லக்னத்துக்கு பன்னிரண்டாவது வீடு, விரயங்களைக் கொடுக்கும் வீடாகும். 12-ஆவது வீட்டுக்குரிய கிரகம் மோட்ச சாதனங்களையும் கொடுப்பார். இதுதவிர, ஒழுக்கக்கேடு களையும் அறிந்து கொள்ளலாம். நல்ல வரனைத் தேர்ந்தெடுக்க 12-ஆவது வீட்டை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.
லக்னத்துக்கு பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் லக்னத்தில் அமர்ந்திருந்தால், சிரமங்களின்றி வேளா வேளைக்கு உணவையும் நித்திரை சுகங்களையும் கொடுப்பார். ஜாதகர் செலவுசெய்து வசதிகளைப் பெறுவார். பெரும் தனவந்தராகவே வாழ்வார்.
பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் 2-ல் (தன ஸ்தா னத்தில்) இருந்தால், தன விரயங்களைக் கொடுப்பார். ஜாதகரின் பேச்சுக்கு மதிப்பிருக்காது. கல்வியில் ஊக்கமிருக்காது.
அவசியமில்லாத பேச்சுகளைப் பேசுவார்கள். ஊர்சுற்றிவரும் பழக்கம் இருக்கும்.
பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் 3-ல் இருந

பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் 3-ல் இருந்தால், இளைய சகோதர- சகோதரிகளால் விரயங்கள் ஏற்படும். பிதுரார்ஜித சொத்துகளையும் இழப்பார்.
பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் 4-ல் இருந்தால், குடும்பச் செலவுகள் அதிகமாகும். போஜன சுகமும், சயன சுகமும் அதிகமாகும். உறவுகள், நண்பர்களால் செலவுகள் ஏற்படும்.
பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் 5-ல் இருந்தால், தேவாலய தரிசனங்கள், திருப்பணிகள், பிள்ளைகள் முதலானவர் களால் செலவுகள் ஏற்படும்.
மூத்த சகோதர- சகோ தரிகள் விரயத்தை ஏற்படுத்து வார்கள். எப்போதும் வசதியோடு வாழ்வார்கள்.
பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் 6-ல் இருந்தால், அந்த ஜாதகர் தகாத வழிகளில் ஈடுபட நேரிடலாம். வியாதிகள் ஏற்படும். பொருள் நஷ்ட மாகும். இப்படிப்பட்ட ஜாதகருக்கு பெண் கொடுப் பதற்கு யோசித்து செயல்பட வேண்டும்.
பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் 7-ல் இருந்தால், அவர் பெண்கள் வகையில் அதிக செலவை ஏற்பார். காமவேட்கையில் பொருள் விரயமாகும். எனவே இப்படிப்பட்ட ஜாதகம் அமையப் பெற்றவருக்கு பெண் கொடுப்பதானாலும் யோசித்து செயல்பட வேண்டும்.
பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் 8-ல் இருந்தால், வழக்குகள், உடல்நலக்குறைவு காரண மாக செலவுகள் ஏற்படும். இப்படி ஜாதகம் அமைந்த வர்களை நன்றாகப் படிக்க வைத்து காவல்துறை அல்லது நீதித்துறை சம்பந்தப்பட்ட அரசு வேலைகளில் அமரும்படி செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் அவருக்கு எட்டாமிடத்து கிரகம் நன்மையைச் செய்யும்.
பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் 9-ல் (பிதுர் பாக்கிய ஸ்தானத்தில்) இருந்தால், தகப்பனாருடைய சொத்துகளை விற்கும்படி நேரும். சகோதரர்களால் நஷ்டமும் கஷ்டமும் செலவுகளும் அதிகமாகும். வழக்குகளால் பிதுர்பாக்கிய சொத்துகள் நஷ்டமாகும்.
பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் 10-ல் இருந்தால், செய்யும் தொழிலிலில் முடக்கமும், வருமானம் இல்லாது போவதும், தொழிலைவிட்டு விலகுதலும் ஏற்படும். தன்போக்காக சுற்றுதலும், செலவுகளும், பொருள் நஷ்டமும் ஏற்படும்.
பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் 11-ல் இருந்தால், ஓரளவு வருமானம் இருக்கும்.
பிள்ளைகளாலும், ஆலய வழிபாடுகளாலும், தானதர்மங்களாலும், மூத்த சகோதரர் களாலும் செலவுகளும் நஷ்டமும் ஏற்படும்.
பன்னிரண்டாவது வீட்டிற்குரிய கிரகம் 12-ல் ஆட்சியாக இருந்தால், உடல்நல மில்லாமலும், எப்போதும் செலவு செய்பவ ராகவும் இருப்பார். நல்ல உணவு, உறக்கத்தை அனுபவிப்பராகவும் இருப்பார். இதனால் சொத்துகள் விரயமாகும். மேலும் 12-ல் கேது இருந்தால் மோட்சப் பிராப்தியாகும். 12-ல் கேது இருந்தால், நல்ல முறையில் வாழ்வார்கள். மாறாக 12-ல் மாந்தி இருந்தால், கெடு நினைவுகள் அலைமோதும். எனவே இவர்கள் நல்லதுசெய்ய நினைத்தாலும் கேடு விளையும். பரிகாரம்
12-ல் மாந்தி இருந்தால், ஒன்பது செவ்வாய்க் கிழமை விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்துவர மாந்தி தோஷம் மாறும். வசதியுள்ள வர்கள் சென்னை- திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காட்டிற்கு சனிக்கிழமை காலையில் சென்று, அங்குள்ள சிவனுக்கு ரூ.1300/- செலுத்தி, குடும்பத்திலுள்ள அனைவரது பெயரும் சொல்லிலி அர்ச்சனை செய்துகொள்ள மாந்தி தோஷம் விலகும். ஒருமுறை செய்தால் போதும்.
பன்னிரண்டுக்குரியவர் எட்டில் இருந் தால், கீழ்க்கண்ட பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். தேங்காய்- 9, வாழைப்பழம்- 18, களிப் பாக்கு- 18, வெற்றிலை- 50 கிராம், கதம்பப் பூ- 9 முழம் ஆகியவற்றை செவ்வாய்க் கிழமையன்று காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் எமகண்ட நேரத்தில் நவகிரக சந்நிதியில் வைத்துப் பூஜிக்க வேண்டும்.
அதற்கு முன்பு காலை 8.00 மணிமுதல் 9.00 மணிக்குள் மூல ஸ்தானத்திற்கு அர்ச்சனை செய்து, பின்புதான் நவகிரக அர்ச்சனை செய்யவேண்டும்.
செல்: 94871 68174