழ, தன்னை மாற்றிக்கொண்டால் நன்மையை அடையலாம்.

பரிகாரம்: காகத்திற்கு தயிர்சாதத்தில் கருப்பு எள் கலந்து சனிதோறும் வைத்தல், வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் சாற்றுதல் போன்றவை ஆஞ்சநேயருக்கு செய்து வழிபடுவது தீமைகளைத் தடுத்து நன்மைபெறச் செய்யும். சனி ஸ்தலம் சென்று ப்ரீதி செய்துகொள்ளவும்.

கும்ப ராசி

நான்காமிட ராகுப் பெயர்ச்சியால் தாயார் நகை எடுத்தல், வீடு கட்டுதல் , மனை வாங்குதல், குடும்பத்தினருக்குத் திருமணம், காது குத்துதல் போன்ற சுபச் செலவு செய்துகொண்டால், இடமாற்றம், உறவினர் பகை, உடல் பாதிப்பின்றி சுகமாக இருக்கலாம்.

கேது தாய்வழி உறவினர்க்கு கண்டம் ஏற்படுத்தும். விரய குரு வீணான விரயச்செலவுகளைத் தரும். நண்பர்களிடம் கவனமாக இருக்கவேண்டும்.

யாருக்காவும் யாரிடமும் ஜாமின் பொறுப்பேற்கக்கூடாது. விரயச்சனி தந்தைக்கு கண்டம், கொடுக்கல்- வாங்கலில் நஷ்டம், பங்காளிப் பகை, சொத்துப் பிரச்சினை, வீண் மருத்துவச்செலவு ஏற்படுத்தும் என்பதால், சுபவிரயச் செலவுகளான அசையா சொத்துகளில் முதலீடுசெய்வது விரயங்களைத் தவிர்க்கும். போக்குவரத்துகளில் கவனம் தேவை. புதியவர்களிடம் ஜாக்கிரதையாகப் பழகவும். ஏழரைச்சனி என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும். தற்போது ஏழரைச்சனி முடிந்தவர்கள், தனுசு மகர ராசிக்காரர்களிடம் ஆலோசனை பெற்று அவர்கள்செய்த தவறுகளைச் செய்யாமல் தப்பித்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

பரிகாரம்: சனி ஸ்தலமான குச்சனூர் செல்வது, ஆஞ்சநேயர், விநாயகர் வழிபாடு, காக்கைக்கு அன்னமிடுதல், ஊனமுற்றோர், முதியவர்களுக்கு உதவுதல், ஏழைகளுக்கு உணவு, உடை தருவது ஆகியவை கஷ்டங்களைத் தீர்க்கும்.

மீன ராசி

ராகு- கேதுப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என அடுத்தடுத்து அனைத்து கிரகங்களும் சாதகமாக மாறுவதால், இருபது ஆண்டுகளாக இருக்கும் கஷ்டங்கள் தீரும். தெரிந்தே செய்த தவறுகள், தெரியாமல் செய்த தவறுகள், துரோகம், அவமானத்தால் பட்ட அனுபவங்களைக்கொண்டு வாழ்க்கையை சரிசெய்துகொள்ள வேண்டியது அவசியம். அதைவிடுத்து மீண்டும் தன்னைத் தாராள பிரபுபோலவும், கெட்டவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்பவர்களாகவும், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல், பொறுமை காத்து, பொன்னான நேரத்தை வீணாக்கினால் அடுத்துவரும் சனிப்பெயர்ச்சி ஏழரைச் சனியாகி மீண்டும் கஷ்டத்தை உணரவைத்து விடுவார். நிலையான வருமானம் தரும் தொழில், உயர்கல்வி பயில்தல், திருமணம், குழந்தை பாக்கியம், உறவினர் ஒற்றுமை, உடல்நிலை முன்னேற்றம் என சகல நன்மைகளும் கிடைக்கும். ஆதலால், 2021-ஆம் ஆண்டை சரியாகப் பயன்படுத்தி காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவும்.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகன் கோவில், குரு ஸ்தலம் சென்று அர்ச்சனை, அபிஷேகம் செய்துகொள்வது நன்மைகளை அதிகப்படுத்தும். எதையெதையோ சாதிப்பதாக எண்ணி ஓடிக்கொண்டிருந்த மனிதனுக்கு 2020-ஆம் ஆண்டு "கொரோனா' வாழ்க்கைக்கு எது தேவை, எப்படி வாழவேண்டும், எது நிரந்தரம் என்பதை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏழை- பணக்காரன், வல்லரசு- சிற்றரசு என எத்தகைய மனிதனா னலும் இறப்பு எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்துவிடும் என்பதைக் கண்முன் காண்பித்திருக்கிறது. இதிலும் திருந்தாத மனிதர்களுக்குப் புரியவைக்க முயல்வது முட்டாள் தனமானது.

மனிதர் உயிர்வாழ அடிப்படைத் தேவை முதலில் உடல். உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கு சரியான உணவுப்பழக்கம் அவசியம். கல்வி மனிதனுக்கு நல்ல பழக்கவழக்கத்திற்காகக் கற்றுத்தரவே போதிக்கப்பட்டது. நாளடைவில் கல்வி எதிர்காலத்தில் பணம் சம்பாதிப்பதற்காக என மாறியதும் தொழில் கல்வியாகி, தரமற்றவர்களாக மாற்றிவிட்டது. தற்போது பணத்தால் எதையும் சாதிக்கமுடியாதென்பது நிரூபணமாகியிருக்கிறது.

மனிதன் வாழ ஆரோக்கியமான உணவு, சுத்தமான உடை, குடியிருக்க இருப்பிடம் மட்டுமே தேவை. ஆசையால் ஆடம்பரத் தேவையைப்பெற போராடினால் வாழ்க்கை முழுவதும் அலைந்துதிரிவதற்குள் இறக்கும் காலம் வந்துவிடுகிறது.

இருக்கும்வரை நின்று, நிதானமாக, வாழ்க்கையை ரசித்துவிட்டுப்போவதே கொரோனோ நமக்குக் கொடுத்த வரம். தற்போதும் பயன்படுத்தத் தவறிவிட்டு, ஏக்கத்துடன் வாழ்ந்தால் எந்தக் கடவுளாலும் நம் ஆசைகளை நிறைவேற்ற முடியாது.

செல்: 96003 53748

bala170720
இதையும் படியுங்கள்
Subscribe