Advertisment

2019 தேர்தல்! 12 ராசி வேட்பாளர்களின் பலம், பலவீனம்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/2019-election-strength-12-castes-weakness

வ்வருடம் தேர்தல் அறிவித்துவிட்டார்கள். இந்திய பாராளுமன்றம், சில சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவித்தாகிவிட்டது. தமிழ்நாட்டில் 18-4-2019 அன்று (சித்திரை-5) நடக்கவுள்ளது. தேர்தல் நாளின் கிரக நிலை களைக்கொண்டு, ஒவ்வொரு ராசிக்கும் நன்மை தரும் நிலை, கெடுதல் தரும் நிலை பற்றிக் கூறிவிடலாம்.

Advertisment

18-4-2019, சித்திரை 5-ஆம் தேதி விகாரி வருடத்தில் கோட்சாரம் எவ்வாறு உள்ளது? வாக்கியப்படி கணக்கு:

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்வினி- 2.

சந்திரன்: அஸ்தம்.

செவ்வாய்: ரோகிணி- 3.

புதன்: உத்திரட்டாதி- 4.

குரு (வ): மூலம்- 1.

சுக்கிரன்: உத்திரட்டாதி- 1.

சனி: பூராடம்- 2.

ராகு: புனர்பூசம்- 2.

கேது: பூராடம்- 4.

ஒருவர் அரசியலில் பங்குபெற்று வேட்பாளராக வேண்டுமானால், அவருக்கு முதலில் அதற்குரிய அதிர்ஷ்டம் வேண்டும். இதனை ஜாதகரின் 9-ஆம் வீடு குறிக்கும். அடுத்து பதவியைக் குறிப்பது 10-ஆம் வீடு. அடுத்து அவரின் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேற 11-ஆம் அதிபதி வலுவாக இருத்தல் வேண்டும். கே.பி. ஜோதிடம், 11-ஆம் வீடு, அதன் காரகத்தையே தேர்தல் பற்றி உரைக்கிறது. மேலும் பூர்வபுண்ணியாதிபதி, 5-ஆம் அதிபதி கோட்சாரத்தின்போது கெடாமல் இருத்தல்வேண்டும். ராசியாதிபதியும் நன்றாக இருந்தால்தான் அவர் தேர்தலில் நிற்கவே முடியும். எனவே தான் தேர்தல் கணிப்பில், 9-ஆம் இடம், 9-ஆம் அதிபதியை முக்கியமாக எடுத்துக்கொள்வது நல்லது.

வேட்பாளர்களின் பிறந்த ஜாதக தசாபுக்திகள் நன்கு அமைந் திருந்தால் நற்பலன்கள் அதிகமாகவும், தசாபுக்திகள் மோச மாக அமைந்திருந்தால் கெடுபலன் அதிகமாகவும் நடக்கும். இனி, 12 ராசி வேட்பாளர்களுக்கும் இந்த தேர்தல் களம் எப்படி இருக்குமென்ற பொதுப் பலன்களைக்காணலாம்.

மேஷம்

Advertisment

ப்ளஸ் பாயின்ட்ஸ்: மேஷ ராசியினரின் 5-ஆம் அதிபதி ராசியிலேயே உச்சம். அவர் அரசு கிரகம் சூரியனாகவும் உள்ளார். இதுவொரு நல்ல கிரக அமைப்பு. இது ஒன்றே இவர் களின் பூர்வபுண்ணிய பலத்தில் அரசு ஆளுமை கைகூடும் என்பதற்கு ஆதாரம்.

இவர்களின் 7-ஆம் அதிபதி 12-ல் உச்சம். அவரே- சுக்கிரனே தனாதிபதியாகவும் வருகிறார். 7-ஆமிடம் என்பது மக்களை சந்திக்கும் ஸ்தானம். அதன் அதிபதி உச்சமாவது மிக நல்லது. அவர் 12-ல் உச்சமாவதால், ஒன்று மிக அலைச்சல் இருக்கும். பண விரயமும் அதிகமிருக்கும்.

