ந்த வார ராசிபலனை 2019 ஆண்டுப் பலனாக எழுதியுள்ளேன். -ஜோதிடபானு

ஆங்கிலப் புத்தாண்டு கன்னியா லக்னத்தில், சுவாதி நட்சத்திரத்தில், துலா ராசியில் பிறக்கிறது.

Advertisment

லக்னாதிபதி புதன் 4-ல், குரு வீட்டில், கேது நட்சத் திரத்தில் அஸ்தமனம். துலா ராசிக்கு யோகாதி பதியான சனியும் கேது சாரத்தில், 3-ல் குரு வீட்டில் அஸ்தமனம்.

விளம்பி வருடம், மார்கழி மாதம் 16-ஆம் தேதி, திங்கட்கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் 2019 ஆங்கிலப் புத்தாண்டு உதயமாகிறது.

புதன் அஸ்தமனம்:

27-12-2018 முதல் 28-1-2019 வரை.

சனி அஸ்தமனம்:

13-12-2018 முதல் 12-1-2019 வரை.

சனி வக்ரம்:

7-5-2019 முதல் 2-9-2019 வரை.

newyear

குரு வக்ரம்:

10-4-2018 முதல் 7-8-2019 வரை.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூராடம்- 1.

சந்திரன்: சுவாதி- 2.

செவ்வாய்: உத்திரட்டாதி- 3.

புதன்: மூலம்- 2.

குரு: கேட்டை- 1.

சுக்கிரன்: விசாகம்- 3.

சனி: மூலம்- 4.

ராகு: புனர்பூசம்- 4.

கேது: உத்திராடம்- 2.

Advertisment

குரு வீட்டில் (மீனத்தில்) செவ்வாய் நிற்க, செவ்வாய் வீட்டில் (விருச்சிகத்தில்) குரு நிற்க, குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை. இது குரு மங்கள யோகம் எனப்படும். நாட்டில் மழைவளம் நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சி பிறக்கும். 4-ல் சூரியன்- சனி சம்பந்தம் என்பதால், இயற்கையின் கோரதாண்டவத்தால் கடல் கொந்தளிப்பும் பாதிப்பு களும் ஏற்படலாம். அரசாள்வோருக்கு ஆபத்து களும், சவால்களும் அதிகம் உண்டாகலாம். அரசியல் வாதிகள் கட்சித்தாவல் செய்வதும், நிரந்தர நிலையில் லாமல் செயல்படுவதும் சர்வ சாதாரணமாகத் தோன்றும்.

தேர்தல் களத்தில் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கூட்டணி சேர்வதில் ஆர்வம் காட்டலாம். ஆளும் கட்சியும், அதை வீழ்த்த மாற்றுக்கட்சியும் தீவிரமாக இறங்க லாம். "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்ற கதியில் கொள்கைகளை விட்டுக்கொடுத்து கூட்டணிகள் உருவாகும். "எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன்' என்று செயல்படலாம். ஆளும்கட்சியினர் பணத்தால் மக்களை விலைபேசலாம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மத்தியில் ஆளும்கட்சிக்கு தோல்விக் கட்டம் அல்லது தொங்கு பாராளுமன்றம் உருவாக லாம். சந்திரன், சுக்கிரன் சேர்க்கையால் பத்திரிகை, திரையுலகம், கலைத்துறை சிறப்பாக செயல்படும். புதுப் புதுக்கலைஞர்களின் தோற்றமும் படைப்புகளும் உயர்வடையும். கலைஞர்கள் அரசியலில் பிரவேசமா வார்கள். ஆட்சியில அமர கனவு காண்பார்கள்.

