Advertisment

12 ராசியினருக்கும் மகரச் சனியின் வக்ர நிவர்த்திப் பலன்கள்!-திருக்கோவிலூர் பரணிதரன்

/idhalgal/balajothidam/12-zodiac-sign-benefits-capricorn-saturn-trukovilur-paranidharan

10-10-2022 முதல் 29-3-2023 வரை வாக்கியப் பஞ்சாங்கப்படி

னிபகவான் அமரும் இடத் திற்கு நன்மையை வழங்குவார். பார்க்கும் இடங்களுக்கு பாதகமான பலன்களை வழங்குவார் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு ராசியில் அதிகபட்சமான காலம் சஞ்சரிப்பவர் சனி பகவான்தான். சனிபகவான்போல் கொடுப்பவரும் இல்லை; கெடுப்பவரும் இல்லை என்று அனுபவம் சொல்கிறது.

Advertisment

ஒரு ராசிக்குள் இரண்டரை ஆண்டுகளுக்குமேல் அவர் சஞ்சரிக்கும் நிலையில், அவர் ஆண்டிற்கொருமுறை நான்கரை மாதங்கள் வக்ரநிலையை அடை வார். அந்த காலத்தில் அதுவரை அவர் வழங்கிவந்த பலன்களில் எதிர்மறையான நிலை உண்டாகும். பாதகமான பலன்களை அடைந்த வர்களுக்கு நன்மைகளையும், சாதக மான பலன்களை அடைந்தவர் களுக்கு எதிர்மறையான பலன்களை யும் வழங்குவார்.

இத்தகைய நிலை சனி பகவானுக்கு இருக்கும் நிலையால் தான் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஒரு ராசியில் அவர் சஞ்சரித் தாலும் யாருக்கும் தொடர்ந்து அவர் சோதனைகளை வழங்குவதில்லை. இந்த நிலையில் கடந்த 26-12-2020 முதல் மகர ராசியில் சஞ்சரித்து வரும் சனிபகவான் பன்னிரண்டு ராசியினருக்கும் அவருடைய சஞ்சார நிலைக்கேற்ப பலன்களை வழங்கிவருகிறார்.

இந்த சுபகிருது ஆண்டில் 25-5-2022 அன்று மகர ராசியில் வக்ரமான சனிபகவான் 10-10-2022 அன்று வக்ரநிவர்த்தியாகிறார்.

Advertisment

சனிபகவான் 29-3-2023 அன்று கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகும் வரையில் பன்னிரண்டு ராசியினருக் கும் எத்தகைய பலன்களை வழங்கு வார் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

உங்கள் ராசிக்கு பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் 26-12-2020 முதல் சஞ்சரித்துவரும் சனிபகவான் அவரு டைய நேர்மறையான பலன்களை வழங்கி வந்தார். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில்வகையில் சங்கடங்களும், உத்தியோகத்தில் இடமாற்றம், ஊர்மாற்றம் என்ற நிலை களையும், வருமானத்தில் நெருக்கடிகளையும், உடல் நிலையில் பாதிப்புகளையும் வழங்கிவந்த நிலையில், 25-5.-2022 முதல் வக்ரகதிக்கு ஆளானார். பத்தாமிடத்தில் சனி வக்ரமானபிறகு உங்கள் நிலையில் மாற்றம் தோன்றியிருக்கும். அந்தஸ்து உயர்ந்தி ருக்கும். வருமானம் உண்டாகியிருக்கும். மனதில் புதிய நம்பிக்கை உருவாகி இருக்கும். நெருக்கடிகளிலிருந்து மீண்டிருப்பீர்கள்.

இந்த நிலையில் 10-10-2022 அன்று உங்கள் ஜீவன ஸ்தானத்தில் சனி வக்ரநிவர்த்தியாகி 29-3-2023 வரை அதே வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நேர்மறையான பலன்களை வழங்கிடவுள்ளார்.

தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் நிலையைப்பற்றி ஜோதிட சாஸ்திரம், "பத்திலே சனியும் நிற்கிற் பதிகுலந் தலையச்செய்யும்; செத்திடும் ஆடுமாடு சிலுகுடன் மனிதர் சாவாம்; நத்திய பொருளுஞ் சேதம்; நற்பயிற் விளைவு குன்றும்; பத்திய சோகை சோம்பல் பலனில்லை பயமுண்டமே!' என்று கூறுகிறது.

பத்தாமிடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கின்றபோது ஜாத கருக்கு கெடுபலன்களை வழங்குவார் என்பது ஜோதிட விதி. குறிப்பாக ஜாதகரின் ஆரோக்கியம் கெடும். மார்பு வலி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் குழப்பம் காணும். தொழிலில் நஷ்டம், உத்தியோகத்தில் கஷ்டம், படிப்பில் சிரமம், குடும்பத்தில் சங்கடம் என்று அவதிப்படுத்தும். மதிப்பிற்கும் மரியாதைக்கும் கேடு உண்டாகும். பணம் தீயவழிகளில் செலவாகும் என்று கூறப்படுகிறது.