மேஷத்தின் 6-ஆம் அதிபதி புதன் 12-ல் மறை கிறார். இதனால் இவரின் எதிரிகள் மறைந்து, பலமிழந்துவிடுவர். தேர்தல் நாளன்று இக்கிரக நிலை மிக நல்ல விஷயமாயிற்றே. விபரீத ராஜயோகம் கிடைக்கும்.

மேஷத்தின் 9-ஆம் வீட்டில், 10, 11-க்குரிய சனி. கர்ம, லாபாதிபதி, அதிர்ஷ்டம் மற்றும் தேர் தலுக்குரிய இடத்தில். எனவே தேர்தல் களத்தில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது.

மைனஸ் பாயின்ட்ஸ்: எட்டாம் அதிபதி செவ்வாய் 2-ஆமிடத்தில். எனவே இவர்களின் பேச்சு தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு அவமானத்தைத் தேடித்தரும். மேலும் பண விஷயங்கள் அதிக விரயத்தைத் தருவதோடு, அவமானம், வழக்கு, கஷ்டத்தையும் கொடுத்துவிடும்.

அரசியலுக்குரிய 9-ஆம் அதிபதி வக்ரமாகி உள்ளார்.

அவரே விரயத்துக்கும் அதிபதி. எனவே வேண்டாத செலவு களைத் தவிர்க்க இயலாது.

4-ஆம் அதிபதி சந்த

வ்வருடம் தேர்தல் அறிவித்துவிட்டார்கள். இந்திய பாராளுமன்றம், சில சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவித்தாகிவிட்டது. தமிழ்நாட்டில் 18-4-2019 அன்று (சித்திரை-5) நடக்கவுள்ளது. தேர்தல் நாளின் கிரக நிலை களைக்கொண்டு, ஒவ்வொரு ராசிக்கும் நன்மை தரும் நிலை, கெடுதல் தரும் நிலை பற்றிக் கூறிவிடலாம்.

Advertisment

18-4-2019, சித்திரை 5-ஆம் தேதி விகாரி வருடத்தில் கோட்சாரம் எவ்வாறு உள்ளது? வாக்கியப்படி கணக்கு:

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்வினி- 2.

சந்திரன்: அஸ்தம்.

செவ்வாய்: ரோகிணி- 3.

புதன்: உத்திரட்டாதி- 4.

குரு (வ): மூலம்- 1.

சுக்கிரன்: உத்திரட்டாதி- 1.

சனி: பூராடம்- 2.

ராகு: புனர்பூசம்- 2.

கேது: பூராடம்- 4.

ஒருவர் அரசியலில் பங்குபெற்று வேட்பாளராக வேண்டுமானால், அவருக்கு முதலில் அதற்குரிய அதிர்ஷ்டம் வேண்டும். இதனை ஜாதகரின் 9-ஆம் வீடு குறிக்கும். அடுத்து பதவியைக் குறிப்பது 10-ஆம் வீடு. அடுத்து அவரின் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேற 11-ஆம் அதிபதி வலுவாக இருத்தல் வேண்டும். கே.பி. ஜோதிடம், 11-ஆம் வீடு, அதன் காரகத்தையே தேர்தல் பற்றி உரைக்கிறது. மேலும் பூர்வபுண்ணியாதிபதி, 5-ஆம் அதிபதி கோட்சாரத்தின்போது கெடாமல் இருத்தல்வேண்டும். ராசியாதிபதியும் நன்றாக இருந்தால்தான் அவர் தேர்தலில் நிற்கவே முடியும். எனவே தான் தேர்தல் கணிப்பில், 9-ஆம் இடம், 9-ஆம் அதிபதியை முக்கியமாக எடுத்துக்கொள்வது நல்லது.