அதனால் பாரம்பரிய அரசியல் கட்சிகளோடு கூட்டணி சேர்வார்கள். சூரியன்- சனி சேர்க்கையால் வன்முறை தலைவிரித் தாடும். காவல்துறையினரின் கடும் நடவடிக்கைகளும் பயங்கரமாகக் காணப்படும். நீதிமன்றத்தின் தீர்ப்புகளும் ஆணைகளும் பாரபட்ச மின்றி கடுமையாக இருக்கும். ராகுவை குரு பார்ப்பதால், ஆன்மிகம் தழைக்கும். மக்களிடம் பக்தியில் உண்மை இருக்கிறதோ, இல்லையோ கோவில் விழாக்களும், கொண்டாட்டங்களும் பெருகும். போலி வேடதாரி சாமியார் களின் முகத்திரை கழற்றப் படும். மக்களுக்கு புதுவிதமான நோய்களின் வரவால் பாதிப்பும், விரயமும் ஏற்படலாம். 7-5-2019 முதல் 2-9-2019 வரை சனியின் வக்ரகாலம்- நோய்த்தொல்லை, கடன் தொல்லை, போட்டி, பொறாமையால் மக்களுக்கு கஷ்டங்கள் உருவாகலாம். திருடர் பயமும், விபத்து களும், கிரிமினல் நடவடிக்கைகளும் அதிக மாகக் காணப்படலாம். காவல்துறை, மற்றவர்களின் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகும்.

