பித்ரு சாபம் போக்கி பெரும்பேறு தரும் 16 யோக மந்திர ரகசியம்! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/16-yoga-magic-secret-will-give-most-pitru-curse-k-kumara-sivacharya

ங்ககால இலக்கியங்களிலும் புராணங் களிலும் கணவன்- மனைவி நல்லுறவை விளக்க கதை ஒன்று கூறப்பட்டது. வெயில் காலத்தில் ஆண்- பெண் என இரு மான்கள் தாகம் தீர்க்க நீரோடையை நோக்கிச் சென்றபோது, சிறிய நீர்நிலை கண்ணில் பட, அதில் மிகச் சிறிதளவே நீர் இருந்தது. ஆண்மான் நீரில் வாய் வைத்து அருந்துவதுபோல் பாவனை செய்தபடி, கருவுற்றிருக்கும் பெண்மான் அந்த நீர் முழுவதையும் அருந்தட்டும் என்று விட்டதாம்.

அன்புக்குரிய மனைவியோ தாயோ பசியின்றி வயிறார உணவருந்தி மகிழ்வடைந் தால் அந்த குடும்பமே மேன்மை பெறும். ஒரு பசுவானது வயிற்றில் சுமந்த கன்று பூமியில் விழுந்தபின்னர், அதை வளர்ப்பவன் குளிப்பாட்ட அந்த கன்றை எடுத்துச் செல்லும்போது, தாய்ப்பசு அவன் எங்கு சென்றாலும் பின்னாலேயே செல்லும்.

அதுதான் தாய்ப்பாசம் என்பது.

இந்த கலியுகத்தில் மனிதர்கள் செய்யும் தவறுகள், பாவங்கள், அலட்சியப் போக்கு கள் எல்லாம் சேர்ந்து பித்ரு தோஷங்களாக- மாத்ரு சாபங்களாக (தாயின் சாப தோஷம்) மாறி வாழ்வில் பற்றுகின்றன. ஆனால் பெற்ற தாயானவள் தன் பிள்ளைகள் கெட்டுப் போகவேண்டும் என்று எப்போதும் நினைக்க மாட்டாள். பித்ரு தோஷத்தின் ஒருவகை யாக வருவது மாத்ரு சாபம். இதற்கு ஆட்பட்ட வர்கள் விருத்திக்கு வரமாட்டார்கள்; அதற்கு தீர்வு இல்லையென்று பலர் கூறுகின்றனர்.

ஆனால் இதற்குத் தீர்வுகாண கைகண்ட மருந்துபோல் இருப்பது மாத்ரு ஷோடசி என்னும் வழிபாடாகும். அதாவது அன்னத்தை உருண்டையாக வைத்து வழிபடும் விதியாகும்.

வேத பண்டிதர்களின் வீடுகளில், பெண் திருமண மேடைக்குப் புறப்படுவதற்கு முன்னர், வீட்டில் 16 தலைமுறை பித்ருக்களுக்கு நாந்தீமுகம் என்னும் விசேட பித்ரு பிரீத்தி செய்தபிறகே செல்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதை முறையாகச் செய்பவர்களில் பலரும் மாத்ரு ஷோடசி என்னும் தாய்வழியினர் வழிபாட்டை மறந்து விட்டார்கள்.

மாத்ரு வழிபாட்டை மறப்போர் யார்?

இந்த விஷயத்தில் முதலில் மூன்று தலைமுறைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒருவரத

இந்த விஷயத்தில் முதலில் மூன்று தலைமுறைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒருவரது தந்தையின் தந்தை அசிரத்தையாக இருந்து பித்ருக்களை வழிபடாவிட்டால், தாத்தா- தந்தை- மகன்- ஜனனமாகின்ற குழந்தை ஆகியோர் பாதிப்புக்கு ஆளாவார்கள். இதற்கு எளிய உதாரணம்- மிதிவண்டி நிறுத்திவைக்கும் வரிசையில், கடைசியாக நிறுத்தப்படும் மிதிவண்டியின் நிறுத்தி (ஸ்டாண்ட்) சரியாக வைக்கப்படாவிட்டால் ஒன்றன்பின் ஒன்றாக சாய்ந்துவிடும் அல்லவா? அதைப் போல பித்ரு தோஷம் என்பது ஒருவர் செய்யாவிட்டால் அந்த குலவரிசையிலுள்ள அனைவரும் பாதிக்கப்படுவர் என்னும் உண்மையை நாம் அறிதல் வேண்டும். குறிப்பிடும்படியாக சொல்லவேண்டிய ஜோதிட விதி- ஒன்பதாம் பாவகத்தில் பாவர்கள் சேர்ந்து, பாவரே பார்த்தால், பித்ருதோஷ நிவர்த்தி செய்யும் சிந்தனை ஜாதகருக்கு இருக்காது.

12-ல் சூரியன் அமர்ந்தால் தன் மத வழிபாடுகளையே ஏளனமாகப் பேசும் மனநிலையைத் தரும். 12, 9-ஆமிடங்களில் மூன்று கிரகங்கள் இருந்து அவற்றை ஒரு பாவர் பார்த்தால், நம்பிக்கை வர வாய்ப்பில்லை.

சனியும் சுக்கிரனும் 12-ல் இருந்தால், தோஷங்களை அகற்றும் கர்மங்களை நம்பாமல் விட்டுவிடுவார்கள்.

ஒரு குடும்பத் தலைவனுக்கு ஜாதகத்தில் பித்ருதோஷம் ஏற்பட்டு அதை விலக்காமல் விட்டுவிட்டால், பதினாறு தலைமுறைகள் பாதிப்படையும் என்பது உறுதி என கர்மகாண்டம் சொல்கிறது.

பித்ரு காரகன் சூரியன் லக்னத் தி-ருந்து மறைவது, சூரியனுக்கு 6, 8, 12-ல் பாலர் மறைவது, 6, 8, 12-ல் சூரியன் மாந்தியோடு சேர்வது போன்ற அமைப்புகள் தோஷத்தை உருவாக்கும்.

"ஜன்மாந்த்ர கிருதம் பாபம் வியாதி ரூபேண ஜாயதே:

தத சாந்தி ஔஷதேத் ஜபம் தானம்

ஹோமாதி அர்ச்சனா'

என்று வேதம் கூறுகிறது. முன்ஜென்ம பாவ தோஷங்களை தானம், ஹோமம், அர்ச்சனைகளால் தீர்த்துக் கொள்ளலாம் என்பது இதன் பொருள்.

பித்ரு சாப தோஷம் அகற்றும் மாத்ரு ஷோடசி பெற்றவளுக்கு நன்றி செலுத்தும் மாத்ரு ஷோடசி விதி வழிபாட்டால் எப்படி பித்ரு தோஷங்களை அகற்றமுடியும் என்னும் கேள்வி எழும். தாயின் கருவறையிலிருந்தே எல்லாரும் இந்த உலகுக்கு வருகிறார்கள். இதுவே மூலஸ்தான தெய்வ வழிபாடு போன்றது. முதலில் நமது ஆண் முன்னோர் களை நினைத்து பிதாமக வர்க்கம், மாதாமக வர்க்கம் என்று தர்ப்பண விதியில் வருவதைச் செய்துவிட்டு, மாத்ரு ஷோடசி முறையைச் செய்வார்கள். காசிக்குச் செல்வோர் அட்சய வடம் என்னும் ஆலமரத்தின்கீழ் இதைச் செய்வது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆலமரமும் அட்சய வடம்தான். அதன் நிழலில் அமர்ந்து படையலிட்டு, இங்கு தரப்பட்டுள்ள 16 சுலோகங்களையும் சொல்லி சூரிய உதயத்திற்குப் பின் வணங்கவேண்டும்.

1. கர்ப்பஸ்ய உத்கமதே துகம் விஷமே பூமி வர்த்மநி

தஸ்ய நிஷ்க்ரக மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

என்னை கர்ப்பத்தில் தங்கும்போது, மேடு பள்ளங்களில் ஏறி இறங்குகையில் என் தாய் எத்தகைய வேதனைகளை அனுபவித் தாளோ, அதனால் விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக உன்னை வணங்குகிறேன்.

2. மாஸி மாஸி கிருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா

தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

ஒவ்வொரு மாத காலத்திலும், பிரசவ காலத்திலும் என்னைப் பெற்றவளுக்கு என்னால் ஏற்பட்ட வேதனைக்கான பாவம் தீர வணங்குகிறேன்.

166

3. பத்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜனன்யா பரிவேதநம் தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

என் தாயின் வயிற்றில் கால்களால் உதைத்து நான் உண்டாக்கிய வேதனைக்குப் பரிகாரமாக, இந்த வணக்கத்தை உனக்காக செய்கிறேன்.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ரு பீடநம் தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

நிறைமாத கர்ப்பிணியான என் தாய் என்னை சுமந்து கொண்டிருந்தபோது உண்டான வேதனைக்குச் சேர்ந்த பாவம் அகல உன்னை வழிபடுகிறேன்.

5. சைதில்யே ப்ரஸவே பிராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

தாயின் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை காரணமாக உண்டான வேதனைகளுக்காக உன்னை எண்ணி வணங்குகிறேன்.

6. பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதாநித் தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

கருவி-ருக்கும் எனக்கு நோய்கள் தாக்காமலிருக்க, கசப்பான மருந்துகளை உண்டு அதை சகித்துக் கொண்டதற்காக உன்னை வணங்குகிறேன்.

7. அக்னிநா சோஷயேத்தேஹம் த்ரிராத்ரோ போஜாணான தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

நான் இந்த உலகத்தில் ஒரு ஜீவனாகப் பிறக்கும்போது, மூன்று நாட்கள் உணவின்றி ஜடராக்கினி என்னும் பசி தாகத்தில் இருந்த வேதனைக்குப் பரிகாரமாக வணங்குகிறேன்.

8. ராத்ரௌ மூத்ர புரீஷாயாம் க்விந்த: ஸ்யாந் மாத்ரு கர்ப தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

இரவு நேரங்களில் எனது தாயின் ஆடைகளை மல மூத்திரத்தால் அசுத்தம் செய்து துன்பம் கொடுத்த கஷ்டத்திற்கான பரிகாரமே இந்த நமஸ்காரம்.

9. க்ஷீதயா விஹ்வலே புத்ர மாதா ஹ்யந்தம் ப்ரயச்யதி தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

எனக்கு உண்டான பசி தாகம் தீர்க்க, தனக்கு இல்லை என்றாலும் குறித்த நேரத்தில் உணவும் நீரும் தந்து, தன்னை வருத்திய துன்பம் பொருட்டு இந்த நமஸ்காரத்தைச் செய்கிறேன்.

10. திவாராத்ரௌ ஸதாமாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

இரவும் பகலும் தாய்ப்பால் அருந்தும் போது உடல் வேதனை அடைந்திருப்பாள். அந்த வேதனையைப் போக்கும் பரிகாரமாக உனக்கு வந்தனம் செய்கிறேன்.

11. மாகே மாஸி நிதாகே சசி ரேத்யந்த து கிதல தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

மாசி மாதத்து குளிர் நேரங்களிலும், கோடை காலத்திலும் என்னைக் காப்பதற்காக தன்னை வருத்திக்கொண்டாள் என்பது எனக்குத் தெரியும். அவளுக்கு விளைந்த வேதனையைத் தீர்க்க பரிகார வழிபாடாக என் தாயை நினைத்து வணங்குகிறேன்.

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

தன் மகன் நோய் வாய்ப்பட்டிருக்கிறானே என்னும் மனக் கவலையால், வாட்டத்துடன் இருந்து வருந்தினாளே! அவளுக்கு ஏற்பட்ட துயரத்திற்குப் பரிகாரமாக என்னைப் பெற்றவளே, உன்னை நினைத்து வணங்குகிறேன்.

13. யமத்வாரே மகா கோரே மாதா சோசதி சந்ததம் தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

இந்த உலக வாழ்க்கையை நிறைவுசெய்து எமலோகம் வழியாக மோட்ச சாம்ராஜ்யத்திற்குச் செல்லும்போது, கரடு முரடான பாதைகளில் செல்வதற்கு தெய்வங்கள் துணை நிற்பதற்காக உன்னை முன்வைத்துப் பிரார்த்திக்கிறேன்.

14. யாவத்புத்ரோ நம பவதி தாவன் மாதுச்ச சோசனம் தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

நான் தந்த பல வேதனைகளுக்குப் பரிகாரமாக, அறிவுடைய பிள்ளைகள் அவர்களது தாய்க்கும் என்னைப்போல செய்வதற்கு இறையருள் கைகூட உன்னை தெய்வமாக வணங்குகிறேன்.

15. ஸ்வல்ப ஆகாரஸ்ய கருணி யாவத் புத்ரச்ச பாலக:

தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம்.

இந்த பூமியில் நான் நன்றாக வளர்ந்து ஆளாவதற்கு, தனக்கு உணவில்லாமல்கூட பட்டினி கிடந்து, இருப்பதை எனக்குக் கொடுத்தாளே, அவள் பட்ட வேதனைகளுக்குப் பரிகாரமாக, எனக்குள் தெய்வமாக வைத்து உன்னை வணங்குகிறேன்.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவந ஸம்ஸய:

தஸ்ய நிஷ்க்ர மனார்த்தாய மாத்ரு ஸ்மரணம் நமாம்யஹம். நான் கர்ப்பத்தில் இருந்தபோதும் குழந்தையாக வளர்ந்தபோதும் மரண வேதனைக்குச் சமமான பல துன்பங்களை என் தாய்க்குத் தந்திருக்கக்கூடும். அதற்குப் பரிகாரமாக உன்னை என் தெய்வமாக எண்ணி வணங்குகிறேன்.

மாத்ரு ஷோடசி துதியின் சிறப்பு

பித்ருக்களுக்கு பூஜை செய்யும்போது, புண்ணியத் தலங்களின் தீர்த்தக் கரைகளில் 64 பிண்டங்களை வைப்பது அக்கால வழக்கம். அதில் நான்கில் ஒரு பாகம் மாத்ரு ஷோடசி வழிபாட்டு விதி. இதைமட்டும் செய்தால்கூட பித்ருக்கள் பூரண திருப்தி அடைவார்கள் என்கிறது சமஸ்கார விதி நூல். அரசமரத்தடியில் மகா சங்கல்பத்துடன் செய்து பித்ரு தோஷங்களி-ருந்து விடுபடலாம். ஜாதகத்தில் பித்ரு தோஷம் காட்டும் கிரக நிலைகளை அறிந்து தை, ஆடி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் தங்கள் முன்னோருக் கான விதிகளை முறையாகச் செய்து பலன் பெறலாம்.

செல்: 95511 84326

bala190721
இதையும் படியுங்கள்
Subscribe