வேட்பாளர்களின் பிறந்த ஜாதக தசாபுக்திகள் நன்கு அமைந் திருந்தால் நற்பலன்கள் அதிகமாகவும், தசாபுக்திகள் மோச மாக அமைந்திருந்தால் கெடுபலன் அதிகமாகவும் நடக்கும். இனி, 12 ராசி வேட்பாளர்களுக்கும் இந்த தேர்தல் களம் எப்படி இருக்குமென்ற பொதுப் பலன்களைக்காணலாம்.

மேஷம்

Advertisment

ப்ளஸ் பாயின்ட்ஸ்: மேஷ ராசியினரின் 5-ஆம் அதிபதி ராசியிலேயே உச்சம். அவர் அரசு கிரகம் சூரியனாகவும் உள்ளார். இதுவொரு நல்ல கிரக அமைப்பு. இது ஒன்றே இவர் களின் பூர்வபுண்ணிய பலத்தில் அரசு ஆளுமை கைகூடும் என்பதற்கு ஆதாரம்.

இவர்களின் 7-ஆம் அதிபதி 12-ல் உச்சம். அவரே- சுக்கிரனே தனாதிபதியாகவும் வருகிறார். 7-ஆமிடம் என்பது மக்களை சந்திக்கும் ஸ்தானம். அதன் அதிபதி உச்சமாவது மிக நல்லது. அவர் 12-ல் உச்சமாவதால், ஒன்று மிக அலைச்சல் இருக்கும். பண விரயமும் அதிகமிருக்கும்.

மேஷத்தின் 6-ஆம் அதிபதி புதன் 12-ல் மறை கிறார். இதனால் இவரின் எதிரிகள் மறைந்து, பலமிழந்துவிடுவர். தேர்தல் நாளன்று இக்கிரக நிலை மிக நல்ல விஷயமாயிற்றே. விபரீத ராஜயோகம் கிடைக்கும்.

மேஷத்தின் 9-ஆம் வீட்டில், 10, 11-க்குரிய சனி. கர்ம, லாபாதிபதி, அதிர்ஷ்டம் மற்றும் தேர் தலுக்குரிய இடத்தில். எனவே தேர்தல் களத்தில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது.

மைனஸ் பாயின்ட்ஸ்: எட்டாம் அதிபதி செவ்வாய் 2-ஆமிடத்தில். எனவே இவர்களின் பேச்சு தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு அவமானத்தைத் தேடித்தரும். மேலும் பண விஷயங்கள் அதிக விரயத்தைத் தருவதோடு, அவமானம், வழக்கு, கஷ்டத்தையும் கொடுத்துவிடும்.

அரசியலுக்குரிய 9-ஆம் அதிபதி வக்ரமாகி உள்ளார்.

அவரே விரயத்துக்கும் அதிபதி. எனவே வேண்டாத செலவு களைத் தவிர்க்க இயலாது.

4-ஆம் அதிபதி சந்திரன் 6-ல் மறைகிறார். இவர்களின் சொத்து விவரம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவையெல்லாம், எதிரிகள் இவர்களை குற்றஞ்சாட்ட ஏதுவாகிவிடும். இவ்விஷயங்களை வைத்தே இவர்களைத் தேர்தலில் தோற்கடிக்க பெருமுயற்சி மேற்கொள்வர்.

மேஷ ராசிக்காரர்கள் இத்தேர்தலில் பேச்சில் மிக கவனம் செலுத்த வேண்டும். பணப்பட்டுவாடா விஷயத்தில் கவனம் தேவை. எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏனெனில் இவர்களின் சொந்த விஷயங்களைத் தெரிந் தவர்கள்தான் எதிரியாக இருப்பர்.

9-ஆமிடத்தில் குரு வக்ரமாக இருப்ப தால் அந்தணர்களுக்கு தானம் செய்தல் நன்று. மேஷ ராசிக்கு 70 சதவிகித வெற்றி நிச்சயம். சொந்த ஊரிலுள்ள அம்பாளுக்கு அபிஷேகம் செய்யவும்.

