12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்! (சென்ற இதழ் தொடர்ச்சி...)

/idhalgal/balajothidam/12-remedies-solve-problem-foot-pain-lucknow-0

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

ஒன்பதில் பாதகாதிபதி

ஒன்பதாமிடத்தில் நிற்கும் பாதகாதிபதியால் பாக்கிய ஸ்தான வலிமை குறையும். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களின் ஆதரவிருக்காது. தந்தை- மகன் உறவில் விரிசல் ஏற்படும். தந்தையின் அன்பு, ஆசியைப் பெறுவது கடினம்.

தந்தையும் மகனும் பிரிந்து வாழநேரும் அல்லது தந்தைக்கு ஆரோக்கியம் குறைவுபடும். பித்ருக்களின் நல்லாசிகள் கிடைக்காது. பல தலைமுறையாகத் தீர்க்கமுடியாத பித்ரு தோஷம் தொடர்ந்துகொண்டே இருக்கும். பித்ருக்கள் வழிபாட்டைக் கடைப்பிடிக்க முடியாது.

பூர்வீகச் சொத்தால் பயனற்ற நிலை பல தலைமுறையாகத் தொடரும். வம்பு, வழக்கு இருக்கும். வெகுசிலருக்கு பூர்வீகம், குலம், கோத்திரம், குலதெய்வம் தெரியாது. சிலர் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வாழ்வார்கள்.

தந்தை மற்றும் தந்தைவழியில் இரண்டு திருமணம் செய்தவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

உயர்கல்வி கற்கும் வாய்ப்பு குறைவுபடும் அல்லது எளிதில் தேர்ச்சிபெற முடியாத "அரியர்ஸ்' பாடத்தால் பிரச்சினை இருக்கும். சிலருக்கு, படித்த படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்காது. படித்த படிப்பைப் பயன்படுத்த முடியாது. முறையான அங்கீகாரமின்மை, மரியாதைக் குறைவிருக்கும்.

மத நம்பிக்கை குறைவுபடும் அல்லது ஆன்மிகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு தடைப்படும். ஆன்மிகப் பெரியோர்களின் நல்லாசி கிடைக்காது.

நீதி, தர்மம், சட்டத்தை அலட்சியம் செய்வார்கள். அரசியல் ஈடுபாடு இருக்கும்.

ஆனால், அரசியலால் ஆதாயமிருக்காது. குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் காலதாமதமாகும். பெண்களுக்கு கருப்பை பிரச்சினையிருக்கும்.

பரிகாரம்

வயது முதிர்ந்த அந்தணர்களுக்கு உணவு, உடை தானம் தந்து, காலில் விழுந்து நல்லாசி பெறவேண்டும்.

ஜென்ம நட்சத்திர நாளில் ஆன்மிகப் பெரியோர்கள், மத குருமார்களின் நல்லாசி பெறவேண்டும்.

கோதானம் செய்ய பல தலைமுறையாகத் தீராத பித்ரு சாபம் தீரும்.

சனிக்கிழமை காக்கைக்கு எள்சாதம் வைக்கவேண்டும்.

சனிக்கிழமையன்னு தேனி மாவட்டம், குச்சனுர் சனி பகவானை வழிபடவேண்டும்.

பத்தில் பாதகாதிபதி

பத்தில் பாதகாதிபதி இருப்பவர்களுக்கு பிரம

பத்தில் பாதகாதிபதி இருப்பவர்களுக்கு பிரம்மாண்டமான தொழில் சிந்தனை இருக்கும். ஆனால், செயல்படுத்த முடியாத வகையில் தடையிருக்கும்.

