ன்றைய காலகட்டத்தில் பிரபஞ்ச சக்தியைவிட மனி தனை இயக்கும் சக்தியாக இருப்பது பணம். சிலருக்கு அதிர்ஷ்டலட்சுமி வீட்டு வாசலில் குடியிருக்கிறாள். சிலர் அதிர்ஷ்டலட்சுமியின் வீட்டுவாசலைத் தேடு கிறார்கள். அதிர்ஷ்டலட்சுமி எல்லாருடைய வீட்டு வாசலுக்கும் எப்பொழுது வருவாள்?

லாட்டரி, ரேஸ், ஷேர் மார்கெட் கைகொடுக்குமா? திடீர் பணவரவு ஏற்பட்டு கடனிலிருந்து மீட்டுவிடுமா? திடீர் அதிர்ஷ்டம் என் ஜாத கத்தில் உள்ளதா என அதிர்ஷ்டம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுடன் பலரும் ஜோதிடரை அணுகு கிறார்கள்.

திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு சாத்தியம் என ஜோதிடரீதியாக ஆய்வுசெய்வோம்.

தனயோகங்கள்

Advertisment

சிலருக்கு ஒருசில கால கட்டத்தில் பயன்தருகிறது. சிலருக்கு பிறப்புமுதல் இறப்பு வரை எல்லாம் அமைந்து விடுகிறது. தொன்றுதொட்டு வருகிற பூர்வீக அமைப்பு பலருக்குக் கைகொடுக்கிறது. சிலருக்கு மனைவி வந்தவுடன் தொட்டதெல்லாம் துலங்கு கிறது. ஜாதகத்தில் நல்ல தனயோகங்கள், பாக்கிய யோகங்கள் இருந்து, உரிய காலத்தில் யோக தசாபுக்திகள் வரும்போது ராஜயோக தனபலன்கள் கிடைக்கின்றன.

சிலருக்கு ஏற்ற- இறக்கம் இருந்துகொண்டே இருக்கும். எல்லா அமைப்பும் சரியாக இருந்தும் எந்தப் பலனையும் அனுபவிக்கமுடியாமல் இருப்பவர்கள், எந்த குரு, சனி, ராகு- கேதுப் பெயர்ச்சி நம்மை சரிசெய்யும் என மனவேதனையுடன் காலத்தைத் தள்ளுகிறார்கள்.

குடும்ப உறவுகளை எவ்விதமான கஷ்டங்களும் இல்லாமல் வாழவைக்க வேண்டுமென கடன்களை வாங்கி, வரவுக்குமீறிய செலவுகளைச்செய்து கடன்தொல்லையால் கஷ்டப்படுவது-

Advertisment

தொழில்ரீதியாக கடன் வாங்கி, தாங்கள்செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, வாங்கிய கடனை அடைக்க வழிதெரியாது தவறான முடிவுக்குச் செல்வது-

தொழில்கூட்டாளிகளை நம்பி முதலீடு செய்தும் மற்றும் தனது சொத்துகளை வங்கிகளுக்கு அடமானம் செய்துகொடுத்தும் தொழில்கூட்டாளிமூலமாக வஞ்சிக்கப் படுதல்-

வட்டிக்குப் பணம்கொடுத்து அசல் முடங்குவதால் ஏற்படும் மனக்கஷ்டம்...

இப்படிப் பலவிதமான பிரச்சினைகளை 90 சதவிகிதம்பேர் அன்றாடம் சந்திக்கிறார்கள்.

இதுபோன்ற பிரச்சினைகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் பிரச்சினை பெரிதாக மாறுமே தவிர, அது தீராது. அப்படி யானால் இவற்றுக்கு என்னதான் தீர்வு?

இங்கே நாம் ஆழ்ந்து சிந்தித்தால், கடன் பணம்கூட ஒருவருக்கு பணம்வரும் நேரம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பது புரியும். கடனாக வரும் பணத்தை உழைப்பால் வரும் பணமாக மாற்றவேண்டும்.