ரிஷபம்

ப்ளஸ் பாயின்ட்ஸ்: இவர்களின் ராசிநாதனும் 6-ஆம் அதிபதியும் 11-ல் உச்சம். எனவே இவர்களின் கடும் உழைப்பு எண்ணியதை ஈடேற்றும். அதேசமயம், இவர்களின் எதிரியும் வலுவானவராக இருப்பார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

7-ஆம் அதிபதி ராசியில். நிறைய வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்பார்கள். அதுமட்டுமல்ல; வாக்காளர்களும் இவர்களை சந்திக்க ஆர்வமாக இருப்பார்கள். அதுதான் முக்கிய விஷயம்.

2, 5-ஆம் அதிபதி புதன் 11-ல் நீசபங்கம். இவர்களின் பூர்வீகமும், பணவிஷயமும் சேர்ந்து, இவர்களுக்கு தேர்தல் லாபத்தை, வெற்றியைக் கொண்டுவரும்.

3-ஆம் அதிபதி 5-ல் உள்ளார். இவர்களின் தேர்தல் அறிக்கை, திட்டம் ஆகியவை மிகவும் பிரபலமாகும். இந்த திட்டமிடுதல் இவர்களை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச்செல்லும். இதற்கு இவர்களின் இளைய சகோதரம் மிக உதவுவார்.

மைனஸ் பாயின்ட்ஸ்: 2-ஆமிடத்தில் ராகு.

பணப்புழக்கம் வெளிநாட்டில் இருந்தெல்லாம் வந்து குவியும். ஆயினும் 2-ல் உள்ள ராகு இவர்களின் பேச்சை அதிகப்படுத்தி, சிலசமயம் வம்பில் மாட்ட வைத்துவிடுவார். எனவே பேச்சில் கவனம் தேவை.

8-ஆம் அதிபதி குரு வக்ரமாகி உள்ளார். மேலும் இவர்களின் அதிர்ஷ்ட அதிபதி, பதவி யோகம் தரும் 10-ஆம் அதிபதி, லாபத்துக்குரிய 11-ஆம் அதிபதி அனைவரும் 8-ல் மறைவு. கூடவே கேது. இது நல்ல அமைப்பல்ல.

அரசு கிரகம் சூரியன் உச்சமாகி 12-ல் மறைவு. எனவே அரசு ஆதரவு கிடைக்காது.

இந்த தேர்தலில் ரிஷபத்தாருக்கு வெற்றி- தோல்வி 50-50 என சரிசமமாக உள்ளது. எனவே இதுவரை மக்களுக்கு ஏதேனும் நல்லது, சேவை செய்திருந்தால், அதை மட்டும் முன்னிலைப் படுத்தி வாக்கு சேகரியுங்கள்.

வெற்றி பெற்றால் அவ்வூரிலுள்ள சிவனுக்கு தங்கத்தாலான ஏதோ ஒரு காணிக்கை தருவ தாக வேண்டிக்கொள்ளவும். வயதான பெரிய வர்களுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுங்கள்.

மேலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு செலவழி யுங்கள். சூரியனின் மறைவு தோஷம் நீங்கும்.

மிதுனம்

ப்ளஸ் பாயின்ட்ஸ்: இவர்களின் ராசி யாதிபதி மற்றும் நான்காம் அதிபதி புதன் 10-ல் நீசபங்கம். இதனால் இவர்களும், இவர்களின் உறவினர்களும் நண்பர்களும் முதலில் தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டினாலும், பிறகு சரியாகிவிடும்.

p

3-ஆம் அதிபதி சூரியன் 11-ல் உச்சம். இதனால் இவர்களின் அபரிமிதமான தைரியம், திட்டம், தொலைநோக்கு வாக்குறுதி, செய்யமுடியாத விஷயத்தையும், "நான் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக செய்வேன்' என்று சத்தியம் செய்தல் போன்ற இன்னபிற அதிரடி செயல்கள்மூலம் வெற்றி எனும் மரத்தை வேரோடு பிடுங்கி பக்கத்தில் வைத்துக்கொள்வார்கள்.