படித்த படிப்புக்குத் தகுந்த வேலை கிடைத்தால் மட்டுமே வேலைக்கு செல்வேன் என்று, "வேலையில்லா பட்டதாரி' தனுஷ்போல் அடம்பிடித்து பெற்றோரை நோகடிப்பார்கள். சிலர் அரை நூற்றாண்டு வயதானாலும், ஆறு மாதத்திற்கொருமுறை வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் ஒரு மனிதன் தனக்கென்று பிடித்த தொழில் அல்லது வேலையில் நிலைத்திருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாதம் வேலை பார்ப்பார்கள். பிறகு, வேலைபிடிக்கவில்லை என்று ஒரு வருடம் சொந்தத் தொழில் செய்வார்கள். மறுபடியும் தொழில் சரியில்லை என்று வேலைக்குச் செல்வார்கள்.வாழ்க்கையில் பார்க்காத தொழில் கிடையாது, செய்யாத வேலை கிடையாது என்கிறரீதியாக தொழில் மற்றும் வேலையில் மாறிமாறி இருப்பார்கள். இவர்களுக்கு தொழில் செட்டாகுமா? வேலை செட்டாகுமா என்ற கேள்வியுடன் பெற்றோர் ஜோதிடரைத் தேடி அலைந்துகொண்டே இருப்பார்கள். சிலருக்கு சிறப்பான தொழில் அல்லது வேலை அமையும்.பாதகாதிபதியின் தசை ஆரம்பமானவுடன் தொழில் அல்லது வேலையில் நிரந்தரமற்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். சிலர் "ஃபிரீலேன்ஸர் ஜாப்' என்ற பெயரில், வருடம் ஒருமுறை சொற்பப் பணம் சம்பாதிப்பார்கள்.

அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு பதவியில் உட்கார்ந்த நாள்முதல் தினமும் பாதகமான சூழ்நிலையை சந்தித்து, அரசியலே வெறுக்கும் வகையிலான பாதகம் தொடரும்.

பத்தில் நிற்கும் பாதகாதிபதி, நெருங்கிய ரத்த சம்பந்த உறவுகளின் கர்மாவில் கலந்துகொள்ள முடியாத நிலையைத் தருவார். சிலர், அங்காளி பங்காளி வீட்டின் கர்ம காரியத்திற்குச் செல்லும் போதெல்லாம் மனக்கசப்பை சந்திக்கநேரும்.

adaf

பரிகாரம்

சனிக்கிழமை சனி ஓரையில் சிவ தரிசனம் செய்துவர, தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பான இன்னல்கள் அகலும்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்கேஸ்வரரை வழிபட, நிலையான- நிரந்தரமான தொழில், உத்தியோகம் கிடைக்கும்.

துப்பரவுத் தொழிலாளிகள், தினக்கூலிகள், கடினமான வேலை செய்யும் கீழ்நிலைத் தொழிலாளிகளைத் தரக்குறைவாகப் பேசக்கூடாது. பேரம் பேசக் கூடாது. உழைத்த கூலியை உடனடியாகக் கொடுக்கவேண்டும்.

அரசியல் வாழ்க்கை, பதவியில் பிரச்சினை இருப்பவர்கள் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையரை வழிபட, பதவியிலுள்ள இடர்ப்பாடுகள் அகலும்.

பதினொன்றில் பாதகாதிபதி

தொழிலோ உத்தியோகமோ- வருமானம், லாபம் இருந்தால் மட்டுமே உழைக்கும் ஆர்வமிருக்கும். பதினொன்றில் பாதகாதிபதி இருப்பவர்களுக்கு தொழில் சிறப்பது போல் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருப்பார்கள். கூட்டம் கூடும்; கல்லா களைகட்டாது அல்லது பெரிய தொழில் செய்வதுபோல் போன் பேசிக்கொண்டே இருப்பார். ஆனால் லாபம் கிடைக்காது. சிலர் நல்ல புத்திசாலியாக திட்டம் போட்டு தொழில்செய்து, பரிவு மிகுதியால் லாபத்தைக் கூட்டாளிக்கு விட்டுக்கொடுத்து பாதகத்தைத் தேடிக்கொள்வார்கள். இவர்களின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி பலர் இவர்களை ஏமாளியாக்குவார்கள்.

சிலர் தொழில், லாபம் என உபரியாக சம்பாதித்து, சட்டப்படியான அன்பான மனைவியிடம் வருமானத்தைக் கொடுக்கா மல், சட்டத்திற்குப் புறம்பான இரண்டாவது மனைவியிடம் கொடுத்து ஏமாறுவார்கள். கூட்டுத்தொழில் செய்யும் சகோதரர்களில் தம்பியின் லாபம் அண்ணனால் ஏமாற்றப் படும். பதினொன்றில் பாதகாதிபதி இருப்பவர் களின் பாகப்பிரிவினைச் சொத்து குடும்ப உறுப்பினர்களால் ஏமாற்றப்படும். ஏமாறு பவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் காட்டில் அடைமழைதான்.

வயோதிகக் காலத்தில் பதினொன்றிலிருக்கும் பாதகாதிபதியின் தசை வந்தால், உடல் உபாதைகள் மிகுதியாக இருக்கும்.

பரிகாரம்

உடன்பிறந்தவர்களிடையே லாபப் பங்கீட்டில் கருத்து வேறுபாடிருந்தால், விநாயகரும் முருகனும் இணைந்த படத்தை வைத்து வழிபட, சகோதர ஒற்றுமை மேலோங்கும்.

சொத்துப் பங்கீட்டில் குடும்பத்தில் குழப்பமிருப்பவர்கள், சென்னை செங்குன்றம் அருகிலுள்ள சிறுவாபுரி முருகனை வழிபட, சுபமான முடிவு கிடைக்கும்.

தினமும் வில்வாஷ்டகம் படித்து வர, தொழிலில் லாபம் பெருகும்.

பன்னிரண்டில் பாதகாதிபதி

பன்னிரண்டாமிடத்துடன் சம்பந்தம் பெறும் பாதகாதிபதி, சிலருக்கு தூக்கக் குறைவைத் தருவார். சிலரை துக்கத்திலும் தூக்கத்திலுமே வாழ்நாளைக் கழிக்கச் செய்வார்.

வாழ்நாள் முழுவதும் சேமிப்பே இல்லாமல் பற்றாக்குறை பட்ஜெட்டில் வாழ்வார்கள். வரவுக்குமீறிய செலவால் அவஸ்தை யிருக்கும். கையில் பணம் தங்காது.

சிலருக்கு இல்வாழ்க்கை ஈடுபாடு இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு அல்லது பிரிவினை ஏற்படும். வெகுசிலர் தவறான சிற்றின்பத்தால் அசிங்கப்படுவார்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் மீளமுடியாத தண்டனையை அனுபவிப்பார்கள்.

சிலர் அதிர்ஷ்டத்தின்மேல் நம்பிக்கை வைத்து எந்திரம், மந்திரம், தந்திரம் என அலைந்து, மிகுதியான பொருள் விரயத்தை விலைகொடுத்து வாங்குவார்கள். 10, 11, 12-ஆமிடத்துடன் சம்பந்தம்பெறும் பாதகாதி பதியால், தொழிலில் தவறான முதலீடு, மீளமுடியாத இழப்பை சந்திக்கநேரும். மிகுதியான பொருள் லாபத்திற்கு ஆசைப் பட்டு, சட்டத்திற்குப் புறம்பான செயல் அல்லது அரசுக்கு விரோதமான தொழில் செய்து அகப்படுவார்கள்.

வாழ்நாளில் அதிக துன்பமடைந்தவர்கள் மோட்சமடையும் மார்க்கத்தைத் தேடியலை வார்கள். சிலர் துக்க மிகுதியால் தலைமறைவாவார்கள். வெகுசிலர் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வார்கள்.

உடல் அயர்ச்சி, உடல் உபாதைகள் மிகுதியாக இருக்கும். பன்னிரண்டாமிடத்துடன் சம்பந்தம்பெறும் பாதகாதிபதியின் தசா, புக்திக் காலங்களில் அறுவை சிகிச்சை யால் உடலுறுப்புகள் அகற்றப்படும் அல்லது செயற்கை உறுப்பு பொருத்தப்படும். கோட்சாரத்தில் பன்னிரண்டாமிடத்துடன் பாதகாதிபதி சம்பந்தம்பெறும் காலங்களில் சிலர் மூட்டு மற்றும் கால்களில் அவசிய மற்ற அறுவை சிகிச்சையால் பின்னாளில் அவஸ்தையை அனுபவிப்பார்கள்.

சிலர் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று சொந்த மண்ணிற்குத் திரும்பமுடியாமல் வெளிநாட்டில் செட்டிலாகிவிடுவார்கள்.

பரிகாரம்

வீண்விரயத்தைத் தவிர்க்க ஆதரவற்றவர்களுக்கு இயன்ற தானம் தரவேண்டும்.

நேரம் கிடைக்கும்போது கோவில்களில் உழவாரப் பணிகளைச் செய்யவேண்டும்.

உடல் ஊனமுற்றவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கவேண்டும்.

சனிக்கிழமைகளில் கருவேப்பிலை துவையல் சாப்பிடவேண்டும்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பதாம் அதிபதி பாக்கியாதிபதி என்பதாலும், பதினொன்றாம் அதிபதி லாபாதிபதி என்பதாலும் எந்த பாதகத்தையும் செய்யமாட்டார்கள் என்பது பலரின் நம்பிக்கை. அத்துடன், உபய லக்னத் திற்கு ஏழாமதிபதியே பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வருவதால், உபய லக்னத் திற்கு மட்டுமே பாதகாதிபதி அசுபத்தைத் தருவாரென சிலரிடம் தவறான நம்பிக்கை இருந்துவருகிறது.

இனி, சர லக்னத்திற்கு லாபாதிபதி பாதகத்தைச் செய்வாரா? லாபத்தைத் தருவாரா? ஸ்திர லக்னங்களுக்கு முழு யோகத்தைச் செய்யக்கூடிய ஒன்பதுக்குடையவர் பாதகாதிபதியாக வருவதால் யோகத்தைத் தருவாரா? பாதகம் செய்வாரா? உபய லக்னத்திற்கு பாதகம் மிகுதியாக இருக்குமா? மாரகம் மிகுதியாக இருக்குமா என்பது போன்ற பல சந்தேகங்களை பன்னிரண்டு லக்னங்களுக்கும் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் சர லக்னம். பாதகாதிபதி சனி. பதினொன்றாமிடமான லாப ஸ்தானமே பாதக ஸ்தானமாகும். லக்னாதிபதி செவ்வாயே அஷ்டமாதிபதியாக வருவதால், சுபமும் அசுபமும் கலந்தே இருக்கும். மேலும், லக்னாதிபதி செவ்வாயும், பாதகாதிபதி சனியும் கடும்பகை கிரகங்கள் என்பதால், செவ்வாய், சனி சம்பந்தம் எவ்வகையில் இருந்தாலும் பாதகம் கடுமையாக இருக்கும்.

ராசிக்கட்டத்தில் சனி எந்த இடத்தில் நின் றாலும், சனிதசை மற்றும் புக்திக் காலங்களில் பாதகத்தைச் செய்வார். சனிதசையில் ஜாதகர் சுபப் பலனை எதிர்பார்க்க முடியாது.

மேலும், சனி, செவ்வாய்க்கு ராகு- கேது சம்பந்த மிருந்தால் பாதிப்பு வீரியமுடையதாக இருக் கும். அத்துடன் பதினொன்றாமிடமான கும்ப ராசியில் எந்த கிரகம் நின்று தசை நடத்தினாலும், தசையின் ஆரம்பக் காலத்தில் லாபத்தைத் தந்தாலும், தசைமுடிவில் பாதகமே மிஞ்சும். ஆனாலும், மேஷம் சர லக்னம் என்பதால், பெரிய பாதிப்பிருந்தாலும் பிரச்சினை வெளியே தெரியாது. எளிதில் மீண்டுவரும் வாய்ப்பு தேடிவரும்.

பரிகாரம்

சனி, செவ்வாய் சம்பந்தத்தால் பாதகத்தை அனுபவிப்பவர்கள், சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் 9.00 மணிவரையான செவ்வாய் ஓரையில் சிவப்புத் துவரையை தானம்தர பாதகம் குறையும்.

ஜென்ம நட்சத்திர நாட்களில் ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்தை வழிபட நிம்மதி அதிகரிக்கும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406

bala201120
இதையும் படியுங்கள்
Subscribe