சென்ற இதழ் தொடர்ச்சி...
தனுசு
தனுசு ராசியின் சிந்தனாதிபதி செவ் வாய்; ராசி மேஷம்.
இவர்களுக்கு எதிலும் எப்போதும் முதன்மையாக இருக்கவேண்டுமென்ற ஆவலும் லட்சியமும் இருக்கும்.
ஒருமுறையாவது வெளிநாடு செல்லவேண்டு மென்ற கனவும் இருக்கும். எல்லாரும் இவர்களுக்கு பயந்து பணிந்து நடக்க வேண்டுமென்ற அவா இருக்கும். எல்லா வற்றையும்விட, எப்போதும் நன்றாக செலவளித்து, நல்ல பெயர் வாங்க விரும்புவர்.
இத்தனை எண்ணங்களையும் நிறைவேற்றுபவர் சுக்கிரன்; ராசி துலாம். சுக்கிரன் 11-ல் துலாத்தில் ஆட்சியாக இருந் தால், தனுசு ராசியினர் விரும்புவது, எதிர் பார்ப்பது, அடைய நினைப்பது என எல்லா அவாக்களும் அடுத்தடுத்து தொடுத்தாற் போல் நிறைவேறும். அதுவும் அழகாக, ஆடம்பரமாக நிறைவேறும்.
இதே சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சியாக இருப்பின், சிலபல தடைகள், சண்டைகள், சில சமயங்களில் கடன், காயங்களோடு லட்சியம் ஈடேறும். இதே சுக்கிரன் உச்சமானால் அத்தனை சுபநிகழ்வு களுக்கும் இவர்களே முழு காரணமா வார்கள். இவர்களது பெருமுயற்சியே எண்ணங்களை முழுமையாக ஈடேறச் செய்யும். வீடு வாங்கினாலும், மிக அழகான பெரிய மாளிகையையே வாங்குவார்கள். வாகனம் வாங்கினாலும் இருப்பதிலேயே உயர்ந்த வாகனம் வாங்குவார்கள். சுக்கிரன் உச்சமானால், உலகின் உச்சமான பொருளை அடையும் இலக்கை அடைந்து விடுவார்கள்.
ஜாதகத்தில் சுக்கிரன் நீசமானால் இவர்களின் லட்சியம் நிறைவேற எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும். மேலும் கௌரவமும் குறையும். முக்கியமாக தொழில் அல்லது வேலை சம்பந்தமான எண்ணங்கள், முயற்சிகள், முதலீடுகள் என அனைத்தும் பயனற்று, பலனற்றுப் போய்விடும். எனவே தனுசு ராசியினர் சுக்கிரன் நீசமாகி இருந்தால் சொந்தத் தொழில் தொடங்குவது உசிதமல்ல. ஒருவேளை 10-ல் புதன் உச்சமாகி, சுக்கிரன் நீச பங்கம் அடைந்திருப்பின், அப்போது சொந்தத் தொழில் தொடங்கத் தடையில்லை.
தனுசு ராசியினருக்கு சுக்கிரன் நீசமா னால் பெருமாளுடன்கூடிய மகாலட்சுமியை வணங்கவேண்டும்.
எந்த வேலை செய்தாலும் அல்லது சொந்தத் தொழில் செய்தாலும் அதில் சற்றே சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுங்கள்.
தனுசு ராசியினர் சுக்கிரன் நீசமாகியிருந் தால், தயவுசெய்து பறவைகளை கூண்டில் வைத்து வளர்க்காதீர்கள். பறவைகள், கால்நடைகளை தானம் செய்வது நல்ல பரிகாரம். உங்களால் முடிந்தளவு ஜீவரா சிகளை தானம் செய்யுங்கள். அதைவிடுத்து, அவற்றை கூண்டில் வைத்து வளர்த்தால், இன்னும் இன்னும் கஷ்டங்கள் அதிகரிக்கும். லட்சியங்கள் நிறைவேறத் தடை ஏற்படும். (எந்த ராசியினருக்கும் சுக்கிரன் நீசமாகி இருப்பின் இந்தப் பரிகாரம் ஏற்றது). மேலும் வெள்ளி, மொச்சை, பழங்கள் தானமும் நன்று.