Advertisment

தங்கம், வெள்ளி விலை உயர்வும், பெட்ரோல் டீசல், எரிபொருள் விலை உயர்வும், மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் தட்டுப் பாடும், விலை உயர்வும் தவிர்க்க முடியாதவையாக அமையும். விலைவாசி ஏறினாலும், எப்படியிருந் தாலும் மக்களின் ஆடம்பரத்தேவைகளும், அத்தியா வசியத் தேவைகளும் பணமதிப்புக்கு முக்கியத் துவம் இல்லாத வகையில் செயல்படும். கூடுதல் விலைகொடுத்து தேவைகளை நிறைவேற்றிக்கொள் வார்கள்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைந்தாலும், செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை. இது 8, 12-க்குடையவர்களின் பரிவர்த்தனை. வாழ்க்கையில் அன்றாடத் தேவைகளுக்கு எந்தக்குறையும் ஏற்படாது என்றாலும், பத்து ரூபாயில் முடிய வேண்டிய காரியத்தை இருபது ரூபாயில் (ஒன்றுக்கு இரட்டிப்பாக) செயல்பட வைக்கும். வேலை செய்யுமிடத்தில் விருப்பமில்லாமல் வேலை பார்த்து, எந்த நேரத்திலும் வெளியேறத் துடிப்பாக இருப்பீர்கள். கூடியவரை, குரு 8-ல் இருக்கும்வரை, அவசரப்பட்டு எந்த மாற்றத்திலும் இறங்கிவிட வேண்டாம். குருப்பெயர்ச்சி பத்து மாதம் கழித்துத்தான் என்றாலும், ஏப்ரல் 10 முதல் ஆகஸ்டு 7 வரை குரு வக்ரத்துக்குப் பிறகு, உங்களுக்கு சாதகமான திருப்பங்களை எதிர்பார்க்கலாம். வேலை மாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்றவற்றை சந்திக்கலாம். 5-ல் உள்ள ராகு உங்கள் எண்ணங்களிலும், திட்டங்களிலும் தடை, தாமதங்களை ஏற்படுத்தி னாலும், குரு பார்ப்பதால் விரும்பியது நிறைவேறும். குடும்பத்தில் மங்கள விரயங்கள் உண்டாகும். கோவில் தரிசனம், குலதெய் வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். சிலர் திருப் பணிகளில் பங்குபெறலாம். உடன்பிறப்புகள் வகையில் சுமுகமான உடன்பாடும் உதவி ஒத்தாசையும் எதிர்பார்க்கலாம். 13-12-2018 முதல் 12-1-2019 வரை சனி அஸ்தமனம். 7-5-2019 முதல் 2-9-2019 வரை சனி வக்ரம். இக்காலகட்டங்கள் உங்களுக்கு சோதனைகளும் வேதனைகளும் தரும் காலம். தசாபுக்திக்கேற்ற பரிகாரங்களைச் செய்துகொள்ளவும். தெய்வப் பரிகாரம்: நாகப்பட்டினம் அருகில் வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஜீவசமாதி சென்று வழிபடவும். கிரக சோதனைகளிலிருந்து தப்பிக்கலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்காரர்களுக்கு 5-ஆவது லக்னமான கன்னி லக்னத்திலும், 6-ஆவது ராசியான துலா ராசியிலும் 2019 பிறக்கிறது. 7-ல் குரு நின்று ராசியைப் பார்க்கிறார். "ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்' என்பதுபோல, உங்களுடைய எண்ணங் களிலும் திட்டங்களிலும் செயல்களிலும் வெற்றியும் ஏற்படும்; தோல்வியும் ஏற்படும்; தடை, தாமதமும் ஏற்படும். குரு பார்ப்பதால் வெற்றி. அட்டமத்துச்சனி நடப்பதால் ஏமாற்றம், தாமதம், தோல்வி. பிப்ரவரி 13-ல் ராகு- கேது பெயர்ச்சிக்குப்பிறகு பொருளாதாரத்திலும், செயல்களிலும் முன்னேற் றமும் திருப்தியும் எதிர் பார்க்கலாம். வீழ்வது எழுவதற்கே என்ற நம்பிக் கையோடும், உறுதியோடும் செயல்படுவீர்கள். வாழ்வதற்கே வாழ்க்கை என்ற லட்சியத்தோடு சாதனைகள் படைக்கலாம். மாசி 29-ல் (மார்ச் 13-ல்) 7-ல் உள்ள குரு 8-ஆமிடத் துக்குப் போகிறார். 8-ஆமிடம் கெட்ட இடம் என்றாலும், ஆட்சி பெறு வதால் அட்டமத்துச்சனியின் வேகம் குறையும். வைகாசி 4-ல் (மே 18-ல்) மீண்டும் விருச்சிகத்துக்கு மாறுவார். அடுத்து ஐப்பசி 11-ல் (அக்டோபர் 28) தனுசுவுக்கு குரு மாறுவார். ஆக, குருவின் சஞ்சார பலன் உங்களுக்கு அனுகூலமாக அமைவதால், அட்ட மத்துச்சனியைப் பற்றி கவலை வேண்டாம். தெய்வப் பரிகாரம்: திருவாரூரில் மடப்புரம் என்னும் இடத்தில் தட்சிணா மூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிக்கு 7, 10-க்குடைய குரு 6-ல் மறைகிறார். மார்ச்சில் 7-ஆமிடத்துக்கு மாறி ராசியைப் பார்க்கிறார். மீண்டும் மே மாதம் விருச்சிகத்துக்கு மாறுவார். அக்டோபர் மாதம்வரை 6-ல் மறைவாக இருந்து மந்தப் பலன்களைத் தந்து, அக்டோபர் 28-ல் மீண்டும் தனுசு ராசிக்கு மாறுவார். (விருச்சிகம்). 6-ல் குரு இருக்கும்வரை உங்களுக்கு எதிர்ப்பு, இடையூறு, கடன், நோய், வைத்தியச்செலவுகள் போன்ற தீயபலன்களை சந்திக்கவேண்டும். சொந்தத் தொழில் நடத்துகிறவர்கள் பெரும் முதலீடு செய்யாமல், "குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது' என்ற பழமொழிக்கேற்ப, நிதானமாக செயல்படவேண்டும். அடிமை வேலையில் இருப்பவர்களுக்கு, பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் விரக்தியடையக் கூடாது. தனுசுவில் குரு இருக்கும் காலம் எல்லா வழிகளும் விலகும். வழக்குகள் வெற்றியாகும். குடும்பத்தில் மனமகிழ்வுகளும் உண்டாகும். தைரியமாகப் புதுமுடிவுகளில் இறங்கலாம். ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு (13-2-2019) பொருளாதாரத்தில் வளர்ச்சியும் முன்னேற்றமும் திருப்தியும் ஏற்படும். தெய்வப் பரிகாரம்: நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று சுயம் பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதியை வழிபடவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் ஜென்ம ராகு உங்களைக் குழப்பமடையச் செய்யும். சிந்தனைச் சிறகுகள், சந்தேகத்தை வட்ட மிடும். பிப்ரவரி 13-ல் ராகு- கேது பெயர்ச் சிக்குப் பிறகு சலனங்கள் மாறும். கவலைகள் தீரும். மார்ச் 13 முதல் மே 18 வரை தனுசுவில் குரு சஞ்சரிக்கும் காலம், பிசுபிசுத்த மனப் போராட்டம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கும். மே மாதத்துக்குப் பிறகு, குரு விருச்சிகத்துக்கு வரும்போது செல்வாக்கும் அதிர்ஷ்டமும் முன்செய்த தவப்பயனாக உங்களை வந்தடையும். நட்பு வட்டத்திலும், குடும்ப உறவிலும் உங்களைப் புறக்கணித் தவர்கள் எல்லாம், உஙகளுக்கு முக்கியத்து வம் கொடுத்து ஆலோசனை கேட்பார்கள். வேலை செய்யுமிடத்திலும், தொழில் வகையிலும் நீங்களே ராஜாவாகத் திகழலாம். ஊதிய உயர்வு, பதவி உயர்வு அல்லது புதிய முயற்சிகள் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஊக்கமாக இறங்கலாம். உங்கள் ராசிக்கு 3-ஆவது ராசி லக்னமாகவும், 4-ஆவது ராசி வருட ராசியாகவும் பிறப் பதால் தோல்விக்கும் இடமில்லை; துயரத்துக்கும் இடமில்லை. செல்வ தெல்லாம் மலர்ப்பாதை; செய்வதெல்லாம் தங்கச்செயல். தெய்வப் பரிகாரம்: மதுரை- திருப் பரங்குன்றத்தில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள், சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

newyearpalan

சிம்ம ராசிக்காரர்களுக்கு 3-ஆவது ராசி துலா ராசியிலும், 2-ஆவது ராசி கன்னி ராசியிலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. 9-க்குடைய செவ் வாய், 10-க்குடைய சுக்கிரனைப் பார்ப் பதால், தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படு கிறது. குருவருளும் திருவருளும் வழிநடத்த, புதுவருடம் உங்களுக்கு பொலிவு தரும் வருடமாக விளங்கும். 5-க்குடைய திரிகோணா திபதி குரு 10-ஆம் இடமான கேந்திரத் தைப் பார்ப்பதால், வியாôபரத்தில் விருத் தியும், அதிரடி லாபமும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் பெருகும். உத்தியோ கஸ்தர்களுக்கு உத்தமமான பலன்கள் உண்டாகும். நித்திய வாழ்க்கையிலும் நிறைவும் நிம்மதியும் ஏற்படும். வாக்கு, தனம், குடும்பம், வித்தை முதலிய 2-ஆமிடத்துப் பலன்கள் அனைத்தும் கொண்டாடும் வகையில் அமையும். பங்காளி, தாயாதி வகையில் இங்கிதமான பலன்களை எதிர்பார்க்கலாம். கடந்த காலத்திலிருந்தே இருந்துவரும் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வாது வழக்குகள், சூது சூழ்ச்சிகள் எல்லாவற் றையும் போராடி வெல்லலாம். தெய்வப் பரிகாரம்: மன்னார்குடி- மயிலாடுதுறை சாலையிலுள்ள சூட்டுக் கோல் ராமலிங்க சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். "அய்யர் சமாதி' என்பார்கள்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

