Advertisment

12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி(சென்ற இதழ் தொடர்ச்சி...)

/idhalgal/balajothidam/12-remedies-solve-problem-foot-pain-lucknow

நான்கில் பாதகாதிபதி

லக்னத்திற்கு நான்கில் நிற்கும் பாதகாதிபதியால் தாயன்பு கிடைக்காது. மாற்றாந்தாயிடம் அல்லது தாத்தா- பாட்டியால் வளர்க்கப்படுவார்கள். பள்ளிப் படிப்பில் பாதிப்பிருக்கும். பள்ளிப் பருவத்தில் பல பள்ளிகள் மாறிப் படிப்பார்கள். கல்லூரிக்குச் சென்றபிறகு கல்வியில் முன்னேற்றமிருக்கும்.

Advertisment

சுக ஸ்தான பாதிப்பிருக்கும். கால்நடை மற்றும் உயிரின வளர்ப்பில் ஆதாயமிருக்காது. சிலர் கால்நடை வளர்ப்பு என்ற பெயரில் உயிரினங்களை முறையாகப் பராமரிக்காமல் வதைப்பார்கள். நாய் வளர்ப்பவர்கள் சிலர் நாய்க்கு கருத்தடை செய்து, பாலுணர்வைக் கட்டுப்படுத்தி தீராத பாவத்தைச் சேர்ப்பார்கள்.

parigaram

எளிதில் வீடு, வாகன யோகம் கிட்டாது. அப்படிக் கிடைத்தாலும் வாஸ்துக் குற்றமுள்ள வீடு, விருத்தி யில்லாத சொத்து, பயன்படுத்தமுடியாத பழைய வீடு, சொத்து கிடைக்கும். வீட்டில் நிலத்தடி நீர் வற்றும். சொத்து தொடர்பான வம்பு, வழக்கால் மன உளைச்சல் இருக்கும். சொத்து வாங்கும்போது பத்திரத்தை பலமுறை சரிபார்க்க வேண்டும்.

Advertisment

அடிக்கடி வாகன விபத்து நடக்கும். நான்காமிடத் திற்கு சனி, ராகு- கேது மற்றும் அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சம்பந்தமிருப்பவர்கள் பலருக்கு வாகனப் பதிவு எண்ணில் ராகுவின் 4-ஆம் எண், கேதுவின் 7-ஆம் எண்ணின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும். உதாரணமாக, 4477, 7744, 4774, 7447 போன்றவாறு இருக்கும். இதுபோன்ற வாகனங் களில் அடிக்கடி நாய் குறுக்கே வந்து விபத்து நடக்கும். கிராமப்புரங்களில் இருப்பவர்களுக்கு பன்றி குறுக்கே விழும். ஏன், சிலர் "ஸ்பீடு பிரேக்'கிலும் விழுந்து காயம் ஏற்படும். பலமுறை விபத்து நடந்தாலும் வாகனத்தை மாற்றமாட்டார்கள் அல்லது மாற்றமுடியாத சூழல் நிலவும்.

நான்கில் பாதகாதிபதி இருக்கும் விவசாயி களுக்கு வாழ்நாள் போராட்டமாகவே இருக்கும். போதிய நீராதாரம் இருக்காது.

பரிகாரம்

அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பிற்குத் தேவையான ஜியாமெட்ரிக் பாக்ஸ், கலர் பென்சில், நோட்- பேனா, பென்சில் போன்றவற்றை வழங்கலாம்.

மாணவர்கள் கண்டிப்பாக ஹயக்ரீவரை வழிபடவேண்டும்.

வீட்டில் துளசி வளர்க்க, மன அமைதி தேடிவரும்.

அமாவாசை நாட்கள

அமாவாசை நாட்களில் பசுவை 27 முறை வலம்வந்து வணங்கி, காய்கனிகளை தானம் தரவேண்டும்.

முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்களிடம் அன்பாக, ஆதரவாக பேசி, வேண்டிய உதவிகளைச் செய்துவர நன்மை கிடைக்கும்.

ஐந்தில் பாதகாதிபதி

ஒரு மனிதனுக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் மிக முக்கியம். ஐந்தாமிடம் பலம்பெற்றால் அதிர்ஷ்டத்தை நம்பியே வாழ்நாளைக் கடத்திவிடலாம்.

நடக்காததை நடப்பதாகக் கற்பனையையும் கனவையும் வளர்ப்பவர்கள். அதிர்ஷ்டக் குறைவு மிகுதியாக இருக்கும். புகழ், அந்தஸ்து, கௌரவம் மட்டுப்படும்.

மனதளவில் ஆன்மிகவாதியாகவும், வெளியுலகத்திற்கு நாத்திகவாதியாகவும் இருப்பார்கள். சாஸ்திர நம்பிக்கை இல்லாதவர் கள். குலதெய்வக் குற்றம் இருக்கும் அல்லது குலதெய்வம் தெரியாது. பூர்வீகத்திற்குச் சென்று வருவதில் தடை, தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தால் பயனற்ற நிலையிருக்கும். பல தலைமுறையாக பூர்வீகச் சொத்தை வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். "கூடா நட்பு கேடில் முடியும்' என்பதற்கிணங்க தவறான காதலால் கௌரவம் குறைவுபடும் விரும்பிய பதவி மற்றும் பதவி உயர்வு கிடைக்காது. பதவியில் இருந்தாலும் திறமைக் கேற்ற பாராட்டும் பரிசும் கிடைக்காது. புதிய சிந்தனைகளை செயல்படுத்த முடியாது. பணிச்சுமை அதிகரிக்கும். ஊதியம் குறைவாக இருக்கும். சிலருக்கு, தனக்குக்கீழ் பணிபுரிபவர் களை வழிநடத்தும் திறமை இருக்காது.

கல்லுரிப் படிப்பில் விரும்பிய பாடம் மற்றும் விரும்பிய கல்லூரி கிடைக்காது. பள்ளிப் பருவத்தில் நன்றாகப் படித்தவர்கள் கல்லுரியில் அரியர்ஸ் வைப்பார்கள். வெகு சிலருக்கு கல்லூரிப் படிப்பு தடைப்படும்.

பங்குச் சந்தையில் பெரும் பண இழப்பை சந்திப்பார்கள். அதிர்ஷ்டத்தைத் துரத்தி உழைப்பை மறப்பவர்கள். ஐந்தில் நிற்கும் பாதகாதிபதி புத்திர தோஷத்தால் வாழ்க் கையை வெறுக்க வைப்பார். தன் குழந்தை யைத் தவிர, மற்ற எல்லா குழந்தைகளையும் கொஞ்ச வைப்பார்.

ஐந்தாமிடத்தில் நிற்கும் எந்த கிரகமும் பெரிய பாதிப்பைத் தராது என்பது நாமறிந்த உண்மை. பாக்கியத்தோடு கலந்த பாதகத் தைத் தரும் என்பதே இதன் சூட்சுமம்.

அதாவது, பாக்கியத்தையும் தருவார்;

அதை அனுபவிக்க முடியாத பாதகத்தையும் தருவார். உதாரணமாக, ஐந்தில் பாதகாதிபதி நின்று தசை நடத்தினால், பங்குச் சந்தை, யூக வணிகத்தில் பெரும் லாபத்தை காலையில் கொடுப்பார். அன்றைய பொழுது முடிவதற் குள் வேறு தொழில் அல்லது ஏதாவதொரு வழியில் கிடைத்த வருமானத்திற்குமேல் இழப்பையும் கொடுப்பார். கைக்கு எட்டியது வாய்க்குக் கிடைக்காது. கிடைத்ததை அனுபவித்தால் மட்டுமே கொடுப்பினை. கிடைத்ததை அனுபவிக்கும் முன்பே தட்டிப்பறிப்பதே பாதகாதிபதியின் சித்து விளையாட்டு. இது பாக்கியமா? பாதகமா?

பரிகாரம்

பௌர்ணமி திதியில் சத்திய நாராயணர் பூஜை நல்ல பலன் தரும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.

குலதெய்வ வழிபாட்டை முறைப்படுத்த வேண்டும்.

ஆறில் பாதகாதிபதி

மறைவு ஸ்தானங்களில் நிற்கும் பாதகாதி பதி பாதகத்தைச் செய்யமாட்டார் என்பது சிலரின் நம்பிக்கை. மறைவு ஸ்தானத்தில் நின்ற பாதகாதிபதி எத்தகைய பாதகத்தைச் செய்தார் என்பதை அனுபவித்தவர்களிடம் கேட்டால், இரண்டு சினிமாப் படம் அல்லது இரண்டு மெகா சீரியல்கள் எடுக்குமளவிற்கு கதை சொல்வார்கள். காது கொடுத்துக் கேட்கமுடியாத பாதகம் உண்டு.

6-ல் நிற்கும் பாதகாதிபதி வேலை இல்லாமல், வேலை கிடைக்காமல் அவதிப்படுத்துவார். சிலருக்கு குறைந்த ஊதியத்திற்கு அதிகம் உழைக்கும் சூழ்நிலையைத் தருவார். அதீத உடல் உழைப்பால்- சோர்வால் உடல் ஆரோக்கி யம் கெடும். உயரதிகாரி களிடம் இணக்கமற்ற சூழல் அல்லது உடன் பணிபுரிபவர்களால் மன உளைச்சல் இருக்கும். சிலருக்கு தகுதிக்கு மீறிய பதவியைத் தந்து, கிடைத்த பதவியை திறம் படச் செய்துமுடிக்க முடி யாத அவஸ்தையையும் தருவார். தீராத கடன், அடுத்தவர்களுக்காக கடன்படுதல், கொடுத்த கடன் திரும்பி வராது போதல் போன்ற பிரச்சினை இருக்கும்.

வாழ்நாள் முழுவ தும் மருந்து சாப்பிட வேண்டிய நோயால் கவலை உண்டு. அடி வயிறு தொடர்பான உடல் உபாதைகள் இருக்கும். எதிரிகள் எப்பொழுதும் கூடவே இருப்பார்கள். சரியான நேரத்தில் உணவு சாப்பிட இயலாது.

முழுமையான அசுபத் தன்மையோடு இயங்கி னால் நீதிமன்ற பிரச்சினை, சிறைப் படுதல், அதிர்ச்சி தரும் சம்பவங்கள் மன வருத் தத்தைத் தரும். தாய்மாம னின் ஆதரவின்மை, தொந்தரவுகள் இருக்கும்.

பரிகாரம்

திருச்செந்தூர் முருகனை சரணடைந்து வழிபட, கடன், உத்தியோகம், நோய் தொடர் பான பிரச்சினைகள் இருந்த சுவடு தெரியாது.

உணவில் நல்லெண்ணெய் சேர்க்கவேண்டும்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு, இயன்ற தானம், உதவி செய்யவேண்டும்.

செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரையிலான சனி ஓரையில் விநாயகரை ஒன்பதுமுறை வலம் வரவேண்டும்.

உடன்பணிபுரிவர்களுக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை; உபத்திரவம் செய்யாமலிருந்தால் பல நன்மைகள் தேடிவரும்.

ஏழில் பாதகாதிபதி

ஒரு மனிதனின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான அத்தியாயம். அதன்படி, ஏழாமிடத்தில் எந்த பாதிப்பும் இல்லாவிடில், உரிய வயதில் திருமணம் நடந்து முடியும். ஏழில் நிற்கும் பாதகாதிபதி மொத்த வம்பு வழக்கின் குத்தகைதாரர் என்பதால், திருமணம் சற்று காலதாமதமாகும். திருமணமான தம்பதி களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். மன நிறைவான மணவாழ்க்கை அமையாது. சில தம்பதிகள் தொழில், உத்தியோகம் நிமித்தமாக ஆளுக்கொரு ஊரில் அல்லது நாட்டில் வாழ்வார் கள். வெகு சிலருக்கு கருத்து வேறுபாட்டால் பிரிவினை நடக்கும். சிலருக்குத் திருமணமே நடக்காது.

தொழில் கூட்டாளி களால் பணப் பரிவர்த்தனை யில் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழில் ஒப்பந்தம், கூட்டாளிகள் பிரச்சினை அல்லது வாழ்க்கைத்துணையால் ஏற்படும் மனக்கசப்பு என்று ஏதாவதொரு காரணத்திற்காக வம்பு, வழக்கு உருவாகும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவது கடினம்.

நண்பர்கள் விலகிச்செல்வது போன்ற உணர்வு மனதை வாட்டும். பொதுநலச் சேவையில் ஆர்வம் அதிகரிக்கும். பொது நலச் சேவை பிறருக்காகச் செய்யும்போது, அனைத்தும் தன்னலமற்ற சேவையாகி பரிபூரணமாக முடிந்து பாராட்டு கிடைக் கும். சுயநலத்திற்காகச் செய்யும்போது வம்பு, வழக்கு, குற்றம் பதிவாகும்.

பரிகாரம்

பாதகாதிபதி தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோஷத் தன்று விரதமிருந்து சிவபெருமானையும் நந்தியையும் வழிபடுவதுடன், உளுந்து, சுண்டல் தானம் தரவேண்டும்.

தொடர்ந்து பன்னிரண்டு பௌர்ணமி யன்று கிரிவலம் வரவேண்டும்.

வாழும் ஊரின் சிறப்பு வாய்ந்த அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் குங்கு மார்ச்சனை செய்து, ஆறு நெய் தீபமேற்றி வழிபடவும்.

எட்டில் பாதகாதிபதி

எட்டாமிடம் என்பது துன்பம், வேதனை, சிக்கல், அவமானம், ஆபத்து போன்ற விரும்பத்தகாத செயல்களைப் பற்றிக் கூறுமிடம். மறைவு ஸ்தானம் என்பதால், விரும்பத்தகாத செயல்கள் நடந்துகொண்டே இருக்கும். ஆயுள், ஆரோக்கியம் பற்றிய பயவுணர்வு இருந்துகொண்டே இருக்கும். நித்திய கண்டம், பூரண ஆயுள் என ஆயுள்பயத்தை அதிகரிக்கும்.

எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத- வெளியே தெரியாத மர்மநோய் இருக்கும். அடிக்கடி கைகால்களில் அடிபட்டுக் கொண்டே இருக்கும்.

நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாமல் வெறுமை உணர்விருக்கும். மன நிறைவிருக் காது. தனியாக, அமைதியாக இருப்பதை மனம் விரும்பும். சிலர் பூர்வீகத்தைவிட்டு வெகுதொலைவில் சென்று குடியேறுவார்கள். பாதகாதிபதி ராகு- கேதுவுடன் சம்பந்தம் பெறும்போது சட்டத்திற்குப் புறம்பான குற்றத்தில் ஈடுபட்டு சிறைதண்டனை அனுபவிக்கநேரும்.

எட்டாமிடம் என்பது பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால், சிலரின் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிப்படையும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் வேதனை தரும் நீடித்த வம்பு, வழக்கு- அதனால் வரும் அசிங்கம், அவமானம் என வாழ்வே வெறுப்பாக இருக்கும். சிலருக்கு இயற்கைக்கு மாறான மரணம் ஏற்படும். வெகுசிலருக்கு தவறானவழியில் திடீர் பணக்கார யோகம் கிடைக்கும்.

பரிகாரம்

திருவாரூர் மாவட்டம், திருவாஞ்சியம் கிராமத்திலுள்ள வாஞ்சிநாதரை வழிபட, எட்டாமிட பாதகாதிபதியால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

சனிக்கிழமை எட்டுபேருக்கு எள்ளு ருண்டை தானம் தரவேண்டும்.

"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்'

என்னும் மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிப்பதன்மூலம் மரண பயம் நீங்கும்; ஆயுள் அதிகரிக்கும்; இறைவழிபாட்டில் நாட்டம் ஏற்படும்; தீராத நோய் தீரும்.

தீராத வம்பு, வழக்கை சந்திப்பவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் காலபைரவரை வழிபடவேண்டும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406

bala131120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe