பதினொன்றில் நின்ற சனி
பத்தில் வர
பல குழப்பம் தொழிலில் வரும்..
நிவர்த்தியானதும்
நிவாரணம் உண்டு...
பசும் பால் அர்ச்சனை
சனிக்கிழமை செய்தால்
உன் புத்தி தெளிந்து
மேஷத்திற்கு காரிய சித்தியாகும்...
பத்தில் நின்ற காரி..
காரியத்தைக் கெடுத்தவர்
கொடுக்கவே போகிறார்
வெற்றி மேல் வெற்றி..
ஜென்ம குரு தரும்
தொல்லையில்
இடமாற்றம் இனிமையாக்கும்..
தட்சிணாமூர்த்திக்கு
மல்லிகைப் பூவால்
அர்ச்சனை செய்..
ஆத்திரம் அடங்கி
ரிஷப ஆராதனை நடக்கும்...
ஒன்பதில் நின்றவர்
எட்டை நோக்கி
வந்த வழி போகச் செய்வார்..
விரய குரு வீரியமாக இருப்பதால்
எதிலும் நிதானமில்லையெனில
பதினொன்றில் நின்ற சனி
பத்தில் வர
பல குழப்பம் தொழிலில் வரும்..
நிவர்த்தியானதும்
நிவாரணம் உண்டு...
பசும் பால் அர்ச்சனை
சனிக்கிழமை செய்தால்
உன் புத்தி தெளிந்து
மேஷத்திற்கு காரிய சித்தியாகும்...
பத்தில் நின்ற காரி..
காரியத்தைக் கெடுத்தவர்
கொடுக்கவே போகிறார்
வெற்றி மேல் வெற்றி..
ஜென்ம குரு தரும்
தொல்லையில்
இடமாற்றம் இனிமையாக்கும்..
தட்சிணாமூர்த்திக்கு
மல்லிகைப் பூவால்
அர்ச்சனை செய்..
ஆத்திரம் அடங்கி
ரிஷப ஆராதனை நடக்கும்...
ஒன்பதில் நின்றவர்
எட்டை நோக்கி
வந்த வழி போகச் செய்வார்..
விரய குரு வீரியமாக இருப்பதால்
எதிலும் நிதானமில்லையெனில்
காரியம் மிதுனமாகிவிடும்..
அர்த்தநாரீஸ்வரர்க்கு
தாமரை மலரால் அர்ச்சனை செய்ய
அச்சம் விலகுமப்பா...
அஷ்டமச் சனியில்
அவசரப்பட்டு காரியம் செய்ய
அத்தனை காரியமும்
கெட்டுப் போகும்
வக்ரத்தில் உக்ரமாக..
அவசர புத்திக்காரா
அவமானப்படுமுன்
சிதம்பர நடராஜருக்கு
சிதறாமல் முல்லையால்
அர்ச்சிக்க
கடகச் சிக்கல் தீருமப்பா...
சீரும் சிங்கத்தை
சின்னாபின்னமாக்க
வந்த கண்டச் சனி..
கண்டபடி தடுமாறா
எண்ணியது பூர்த்தியாகும்..
பின்நோக்கி நகர்ந்ததால்
உன் வாழ்க்கை
முன்னோக்கி நகரும்..
வந்ததை விடாமலிருக்க
நரசிம்மரை
நான்கு வெள்ளி தொழுது வர
தொட்டதெல்லாம்
பொன்னாகும்...
ஆறில் நின்ற சனி வக்ரமாகி
வராத பலனையும் வரவிடாமல்
கன்னிக்கு கன்னியால் செய்கிறதே..
எப்போது நிம்மதி என்றவனுக்கு
இப்போது இனிமைதான்..
இடர்வரும் காலம் விலகியோட
இன்மையில் நன்மை தருவாரை
பூஜித்து வா..
பூஜ்யமாக இருந்த வாழ்வும்
பூவாகும்...
ஐந்தில் சுழலும்
துலாம்காரருக்கு
நான்கில் வந்து
தாயாரை கண்டமாக்கும்..
தாயாரை வெறுத்தவருக்கு
தண்டனை குறைவுதான்..
வக்ரத்தில் நல்லது நடக்க
காலபைரவரைக்
கண்டுவா கண்டமே விலகும்...
நான்கில் நின்று
நாய்படாத பாடுபடும்
விருச்சிகமே..
வக்ரத்தை மாற்ற
வெக்காளியம்மன் கோவிலுக்கு
வெள்ளிக்கிழமை விளக்கேற்று..
விளக்கெண்ணெய் தீபமேற்ற
உன் வாழ்வு வெளிச்சமாகும்...
மூன்றில் நின்று
மூச்சுவிட வைத்த சனி
இரண்டுக்கு வந்து
மூச்சிறைக்க வைத்துவிடும்..
எதையும் போராடி பெறும்
தனுசுராசிக்காரா..
வில் அம்பு கொண்ட
திருலோக்கிக்குச் சென்று
மன்மதன் ரதி பார்க்க
பிரிந்தவர் கூடுவர்...
இரண்டில் நின்றவர்
ஜென்மத்திற்கு வர
பயம் கொடுத்து
பதற வைக்கப் போகிறார்..
முடிந்தது சனி என்றவருக்கு
முடியாதென்று விழிக்கும்
மகர ராசியே..
மதுரை சொக்கநாதருக்கு
மாங்கல்ய தானம் செய்ய
மாண்டது மீளும்..
மகத்துவம் பெருகும்...
ஜென்மச் சனி என
தொட்டதெல்லாம் கெட்டது..
வக்ரத்தில்
வராதது வந்து சேரும்..
கும்பகர்ணனாக தூங்கிய
காலம் மாறி
கும்பாபிஷேகம் செய்ய
தகுதியாக்கும்..
தரமான சம்பவம் செய்ய
தர்ப்பனேஷ்வரரை வணங்கு...
ஏழரைச் சனி வந்து
ஏறிச் சென்ற ஏணியைப்
பிடுங்கிச் சென்று விட்டார்..
ஏற்றிவிட்டவரே இறக்கியும் விட்டார்..
நல்லவனுக்கே கெட்டது என்கிற
நிலைமாறி வழி பிறக்கும்..
வக்ரம்பெற்ற நிலையில்
வலைக்குள் மாட்டிய மீனும்
வலையறுத்து வெளியேறும்.
புதிய வாழ்வில் பிரிந்தவரும் கூடுவர்..
காளஹஸ்தி சென்று வர
கஷ்டமெல்லாம் கலைந்து போகும்...
மொத்தமாய் பரிகாரம்
கேட்டால்..
சிவனே கதியென்று
சிவ சிவ சொல்லி வந்தால்
எந்த கஷ்டமும்
உன்னைச் சேராது...
செல்: 96003 53748