5-ஆம் அதிபதி 10-ல் உச்சம். இவர்களின் பாரம்பரியம், இவர்களுக்கு மந்திரிப்பதவியை வாங்கிக்கொடுக்கும்.

6-ஆம் அதிபதி 12-ல் மறைவதால், எதிரிகள் மறைவதோடு, விபரீத ராஜயோகம் எனும் அடிப்படையில் பதவி தேடிவரும்.

மைனஸ் பாயின்ட்ஸ்: 7-ஆம் அதிபதி குரு வக்ரம். 7-ஆம் வீட்டில் 8-ஆம் அதிபதி சனி. அவரே இவர்களின் 9-ஆம் அதிபதி எனும் அதிர்ஷ்ட அதிபதி. இதனால் 7-ஆமிடம் எனும் மக்களை சந்திக்கப்போகும் இடங்களில் சிலசமயம் நல்ல வரவேற்பு கிடைக்கும். சிலசமயம் வசைபாடி திருப்பியனுப்பவும் கூடும்.

ஆனால் இவர்கள் இதற்கெல்லாம் அசரமாட் டார்கள். "காரியமே கண்ணாயினார்' என எல்லா வற்றையும் சகித்துக்கொண்டு, அலைச்சலைத் தொடர்வார்கள்.

ராசியில் ராகு; 7-ல் கேது. இவர்கள் சுறுசுறுப் பாக, ஆவேசமாக வேலை பார்க்க, இவர்களுக்கு உதவிசெய்ய வந்தவர்கள், "வெயிலா இருக்கு; அப்புறம் பாத்துக்கலாம்' என தாமதப்படுத்துவர். இதுவொரு பின்னடைவாக இருக்கும். இந்தத் தடைகளை பணத்தின்மூலமும், இனிய வார்த் தைகள் பேசுவதன்மூலமும் சரிசெய்துகொள்ள வேண்டும்.

இந்த தேர்தலில் மிதுன ராசியினர் வெற்றி பெற வேண்டுமானால், இவர்களின் தனிப்பட்ட உழைப்பும், முயற்சியும் மிகத்தேவையானதாக இருக்கும். வெற்றிபெற்றால், அந்த ஊரிலுள்ள கோவில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடத்துவதாகவும், அம்பாளுக்கு தங்கத்தாலி காணிக்கை செலுத்துவதாகவும் வேண்டிக் கொள்ளுங்கள். ஏழைப் பெண்கள் திருமணத் திற்கு தங்கத்தாலி வாங்கிக்கொடுக்கலாம்.

மிதுன ராசிக்கு 60 சதவிகித வெற்றி கிடைக்கும்.

கடகம்

ப்ளஸ் பாயின்ட்ஸ்: கடக ராசியாதிபதி சந்திரன் 3-ஆமிடம் எனும் சிந்தனை, யோசனை ஸ்தானத்தில். சந்திரன் ஒரு மனதுக்குரியவர். அவர் 3-ஆமிடத்தில் அமர்ந்திருப்பதால், இவர்கள் மற்ற எல்லா வேட்பாளரையும்விட மிக அதிகமாக திட்ட அறிக்கை, செயல் அறிவிப்புகள் என போட்டுத் தாக்குவார்கள். இவர்களின் திட்ட வடிவங்கள், செயல் தரவு களைப் பார்த்து, மக்கள் மிரண்டுவிடுவர்.

