(ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 17 வரை)
ராசிகளில் கிரக சஞ்சாரங்களைக் கொண்டு மழையைக் கணிக்கும் முறை ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கிரக அமைப்பு
ஆவணி மாத கிரக அமைப்புப்படி, நெருப்பு ராசியான சிம்மத்தில், நெருப்பு கிரக மான சூரியனும் மற்றொரு நெருப்பு கிரக மான செவ்வாயும் அமர்ந்துள்ளனர். கூடவே ஒரு நீர் கிரகமான சுக்கிரனும் உள்ளார்.
இன்னொரு நெருப்பு ராசியான தனுசில் இரு காற்று கிரகங்கள்- சனி, கேது உள்ளனர்.
நீர் ராசியான கடகத்தில் ஆகஸ்ட் 26 வரை காற்று கிரகமான புதன் உள்ளார். இவரை இன்னொரு நீர் ராசியான விருச்சிகத்திலிருந்து காற்று கிரகமான குரு பார்வையிடு கிறார். ஆகஸ்ட் 26 அன்று புதன் கன்னிக்குச் சென்றுவிடுவார். செப்டம்பர் 9 அன்று சுக்கிரன் கன்னிக்கு இடம்பெயர்வார். அடுத்த நாளே புதனும் அவருடன் சேர்ந்துகொள்வார்.
காற்று ராசியான மிதுனத் தில் காற்று கிரகம் ராகு உள்ளார். நீர் ராசியான விருச்சிகத்தில் குரு உள்ளார்.
மழை விவரம்
ஆவணி மாதத்தின்படி, ஆவணி 1 முதல் ஆவணி 9 வரை (ஆகஸ்ட் 26 வரை) நீர் ராசி கடகத்தில் காற்று கிரகம் புதன் அமர்ந்து குரு பார்வையைப் பெறுவார். இதன்மூலம் காற்றுடன்கூடிய மழைக்கு வாய்ப்புண்டு.
பின் ஆவணி 9 முதல் ஆவணி 24 (ஆகஸ்ட் 26- செப்டம்பர் 10) வரை புதன் நெருப்பு ராசியான சிம்மத்திற்குள் சென்று இருப்பார்.
சிம்மத்தில் இரு நெருப்பு கிரகங்கள் உள்ளனவே.
ஒரு காற்று கிரகம் புதனும் போய்ச்சேர்ந்து விடுகிறதே. அப்படியாயின் வெயில் தாக்கம் அதிகமாகுமா எனில், இங்கு ஒரு விதி வேலை செய்யும் நிலை வருகிறது.
சூரியன் மிதுனம், கடகம், சிம்மம், கன்னியில் சஞ்சரிக்கும்போது, அவரைச் செவ்வாய் கடக்கும் நிலை ஏற்படின் மழை ஆரம்பிக்கும் என கூறப் பட்டுள்ளது. எனவே இதன்படி, சிம்மத்திலுள்ள சூரியனை செவ்வாய் கடக்கும்போது மழை ஆரம்பிக்கக்கூடும். மேலும் நீர் கிரகம் சுக்கிரனும் இருப்பதால் மழையின் அளவும் மிகும் என எதிர்பார்க்கலாம். சிம்ம ராசி, கிழக்கு திசையைக் குறிப்பதால் கிழக்கு திசையிலுள்ள இடங்களில் மழை பெய்யக்கூடும்.
ஆவணி 23 (செப்டம்பர் 9) அன்று சுக்கிரன் எனும் நீர் கிரகம், கன்னி எனும் நில ராசிக்குள் செல்வார். அங்கு அவர் நீசமடைவார். எனினும் திருக்கணிதக் கணக்குப்படி மறுநாளே புதனும் கன்னி எனும் நில ராசிக்குள் புகுந்து உச்சமும் ஆகிவிடுவார். இதன்மூலம் நீர் கிரகமான சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெற்று பலம் பெறுவார்.
ஒரு நில ராசியில் ஒரு நீர்கிரகமும், காற்று கிரகமும் கூட்டணியில் உள்ளனர். இதனுடன் இன்னொரு நீர் கிரகம் சந்திரன் சேரும்போது, கண்டிப்பாக மழை பெய்யும் வாய்ப்புண்டு.
கன்னியில், வாயு மண்டல நட்சத்திரமான உத்திரம், ஹஸ்தம், சித்திரை உள்ளன. இதில் நீர் மற்றும் காற்று கிரகங்கள் சுக்கிரன், சந்திரன், புதன் செல்லும்போது, காற்றுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புண்டு.
ஆவணி- 15 (செப்டம்பர் 1) உத்திரம்.
ஆவணி- 16 (செப்டம்பர் 2) ஹஸ்தம்.
ஆவணி- 17 (செப்டம்பர் 3) சித்திரை.
மேற்கண்ட நாட்களில் காற்று அதிகமாக வும், மழை நிதான அளவிலும் இருக்கக்கூடும்.
வருண மண்டல நட்சத்திரங்கள் நல்ல மழையைக் கொடுக்கும்.
ஆவணி- 3 (ஆகஸ்ட்- 20) ரேவதி.
ஆவணி- 12 (ஆகஸ்ட்- 29) ஆயில்யம்.
ஆவணி- 29 (செப்டம்பர்- 15) உத்திரட்டாதி.
ஆவணி- 30 (செப்டம்பர்- 16) ரேவதி.
மேற்கண்ட நட்சத்திரங்களில் சந்திரன் நீர் ராசிகளில் குரு பார்வையில் செல்லும்போது மழை பெய்ய வாய்ப்புண்டு.
வாயு மண்டல நட்சத்திரங்களான உத்திரம், ஹஸ்தம், சித்திரை ஆகியவை செப்டம்பர் 1, 2, 3-ஆம் தேதிகளில் செல்லும். அப்போது சில இடங்களில் மழையுடன் கொஞ்சம் புயலும் வீசக்கூடும். இது கன்னி ராசியில் அமைகிறது. கன்னி தெற்கு திசையைக் குறிக்கும். எனவே தெற்குப் பகுதிகளில் மழை, புயலுக்கு வாய்ப்புண்டு.
தனுசு எனும் நெருப்பு ராசியில் காற்று கிரகங்கள் சனியும் (வ), கேதுவும் இருக்க, எதிரே உள்ள காற்று ராசியில், காற்று கிரகம் ராகு உள்ளார். எனவே தீவிபத்துகளை உடனடி யாக அணைக்க முயற்சித்தல் அவசியம்.
இல்லையெனில் காற்று கிரகத் தாக்கத்தில், நெருப்பு விரைவாகப் பரவ வாய்ப்புண்டு.
செல்: 94449 61845