இது பொதுவான விதி தான். ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திற்கேற்ப, தசாபுக்திக் கேற்ப, மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைக்கேற்ப இப் பலன்கள் மாறுபடும் என்றா லும், பத்தாமிட சனி வழங்கும் பொதுப்பலன் இதுவாகும்.

பத்தாமிடத்தில் வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கும் சனிபகவான் மீண்டும் உங்களுக்கு சில சங்கடங்களை உருவாக்கலாம். தொழில்ரீதியில் தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் திருப்தியற்ற நிலை உண்டாக லாம். உத்தியோகத்தில் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். இதற்கெல் லாம் காரணம் சனிபகவானின் ஸ்தான பலனும் பார்வை களால் உண்டாகும் பலன் களேயாகும்.

சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்தில் பதிவதால் செலவுகள் ஏதேனும் ஒரு வகையில் அதிகரித்துக் கொண்டே இருக்கும், நிம்மதி யான உறக்கம், ஓய்வு என்ப தெல்லாம் இல்லாமல்போக வாய்ப்புண்டு. வருமானத் திலும் தடைகள் தோன்றலாம். எதிர் பார்த்த மகிழ்ச்சியை எட்ட முடி யாமல் போகலாம்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு நான்காமிட மான மாதுர் மற்றும் சுக ஸ்தானத்தில் பதிவதால் உங்கள் தாயாரின் ஆரோக்கியத்தில் சங்கடங்கள் உண்டாகலாம். உங்கள் எதிர்பார்ப்புகளில் இழுபறியான நிலை ஏற்படலாம். மனதில் ஏதேனும் ஒரு சங்கடம் உண்டாகி வாட்டத் தொடங்கலாம். வீடு, வாகனம்வகையில் சங்கடங்களை சந்திக்க வேண்டிய நிலை வரலாம். கல்வியில் உற்சாகமும் ஆர்வமும் குறையலாம். வீடு, நிலங்களை விற்கவேண்டிய நிலையும் ஒருசிலருக்கு உண்டாகலாம், மனதில் ஏதாகிலும் ஒருவகையில் பதட்டமும் பயமும் இருந்துகொண்டே இருக்கும்.

அடுத்து சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாமிடமான களத்திரம் மற்றும் நட்பு ஸ்தானத் தில் பதிவதால் குடும்பத்தில் சச்சரவு கள் உண்டாகலாம். கணவன்- மனைவிக் குள் மனஸ்தாபம் தோன்றலாம். ஒருசிலருக்கு பிரிவினைகூட உண்டாகலாம். நேற்றுவரை நட்பாக இருந்தவர்கள் விலகிச்செல்லக்கூடிய நிலை ஏற்படலாம். சிலர் எதிர்பாராத விபத்தினை சந்திக்க நேரிடலாம்.

இதற்கெல்லாம் காரணம் உங்கள் தொழில் மற்றும் ஜீவன ஸ்தானமான பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் வக்ரநிவர்த்தியடைந்து நேர்கதியில் சஞ்சரிக்கப் போவதுதான்.

சனிபகவான் வழங்கும் சங்கடங்களிலிருந்து விடுபட சனிக்கிழமைதோறும் அவரை வழிபட்டுவாருங்கள்.

ff

ரிஷபம்

உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் 26-12-2020 முதல் சஞ்சரித்துவரும் சனிபகவான் உங்களுக்கு மிகவும் யோகமான பலன்களையே வழங்கி வந்தார். உங்களின் சங்கடங்களையெல்ல

உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் 26-12-2020 முதல் சஞ்சரித்துவரும் சனிபகவான் உங்களுக்கு மிகவும் யோகமான பலன்களையே வழங்கி வந்தார். உங்களின் சங்கடங்களையெல்லாம் அகற்றிவந்தார். தொல்லைகளிலிருந்து விடுபடவைத்தார். தெய்வ அருளை உண்டாக்கி நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்படி செய்தார். தீர்த்த யாத்திரை செய்து நன்மைகளை அடையவைத்தார். தனம், செல்வம், நிம்மதி, ஒழுக்கம், கல்வி, இன்பம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கி அதில் விருத்தியை உண்டாக்கினார். நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியென்ற நிலையை பாக்கிய சனி உண்டாக்கி வந்தநிலையில், 25-5-2022 முதல் வக்ரகதிக்கு ஆளாகி எதிர் மறையான பலன்களை வழங்க ஆரம்பித்தார் சனிபகவான்.

பாக்கிய ஸ்தானத்தில் சனிபகவான் வக்ரமானபிறகு உங்கள் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். வருமானத்தில் தடை, உத்தியோகத்தில் பிரச்சினை, கௌரவத்திற்கு இழுக்கு, எதிர்பாராத சங்கடங்கள், குடும்பத் தில் குழப்பம், உடல்நிலையில் பாதிப்பென்ற நிலையெல்லாம் ஏற்பட்டிருக்கும்.