இதுவரை ஜீவராசிகளைக் கொடுமை படுத்தியிருந்தால் தக்கோலம், திருவூறல் சென்று வணங்கவும். பெருமாள், தன் மடியில் மகாலட்சுமியை கொண்டிருக்கும் லட்சுமி நாராயணரை வணங்கவும். உங்களிடம் வேலை பார்க்கும் பெண்களின் பார்வைக் கோளாறுக்கு கண்ணாடி வாங்கிக்கொடுத்து உதவவும்.
மகரம்
மகர ராசியினரின் எண்ணத்துக்கு அதிபதி சுக்கிரன்; ராசி ரிஷபம். இவர்கள் எப்போதும் ஒழுக்கம், நேர்மை, ஆன்மிகம், பூர்வீகக்குலப்பெருமை, ஆரோக்கியம், கௌரவம், தொழில் என இதனைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு அதன் தொடர்பான லட்சியங்களை- எண்ணங்களைக் கொண்டிருப்பர்.
இவர்களின் இத்தனை யோசனைகளையும் நிறைவேற்று பவர் விருச்சிகச் செவ்வாய்.
மகர ராசியினரின் அதிபதி சனி அமைதியான மந்த காரகர். எண்ணங்களுக்குரியவர் சுக்கிரன் அழகான பதவிசானவர். ஆனால் நிறைவேற்றும் அதிபதியோ அடா வடியான செவ்வாய். என்னே ஒரு காம்பினேஷன்! மகர ராசி சனி ஸ்லோதான். ஆனாலும், இவர்கள் ஒன்றை நினைத்துவிட்டால் முடிக் காமல் விடமாட்டார்கள். அத்துணை வேகம். சில சமயங்களில் தர்ம வழியிலும், சிலசமயம் அதர்ம, அடிதடி வழிகளிலும் எண்ணங்களை நிறைவேற்றுவர்.
மகர ராசியினருக்கு செவ்வாய் உச்சம் பெற்றிருந்தால், ராசியிலேயே உச்சம் பெறுவதால் அத்துணை வெற்றிக்கும் ஜாதகரே காரணமாவார். அவர்களுடைய ஒருமித்த முயற்சியும் உழைப்பும் லட்சியம் ஈடேறக் காரணமாக இருக்கும். சிலருக்கு தாயார் மற்றும் குடும்பத்தினர் உதவுவர்.
செவ்வாய் மேஷம் அல்லது விருச்சி கத்தில் ஆட்சியாக இருந்தாலும் எண்ணம் ஈடேறும். மேஷத்தில் ஆட்சியாக இருந்தால் சற்றே வெளிப்படையான அடாவடி வழியிலும், விருச்சிகத்தில் இருந்தால் ஆழ்ந்த- ரகசியமான அடாவடி வழியிலும் எண்ணங்கள் பலிதமாகும்.
மகர ராசியினருக்கு செவ்வாய் நீசம் பெற்றால், இவர்களின் லட்சியத்துக்கு வாழ்க் கைத்துணையே முட்டுக்கட்டை போட்டுத் தடைசெய்வார். சிலருக்கு தொழில் பங்கு தாரர்களே எண்ணங்கள் விளங்காமல் செய்து விடுவர். செவ்வாய் நீசமானால், வெளிநாட்டுப் பயணம், பங்குதாரருடன் வியாபாரம் பற்றிய எண்ணங்களை விட்டுவிடுவது நலம்.
மகர ராசியினருக்கு செவ்வாய் நீசமாகி லட்சியத்தடை ஏற்பட்டால் கடல், ஏரி போன்ற நீர் நிலை அருகிலுள்ள முருகரை வணங் கவும். கந்தசஷ்டிக் கவசம் தினம் கூறவும்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நன்று. நவகிரகங்களில், செவ்வாயை வணங் கவும். சிவப்புநிற ஆடை தானம் நன்று.
விளையாட்டுத்துறை இளைஞர்களுக்கு உதவவும். செம்பு, துவரை, குங்கும தானம் நன்று. முருகரை எவ்வளவு வழிபடுகிறீர்களோ, அவ்வளவு உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.
கும்பம்
கும்ப ராசிகளின் யோசனை, எண்ணத்துக் குரியவர் புதன்; ராசி மிதுனம். இவர்கள் அநேகமாக தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றியே சிந்திப்பர். மேலும் மரணபயம் அவ்வப்போது இவர்களைப் பாடாய்ப் படுத்தும். பிள்ளைகள் தங்களை நன்கு கவனித்துக்கொள்வார்களா என ஒரு பதட்ட யோசனை இருந்துகொண்டே இருக்கும். இவர்களின் எண்ணத்துக்குரிய புதன் எட்டா மிடத்துக்கும் அதிபதியாவதால், எப்போது ஒரு பாதுகாப்பின்மை யோசனையே இவர்களைச் சுற்றியிருக்கும்.
இவர்களின் இந்த எதிர்மறையான சிந்தனைகளை நிறைவேற்றுபவர் குரு; ராசி தனுசு. குரு நல்ல சுபத்தன்மையில் இருந்தால், இவர்களின் குடும்பத்தினர் இவர்களை ஒரு குழந்தையைப்போல் கவனித்து, இவர்கள் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவர். மேலும் இவர்களின் வாக்கு வண்மையால், லட்சியம் நிறைவேறப் பெறுவர். இவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் குரு 6-ஆமிடத்தில் உச்சமாவார். அது ஒரு மறைவு ஸ்தானம். இதனால் குரு உச்சமான பலன் இவர்களுக்கு முழுமையாகக் கிடைக் காது. சிலசமயம் இவர்களின் எண்ணங்கள் எதிர்மாறாக நிறைவேறிவிடும். அல்லது ஆசைகள் நிறைவேறுவதற்கிடையே அடிதடி ஏற்பட்டுவிடும். அல்லது லட்சியம் நிறைவேறும்; ஆனால் லட்சங்கள் கரைந்துவிடும். ஆக, எண்ணியது ஈடேற்றும் அதிபதி குரு உச்சமாகியும் பெரிய பயனில்லை.
இதே குரு நீசமானால், அவர் ராசிக்கு 12-ல் விரயத்தில் நீசமடைவார். இதுவும் பயனில்லை.
ஒன்று, நூறு ரூபாய்க்கு குறிவைக்க, லட்ச ரூபாய் லாஸ் ஆகிவிடும். அல்லது என்ன நினைத்தாலும், ஒன்றும் நடக்காமல் போய் விடும். இவர்களுக்கு புதையல் கிடைக்க வேண்டுமென்ற பேரவா எப்போதும் இருக்கும். ஆனால் குரு மேற்கண்ட நிலை களில் இருந்தால் எல்லாம் கனவாகவே போய்விடும்.
குரு 6, 8, 12 தவிர மற்ற இடங்களில் இருப் பின் ஓரளவு ஆசைகள் நிறைவேறும்.
குரு நீசமான கும்ப ராசியினர் கோவில் மற்றும் அந்தணர், பசுமடம் போன்ற வகையில் நன்கு செலவழிக்கவேண்டும். இவ்வாறு செலவழிக்கும்போது ஓரளவு எண்ணங்கள் ஈடேறும். வயதான அந்தணர்களுக்கு ஆடை, உணவு வாங்கிக்கொடுங்கள். எத்துணை அன்னதானம் செய்கிறீர்களோ அத்துணை யளவு உங்கள் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும்.
மீனம்
மீன ராசியினரின் எண்ணங்கள், யோச னைகளுக்குரிய இடம் கடகம்; அதிபதி சந்திரன். இதனால் இவர்களின் யோசனை, கற்பனையெல்லாம் வேகவேகமாக இருக்கும். அதேசமயம் இவர்களின் லட்சியங்களும் தினத்துக்கு ஒன்றாக மாறிக்கொண்டே இருக்கும். சற்றே தாய்மை சிந்தனையுடைய வர்கள். இவர்களின் அநேக லட்சியங்கள் குழந் தைகள் சார்ந்ததாகவே அமையும். மற்றும் புத்தி முதலீட்டு லட்சியங்கள் அதிக மிருக்கும்.
இவர்களின் மாறிக்கொண்டே இருக்கும் ஆசைகளை நிறைவேற்றுபவர் மகரச்சனி. எண்ணங்கள் அதிவிரைவாகவும், நிறைவேற அதிக காலம் ஆவதால்தான், இவர்கள் நிறைய லட்சியங்களை மாறி மாறி யோசிப்பார்கள் போலும். சனி ஆட்சியாக மகரத்திலிருந்தால், காலந்தாழ்த்தியாவது எண்ணம் நிறைவாக நிரந்தரமாக நிறைவேறும். இதே சனி கும்பத்தில் ஆட்சியானால் ஒன்று லட்சியம் நிறைவேற நிறைய செலவாகும் அல்லது அலைத்து திரிந்து ஆசைகளை நிறைவேற்ற முடியும்.
வெகுசிலருக்கு விரயத்தில் சனி அமர்ந்தால், லட்சியங்கள் நிறைவேற முடியாமல் பூஜ்ஜியமாகப் போய்விடும். மீனத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றும் சனி பகவான் எட்டாமிடத்தில் உச்சமாவார். எட்டாமிடம் ஒரு மறைவு ஸ்தானம். அங்கு ஒரு கிரகம் உச்சமாவது அவ்வளவு நல்லதல்ல. எனவே சனி உச்ச மானால், லட்சியம் நிறைவேற நிறைய தடைகள் ஏற்படும். அல்லது எண்ணம் ஈடேற நிறைய இருபது ரூபாய் செலவழிக்க வேண்டிவரும். அல்லது சட்டப்புறம்பான வழிகளில் எண்ணங்கள் நிறைவேறும். இதனால் இவர்களின் வெற்றியை அதிகமாகப் பறைசாற்ற முடியாது. இவர்களின் எதிரிகள் இவர்கள் லட்சியம் நிறைவேறும் வழிமுறைகளை எள்ளி நகையாடுவர்.
இதே சனி நீசமானால், இவர்களின் லட்சிய வீழ்ச்சிக்கு இவர்கள் பேச்சே காரணமா கிவிடும். பேசிப்பேசியே குறிக்கோளைக் குதறி எடுத்துவிடுவார்கள். வெகுசில சமயம் இவர்கள் குடும்பமும் லட்சியம் நிறைவேறத் தடைக்கட்டி நிற்கும்.
மீன ராசியினருக்கு இவ்வாறு சனி நீசமாகி, எண்ணங்கள் நிறைவேறத் தடை யேற்பட்டால், சனீஸ்வர பகவானையும் ஆஞ்ச னேயரையும் வணங்கவும். முக்கியமாக மலை மேலுள்ள ஆஞ்சனேயர் அல்லது மிக உயர மான ஆஞ்சனேயரை வணங்குவது சிறப்பு. முடிந்த அளவு இரும்புப் பொருட்கள் தானம் வழங்கவும். ஆரம்பப்பள்ளிகள், உணவு சம்பந் தமான அன்னதானக் கூடங்கள், இளைஞர்களின் உடற்பயிற்சித் தளங்கள் இவற்றிற்கு இரும்பு சம்பந்தமான பொருளை தானம் செய்யவும். சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு விளக்கேற்ற, எண்ணங்கள் தடையின்றி நிறைவேறும்.
செல்: 94449 61845