சென்ற இதழ் தொடர்ச்சி...

துலாம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 3, 4, 5, 13, 14, 22, 23. பாதக நாட்கள்: 1, 2, 8, 9, 10, 16, 17, 28, 29, 30.

சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: சுயசம்பாத்திய நபர்களுக்கு நல்வழி பிறக்கும். பணி ஓய்வுபெறும் நாட்கள் இம்மாதம் வரின், வரவேண்டியவை தடையின்றி வந்துவிடும். அண்ணன்- தம்பிகள் இருந்தால், அவர்களுடைய குழந்தைகளை செவ்வாய் உயர்வடையச் செய்வார். கணவனை இழந்த சகோதரி உங்களுடன் இருந்தால் அவர்களாலும் நன்மைகள் பெறலாம். சொந்த பந்தங்களுடன் கொடுக்கல்- வாங் கலில் உஷார் நிலையில் செயல்படவேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். திருமணம் கைகூடும். 8, 9, 17, 18, 21, 22, 26, 27 தேதிகளில் வாராக் கடன் உங்களை நாடிவரும். கெட்ட பழக்கம் எதுவும் கூடாது. பணிமாற்றம் செய்தால் கெடுதலாகிவிடும். நவகிரகங்களில் புதன் அல்லது பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து வணங்கலாம்.

Advertisment

சுவாதி: பத்திரிகைத்துறை, எழுத்துத்துறை யினருக்கு இரண்டாவது வாரம் 18, 19 தேதிகள் நம்பிக்கையூட்டும்விதமாக முன்னேற்றம் காணப்படும். 22, 23 தேதிகளில் தடைப்பட்ட திருமணப் பேச்சுகள் புத்துயிர் பெறும். வியாபாரிகளுக்கு அதிக முதலீடுகள் பணவரவை அதிகரிக்கும். கேது பயணங்களில் கெடுதலை உருவாக்கு வார். விபத்துகள் நடவாதிருக்க வைடூரிய (கேட்ஸ்-ஐ) மோதிரம் ஓபன் செட்டில் அணிதல் நன்று. குழந்தைகள் நேர்காணல் போன்றவற்றுக்குச் செல்லும் போது உங்களது துணை தடையை உருவாக்கும். தெற்கு நோக்கியிருக்கும் விநாயகரை வணங்கிச் செல்லல் நன்று. (விநாயகர் படம் தென்திசை நோக்கி இருத்தல் போதுமானது). நாய் வளர்ப் போர்- குறிப்பாக வெளியில் உலாவச் செல்லும்போது கருப்பு நாயால் கெடுதல் விளையும்; கவனம். விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: குடும்பத்தின் சீரிய கட்டுக்கோப்பை சிதைக்கும்விதமாக எந்தச் செயல் நடந்தாலும் சுக்கிரன் நல்வழி காட்டுவார். நீங்கள் வசிக்கும் வீடு சிங்கமுகமாக இருந்தால் வாஸ்து முறையில் சில பின்னடைவுகள் வரும். (வீட்டின் முன்பாகம் பெரியதாகவும், பின்புறம் சிறியதாகவும் இருந்தால் அது சிங்கமுக வீடு). எனவே இம்மாதம் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாவிலைத் தோரணம் வாசலில் கட்டுவது நல்லது. கண் மருத்துவர்கள், கட்டட pppநிபுணர்களுக்கு ராசியான மாதம். சுக்கிரன் இரண்டிலும்; ஆறாமிடம் சுத்த மாகவும் தென்படுவதால், ஆண்களின் விந்தில் குறைகள் ஏற்படலாம். எனவே இம்மாதம் சந்தான பாக்கியத்திற்கு முயற்சிப்பது பயனற்றது. ஒரு கருப்பு நிறத்துணியில் ஆறு ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து இருட்டறையில் வைப்பது நன்று.

விருச்சிகம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 6, 7, 16, 17, 24,

Advertisment

25. பாதக நாட்கள்: 3, 4, 5, 11, 12, 18, 19, 24.

விசாகம் 4-ஆம் பாதம்: மன அமைதியை எவ்வாறாவது கிரக நாதர்கள் அள்ளித் தருவார்கள் என்ற நிலைதான் இம்மாதம் தெரிகிறது. இருப்பினும் கூடா நட்பும், குருட்டு நம்பிக்கையும் வில்லங்கத்தைத் தரும். இரண்டாவது வாரம் "பிசி'யாகக் காணப்படுவீர்கள். இம்மாதத்தில் திருமணம் நிச்சயமானால் வருங்காலம் செம்மையாகிவிடும். சனியும் குருவும் தனுசில் சேர்ந்திருப்பதால், கஷ்டங்கள் அகல ஒரு சிறு செம்புக்குடத்தில் நீரை நிரப்பி, காலில் செருப்பில்லாமல், சிவன் கோவிலுக்குக் கொண்டுசென்று வடகிழக்கு குரு பாகத்தில் வைத்து, மனக்குறைகளைக் கூறி வணங்கியபின், அநத நீரைக் கொண்டுவந்து வீட்டில் தெளித்துக்கொண்டால் கெடுதல் அத்தனையும் விடைகொடுக்கும். (மினரல் வாட்டர் கூடாது).

அனுஷம்: செவ்வாய் துலாத்தில் இருந்து இயங்குவதால் உங்களுடைய மனோபாவம் பிறரை அடக்கி ஆளவே துடிக்கும். கண் உபாதை வரும். வயதில் மூத்தவர்களின் உதவி கிடைக்காது. தேன்கலந்த பஞ்சாமிர்தத்தை முருகப்பெருமானுக்கு செவ்வாயன்று படைத்து வணங்குதல் போதுமானது. 18, 19 தேதிகளில் திடீரென நல்லவை நடக்கும். குடும்பத்தில் திருமண வைபோகம், ஷேர் மார்கெட்டில் நல்ல முதலீடுகள் லாபத்தைத் தரும். ராகு மிதுனத்தில் இருப்பது சீராக அமையாது. குழந்தைகள் நலம், பணவிரயம் (பழைய கடன்) கவலையைத் தரும். 800 கிராம் அல்லது எட்டு மரக்கரித்துண்டை பழுப்புநிறத் துணியில் வைத்து, அதனுடன் ஒரு கோமேதக ராசிக்கல்லை- வீட்டின் மேற்கு பாகத்தில் வைத்து, மாத இறுதியில் நீர்நிலையில் போடுவது போதுமானது. (செம்புப் பாத்திரம் அல்லது கொட்டாங்கச்சியில் வைத்துக்கொள்ளலாம்.)

கேட்டை: சண்டையிட்டுப் பிரிதல் முதிர்ந்த வயதில் வருத்தத்தை விளைவிக்கிறது. 50 வயது கடந்தவர்கள் இம்மாதம் சகிப்புத்தன்மையைத் தனதாக்கவேண்டும். சிலர் குடும்ப அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவார்கள். பிறருடைய ஆலோசனைகளை செவிமடுப்பதை புதன் சகித்துக்கொள்ள மாட்டார். 26, 27 தேதி களைக் கடந்தபின் திடநம்பிக்கை தானாக வந்துவிடும். வாழ்வின் தன்மைக்கு புத்துயிர் தரும்விதமாக நல்ல முடிவெடுக்கப் போகிறீர்கள்.

மாதக்கடைசியில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடல் மகிழ்வைத் தரும். சொந்த சம்பாத்தியம் விரயமாகாதிருக்க பௌர்ணமி விரதமிருத்தல் நன்று. நஞ்சை, புஞ்சை விளைநிலம் வைத்திருப் போர் வடகிழக்கு பாக மனையில் ஒரு நாயுருவிச் செடியை நடவும்.

தனுசு

ராசிக்கு சிறந்த நாட்கள்: 8, 9, 10, 18, 19, 26, 27. பாதக நாட்கள்: 6, 7, 13, 14, 20, 21.

மூலம்: ராசியிலேயே சந்திரன், சனி, கேது இருப்பார்கள். மிதுனத்தில் ராகு, கன்னியில் செவ்வாய், துலாத்தில் சூரியன், விருச்சிகத்தில் புதன், குரு, சுக்கிரன். முதல் வாரம் சூழ்நிலைகள் மிகப்பிரமாதமாக அமைந்துவிடும். 8, 9-ல் வியாபாரத்தில் தொய்வுநிலை தோன்றும். மாணவர்கட்கு கல்வியில் தடைவரும். சரஸ்வதியை நீலநிறப் பூவால் அர்ச்சனை செய்து வணங்கவும். பண நெருக்கடி தொடர்கதையானால் இனிப்பு கலந்த காய்ச்சாத பாலை கிழக்கு நோக்கிச் செல்லும் அரசமர வேர் மண்ணில் ஊற்றி, அதனைக் கிளறி சிறிது எடுத்துவந்து திலக மிட்டுவந்தால் மனக்குறைகள் தீர்ந்துவிடும். ஹெல்மட் இல்லாமல் இரு சக்கர வாகனப் பயணம் கூடாது.

"மா மஹாதேவ ஸம்ஸ்துத்யா மஹஷீகண பூஜிதா!

ம்ருஷ்டாந்நதா ச மாஹேந்த்ரீ மஹேந்த்ர பததாயிநீ!!'

என்னும் மந்திரத்தை தினமும் காலை 28 முறை ஜெபிக்கவும்.

பூராடம்: மூன்றாவது வாரம் பண முதலீடுகள் வேண்டாம். எதிரிகளின் செயல்கள் வேதனையுறச் செய்யும். இம்மாதம் உங்களுடைய லைஃப் ஸ்டைலில் ஒரு மாற்றம் தெரியவரும். 21, 23 ஆகிய தேதிகளில் உத்தியோகத்தில், நிம்மதி குடும்பத்துக்காக அதிக செலவினம், பழைய நண்பனின் புது உறவு இவையாவும் நிகழும். சூரியன் கூட்டுவியாபாரத்தில் பிரிவினையைத் தூண்டுவார். மாமன், மைத்துனருடன் இணைந்து புது முயற்சிகள் வேண்டாம். சூரியனுக்கு சுலபப் பரிகாரம்- இரு செம்பு மோதிரம் வாங்கி, சூரிய உதயத்தின்போது கிழக்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றியபின் ஒன்றை மோதிர விரலில் அணிந்துகொண்டு, இன்னொன்றை ஆற்று நீரில் வீசுவது போதுமானது. ராகுவின் இருக்கையையும் சீர்செய்ய வேண்டும். சிவப்பு முள்ளங்கி அல்லது காரட்டை பழுப்புநிறப் பசுவுக்குத் தரலாம்.

உத்திராடம் 1-ஆம் பாதம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு இளமையில் திருமணம்புரிவது அதிக நற்பலனைத் தராது. 35 வயதைக் கடந்தபின்தான் உயர்வான வாழ்க்கை என சாஸ்திரக் குறிப்பு கூறுகிறது. எது எப்படியோ- "அழுதாலும் பிள்ளையை அவள்தானே பெறவேண்டும்' என்பது பழமொழி. பெண்களுக்கு இம்மாதக் கடைசி வாரம் 24, 25 தேதிகள் புகழைத் தேடித்தரும். ஆனால் அசையா சொத்துகள் வாங்கும்போது மூலப்பத்திரத்தை உன்னிப்பாகப் படித்தபின் முடிவுக்கு வரவேண்டும். இம்மாதம் சுபநிகழ்ச்சி யில் கூடிமகிழும் வாய்ப்பு வரும். திருமணத் தடை தொடர்ந்தால் ஐந்து வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் நவகிரகத்தில் சுக்கிரனை வணங்கவேண்டும். அல்லது பால்பொருட் களான தயிர் சாதம், லஸ்ஸி, வெனிலா ஐஸ்கிரீம் உட்கொண்டால், சுக்கிரன் முக அழகை அள்ளித் தருவார்.

மகரம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 2, 11, 12, 20, 21, 28, 29, 30. பாதக நாட்கள்: 8, 9, 10, 16, 17, 22, 23.

உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: இம்மாதம் முதல் வாரம் 6, 7 தேதிகள் மனஆறு தலைத் தரும். இரண்டாவது வாரம் குடும்பம், பொருளாதார ரீதியாக பின்னடைவை எதிர்நோக்கும். அலுவலகப் பணியாளர்கள் 11, 12 தேதிகளில் பாராட்டைப் பெறலாம். தனுசில் இருக்கும் கிரகநாதர்கள் வேதனைகளை அதிகமாக்குவார்கள். தடைப்பட்ட மகளின் திருமணம் ஈடேறும். ஆடவர்கள் மனைவியின் தங்கைக்கு வலக்கையில் அணியு மாறு ஒரு வெள்ளி மோதிரம் இனாமாகத் தருதல் தடைகளை அகலச் செய்யும். இந்த மாதம் வயது 24 அல்லது 27 எனில் திருமணம் புரிவது பின்விளைவைத் தரும். பரிகாரம்- இரண்டு வெண்முத்து, இரண்டு வெள்ளி உலோகத்துண்டை வாங்கி, ஒரு "செட்'டை நீங்கள் வைத்துக்கொண்டு, மற்றொன்றை வேப்பமர வேரில் புதைப்பது நன்று.

திருவோணம்: ஆராய்ச்சி செய்வோர், டெக்னீஷியன் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த மாதம். பத்திரிகைத்துறையினருக்கும் 8, 9, 10 தேதிகளில் நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். தம்பதிகளிடையே குடும்பம் சார்ந்த பல பிரச்சினைகள் தீர வழி கிடைக்கப்பெறும். 13, 15 தேதிகளில் அசையா சொத்து விவகாரங் களில் உஷார் நிலையில் செயல்படவேண்டும். இம்மாதம் புலால் உணவை மறுத்தால் சூரியனின் பேராதரவு கிடைக்கப்பெறும். வாஸ்துமுறையில் வசிக்கும் வீட்டில் அதிக மரம் இருந்தால்- கனவில் பாம்பு வந்தால், நாகதோஷம் தீர காளஹஸ்தி சென்று வணங்க வும். நாகர்கோவிலில் நாகருக்கு என தனி ஆலயம் உள்ளது. அங்குசென்று வணங்கலாம். மூன்று காரட் கோமேதகம் வெள்ளியில் மோதிரமாக அணிவதும் போதுமானது.

அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்: திருமணமாகாத வாலிபர்களுக்கு, இம்மாதம் ஒரு புது முடிவு பேரானந்தம் தரும். 20, 21 தேதிகளில் பிறரிடம் சிறு வெறுப்புணர்ச்சி காட்டினாலும் அது பெரிய இழப்பைத் தந்துவிடும். இம்மாதம் வீடு, வாகனம் என எதையாவது சீரமைக்க பணம் செலவிட நேரிடும். வேலையில்லாதோருக்கு 26, 27 தேதிகள் நற்பலனைத் தந்துவிடும். குடும்பச் சூழ்நிலை காரணமாக ஒரு சிறு பிரச்சினை பூதாகரமாகும். கிராமப்புறவாசிகள், மூன்று கிணற்று நீரை சேகரித்து சனி ஹோரையில் குளிப்பதால் பல தொல்லைகள் விடை கொடுக்கும். வயோதிகப் பெரியவர் இருந்தால் ஆரோக்கியம் பின்னடைவாகும். அவர்கள்மீது முழு கவனம் தேவை. இம்மாதம் 14 நாட்கள் பணவரவு நாளாக அமையும்.

கும்பம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 3, 4, 5, 13, 14, 22, 23. பாதக நாட்கள்: 11, 12, 18, 19, 24, 25.

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: குருப்பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு பல அற்புதங்களை அள்ளித்தரும் என ஏகோபித்த செய்தியைப் பார்த்தோம். மகிழ்ச்சி. கோட்சாரரீதியாக முதல் வாரம் 3, 5 தேதிகளில் நெருங்கிய நண்பரைப் பகைக்க நேரிடும். மேலதிகாரிகளின் ஆதரவு 11, 12 தேதிகளில் கிடைக்கப்பெறும். உங்களுடைய முன்கோபம் கெடுதலுக்கு வழிவகுக்கும். சுக்கிரன் வலுவுடன் இருப்பதால் சிலருக்கு மனைவியின் சகோதரர்கள்மூலமாக நன்மைகள் கிடைக்கப்பெறும். கெட்ட பழக்கம் உடையவர்கட்கு சூரியனால் யூரினல் (சிறுநீர்) கெடுதி ஏற்படும். இம்மாதம் செவ்வாய்க்கிழமை சிவப்பு வண்ணத்தை அதிகம் உபயோகிப்பது நன்று. எரிபொருள் விற்பனை செய்வோருக்கு லாபம் இரட்டிப் பாகும். நல்ல கிரகநாதர்கள் ஒன்றாக ராசியி லேயே இருப்பதால் மாணவர்கள் மூளை பலத்தை நல்ல நூல்களால் விரிவடையச் செய்யலாம்.

சதயம்: சொல்வண்மையும் மனத்தெளிவும் இம்மாதம் முக்கியமானது. மூன்றாவது வாரம் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். விருப் பமானதை வாங்கவும் விற்கவும் துணை கிடைக்கும். 20, 21 தேதிகள் எந்த உடன் பாட்டிலும் கவனக்குறைவுடன் செயல்படக் கூடாது. மாணவர்கள் நேர்மையின் முன்னுதா ரணமாக செயல்படல்வேண்டும். குரு பகவான் ஒருபோதும் கெட்ட நடத்தைக்குத் துணைவர மாட்டார். இன்னும் ஓராண்டு அவருடைய தனுசு ராசியிலேயே நிலைகொள்வார். இருதார அமைப்புள்ள ஆண்களுக்கு இம்மாதம் ஆண் குழந்தை பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது. வருமானம் பின்னடைவாகும். குழந்தை பிறந்த ஏழாவது நாள் ஒரு தேங்காயும் ஒன்பது பாதாம் பருப்பும் திருஷ்டி சுற்றி நீரில் போடலாம்.

பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்: இந்த மாதத்தின் கடைசி வாரம் நீங்கள் மிக சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். வியாபாரத் திலும், பொது வாழ்விலும் திடமான முடிவெடுப் பீர்கள். 26, 27 தேதிகளில் வெற்றிக்கான உறுதி தெரியவரும். பொருளாதாரமும் சிறப்புறும். ராகு ராசிக்கு 5-ல் இருப்பதால், திருமணமாகி இதுநாள்வரை குழந்தை பாக்கியமில்லாதோர், மூன்று வருடத்தைக் கடந்தவர்கள் இனிவரும் திருமண நாளில் இன்னும் ஒரு தாலி அணிவித்து, கேது பகவானை வணங்குவது நல்ல பரிகாரம். வைடூரிய ராசிக்கல் அணியலாம். பசுவும் கன்றும் இணைந்த வெள்ளி உலோக பொம்மையை வீட்டில் தென்கிழக்கில் வைத்துப் பூஜித்துவந்தால், முன்னோர் சாபத்தால் தடைப்பட்டாலும் நன்மைகள் நடக்கும்

மீனம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 6, 7, 16, 17, 24, 25. பாதக நாட்கள்: 13, 14, 20, 21, 26, 27.

பூரட்டாதி 4-ஆம் பாதம்: "பணத்திற்கு மட்டும் திருமணம் செய்யாதே; பணம் இல்லாமலும் திருமணம் செய்யாதே' என்பது இங்கிலாந்து பழமொழி. ராசிக்கு ஏழுக்குடைய புதன், சுக்கிரன் வீட்டில் செவ்வாயுடன் காணப் படுகிறார். இம்மாதம் பண்டிகை நாட்களில் இன்னுமொரு குடும்பத்துடன் இணைந்து கொண்டாட நேரிடும். 5, 7 தேதிகளில் கடனுக்கு முயற்சித்தாலும் கிடைப்பது கடினம். இரண்டாவது வாரம் வெற்றிகள் மகிழ்வடையச் செய்யும். சொந்த ஜாதகத்தில் 5-ல் சனி இருந்தால் மனைவிக்கு பார்வையில் கோளாறு வரும். அது நீண்டநாள் தொடர்ந்தால் ஒரு சின்ன ஆட்டுக்குட்டியை தானம் செய்வது நல்லது. செவ்வாய் துலாத்தில் இருப்பதால் கணவனை இழந்த மாதருக்கு உதவுதலும் நல்லது.

உத்திரட்டாதி: இரண்டாவது வாரம் 16 தேதிக்குமேல் உங்களுடைய முயற்சிகள் யாவும் நேரத்தைப் பாழடிக்கும்விதமாக அமையும். பொது நிகழ்ச்சியில் கௌரவம் பறிபோக நேரலாம். 18, 19 தேதிகளில் அவற்றின்மூலம் நல்ல பாடம் கற்றுக்கொள்வீர்கள். 22 தேதிக்குமேல் குருவின் கருணையால், மனம் மகிழும்விதமாக குடும்பம் மகிழ்ச்சியுடன் காணப்படும். ராகு பகவான் ராசிக்கு 4-ல் இருப்பதால் பழமையான- விரிசல் விழுந்த வீட்டில் இரவில் தங்குவதைத் தவிர்க்கவேண்டும். வெடிப்பு ஏற்பட்ட இடத்தை சீர்செய்வது உத்தமம். செவ்வாயும் புதனும் 8-ல் இருப்பதால், கணவனை இழந்த மாதர்களுக்கு உதவலாம். இம்மாதம் மிகுந்த குளிருள்ள பானங் களைத் தவிர்த்தல் வேண்டும்.

ரேவதி: முதல் வாரம் ஆரோக்கியத்தில் முழு கவனம் வேண்டும். காலநிலை சார்ந்த நோய்கள் சுலபமாகத் தொற்றிக்கொள்ளும். 26, 27 தேதிகளில் குழந்தைகளிடம் விட்டுக் கொடுத்து கண்டிப்பில்லாமல் பழகவேண்டும். இசைக் கலைஞர், நாடகம் மற்றும் நடிகர்கட்கு கிரகநாதர்கள் பல சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருவார்கள். இம்மாதம் திருமணம் ஈடேறும் போது பல வி.ஐ.பி.களை எதிர்பார்க்கலாம். திருமணம் மற்றும் பொதுவிழாக்களின்போது நீலம் மற்றும் சாம்பல் நிற ஆடையைத் தவிர்ப்பது நன்று. சூரியன் இருக்குமிடம் பின்னடைவு தரும்விதமாக இருப்பதால், வெள்ளியிலான பரிசுப்பொருட்களை இம்மாதம் உபயோகித்தல் கூடாது. ஆண் குழந்தைகட்கு வெள்ளி உலோகப் பரிசுப் பொருள் தருவது உத்தமம்.

செல்: 93801 73464