உங்களுடைய ராசியான கன்னியில் தான் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. உங்கள் ராசிக்கு 2-ஆம் இடத்தில் வருட ராசி அமைகிறது. 8-ல் செவ்வாய் என் றாலும், செவ்வாயும் குருவும் பரிவர்த் தனை என்பதால், எல்லா வகையிலும் உங்களுக்கு சாதகமான பலன்களும், யோகமான பலன்களும் நடக்கும் என்று உறுதியாகக் கூறலாம். 3-ஆம் இடத்தில் உள்ள குரு மார்ச் முதல் மே மாதம் வரை, 4-ல் தனுசுவில் ஆட்சி பெறுவார். அதனால் அர்த்தாஷ்டமச்சனியின் தாக்கம் குறையும். அக்காலம் 10-ஆம் இடத்துக்கு குரு பார்வை கிடைப்பதால், தொழில், லாபம், உத்தியோக மேன்மை, கடல்கடந்த வேலைவாய்ப்பு, கைநிறைய சம்பாத்தியம் எல்லாம் உண்டாகும். சொந்த வீடு, மனை, வாகனங்களுக்கு இடமுண்டாகும். ஆரோக்கியத்திலும் தெளிவான நிலை உண்டாகும். மே முதல் மீண்டும் விருச்சிகத்துக்கு மாறும் குருவும் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால், கேடு கெடுதிக்கு இடமில்லாமல் யோகப் பலன்களாகவே நடக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். தெய்வப் பரிகாரம்: சிங்கம் புணரியில் வாத்தியார் கோவில் எனப் படும் முத்துவடுக சித்தர் ஜீவசமாதியை வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

உங்கள் ராசியில்தான் 2019 புத்தாண்டு பிறக்கிறது. 12-ஆவது இடமான கன்னியில் லக்னம் அமை கிறது. பணவரவுக்கும் பஞ்சமில்லை; செலவும் கொஞ்ச நஞ்சமில்லை. என்றாலும், எல்லாம் சுபச்செலவுகள் என்று மகிழலாம். சேமிப்புக்கு இடமில்லாதபடி- அதாவது கையிருப்புக்கு இடமில்லாதபடி, பிக்ஸடு டெபாசிட், எல்.ஐ.சி. போன்றவகையில் முதலீடு செய்யலாம். கூடியவரை தனிப்பட்ட மனிதர்கள்வகையில் கொடுக்கல்- வாங்கல் வைத்துக்கொள்வதைவிட, அரசு சொஸைட்டி போன்ற இடங்களில் வரவு- செலவு வைத்துக்கொள்வதும், சேமிப்புக்கணக்குத் தொடங்குவதும் நல்லது. 9-ஆம் இடத்து ராகுவும், மே மாதம்முதல் அவரைப் பார்க்கும் குருவும் குலதெய்வம், இஷ்ட தெய்வம் போன்ற வகையிலும், ஆன்மிகச் சுற்றுலா வகையிலும் சுபச்செலவுகளை ஏற்படுத்துவர். குடும்பத்தில் மங்கள சுபகாரியங்கள் இடம்பெறும். சிலர் ஆன்மிக யாத்திரை, பாத யாத்திரை போன்றவற்றை மேற்கொள்வார்கள். இஸ்லா மியர்கள் ஹஜ் யாத்திரை போகலாம். தெய்வப் பரிகாரம்: பொள்ளாச்சி அருகில் புரவிபாளையம் சென்று கோடீஸ்வர சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு 12-ஆவது ராசியான துலா ராசியிலும், 11-ஆவது இடமான கன்னி லக்னத்திலும் ஆங்கிலப் புத்தாண்டு மலர்கிறது. 2020 வரை விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி நடைபெற்றாலும், ஏழரைச்சனி பொங்குசனியாக மாறக்கூடும். அதனால் இதுவரை தடைப்பட்டு வந்த எல்லாக் காரியங்களும் துரித வேகத்தில் செயல்படும். எள் என்று சொல்லும் முன்னே எண்ணெய்யாகிவிடும். வேகமும் விவேகமும் போட்டி போட்டுக்கொண்டு உங்களை வழிநடத்துவதால், சோகமும் இல்லை; தோல்வி தாகமும் இல்லை; வன்மமும் இல்லை. தொட்டதெல்லாம் துலங்கும். விட்டதெல்லாம் வந்துசேரும். கெட்டதெல்லாம் நல்லதாக அமையும். கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றில் லாபமும், அனுகூலமும் உண்டாகும். பணப்புழக்கம் மனநிறைவை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பெண்கள் பெயரில் இடம், பொருள், வீடுவாசல் அமையும். அசையும் சொத்துகளையும், அசையா சொத்துகளையும் வாங்கலாம். தெய்வப் பரிகாரம்: கரிவலம்வந்த நல்லூரில் பஞ்சமூர்த்தி ஜீவசமாதி திருக்கோவில், பொன்பொதி சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு 11-ஆமிடமான துலா ராசியிலும், 10-ஆவது இடமான கன்னி லக்னத்திலும் 2019 பிறக்கிறது. 2020 வரை ஜென்மச்சனி நடக்கிறது என்றாலும், மார்ச் மாதம் ஜென்ம ராசிக்கு குரு மாறியவுடன், சனியின் வேகம் குறையும்; சோகம் மாறும்; அதிர்ஷ்ட தாகம் ஏற்படும். தேகம் ஆரோக்கியம் பெறும்... குடும்பம், பொருளாதாரம், நட்பு எல்லாவற்றிலும் அன்பு, யோகம் உண்டாகும். தெய்வத்திடம் பக்தி மோகம் உண்டாகும். "பசித்திரு, விழித்திரு, தனித்திரு' என்று வள்ளலார் கூறினார். அதன் உண்மை விளக்கம் இக்கால கட்டத்தில் உங்களுக்குப் புரியும். பிப்ர வரியில் 7-ல் ராகுவும், ஜென்மத்தில் கேதுவும் மாறுகிறார்கள். அதுவும் உங்களுக்கு சாதகமான திருப்பத்தை உண்டாக்கும். உத்தியோகத்தில் உயர்வும், மதிப்பும் மரியாதையும் பெருகும். உடல் ஆரோக் கியத்தில் முன்னேற்றமும் திருப்பதியும் ஏற்படும். பூமி, வீடு, மனை, வாகனம் போன்ற வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். அதற்காக சுபக்கடனும் ஏற்படும். கடன் களும் உரிய காலத்தில் அடைபடும். தெய்வப் பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி சென்று மௌன ஜோதி நிர்வாண சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிக்கு 10-ஆவது ராசியான துலா ராசியிலும், 9-ஆவது இடமான கன்னி லக்னத் திலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. 10-ஆமிடம் கேந்திரம், 9-ஆமிடம் திரிகோணம். இந்த அமைப்பினால், ராசிநாதன் சனி விரயச் சனியாக இருந்தாலும் உங்களுக்கு சுபவிரயச் சனியாக மாறும். பொங்குசனியாக செயல்படும். 7-ஆமிடத்தையும் 7-க்குடையவரே பார்ப்பது பலம். அதனால் தடைப்பட்ட திருமணங்கள் நிறைவேறும். நல்ல வாரிசுகள் உருவாகும். மார்ச் மாதம்முதல் மேமாதம்வரை தனுசுவில் குரு மாறி சஞ்சாரம் செய்து, மீண்டும் மே மாதம் விருச்சிகத்துக்கு மாறுவார். அக்டோ பரில் மீண்டும் தனுசுவுக்கு மாறுவார். விருச் சிகம், தனுசு இரு ராசிகளிலும் குரு சஞ்சரிக்கும் காலம் லாபமும் வெற்றியும் ஏற்படும். சுபமங்களச் செலவுகள் உண்டாகும் காலம். 12-ஆமிடத்துச்சனி சுபவிரயச் சனியாகும். பிப்ரவரியில் ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு அற்புதப் பலனைத் தரும். தெய்வப் பரிகாரம்: கரூர் அருகில் நெரூர் சென்று சதாசிவப் பிரமேந்திராள் ஜீவசமாதியை வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிக்கு 8-ஆவது லக்னத்தில் வருடம் பிறந்தாலும், 9-ஆம் இடமான துலா ராசியில் வருடம் அமைவ தால், "குறை ஒன்றுமில்லை; மறைமூர்த்தி கண்ணா' என்று பாடியது பொருந்தும். ஜென்ம கேதுவும், சப்தம ராகுவும் பிப்ரவரியில் மாறு வார்கள். ராகு 5-லும், கேது 12-லும் மாறு வார்கள். இக்காலம் ராகு- கேது பெயர்ச்சி களுக்குப் பிறகு பொற்காலம். 2, 11-க்குடைய குரு 10-லும், 11-லும் மாறிமாறி சஞ்சாரம் செய்வ தால், தங்குதடையில்லாத பொங்கும் நற் பலன்கள் உங்களைப் பூரிக்கச் செய்யும். எப் போதோ, யாருக்கோ பலன் எதிர்பார்க்காமல் செய்த நல்லுதவிகளுக்கு பிராயச்சித்தமாக, இப் போது தக்க தருணத்தில் மிக்க பெரும்பலனாக வந்தடையும். அது உங்கள் வாழ்க்கையையே வளமான திருப்புமுனையாக மாற்றும். பணத் தேவைகள், குடும்பத் தேவைகள், பிள்ளைகளின் தேவைகள் எல்லா வகையிலும் நல்லவையாக அமையும். அரசியல், ஆன்மிகம், கலைத்துறை எல்லாவற்றிலும் ஏற்றம் உண்டாகும். தெய்வப் பரிகாரம்: பொன்னமராவதி அருகில் செம்பூதிச் சித்தர் தம்பதி சகிதமாக ஜீவசமாதியாக விளங்குகிறார்கள். சென்று வழிபடவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு 7-ஆவது லக்னத்தில் 2019-ஆம் ஆண்டு பிறப்பது சிறப்பு. திருமணம், புத்திரபாக்கியம், வாரிசு யோகம், உபதொழில் யோகம், எதிர்பாராத தனப்பிராப்திக்கு வழிவகுகும். 10-க்குடைய குரு 9-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பது அதிர்ஷ்டயோகம்- தர்மகர்மதிபதி யோகம்! அதிலும் ஒரு விசேஷம் ராசிநாதன் குருவும், பாக்யாதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை என்பது. "ஓடிப் போனவருக்கு ஒன்பதாம் இடத்து குரு' என்ற பழமொழிக்குப் பொருத்தமாகிறது. 2019 என்ற ஆண்டு எண்கணிதப்படி 3 வருகிறது. 3 என்பது குருதான். ஆகவே மூன்று எண்ணிக் கையில் பெயர் இருப்பவர்களும், 3ஆம்தேதி பிறந்தவர்களும் இந்த ஆண்டு அதிர்ஷ்ட லட்சுமியை அரவணைப்பார்கள். அதே போல குருவின் ராசி, நட்சத்திரம், லக்னத்தில் அமைந்தவர்களுக்கும் 2019 அதிர்ஷ்டமான ஆண்டாகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும், பொருளாதார முன்னேற்றமும் உருவாகும். விவசாயிகளுக்கு கஜாபுயல் நிவாரணமும், வெள்ளாமை விளைச்சல் விருத்தியும் உண்டாகி- கஷ்டங்கள் விலகி இஷ்டம்போல் ஏற்றநிலை ஏற்படும். கலைஞர்களுக்கு இந்த வருடம் புது ஒப்பந்த வாய்ப்புகளும் உருவாகும். வருமானமும் வசதிகளும் பெருகும். தொழிலதிபர்களுக்கு தொழில் துறையில் தொய்வுகள் நீங்கி உய்வடையும் நிலையும், வெளிநாட்டு வர்த் தகத் தொடர்புகளும், அதனால் பெரும் லாபமும் பெருகும். அரசியல்வாதிகளுக்கும் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ், பட்டம், பதவிகள் கிடைப்பதோடு, அரசியலில் வெற்றி உண்டாகும். மொத்தத்தில் 2019 இனிய ஆண்டு. தெய்வப் பரிகாரம்: திண்டுக்கல் மலை யடிவாரம் (பின்புறம்) ஓத சுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகளின் ஜீவசமாதி விளங்கு கிறது. ரமண மகரிஷியை ஆன்மிகத் துற வுக்கும், சுப்ரமணியை சிவாவை அரசியல் துறைக்கும் வழிகாட்டிய மகான். திருவாதிரை யன்று குரு பூஜை. அமாவாசைதோறும் சிறப்புப் பூஜை, அன்னதானம் நடைபெறும்.