ஒரு ஜாதகத்திலுள்ள யோகங்கள் இரண்டு விதமாக மட்டுமே செயல்படும். ஒன்று நேர்வழி, மற்றொன்று குறுக்குவழி. ஜாதகத்தில் சுபகிரக ஸ்தானங்கள்மூலம் நமக்குக் கிடைக்கும் தனம், செல்வம் நேர்வழி. அதே போல் 6, 8, 12 ஆகிய மறைவு ஸ்தானங்கள்மூலம் கிடைக்கும் செல்வம் குறுக்குவழி.

நேர்வழியில் பணம் சம்பாதிப்பது கடினம். ஆனால் நேர்வழியில் வரும் செல்வம் பல தலைமுறைக்கும் நீடித்து, நிலைத்துநிற்கும். நேர்வழி என்பது- ஜாதகத்தின் கேந்திரம் எனும் 1, 4, 7, 10-ஆமிடங்கள். இவை விஷ்ணு ஸ்தானங்கள் எனப்படும். திரிகோணம் எனும் 1, 5, 9-ஆமிடங்கள் லட்சுமி ஸ்தானங் கள் எனப்படும். பணபர ஸ்தானம் எனும் 2, 11- ஆமிட அதிபதிகளின் தசா, புக்தி, அந்தரக்காலங்கள் சம்பந்தம் பெறும்போது பணவரவு ஏற்படும். 6, 8, 12 எனும் மறைவு ஸ்தான அதிபதிகளின் தசா, புக்தி, அந்தரக் காலங்கள் சம்பந்தம் பெறும்போது குறுக்குவழியில் பணம்வரும். ஆனால் பணம் வரும்வழியும் தெரியாது. போகும்வழியும் தெரியாது.

மேலேகூறிய பல ஸ்தானங்களால் பணம்வரும் வாய்ப்பிருந்தாலும், திடீர் அதிர்ஷ்டம் என்பது 2, 5, 6, 8, 11-ஆமிடமாகிய தசா, புக்தி, அந்தரக் காலங்களில் மட்டுமே எளிதில் கிட்டும். 2-ஆம் அதிபதி அல்லது 2-ல் நின்ற கிரகத்தின் தசா, புக்தி, அந்தரக் காலங்களில் வரும் தனவரவு வாக்கு சாதுர்யம், உடலுழைப்பு இல்லாமல் மூளையைப் பயன்படுத்தி, பேச்சின்மூலம் பணம்சேர்க்கும் வழியைச் சொல்கிறது. இரண்டாமதிபதி சுபர்களுக்கு மத்தியில் இருப்பதும், கேந்திரங் களில் இருப்பதும் திருப்தியான தனவரவைத் தரும் என்றாலும், 2-ஆம் இடம் எந்த வகையில் செயல்பட்டாலும் சிறு தனவரவாவது இருந்துகொண்டே இருக்கும்.

12l

5-ஆம் அதிபதி அல்லது 5-ல் நின்ற கிரகங்களின் தசா, புக்தி, அந்தரக் காலங் களில் வரும் பணவரவு யோசனை, சிந்தனை, பூர்வபுண்ணியம், அதிர்ஷ்டம், உழைப் பில்லாத செல்வம், பலருக்கு திட்டங்கள் தீட்டிக்கொடுத்து சம்பாதிப்பது, யோசனை சொல்லி செல்வம் திரட்டுவது போன்ற வகையில் இருக்கும்.

ஆறாமிடம் என்பது எதிரி ஸ்தானம் மட்டுமல்ல; போட்டி ஸ்தானமும் இதுதான். எந்த ஒரு வெற்றிக்கும் போட்டி அவசியம் தேவை. பந்தயம், ரேஸ் போன்றவற்றின்மூலம் வருமானம் வரும்.

8-ஆம் அதிபதி அல்லது 8-ல் நின்ற கிரகங்களின் தசா, புக்தி, அந்தரக் காலங்களில் மறைமுகப் பணவரவு, வரதட்சணை, உயில் சொத்து, லாட்டரி, ரேஸ், புதையல் என பலவகைகளில் பொருள் குவியும். செல்வம் பலவகைகளில் சேரும். மனைவிமூலம் சொத்து, சம்பாத்தியம், மாமனார்மூலம் உதவி, சொத்து பாகப்பிரிவினை, உயில், தொழில், வியாபாரம் என பணம்சேரும்.

இரண்டாம் வீட்டிற்கும், எட்டாம் வீட்டிற்கும் பார்வைத் தொடர்புண்டு. 2, 8-ஆம் இடங்களில் எந்த கிரகம் இருந்தாலும், தன் 7-ஆவது பார்வை யால் பார்க்கும் இடத் தின்மூலம் மறைமுக வருமானத்தைப் பெற்றுத்தரும்.

8-ஆம் அதிபதி அல்லது 8-ல் நின்ற கிரகம் கேந்திர, திரிகோணாதிபதிகள் சம்பந்தம் பெற்று சுபத்தன்மையுடன் இயங்கினால் மட்டுமே பெரும் பணம் சாத்தியம். அசுபத்தன்மையுடன் இயங்கினால் ஆயுள்குறைவு, அவமானம், கண்டம், கடனால் கவலை, வம்பு, வழக்கு, சிறைத் தண்டனை ஏற்படும்.

11-ஆம் அதிபதி மற்றும் 11-ல் நின்ற கிரகத்தின் தசா, புக்தி, அந்தரக் காலத்தில் தொழில், மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயம், அதிர்ஷ்ட சொத்து, பினாமிச் சொத்து, பினாமிப் பணம், உழைக்காத வருமானம், வட்டி, ஷேர் மார்க்கெட், கட்டட வாடகைகள், புரோக்கர் கமிஷன், ஏஜென்சி என்று நூற்றுக்கணக்கான வகையில் செல்வம் சேரும்.

2, 5, 6, 8, 11 ஆகிய தசா, புக்தி, அந்தரக் காலங்கள் பணவரவைப் பெருக்கும் காலமாக இருந்தாலும், அதிர்ஷ்டமும் பூர்வபுண்ணிய பலமும், 5-ஆம் அதிபதி, 5-ல் நின்ற கிரகம், 5-ஆம் அதிபதி, 5-ஆம் வீட்டைப் பார்த்த கிரகம், இவர்களுடன் ஆதாய ஸ்தான மான 11-ஆமிடமும் பலம்பெற வேண்டும். அத்துடன் தன கிரகங்களான குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகியோரின் அமர்வு மிக முக்கியம்.

ஒரு ஜாதகத்தில் ஆண்டியையும் அரசனாக்கு வது 5-ஆமிடம். இந்த இடத்தைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பார்கள். ஜாதகத்தில் 5-ஆமிடமான பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப்பெறுவதற்கான விதிகள்-

1. 5-ல் லக்ன சுபர் அமரவேண்டும்.

2. 5-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று குரு பார்வை பெறவேண்டும்.

3. 5-ஆம் இடம், 5-ஆம் அதிபதி களுக்கு லக்ன சுபரின் சம்பந்தம் இருக்கவேண்டும்.

4. 6, 8, 12-ஆம் அதிபதி, லக்ன பாவிகள் சம்பந்தம் பெறாமல் இருக்கவேண்டும்.

5. ஒரு ஜாதகம் உயிர்ப் புள்ளியாகிய லக்னம் என்ற லக்னாதிபதியால்தான் இயக்கப் படுகிறது. எனவே லக்னம், லக்னாதிபதி பலம் மிகவும் முக்கியம்.

இந்த அதிர்ஷ்டம் செயல்பட ஐந்தாம் அதிபதியின் தசை, 5-ஆம் வீட்டில் நின்ற கிரகத்தின் தசை, 11-ஆம் அதிபதியின் தசை அல்லது 11-ல் நின்ற கிரகத்தின் தசை, 2-ஆம் அதிபதியின் தசை அல்லது 2-ல் நின்ற கிரகத்தின் தசை- வீட்டோன் புக்தி, இரண்டாம் வீட்டோன் தசை, 11-ஆம் வீட்டோன் புக்தி ஆகியவற்றில் ஏதாவது ஒரு அமைப்பில் தசாபுக்தி நடைபெறவேண்டும்.

இவையெல்லாம் சரியாக அமையும் போது, பல்வேறுவகையில் தனப்ராப்தி இருந்துகொண்டே இருக்கும். நன்மையோ தீமையோ, யோகமோ அவயோகமோ- அதை அனுபவிப்பதன்மூலம் பிறவிப்பயனை அனுப விக்கிறோம்.

இனி, 12 லக்னங்களுக்கும் தனவரவு ஏற்படுத்தும் கிரக அமைப்பைப் பார்க்கலாம்.

மேஷ லக்னம்

மேஷ லக்னத்திற்கு தனவரவை ஏற்படுத்தக் கூடிய கிரகங்கள் சுக்கிரன், சனி. சுக்கிரன் 2-ஆம் அதிபதி. சனி 11-ஆம் அதிபதி. இவர் களுக்கு சனி, சுக்கிரன் சேர்க்கை கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் வருமானம் இரட்டிப்பாகும். ஒன்றையொன்று பார்த் தாலும் வருமானம் வந்துகொண்டே இருக்கும்.

இந்த கிரகச்சேர்க்கைக்கு ராகு- கேது சம்பந்தம் பெற்றால், பணவரவைத் தடை செய்யும். லக்னாதிபதி செவ்வாயே 8-ஆம் அதிபதியாக இருப்பதால், வரும் வருமானம் அனைத்தும் இவருடைய முன்கோபம், தற்பெருமை போன்ற காரணங்களால் இழக் கப்படும்.

மேஷத்திற்கு பாதகாதிபதி சனி எப்படி நன்மை செய்வார் என்னும் கேள்வியும் தோன்றும். ஜாதகருக்கு வரும் வருமானம், அவரைவிட குடும்ப நபர்களுக்கே அதிகம் பயன்படும் என்பதால், சுக்கிரன், சனி சம்பந் தம் சிறப்பான நன்மைகளைத் தரும்.

பரிகாரம்

தனம் எனும் பணவரவை எளிதில் அடைய செவ்வாய்க்கிழமை ராகு வேளையில், மாலை 3.00-4.00 மணிக்குள் சுக்கிர ஓரையில் முருகனுக்கு ஒன்பது நெய்தீபமேற்றி, செவ் வாழைப்பழம் படைத்து வழிபட தனவரவு மகிழ்ச்சி தரும்.

ரிஷப லக்னம்

ரிஷப லக்னத்திற்கு தனவரவை ஏற்படுத் தக்கூடிய கிரகங்கள் புதன், குரு. புதன் 2-ஆம் அதிபதி. குரு 12-ஆம் அதிபதி. ரிஷப லக்னத்திற்கு குரு, புதன் சேர்க்கை கேந்திர, திரிகோணங் களில் இருந்தால் பணவரவு மகிழ்வு தரும். ஒன்றையொன்று பார்த்தாலும் வருமானம் சிறப்பாக இருக்கும். இந்த கிரகச் சேர்க்கைக்கு ராகு- கேது சம்பந்தமிருந்தால் வருமானம் பாதிக்கும்.

ரிஷப லக்னத்திற்கு லக்னாதிபதி சுக்கிரனே 6-ஆம் அதிபதியாக வருவதால், தனது ஆடம்பர செலவுகளாலும், தவறான நடத் தைகள், வீண்விரயங்கள்மூலமும், வரும் வருமானத்தை அவரே செலவுசெய்து கடனாளியாகிவிடுவார்.

எட்டாம் அதிபதியாக குரு வருவதால் நன்மையை ஏற்படுத்தித் தருவாரா என்ற கேள்வி எழலாம். எட்டாமதிபதி குரு குழந் தைகளின் நலனுக்கு அதிக பண விரயத்தைத் தருவார். பொருளாதார வரவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

பரிகாரம்

தனவரவை நிலைக்கச் செய்ய, ரிஷப லக் னத்தினர் வெள்ளிக்கிழமை காலை 6.00-7.00 மணிக்குள் சுக்கிர ஓரையில் வெள்ளை மொச்சையை வேகவைத்து, கற்கண்டு சேர்த்து மகாலட்சுமிக்குப் படைத்து வழிபட தனவரவு திருப்திதரும்.

மிதுன லக்னம்

மிதுன லக்னத்திற்கு தனவரவைத் தரக் கூடிய கிரகங்கள் சந்திரன், செவ்வாய். சந்திரன் 2-ஆம் அதிபதி. செவ்வாய் 11-ஆம் அதிபதி. சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் சந்திர மங்கள யோகத்தை ஏற்படுத்தி குபேர சம்பத்து அருளும். ஒன்றையொன்று பார்த்தாலும் பெரும் பணவரவுண்டு. இந்த கிரக இணை வுடன் ராகு- கேது, சனி சம்பந்தமிருந்தால் பணத்தால் வம்பு வழக்கு வரும்.

இந்த லக்னத்தைச் சேர்ந்த பெண்கள் வருமானத்தின் பெரும்பகுதியைப் பொருத்த மில்லாத தனது கணவருக்காகவும், சகோ தரர்களுக்காகவும் செலவுசெய்து பெரும் கடனாளியாகிவிடுகிறார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும், அவர்களால் கடனில் லாமல் வாழமுடியவில்லை. ஏனென்றால், இரண்டாமதிபதி சந்திரன் வீட்டில் செவ்வாய் நீசமடைகிறார். ஆறாமதிபதி செவ்வாயின் வீட்டில் சந்திரன் நீசமடைகிறார்.

பரிகாரம்

தனவரவைப் பெருக்கிக் கடனைக் குறைக்க புதன்கிழமை சக்கரத்தாழ்வாருக்கு கற்கண்டு படைத்து, துளசி அர்ச்சனை செய்ய வேண்டும்.

கடக லக்னம்

கடக லக்னத்திற்கு தனவரவை ஏற்படுத் தக்கூடிய கிரகங்கள் சூரியன், சுக்கிரன். சூரியன் 2-ஆம் அதிபதி. சுக்கிரன் 11-ஆம் அதிபதி.

சூரியன், சுக்கிரன் சேர்க்கை கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் வருமானம் ராஜயோக வாழ்வைத் தரும். ஒன்றையொன்று பார்த்தாலும் சுபவரவு உண்டு.

கடக லக்னத்திற்கு 11-ஆம் அதிபதி சுக்கிரன் பாதகாதிபதியாக வருவதால், கடக லக்ன ஆண்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை மனைவியைத் திருப்திப் படுத்தவும், சட்டத்திற்குப் புறம்பான உறவுகளாலும் வருமானத்தை இழக்கிறார்கள்.

இந்த கிரக இணைவுடன் ராகு- கேது சம்பந்த மிருந்தால் வருமானத்தைத் துண்டிக்கும்.

சனி சம்பந்தம் பெறக்கூடாது. கடகத்திற்கு சனி 7, 8-ஆம் அதிபதி என்பதால், கணவர் தன் வருமானத்தில் மனைவியின் குடும்ப பாரத்தை சுமப்பது அல்லது மனைவி கணவனின் நிலையிலிருந்து குடும்பத்தை நடத்தும் நிலையைத் தந்து, கணவன்- மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்து கிறது.

பரிகாரம்

தனவரவில் நிறைவடைய கடக ராசியினர் திங்கட்கிழமை சிவ வழிபாடுசெய்து, சிவபுராணம் பாராயணம் செய்யவேண்டும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406