2-ஆம் அதிபதி 10-ல் உச்சம். மந்திரிப் பதவி யைக் கைப்பற்ற, என்னென்ன பேசவேண்டுமோ, அத்தனையையும் பழுதில்லாமல், காரியார்த்த மாகப் பேசி அசத்திவிடுவார்கள். பண விநியோ கம்கூட சரியாக யாருக்குச் சேரவேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து, அதனை வாக்காக மாற்றி விடுவார்கள். வாக்குவண்மையால், வாக்குச் சீட்டு வாங்கும் மகராசன் இவர்கள்தான்.

4-ஆம் அதிபதி மற்றும் 11-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் உச்சம். மற்றும் 3-ஆம் அதிபதி 9-ல் நீசபங்கம். இதனால் இவர்கள் பிறந்த ஊர் மக்கள், நண்பர்கள், சகோதரர்கள் போன்றோர் இவர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைப் பார்கள்.

5-ஆம் அதிபதி செவ்வாய் 11-ல். போன ஜென்மத்தில் செய்த நல்லதையெல்லாம்கூட கூறி, அதனை வாக்கு லாபமாக மாற்றி விடுவார்கள்.

8-ஆம் அதிபதி சனி 6-ல். விபரீத ராஜயோகம் உண்டு. எதிரியின் வண்டவாளங்களைத் தண்ட வாளம் ஏற்றிவிடுவார்கள்.

பத்தாம் அதிபதி லாபத்தில். அரசு வகை லாபம் உண்டு. அரசு பதவி வரும் யோகம் உண்டு.

மைனஸ் பாயின்ட்ஸ்: மக்களை சந்திக்கும் அதிபதியான 7-ஆமிட சனி 6-ல் மறைவு. எனவே மக்களை சந்திக்கும்போது சற்றே எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனினும் சனியே 8-ஆம் அதிபதியாகி 6-ல் மறைவ தால், ஓட்டுப்போடும் நாளன்று மக்கள் எல்லாவற்றையும் மறந்து இவர்களுக்கு ஓட்டுபோடுவார்கள்.

9-ஆம் அதிபதியும் 6-ல் மறைவதால், சற்றே அதிர்ஷ்டக்குறைவு ஏற்படும். எனினும் ராகு- கேதுக்கள் மறைவதால், நன்மை அதிகம் நடக்கும் வாய்ப்புண்டு. இவர்களின் வெற்றி வாய்ப்பு 75 சதவிகிதம் இருக்கும்.

உங்களுக்கு வெற்றி கிடைக்க மாத்திரை, மருந்து தானம் நல்லது. ஏழை அந்தணர்களுக்கு உதவவும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுப வர்களையும் ஒருமுறை விசாரித்து உதவி செய்யுங்கள்.

மற்ற ராசிகள் அடுத்த இதழில்...

செல்: 94449 61845

_________________

பொதுப் பலன்கள்

நாட்டுக்கு பொதுப்பலன்கள் பார்க்கவேண்டு மானால் காலபுருஷ தத்துவத்தைக் கையாள வேண்டு மென்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆளுங்கட்சியின் நிலை காலபுருஷனின் முதல் வீடு மேஷம் ஆளுங் கட்சியைக் குறிக்கும். மேஷத்தின் அதிபதி செவ்வாய் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளைக் குறிக்கும்.

இப்போது செவ்வாயின் பலத்தைப் பார்க்க வேண்டும். செவ்வாய் காலபுருஷனின் லக்னா திபதி மட்டுமல்ல; அவரின் 8-ஆம் அதிபதியுமாவார்.

அவர் 2-ஆம் வீட்டில் அமர்ந்துரோகிணி எனும் சந்திர சாரம் பெற்றுள்ளார். சாரநாதர் சந்திரன் 6-ல் மறைகிறார். எனவே ஆளுங்கட்சியினரின் பலம் குறையும்.

இவர்களின் பணம் மற்றும் சந்திக்கும் நபர்களுக் குரிய சுக்கிரன் 12-ல் உச்சம். இதனால் இவர்களுக்கு பணச்செலவு மிக அதிகமாக இருக்கும். ஒவ்வொரு வாக்காளரையும் சந்திக்கும்போது, வெறுங்கையோடு சந்திக்க முடியாது. அவ்வளவு செலவாகும். 3-ல் இருக்கும் ராகு, தினுசு தினுசாக திட்டங்களைச் சொல்லிக் கொடுப்பார். ஆனால் அதைக் கேட்கும் வாக்காளர்கள் சிரித்துவிடுவர். 5-ஆம் அதிபதி சூரியன் உச்சம்.

எனவே ஆளுங்கட்சியிலுள்ள பழமையான அரசியல் வாதிகள் வெற்றிபெறுவர்.

இவர்களின் அதிர்ஷ்டம் மற்றும் பதவிக்குரிய 9-ஆம் வீட்டில் 10, 11-ஆம் அதிபதி சனி, கேது இருப்பதால், தேர்தல் சற்று வீணாக -விரயமானதாக அமைந்துவிடும். கேது ஒரு அலட்சியம், பிரிவினைத் தன்மையை உண்டாக்குவதால், ஆளுங்கட்சியினர் செலவுதான் நிறைய செய்யமுடியும். வரவு எனும் வாக்கு சற்றே சிதறும் நிலை ஏற்படும்.

எதிர்க்கட்சிகளின் நிலை எதிரிகளைப் பற்றிக் கணிக்கும்போது, 6-ஆமிடத்தை லக்னமாகக் கொள்ள வேண்டும்.

6-ஆம் அதிபதி புதன், தன் வீட்டுக்கு 7-ல் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். எனவே எதிர்க் கட்சிகள், அவர்களே நம்பமுடியாத அளவுக்கு வெற்றி பெறக்கூடும்.

எதிர்க்கட்சிகளின் 7-ஆம் வீடு எனும் மக்களை சந்திக்கும் வீட்டில், அதிர்ஷ்ட அதிபதி 9-ஆம் அதிபதி உச்சம். தேர்தலைப் பொருத்தவரை அதிர்ஷ்டம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்தது பணம். தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு பணமும், அதிர்ஷ்டமும் உடைய (2, 9-ன் அதிபதி) சுக்கிரன் உச்சம். எனவே எதிர்க்கட்சிகள் வெற்றி வாகை சூட தடையிருக்காது.

5, 6-ஆம் அதிபதிகள் கேதுவுடன் 4-ல். சில பழைய அரசியல் எதிர்க்கட்சிக்காரர்கள் அல்லது அவர்கள் வாரிசுகளுக்கு சற்று பின்னடைவு உண்டு.

8-ஆம் வீட்டில் 12-ஆம் அதிபதி சூரியன். இதுவொரு விபரீத ராஜயோகம். தோல்விகள் மறையும் தன்மை. எனவே வெற்றி கிட்டும். எனினும் 8-ஆம் அதிபதி 9-ல். சில இடங்களில் வாக்கு சரியும்.

எதிர்க்கட்சிகளின் 10-ஆம் அதிபதி புதன் நீசபங்கம் அடைவதும் நன்மை தரும்.

11-ஆம் அதிபதி சந்திரன் எதிரிக்கட்சியின் இடத்தில். எனவே இவர்கள் எண்ணியது எண்ணியாங்கே நிறைவேறும்.

10-ல் உள்ள ராகு, தொழில் வெற்றிக்கு, எல்லாவித குறுக்குவழிகளையும் கையாளச் செய்வார் என்பது உலகறிந்த உண்மை.

இந்த தேர்தலைப் பொருத்தவரை, ஆளுங்கட் சியைவிட எதிர்க்கட்சிகளுக்குத்தான் பலம் உள்ளது;

ஆளுங்கட்சியினரின் பலம் குறைவதற்கு அவர்களே காரணம் என கிரகநிலைகள் தெரிவிக்கின்றன.

கொசுறு தகவல்:

செவ்வாய்- தாவரம், இலையைக் குறிப்பார்.

புதன்- 3-ஆமிட அதிபதி- கையைக் குறிப்பார்.

சூரியன்- சூரியனைக் குறிப்பார்.

சுக்கிரன்- பூக்கள், அலங்கார, பரிசுப்பொருளைக் குறிப்பார்.

குரு- ஆன்மிகம்.

கேது- சந்நியாசி.

சனி- பழைய ஆட்கள்.

இந்த தேர்தல் நாள் கிரக அமைப்பானது- குரு, கேது, சனி சேர்க்கை காலபுருஷனின் 9-ஆமிடத்தில் இருப்பதால், ஆன்மிகத்தைப் பின்பற்றுதல் அல்லது ஆன்மிகத்தை எள்ளி நகையாடாமல் இருத்தல், ஆன்மிகப் பெரியவர்களை மரியாதையாக நடத்துதல், பிற மதத்தினரை அன்போடு கவனித்தல் போன்ற தெய்வம் சம்பந்தமான விஷயங்களைப் பின்பற்றி னால் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.

______________

தேர்தல் நாள் நிலவரம்

பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. அந்தந்த நாளுக்குரிய பொதுப்பலன்கள்:

ஏப்ரல்-11: ஆளுங்கட்சிக்கு வாக்குப்பதிவு சுறுசுறுப்பாக இருக்காது. சில பழைய அரசியல் வாதிகள் டெபாசிட் இழப்பர். இளம்வயது பெண் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். எதிர்க்கட்சியினர் ஓரளவு வாக்கு பெறுவர். குறுக்குவழிகள் பின்பற் றப்படும். சில இடங்களில் மறுதேர்தல் அல்லது மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஏப்ரல்-18: ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட் சியினரின் கை ஓங்கியிருக்கும். மிகச்சில இடங்களில் எதிர்பாராமல் ஆளுங்கட்சியின் பலம்கூடும். எதிர்க்கட்சியினருக்கான நாள் இது. பல இடங்களில் எதிர்பாராத வெற்றி கிட்டும்.

ஏப்ரல்-23: சொந்த இடத்தில் போட்டியிடும் ஆளுங்கட்சியினர் பார்டர் ஓட்டில் வெற்றி பெறுவர்.

சிலருக்கு அதுவுமில்லை. பழைய அரசியல்வாதி களுக்கு வெற்றிகிட்டும். இரு தரப்பு பெண் வேட்பாளர் களுக்கு சிக்கல் வரும். குறுக்குவழி அதிகம் கையாளப் படும். ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி இருக்கும்.

ஏப்ரல்-29: ஆளுங்கட்சிக்கு சொந்த இடத்தில் யோகமுண்டு. வெற்றி வாய்ப்பு தரும் நாள். எதிர்க்கட்சியினருக்கு எதிர்பார்த்த இடத்தில் வெற்றி கிட்டாது. எதிர்பாராத இடத்தில் கிட்டும்.

மே-6: இது முக்கியமான நாள். ராகுவுடன் செவ்வாய் சேர்கிறார். ஏதோ ஓரிரு அரசியல் தலை வருக்கு விபத்து நேரலாம். எச்சரிக்கை தேவை. மிகுந்த குழப்பம் நிலவும்.

மே-12: ஆளுங்கட்சிமீது மக்களுக்கு ஈர்ப்பு இருக்கும். எதிர்க்கட்சிகள்மீது எரிச்சல் ஏற்படும். ஆனால் ஓட்டை எதிர்க்கட்சியினருக்கே போடுவார்கள்.

மே-19: இரு கட்சிக்கும் குழப்பம். எதிர்பார்த்த இடத்தில் டெபாசிட் போகும். எதிர்பாராத இடத்தில் அமோக வெற்றி கிட்டும். ஓட்டு எண்ணிக்கை திகில் தரும்.

bala120419
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe