திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கிறோம் என்றால், திருச்செந்தூர் முருகன் அருள் இருந்தால்தான் அது முடியும். ஏனெனில் திருச்செந்தூர் முருகன்தான் ஜோதிடத்தை அகத்தியரிடம் சொன்னவர். பின்பு அகத்தியர் பராசர முனிவரிடம் கூறினார். எனவேதான் திருமண பந்தத்திற்கு மூலக்கடவுளாக திருச்செந்தூர் முருகன் விளங்குகிறார்.

Advertisment

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாவது வீட்டிற்குரியவர் மூன்றில் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும்.

அதனால் மனைவி அல்லது கணவனுக்கு மாரகம் ஏற்பட்டு மறுமணம் செய்து கொள்ளும் சூழல் ஏற்படலாம். இப்படி ஜாதகம் அமைந் தால் பெண்ணாக இருந்தால் 25 வயதுக்கு மேலும், ஆணாக இருந்தால் 30 வயதுக்கு மேலும் திருமணம் செய்யவேண்டும். அதுவும் அவரவர் பகுதியிலுள்ள முருகன் சந்நிதியில்தான் திருமணம் செய்யவேண்டும்.

tuesday=thosam

Advertisment

அடுத்து ஏழாமதிபதி லக்னத்திற்கு ஐந்து அல்லது ஒன்பதிலிருந்தாலும் களத்திர தோஷம் ஏற்படும். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்து உள்ளூரில் வேலை செய்தால் 30 வயதுக்கு முன்னர் திருமணம் செய்யக்கூடாது. வெளி மாநிலத்திலோ, வெளிநாட்டிலோ வேலை செய்தால் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். ஏனென் றால் ஐந்து அல்லது 9-ல் உள்ள ஏழாமதி பதியால் வரும் களத்திர தோஷம்- சிறிதுகாலம் பிரிந்து வாழவேண்டும் என்பது ஜோதிட விதி. அதனால் பாதிப்பு ஏற்படாது.

லக்னத்திற்கு 12-ஆமிடம், 7-ஆமிடத்தையும் பெண்ணைக் கொடுக்கும்போது- குறிப்பாக ஆண் ஜாதகத்தில் மட்டும் பார்க்கவேண்டும். 12-ஆமதிபதி ஆறிலோ அல்லது ஏழிலோ இருந்தால் அவர் ஒழுக்கமில்லாதவராக இருப்பார். எனவே வேறு நபரைப் பார்த்துக் கொள்ளவேண்டும். இதேபோல 10-க்குரியவர் ஏழில் இருந்தாலும் களத்திர தோஷம் ஏற்படும்.

இதன்பலன்- இரண்டு அல்லது மூன்று களத்திரம் அமையும். எல்லாரும் உயிருடனே இருப்பார்கள். பிடித்திருந்தால் அந்த ஆணுக்குத் திருமணம் செய்து வைக்கலாம்.

செவ்வாய் தோஷமென்று கூறி நிறைய ஜாதகங்கள் நிராகரிக்கப்படுகின்றன. லக்னத் திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பொதுவாகக் கூறுவார்கள். சில கல்யாணத் தரகர்களும் ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு எல்லாம் தெரிந்ததுபோல் பேசுவார்கள். அதை அப்படியே நம்பிவிடக்கூடாது. செவ்வாயைப் பொருத்தவரையில் 16 கோணங்களில் பார்க்கவேண்டும்.

* கடக லக்னம், சிம்ம லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் தோஷம் ஏற்படுவதில்லை.

* செவ்வாய் இருக்கும் இரண்டாமிடம் மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் தோஷமில்லை.

*செவ்வாய் இருக்குமிடம் நான்கு என்றால், அது மேஷம் அல்லது விருச்சி கமாக இருந்தால் தோஷ மில்லை.

*செவ்வாய் இருக்கு மிடம் ஏழு என்றால், அது கடகம், மகரமாக இருந்தால் தோஷமில்லை.

* செவ்வாய் இருக்குமிடம் எட்டா மிடமாக வந்து அது தனுசு அல்லது மீனமானால் தோஷமில்லை.

* செவ்வாய் 12-ஆம் இடத்திலிலிருந்து அது ரிஷபம் அல்லது துலாமாகில் தோஷமில்லை.

* செவ்வாய் இருக்குமிடம் சிம்மம் அல்லது கும்பமாகில் தோஷமில்லை.

* செவ்வாய் குருவுடன் இருந்தால் தோஷமில்லை.

* செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்தால் தோஷமில்லை.

* செவ்வாய் புதனோடு சேர்ந்தாலும் பார்த்தாலும் தோஷமில்லை.

* செவ்வாய் சூரியனோடு சேர்ந்தாலும் பார்த்தாலும் தோஷமில்லை.

* செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கு 1, 4, 5, 7, 9, 10 ஆகியவற்றில் எங்கிருந்தாலும் தோஷமில்லை.

* 8, 12-ல் உள்ள செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரமாகில் தோஷமில்லை.

* செவ்வாய் தனது உச்சவீடான மகரத்தில் அல்லது சொந்த வீடுகளான மேஷம், விருச்சிகத்தில் இருந்தால் தோஷமில்லை.

* சனி, ராகு- கேது ஆகியவர்களுடன் கூடி அல்லது பார்க்கப்பட்டால் தோஷமில்லை.v * செவ்வாய் தனது நண்பர்களான சூரியன், சந்திரன், குரு ஆகியோரது வீட்டில்- அதாவது சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் எங்கிருந்தாலும் தோஷமில்லை.

மேற்கண்டவாறு அவரவர் பிள்ளைகளில் ஜாதகத்தை ஆய்வுசெய்து களத்திர தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவற்றை அறிந்துகொள்ளவேண்டும்.

பரிகாரம்

திருமணத்தடையை நீக்கி, திருமண பந்தத்தை ஏற்படுத்துபவர் திருச்செந்தூர் முருகன். எனவே திருமணத்தில் தடை, தாமதம் ஏற்படுபவர்கள் உடனே திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்து வாருங்கள். நல்லவழி பிறக்கும்.

செல்: 94871 68174