கன்னி லக்னத்தில் பிறந்தவர்களில் 10-ஆம் பாவம்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.
11-ஆம் பாவம்
11-ஆம் வீடான லாப ஸ்தானத்தைக்கொண்டு தனலாபம், பெயர், புகழ், மூத்த சகோதர சிறப்பு போன்றவற்றைத் தெளிவாக அறியலாம்.
கன்னி லக்னத்திற்கு லாபாதிபதியான சந்திரன்- குரு, சுக்கிரன் போன்ற சுபர்சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணங்களில் (7-ஆம் வீடுதவிர) வலுப்பெற்றால், தாராளமான தனவரவு, சமுதாயத்தில் செல்வாக்கு, செல்வம், பெயர், புகழ் யாவும் தேடிவரும்.
11-ஆம் வீட்டில் குரு உச்சம் பெற்றாலும், குரு- சுக்கிரன், புதன், சந்திரனுடன் பரிவர்த்தனை பெற் றாலும் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சந்திரன் நீசம் பெற்றாலோ, 7-ஆம் வீட்டில் அமையப்பெற்றாலோ, சனி, ராகு, கேது போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலோ லாபங்கள் சற்றுக் குறைவாக இருக்கும். 11-ஆம் வீடு உபஜெய ஸ்தானம் என்பதால் 11-ஆம் வீட்டில் பாவிகள் அமையப்பெறுவது நல்லது. பாவிகளின் பார்வை பெறுவது நல்லதல்ல. லாப ஸ்தானத்தில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்றால், கிடைக்கும் லாபங்கள் சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்கும்.
11-ஆம் வீட்டில் அமையப் பெறுகிற கிரகங்களின் காரகத்து வத்தைப் பொருத்தே லாபங்கள் அமையும். 11-ல் சூரியன் அமையப் பெற்றால் தந்தைவழியில் அனுகூல மும், சுக்கிரன் அமையப்பெற்றால் பெண்கள் மற்றும் மனைவி வழியில் அனுகூலமும் உண்டாகும்.
11-ஆம் வீடு மூத்த உடன்பிறப் பைக் குறிக்கும் ஸ்தானம் என்ப தால், 11-ல் பாவகிரகங்கள் இருந் தால் மூத்த உடன்பிறப்பு இருக் காது. 11-ஆம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் ஆகிய பெண் கிரகங்கள் அமையப்பெற்றாலும், 11-ஆம் அதிபதி- சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்று சுக்கிரன் வீட்டில் அமையப்பெற்றாலும் மூத்த சகோதரி யோகமும், 11-ல் குரு, சூரியன் போன்ற கிரகங்கள் அமையப்பெற்றாலும், 11-ஆம் அதிபதி- சந்திரன், குரு, சூரியன், செவ்வாய் போன்ற கிரகச் சேர்க்கை பெற்றாலும் மூத்த உடன்பிறப்பு அமையும்.
12-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 12-ஆம் பாவத்தைக்கொண்டு விரயங்கள், கட்டில் சுகம், அயல்நாட்டுப் பயணம் போன்றவற்றைத் தெளிவாக அறியலாம்.
கன்னி லக்னத்திற்கு 12-ஆம் அதிபதி சூரியன். சூரியன்- குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகச் சேர்க்கை மற்றும் பார்வையுடன் இருந்தால் ஏற்படும் விரயங்கள் சுபவிரயங் களாக இருக்கும். 12-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்றால் ஏற்படும் விரயங்கள் வீண்விரயங்களாக இருக்கும். தவறான பழக்கவழக்கங்கள் மூலம் செல்வம், செல்வாக்கை இழக்கநேரிடும்.
சனி, ராகு 12-ல் அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால், இல்லற வாழ்க்கை என்பது (கட்டில் சுக வாழ்க்கை) போராட்டங்கள் நிறைந்த தாகவே அமைந்துவிடும்.
12-ஆம் வீட்டில் பாவகிரகங் களான சனி, செவ்வாய், ராகு, கேது அமையப்பெற் றால் கண்களில் பாதிப்பு, தந்தைவழியில் அடைந்த செல் வத்தை இழக்கும் அமைப்பு, நெருங்கிய உறவினர்களிடம் பகைமை உண்டாகும்.
12-ஆம் அதிபதி சூரியன் 9-ல் அமையப்பெற்று, 9-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ல் அமை யப்பெற்று சூரியன்- சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றாலும், சுக்கிரன்- சனி பரிவர்த்தனை பெற்று அமையப்பெற்றாலும், சந்திரன்- சனி, சுக்கிரன், சேர்க்கை பெற்று வலுவுடன் காணப் பட்டாலும் கடல்கடந்து அந்நிய நாடு செல்லும் வாய்ப் புண்டாகும். சந்திரன்- சுக்கிரன் சேர்க்கை, சுக்கிரன்- ராகு சேர்க்கை பெற்று, அதன் தசா புக்தி நடைபெற்றால் வெளி நாட்டு யோகம் உண்டாகும்.
(அடுத்த இதழில் துலா லக்னம்)
செல்: 72001 63001