இந்த நிலையில் 10-10-2022 அன்று சனிபகவான் வக்ரநிவர்த்தியாகி 29-3-2023 வரை அதே வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நற்பலன்களை வழங்கிடவுள்ளார்.

சனிபகவான் ஒரு ராசியினருக்கு மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களில் சஞ்சரிக்கின்றபோது யோகமான பலன்களை வழங்குவார் என்பது பொதுவான விதி. அதே போல் அவர் மூன்றாமிடத்தையும், ஆறாமிடத்தையும், பதினொன்றாம் இடத்தையும் பார்க்கின்றபோதும் யோகப் பலன்களை வழங்குவார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்தரீதியில் ஒன்பதாமிட சனிபகவானால் அதிகபட்சமான நன்மைகளை அடைந்திடக் கூடிய ராசியினராக நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியும் ஜீவனாதி பதியும் சனிபகவான்தான். அதனால் அவரு டைய பலன்கள் உங்களுக்கு யோகமானதாகவே இருக்கும். அதற்கும் மேலாக அவர் உங்கள் ராசிக்கு மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களை ஒரே நேரத்தில் பார்வையிடு வதால் இந்த வக்ரநிவர்த்திக் காலம் யோகமான காலமென்றே சொல்லவேண்டும்.

ஒன்பதாமிடத்தில் வக்ரநிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கும் சனி பகவான், மீண்டும் உங்கள் வாழ்க்கையில் நன்மை களை வழங்கிடப் போகிறார். தொழிலில் உண்டான தடைகள் இனி விலகப்போகிறது. உங்கள் முயற்சிகளில் உண்டான தோல்விகள் நீங்கப்போகிறது. வருமானம் தடைபட்டிருந்த நிலை மாறப்போகிறது. பகைவர்களால் உண்டான தொல்லைகள் அகலப்போகிறது. அவர்களை வெற்றிகொள்ளக்கூடிய நிலையை அடையப்போகிறீர்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் உண்டாகியிருந்த மனக் கசப்பு விலகப்போகிறது. தந்தையின் ஆரோக் கிய நிலை சீராகும். ஒருசிலர் தந்தையின் தொழிலை மேற்கொண்டு ஆதாயம் அடையப் போகிறீர்கள்.

இவையெல்லாம் ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்களுக்கு வழங்கப்போகும் நற்பலன்களாகும்.

ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் பதிவதால், உங்கள் தொழில் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். வேலை வாய்ப்பற்றவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுண்டாகும். தொழிலில் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழ்ந்தாலும் அவற்றின்மூலம் நன்மையே உண்டாகும். பணவரவு பல வழிகளிலும் வந்துகொண்டே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் சகோதர, தைரிய, கீர்த்தி ஸ்தானத்தில் பதிவதால் உங்கள் ஆரோக்கியம் சீராகும். தொழில் விருத்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வசதியும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.

விரோதிகளை வென்று அடக்கமுடியும். எதிர்பாராத பணவரவும் இருக்கும். பல்வேறு நன்மைகள் உண்டாகும். சகோதர- சகோதரிவகையில் உதவிகள் அதிகரிக்கும்.

சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் பதிவதால் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். வாழ்க்கையில் புத்துணர்ச்சி உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். எதிரிகளை இருக்குமிடம் தெரியாமல் செய்யும் ஆற்றல் உண்டாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். எதிர்பாராத பணவரவும் குடும்பத்தில் நிம்மதியும் உண்டாகும்.

இதற்கெல்லாம் காரணம் உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் வக்ரநிவர்த்தியாகி 10-10-2022 முதல் நேர்கதியில் சஞ்சரிக்கப்போவதுதான்.

சனி பகவானின் நற்பலன்கள் உங்களுக்கு மேலும் அதிகரிக்க சனிக்கிழமைதோறும் அவரை வழிபட்டுவாருங்கள்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் 26-12-2020 முதல் சஞ்சரித்துவரும் சனி பகவான், ஜென்மச்சனி எத்தகைய பலன்களை வழங்குவாரோ அதுபோன்ற பலன்களை வழங்கிவருகிறார். ஜென்மச்சனியின் காலத்தில்கூட மூன்றாம் பார்வை பலன்தரும். ஆனால் அஷ்டமச்சனியின் காலத்தில் அவருடைய பார்வைகளும் பாதகமான பலன்களையே உண்டாக்கும் என்பது விதி.

அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து பல்வேறு இடர்ப்பாடுகளையும், மனதிற்கு சங்கடத்தையும், உடல்நிலையில் பாதிப்பு களையும், தேவையற்ற அலைச்சல்களையும், பிரச்சினைகளையும் வழங்கி, குடும்பத்திலும் சங்கடம், நிம்மதியற்ற நிலை, கணவன்- மனைவியரிடையே கருத்து வேறுபாடு, பிரிவு, மனக்கசப்பு, முயற்சிகளில் தடை, ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை, வாழ்க்கை முறையில் மாற்றம், மனைவியின் உடல்நிலையில் பாதிப்பு என்றெல்லாம் பலன்களை வழங்கி வந்த நிலையில் 25-5-2022 முதல் வக்ரகதிக்கு ஆளானார் சனிபகவான்.

எட்டாமிடத்தில் சனிபகவான் வக்ரமான பிறகு உங்கள் நிலையில் மாற்றம் தோன்றி யிருக்கும். செயல்களில் முன்னேற்றம் உண்டாகி இருக்கும். நீங்கள் நினைத்ததை சாதித்திருப்பீர்கள். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயர்ந்திருக்கும். நீண்டநாள் கனவுகள் பூர்த்தியாகி இருக்கும். மனதில் புதிய நம்பிக்கை உருவாகி நெருக்கடிகளிலிருந்து மீண்டிருப்பீர்கள். இந்த நிலையில் 10-10-2022 அன்று உங்கள் அஷ்டம ஸ்தானத் தில் சனி வக்ரநிவர்த்தியாகி 29-3-2022 வரை அதே வீட்டில் சஞ்சரித்து பலன்களை வழங்கிடவுள்ளார்.

அஷ்டம ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் நிலையைப்பற்றி ஜோதிட சாஸ்திரம், "கண்டங்கள் நான்கில் எட்டில் கருதிய சனி வரின் தண்டங்கள் மிக உண்டாகும்; திரவியம் நாசமாகும்; கொண்டதோர் மனைவி வேறாம்; குறித்தி டும் செட்டு நஷ்டம்; பண்டுள நாடுவிட்டுப் பரதேசம் போவான் பாரே' என்று கூறுகிறது.

எட்டாமிடத்தில் சனிபகவான் சஞ்சரிக் கின்றபோது ஜாதகருக்கு அதிகபட்சமான கெடுபலன்களை வழங்குவார் என்பது ஜோதிட விதி.

குறிப்பாக, ஜாதகர் மேற்கொள்ளும் முயற்சிகள் இழுபறியாகும். பொருளாதார நிலையில் சங்கடங்களை சந்திக்கவேண்டி வரும். அலைச்சல் அதிகரிக்கும். அதன் காரணமாக உடல்நிலையில், மனநிலையில் பாதிப்பு தோன்றும். குடும்பத்திலும் நிம்மதி யற்ற நிலை உண்டாகும். இது பொதுவான விதி.

ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திற்கேற்ப, தசாபுக்திக்கேற்ப, மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைக்கேற்ப இப்பலன்கள் மாறுபடு மென்றாலும், எட்டாமிட சனி வழங்கும் பொதுப்பலன் இதுவாகும்.

எட்டாமிடத்தில் வக்ரநிவர்த்தியாகி சஞ்சரிக்கும் சனிபகவான் மீண்டும் உங்களுக்கு சங்கடங்களை உருவாக்கலாம். இதற்குக் காரணம் சனிபகவானின் ஸ்தான பலன் மட்டுமல்ல; அவருடைய பார்வை களும் அதற்குக் காரணமாகும்.

சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் பதிவதால், தொழிலில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். எதிர் பார்த்த நன்மைகளை இக்காலத்தில் அடைய முடியாமல் போகும். உடலில் உபாதை உண்டாகும். பிரச்சினைகள் அதிகரிக்கும். செல்வாக்கு, கௌரவம் போன்றவற்றுக்கு பங்கமுண்டாகும். ஜீவன வகையில் கஷ்டம் வரும். அரசியலில் சரிவுண்டாகும். அரசாங் கத்தால் கிடைத்துவந்த நன்மைகளில் பாதிப் புண்டாகும். முழங்காலில் வலி ஏற்படும்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் பதிவதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத நிலை உண்டாகும். பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்படும். செயல்களில் சங்கடம், குடும்பத்தில் பிரச்சினைகள், பொருட்கள் இழப்பு, பொருளாதாரத்தில் சங்கடம், சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் பாதிப்பு, மனம் ஒருநிலையில் இல்லாமல் போகும். வரவைவிட செலவு அதிகரிக்கும். எதிர் பார்த்தவற்றில் ஏமாற்றம் உண்டாகும்.

சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத் தில் பதிவதால், புத்திர- புத்திரிகளால் வேதனை, மனம் ஒருநிலையில் இல்லாமல் தீய எண்ணங்களால் அலைமோதும் நிலை, குடும்பத்தில் கலகமும் சண்டை, சச்சரவும் நிறைந்திருக்கும். வேதனைதரும் நிகழ்ச்சி கள் நடக்கும். அதனால் அதிர்ச்சியடை வீர்கள். புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்தி ருந்தவர்களுக்கு அந்த பாக்கியம் தள்ளிப் போகும்.

இதற்கெல்லாம் காரணம் உங்கள் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ரநிவர்த்தி அடைவதுதான். சனிபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி மட்டுமல்ல; பாக்கியாதிபதியும் அவர்தான்.

மகர ராசியிலிருந்து 29-3-2023 அன்று கும்ப ராசிக்கு அவர் பெயர்ச்சியாகின்றபோது இதுவரை அவர் உங்களுக்கு வழங்கி வந்த சங்கடங்களிலிருந்து உங்களை விடுவிப்பார் என்பதுடன், அதிகபட்சமான நன்மைகளை வழங்கி உங்கள் அந்தஸ்தையும், கௌரவத்தையும், செல்வாக்கையும் உயர்த்து வார் என்பதால், 10லி10-2022-ல் இருந்து 29-3-2023 வரை சனிபகவானை வழிபட்டு, நிதானமாகவும் யோசித்தும் செயல்படுங்கள்.

கடகம்

உங்கள் ராசிக்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் 26-12-2020 முதல் சஞ்சரித்து வரும் சனிபகவான் கண்டச் சனியாக உங்களுக்குப் பலன்களை வழங்கிவருகிறார்.

களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி உங்கள் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள், உறவினர்களிடம் பகை, நட்புகளிடம் கருத்து வேறுபாடு, பிரிவு, அலைச்சல் அதிகரிப்பு, தீயோர் சேர்க்கை யால் அவப்பெயருக்கு ஆளாகுதல், வாழ்க்கைத் துணைக்கு பாதிப்பு, வாழ்க் கைத் துணையிடமிருந்தும் பிள்ளைகளிட மிருந்தும் பிரிந்து தனித்து வாழக்கூடிய நிலை, இருக்குமிடத்தைவிட்டு வேறிடம் சென்று வசிக்கவேண்டிய நிலை, அந்நியர்களால் அலைச்சல், பாதிப்பு, கண்டங்கள், பண விரயங்கள் என்ற நிலைகளை வழங்கிவந்த நிலையில், 25-5-2022 முதல் வக்ரகதிக்கு ஆளானார் சனிபகவான்.

ஏழாமிடத்தில் சனிபகவான் வக்ரமான பிறகு உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகியிருக்கும். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்தவை நடந்திருக் கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகி யிருக்கும். நீங்கள் விரும்பியதை அடைந்திருப்பீர்கள். உங்கள் புகழ், அந்தஸ்து யாவும் உயர்ந்திருக்கும். உங்களுடைய நீண்டநாள் கனவு கள் பூர்த்தியாகி இருக்கும். மனதில் புதிய நம்பிக்கை தோன்றி செயல் பட்டிருப்பீர்கள். இந்த நிலையில் 10-10-2022 அன்று சப்தம ஸ்தானத்தில் சனிபகவான் வக்ரநிவர்த்தியாகி 29-3-2023 வரை அதே வீட்டில் சஞ்சரித்து உங்களுக்குப் பலன்களை வழங்கிடவுள்ளார்.

சப்தம ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும்போது எத்தகைய பலன்களை வழங்குவார் என்பதை கடந்த இரண்டு வருடங் களாக நீங்கள் அனுபவித்துத் தெரிந்திருப் பீர்கள்.

ஏழாமிடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் போது ஜாதகருக்கு அதிகபட்சமான கெடு பலன்களை வழங்குவார். குடும்பத்திற்குள் குழப்பத்தை உண்டாக்குவார். கணவன்- மனைவிக்குள் பிரிவினையை ஏற்படுத்துவார். தவறான நண்பர்களுடன் சிநேகிதத்தை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட விதி.

இக்காலத்தில் ஜாதகர் மேற்கொள்ளும் முயற்சிகள் சங்கடத்தில் முடியும். உடலில் பாதிப்புண்டாகும். வயிறு, மார்பு சம்பந்தமான பிரச்சினைகளை சந்திக்கவேண்டி வரும். அலைச்சல் அதிகரிக்கும். வருமானத்தில் தடைகள் தோன்றும். எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். நிம்மதியற்ற மனநிலை உண்டாகும். இது பொதுவான விதி.

ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திற்கேற்ப, தசாபுக்திக்கேற்ப, மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைக்கேற்ப இப்பலன்கள் மாறுபடுமென்றாலும், ஏழாமிட சனி வழங்கும் பொதுப்பலன் இதுவாகும்.

ஏழாமிடத்தில் வக்ரநிவர்த்தியாகி சஞ்சரிக்கும் சனிபகவான் மீண்டும் உங்களுக்கு சங்கடங்களை உருவாக்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் அடைந்துவந்த, சந்தித்துவந்த பிரச்சினைகளை மீண்டும் சந்திக்க நேரலாம். இதற்குக் காரணம் சனி பகவானின் ஸ்தான பலன் மட்டுமல்ல; அவருடைய பார்வைகளும் காரணமாகும்.

சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால் எதிலும் நிம்மதியற்ற நிலை உருவாகும். எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். தந்தையின் உடல்நிலையில் கவனம் செலுத்தவேண்டி இருக்கும். தொழிலில் மந்தமான நிலையும் அலைச்சல் திரிச்சலுடன் லாபமின்மையும் உண்டாகும். ஒழுக்கத்திற்குப் பாதகம் வரலாம். தீய நண்பர்களின் சகவாசத்தால் பலவிதமான இன்னல்கள் உருவாகலாம். வேலையில் மேலதிகாரிகளால் கண்டிக்கப்படும் நிலை தோன்றலாம். நினைத்தபடி எந்தவொரு செயலையும் செய்துமுடிக்க முடியாத நிலையும் உருவாகும்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உங்கள் அந்தஸ்துக்கு பாதிப்பு வரலாம். கௌரவம், உடல்நலன் பாதிக்கப்படலாம். எதையோ இழந்ததுபோல் மனம் தவிக்கும். திடீரென்று உண்டாகக்கூடிய பிணிகளால் ஆயுள் பற்றிய அச்சம் வரலாம். மனதில் குழப்பம் அதிகரிக்கும். வசிக்கும் இடத்தைவிட்டு மனைவி, மக்களைவிட்டு வெளியேறும் நிலை உண்டாகலாம். அந்நிய நபர்களின் சகவாசத்தால் புத்தி மழுங்கி தவறான பாதையில் சென்று வருத்தப்படலாம். திட்டமிட்டபடி எதையும் செய்யமுடியாமல் போட்டிகளை சமாளிக்கமுடியாமல் தடுமாறுவீர்கள். நட்பு வட்டத்திலும் பலவிதமான சங்கடங்கள் உண்டாகும்.

சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான நான்காம் வீட்டில் பதிவதால், நேற்றுவரை இருந்த நிம்மதி இன்றைக்கில்லை; நேற்றுவரை அடைந்த சுகம் இன்றைக்கில்லை என்று அலைச்சல் அதிகரிக்கும். உடலில் அசதி உண்டாகும். தாயின் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டி வரும். வாகனங்களால் செலவும் இழப்பும் உண்டாகலாம். சிலருக்கு பூமி மற்றும் வாகனங்களை விற்கவேண்டிய நிலையும் உருவாகும். இல்லையெனில் களவு போகும். கல்வியில் கவனம் செலுத்தமுடியாத நிலை உருவாகும். கடன் தொந்தரவு மனதை வாட்டும். உடல்நலன், மனநலம் பாதிக்கப்படும். இவையெல்லாம் ஏழாம் வீட்டில் பிரவேசிக்கும் சனிபகவானால் உண்டாகக்கூடிய பொதுப் பலன்களாகும்.

எனவே, 10-10-2022 முதல் 29-3-2023 வரை உங்கள் செயல்களில் நிதானமும் உடல்நலனில் அக்கறையும் தேவை.

சனிக்கிழமைதோறும் சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டுவர சங்கடங்கள் குறையும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் 26-12-2020 முதல் சஞ்சரித்துவரும் சனிபகவான் தொடர்ந்து உங்களுக்கு நற்பலன்களையே வழங்கிவருகிறார்.

ஆறாமிடத்தில் சனிபகவான் சஞ்சரித்தபிறகு உங்களுக்கு பிரபல யோகம் உண்டாகியிருக்கும். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். பல்வேறு நன்மைகளை அடைந்திருப்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கண்டிருப்பீர்கள். உடல்நலம் தேர்ச்சிபெற்று ஆரோக்கியமாக நடமாடி இருப்பீர்கள். எதிர்ப்புகளை இல்லாமல் செய்து, எதிரிகளை அடக்கி வெற்றியடைந்திருப்பீர்கள். உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் இக்காலத்தில் உண்டாகியிருக்கும். இவை யாவும் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்களுக்கு வழங்கிவந்த நற்பலன்களாகும். இந்த நிலையில்தான் 25-5-2022 முதல் வக்ரகதிக்கு ஆளானார் சனிபகவான்.

ஆறாமிடத்தில் சனிபகவான் வக்ரமான பிறகு உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகி யிருக்கும். உங்களுடைய எதிர்பார்ப்புகள் இழுபறியாக மாறியிருக்கும், எதிரிகளின் கை வலுத்திருக்கும். நீங்கள் அடைந்து வந்த முன்னேற்றத்தில் தடை உண்டாகி இருக்கும். எங்கும் பிரச்சினை எதிலும் பிரச்சினை என்ற நிலையை சந்தித்திருப்பீர்கள். இதற்கெல்லாம் காரணம் சனிபகவானின் வக்ர காலமாகும்.

இந்த நிலையில் 10-10-2022 அன்று சனிபகவான் வக்ரநிவர்த்தி யாகி 29-3-2023 வரை அதே இடத்தில் நேர்மறையாக சஞ்சரித்து உங்களுக்குப் பலன்களை வழங்கிட வுள்ளார்.

ஆறாமிடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும்போது மிகமிக முன்னேற்றமான பலன்களை வழங்குவார் என்பது பொதுவான விதி. அதனால் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்திடக்கூடிய வாய்ப்புகள் இனி உங்களுக்கு உண்டாகும். நினைத்ததை சாதித்திடக்கூடிய, வெற்றி பெறக்கூடிய சக்தி ஆறாமிட சனியின் சஞ்சாரத்தினால் உண்டாகும்.

இக்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும் என்பதுடன், சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ஆயுள் ஸ்தானத்தில் பதிவதால் உடல் நிலையிலிருந்த பாதிப்புகள் அகலும். பெரிய அளவில் பயமுறுத்திய நோய்களும் மருந்து மாத்திரைகளில் குணமாகும். உங்கள் கௌரவம் சிறப்படையும் என்பதுடன் திடீர் அணுகூலமும் ஆதாயமும் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றிகளை எட்டுவீர்கள். எட்டிச் சென்றவர்கள் தேடிவருவார் கள். சட்ட விவகாரங்களிலும் எதிர்பார்த்த வெற்றியைக் காண்பீர்கள். வாழ்க்கைத் துணையின் வழியில் தக்கசமயத்தில் உதவிகள் உண்டாகும் என்றாலும், யாரையும் நம்பி செயல்படாதீர்கள். யாருக்கும் ஜாமின் கையெழுத்தும் போடாதீர்கள்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் விரய ஸ்தானத்தில் பதிவதால் பொதுச் சேவையில் ஈடுபடுவதுடன் அதன்மூலமாக ஆதாயமும் காண்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான வசதிகளை உருவாக்கிக்கொள்வீர்கள். அதன்மூலம் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கைத் துணையின் அக்கறை உங்கள்மீது அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். சிலர் தந்தையைப் பிரிய நேரிடும். இக்காலத்தில் தந்தையின் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்புண்டு.

சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் சகோதர, தைரிய, வீரிய, கீர்த்தி ஸ்தானத்தில் பதிவதால் சகோதர- சகோதரிவகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் தைரியம் கூடும். வாக்கில் தெளிவிருக்கும். மற்றவர்கள் உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கும் நிலை உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இட வகைகளில் இருந்த பிரச்சினைகள் அகலும். உங்கள் அறிவாற்றல், எழுத்தாற்றல் அதிகரிக்கும். உங்கள் பெருமையை ஊரார் பேசக்கூடிய நிலை உண்டாகும்.

இவையெல்லாம் ஆறாம் வீட்டில் பிரவேசிக்கும் சனிபகவானின் பார்வையினால் உண்டாகக்கூடிய பலன்களாகும்.

10-10-2022 முதல் 29-3-2023 வரை உங்களுக்கு சனிபகவானால் நன்மைகள் அதிகரித்து நீங்கள் எதிர்பார்த்தவற்றில் வெற்றியை அடைவீர்கள்.

கன்னி

உங்கள் ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் 26-12-2020 முதல் சஞ்சரித்துவரும் சனி பகவானால் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு இடையூறுகள், இன்னல்கள், குடும்பத்தில் பிரச்சினைகள், கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, பிரிவு, செய்கின்ற தொழிலில் நஷ்டம், தடங்கல், மேலதிகாரிகளின் விரோதம், நண்பர்கள் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு, வரவைவிட செலவு அதிகம், கடன் தொல்லைகள், வழக்குகளில் எதிரிடையான பலன், பிள்ளைகளால் மனம் வருந்த வேண்டிய நிலை, கல்வியில் தடங்கல், மேற்படிப்பு முயற்சியும் கடுமையான சிரமத்தின்மீது தொடரவேண்டிய நிலை, விவசாயத்திலும் செலவு அதிகம்- வரவு குறைவென்ற நிலை, பொன், பொருளை விற்று நிலைமையை சமாளிக்கவேண்டிய நிலை, குலதெய்வம், குடும்ப தெய்வம் என்று நாடிச் செல்லவேண்டிய வழி உண்டாகியிருக்கும். நிலையான எண்ணமும், திடமான புத்தியுமில்லாமல் இருந்திருப்பீர்கள்.

இந்த நிலையில் 25-5-2022 முதல் ஐந்தாமிடத்தில் சனிபகவான் வக்ரமானபிறகு உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகியிருக்கும். அதுவரை நீங்கள் அனுபவித்துவந்த சங்கடங்களிலிருந்து விடுபட்டிருப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்தவை நடந்திருக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகியிருக்கும். விரும்பியதை அடைந்திருப்பீர்கள். செல்வாக்கு உயர்ந்திருக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சினைகள் சாதகமாகி இருக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகி அவர்கள் வழியே நன்மைகளை அடைந்திருப்பீர்கள்.

இந்த நிலையில் 10-10-2022 அன்று உங்கள் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சனிபகவான் வக்ரநிவர்த்தியாகி 29-3-2023 வரை அதேவீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பலன்களை வழங்கிடவுள்ளார்.

ஐந்தாம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிக் கும்போது எத்தகைய பலன்களை வழங்கு வார் என்பதை கடந்த இரண்டு ஆண்டு களாக நீங்கள் அனுபவித்துத் தெரிந்திருப்பீர் கள். ஐந்தாமிடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு எதிர்மறையான பலன்களையே வழங்குவார். திருப்தி யற்ற நிலையை குடும்ப வாழ்க்கையில் உருவாக்குவார். பிள்ளைகளால் அதிருப்திக்கு ஆளாக நேரும். எண்ணற்ற குழப்பங்கள், இடையூறுகள், சச்சரவுகள், பிரச்சினைகள் என்றெல்லாம் உண்டாகும். இக்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் சங்கடத்தில் முடியுமென்பது பொதுவான விதி.

ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திற்கேற்ப, தசாபுக்திக்கேற்ப, மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைக்கேற்ப இப்பலன்கள் மாறுபடும் என்றாலும், ஐந்தாமிட சனி வழங்கும் பொதுப்பலன் இதுவாகும்.

ஐந்தாமிடத்தில் வக்ரநிவர்த்தி யாகி சஞ்சரிக்கும் சனிபகவான் மீண்டும் உங்களுக்கு சங்கடங்களை உருவாக்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீங்கள் அடைந்துவந்த, சந்தித்துவந்த பிரச்சினைகளை மீண்டும் நீங்கள் சந்திக்கலாம். இதற்குக் காரணம் சனிபகவானின் ஐந்தாமிட சஞ்சார ஸ்தான பலன் மட்டுமல்ல; அவருடைய பார்வை களும் காரணமாகும்.

சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் களத்திர ஸ்தானத் தில் பதிவதால் வாழ்க்கைத்துணை வழியே பிரச்சினைகள் உருவாகலாம். வாய்ப்பேச்சும் வில்லங்கத்தை உண்டாக்கலாம். கூட்டுத் தொழில் புரிபவர்கள் கூட்டாளிகளின் மனக்கசப்பிற்கு ஆளாகலாம். அதனால் தொழில் தள்ளாடலாம். காதல் விவகாரங் களும் எதிர்பார்த்த நன்மையை அளிக்காமல் தகராறு, வம்பு தும்பு என்று மாறலாம். சிறுசிறு விபத்துகள் நடக்கவும் வாய்ப்புள்ளதால் இக்காலத்தில் நிதானம் மிகமிக அவசியம். திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் திருமணம் நடத்தாமல் இருப்பது நல்லது. பெண்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையை உண்டாக்கும்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தில் பதிவதால், நேற்று வரையில் வந்துகொண்டிருந்த வருவாயில் தடைகள் இருக்காது. ஏதாகிலும் ஒருவகையில் வருவாய் வந்துகொண்டிருக்கும். மூத்த சகோதரர்களிடம் உண்டான கருத்து வேறுபாடு விலகி அவர்கள் வழியே நன்மைகளைக் காண்பீர்கள். இளையதாரம் இருப்பவர்களுக்கு அவர்களால் மகிழ்ச்சியும், நிம்மதியும், எதிர்பார்த்தவற்றில் ஆதாயமும் உண்டாகும். மனதில் உற்சாகம் உண்டாகும். உடலில் தெம்பு அதிகரிக்கும்.

சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். பண விவகாரங்கள் இழுபறியாக இருப்பதுடன் நெருக்கடியையும் உண்டாக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாமல் தடுமாறுவீர்கள். அதனால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவீர்கள். கண் பார்வையில் பாதிப்புண்டாக வாய்ப்பிருப்பதால், கண்ணில் பிரச்சினை வந்த தும் அதற்குரிய மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் ஐந்தாம் வீட்டில் நேர்மறையாக சஞ்சரிக்கும் சனி பகவானின் ஸ்தான மற்றும் பார்வைகளால் உண்டாகப்போகும் பொதுப் பலன்களாகும்.

10-10-2022 முதல் 29-3-2023 வரை நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதும், சனிக்கிழமைதோறும் தொடர்ந்து சனீஸ்வர பகவானை வழிபட்டு வருவதும் உங்கள் சங்கடத்தைக் குறைக்கும்.

அனைத்திற்கும் மேலாக அடுத்து 29-3-2023 அன்று வருகின்ற சனிப் பெயர்ச்சி உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை வழங்கு வதற்குக் காத்திருக்கிறது என்பதால் இக் காலத்தை யோசித்து நடத்திச்செல்லுங்கள்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 94443 93717

bala141022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe