Advertisment

12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு பிப்ரவரி மாதப் பரிகாரங்கள்!

/idhalgal/balajothidam/12-rasi-27th-february-remixes

மேஷம்

அஸ்வினி: கடகத்தில் ராகு இருப்பதால் திருமணத்தடை இருப்போர் திருமணஞ்சேரி போன்ற இடங்களுக்குச் சென்று இறைவனை வேண்டிவருதல் நன்று. தாயாருக்கு ஆகாத மாதம். வீட்டில் தென்கிழக்குப் பகுதியில் கழிவறை இருந்தால், அதன் உட்பகுதியில் ஏழு சாக்பீஸ் களை ஒரு பீங்கான் கிண்ணத்தில் நிரப்பி மூலையில் வைத்து, மாதக் கடைசியில் வெளியில் போடுவது நன்று.

Advertisment

பரணி: கேதுவுடன் சூரியன் மகரத்தில் இருப்பதால் தந்தையின் ஆரோக்கியத்தில் பின்னடைவுகள் ஏற்படும். உங்களுக்கு சிறுநீர் உபாதை வரலாம். செவ்வாய்க்கிழமை சிறு வெள்ளிக்கிண்ணத்தில் தேனை நிரப்பி, அதன் மேல் குங்குமம் தூவி பூஜையறையில் இருக்கச் செய்து, மறுநாள் அதனை செடியில் ஊற்றி விடவும். கெடுதல் போகும்.

கிருத்திகை முதல் பாதம்: மூன்று தலை முறையாக ஒரே வீட்டில் தங்கியிருப்போருக்கு சனியின் யோகம் நல்லதாக நடக்கும். சிவில் இஞ்சினியர், கட்டடம் பராமரிப்போருக்கு எண்ணிய எண்ணம் ஈடேறும். சனி 10-ல் இருப் போர் அடிக்கடி வேலையை இடம் மாற்றிக் கொள்வது கூடாது. இம்மாதம் இடமாற்றம் வேண்டாம்.

ரிஷபம்

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: 8-ல் சனி இருப்பது தந்தையின் சகோதரிக்கும் உங்களுக்கும் நல்லதல்ல. ஒரு மர ஸ்டூல் அல்லது பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்து, உச்சந்தலையில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்து பாதம் இரண்டும் பூமியில் படா வண்ணம் காலை மேலே தூக்கி வைத்து நீராடி னால் சனி தோஷம் விடை கொடுக்கும்.

Advertisment

ரோகிணி: கேது மகரத்தில் இருப்பதால் தாயின் சகோதரர், மனைவியின் தந்தையிடம் வேண்டிய உதவி பெறலாம். சர்க்கரை வியா தியால் பாதிக்கப்பட்டோருக்கு இம்மாதம் வியாதியின் தன்மை கெடுதலைத் தரலாம்; உஷார். பெண்கள் வளர்பிறைச் சந்திரன் 3, 6-ஆம் திதிகளில் மாலை பார்வதியை வணங் குதல் நன்று. நோய் வேகம் குறையும்.

மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்: சுக்கிரன் சனியுடன் தனுசுவில் இருப்பதால் இம்மாதம் அரசு சார்ந்த எந்த நன்மையும் பெற இயலாது. உங்களது அந்தரங்க உறுப்பினை தயிர் கலந்த நீரால் தூய்மை செய்தல் நன்று. அதிக தானதர்மம் இம்மாதம் வேண்டாம். ராகு கடகத்தில் இருப்பதால் திங்கட்கிழமை, நான்கு கால் பிராணிகளுக்கு உதவி புரிதல் நன்று.

மிதுனம்

மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்: ராசிக்கு எழில் சனி, சந்திரன். பியூட்டி பார்லர் நடத்துவோர் கவனமுடன் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு கெமிக்கல் வண்ணம் உபயோகிக்கும்போது ஒவ்வாமை வரலாம். மாதர்கள் சிவப்புநிற கால்நடைகளுக்கு உணவு கொடுப்பது நன்று. வெண்ணிறப் பசுவுக்கு புல் கொடுப்பது கூடாது. நீலநிறப்பூவை திருஷ்டி சுற்றி நீரில் போடுவது நன்று.

திருவாதிரை: ருசியோடு சாப்பிடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்

திருவாதிரை: ருசியோடு சாப்பிடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். திருவாதிரை 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் துணிச்சலானவர்கள்.

இளமைக்காலம் மிகச் செழிப்பாக இருந் திருக்கும். இம்மாதம் பணநெருக்கடி வந்தால் ஒரு சிறு வெள்ளி உலோக உருண்டையை பர்சில், ஹேண்ட்பேக்கில் இருக்கச் செய்வது நல்லது. இரண்டில் ராகு- கோமேதக மோதிரம் அணிதல் போதும்.

புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: அதிபுத்திசாலித்தனம் இருக்கும். அதனை வைத்து குடும்பத்தில் நல்ல பெயர் வாங்கலாம். பூர்வீகச் சொத்து மற்றும் கைவசம் இருக்கும் தங்கத்தை வைத்து இம்மாதம் லோன் பெற முயற்சிப்பது கூடாது. குழந்தையில்லா தம்பதி களை கௌரவப்படுத்துதல் நன்று. இம்மாத அதிர்ஷ்டக் கிழமை புதன், வியாழன். புதுமுயற் சிகள் வெற்றி பெறும்.

கடகம்

புனர்பூசம் 4-ஆம் பாதம்: சுக்கிரனும் சந்தி ரனும் தனுசில் இருப்பதால் வாழ்க்கைத்துணை யின் நடை, உடை, பாவனையில் தலையிடல் கூடாது. விருப்பம்போல் சிங்காரிக்க அனுமதி கொடுப்பது நல்லது. ஆன்மிகப்பயிற்சி தொடங்க உகந்த மாதம். உங்களுடைய அரைகுறை வேலை களை பிறரிடம் செய்யக்கூறுவது இம்மாதம் கெடுவினைகளைத் தரும்; உஷார்.

பூசம்: இப்போது வயது 20, 21, 26, 30, 32 எனில் திருமணம் சார்ந்த சுபச்செய்தி வரும். பர்னிச்சர், தேக்கு மர வியாபாரம் லாபம் தரும். நீங்கள் பிறந்த வீட்டின் பக்கத்தில் கணபதி கோவில் இருந்தால், அவரை செந்தாமரைப் பூவால் இம்மாதம் அர்ச்சனை செய்தால், வேலை வாய்ப்பு அனுகூலமாகும். அரசியல்வா திகள் கட்சி மாற இது உகந்த மாதம்.

ஆயில்யம்: கருவுற்ற பெண்களுக்கு இம்மாதம் ஆண் குழந்தை பிறந் தால் வருமானம் பெருகும். இம்மாதம் எவரிட மும் எதுவும் இலவசமாகப் பெறுவது கூடாது. புரோகிதர்களுக்கு ஆடை தானம் சிறப்பானது.

சாதுக்களுக்கும் உதவிபுரிதல் நல்லது. புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் புதுமுயற்சிகள் ஆரம்பிக்கலாம். மகாலட்சுமி அருள்புரிவார்.

சிம்மம்

மகம்: கேதுவின் இருக்கை உங்களுக்கு சாதக மாகத் தெரியவில்லை. சூரியனுடன் மகரத்தில் உள்ளார். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உதாசீனப்படுத்திச் சென்றால் கெடுதலை அனுப விக்க நேரிடும். தாய்மாமன் வழியில் கொடுக்கல்- வாங்கல் வேண்டாம். இரவில் பால் அருந்து வோர் பச்சைக் கற்பூரம் கலந்துகொள்வது நல்லது.

பூரம்: செவ்வாயின் கெடுதல் நீங்கி நல்லவை நடக்க நான்கு நாட்கள் சமையல் கூடத்தில் அமர்ந்து ஒரு வேளை உணவுண்ணவேண்டும். வீட்டில் கடைசி மூலையில் இருட்டான அறை இருப்பது நல்லது. சிறு மண் குடுவையில் தேனை நிரப்பி, தெற்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றி நீர் நிலையில் போடுவதால் நவகிரக தோஷம் அகலும்.

உத்திரம் 1-ஆம் பாதம்: உங்கள் பெயரில் விளைநிலம் இருந்தால் இம்மாதம் அதிக லாபம் பெறலாம். ஸ்டேஷனரி விற்போர், பிரின்டிங் பிரஸ் வைத்திருப்போர் பணவரவை எதிர்பார்க் கலாம். இப்போது வயது 10, 19, 28, 37, 46 எனில் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவில் சென்று வணங்கிவந்தால் சுலப நன்மைகள் பெறலாம். சனிக்கிழமை வரும் மூல நட்சத்திரம் கெடுதல் தரும்.

கன்னி

உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: கடகத்தில் ராகு இருப்பதால் தந்தைமீது பாசம் கெடும். இம்மாதம் மட்டும் வெள்ளி டம்ளர் இருந்தால் அதில் தண்ணீர் பருகுதல் நன்று. காது வலி, சிறுநீர்த் தொல்லை வந்து மறையும். எவரிடமும் மின்சார உபகரணம் இலவசமாகப் பெறுதல் வேண்டாம். முடிந்தால் திருவக்கரை வரதராஜப் பெருமாளை வணங்குதல் சிறப்பானது.

ஹஸ்தம்: அரசு சார்ந்த வருமானத்தடைகள் ஏற்பட்டிருந்தால் இம்மாதம் முழுமூச்சுடன் ஈடுபட்டால் எல்லாமே சக்சஸ்! சனி பகவான் தலையீட்டால் நீங்கள் பிறரிடம் ஏமாற்றமடை யலாம். கவனமுடன் செயல்படவும். சனி ஹோ ரையில் புது முயற்சிகள் எதுவும் வேண்டாம். பெண்கள் துர்க்கையை வணங்கினால், எண்ணங் கள் அப்படியே நிறைவேறும்.

sunசித்திரை 2, 3, 4-ஆம் பாதங்கள்: இளமைப் பருவத்தில் மூச்சு சார்ந்த தொல்லைகள் இருந் திருந்தால் இம்மாத பருவநிலைக் கோளாறால் உடல் உபாதை வரும். வைடூரிய மோதிரம்- அதாவது கேட்ஸ் ஐ மோதிரம் மூன்று காரட்டில் ஒபன் செட்டாக அணிவது நாட்பட்ட பலனைப் பெற்றுத் தரும். சூரியன் மகரத்தில் இருப்பதால், பெற்றோரை அனுசரித்து நடந்துகொள்வதால் மனநிம்மதி பெறலாம்.

துலாம்

சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: எழுத்தா ளர்கள் நீதிக்கு ஒத்துவராத எதையும் எழுதுவது கூடாது. நீதியரசர்கள் நடுநிலை வகித்து உண்மை யான குற்றவாளிக்கு உரிய தண்டனை கொடுத் தல் சிறப்பானது. இதில் குறைகள் இருந்தால் செவ்வாயின் கடும் சினத்திற்கு ஆளாக நேரிடும். இம்மாதம் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உப்பு கலந்த பண்டம் விநியோகிப்பது நன்று.

ஸ்வாதி: ராகு 10-ல் இருப்பதால் பெற்ற தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தலைவலி (டென்ஷன் தலைவலி) வந்தால் 400 கிராம் மல்லிக்கீரையை திருஷ்டி சுற்றி நீர்நி லையில் போடுவது நன்று. திருவலஞ்சுழி- சுவாமி மலைக்கு அருகிலுள்ள செஞ்சடைநாதர்- பெரியநாயகியை வணங்கினால் நற்பலன் பெறலாம்.

விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: கீழுள்ள ஷண்முக காயத்ரியை தினமும் காலையில் ஓதிவந்தால் நற்பலன் பெறலாம்.

"ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாஸேனாய தீமஹி/

தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்//'

கேது பகவானை வணங்குவதால், உத்தியோகத்தடைகள் அகலும். விநாயகரைத் துதிக்கலாம்.

விருச்சிகம்

விசாகம் 4-ஆம் பாதம்: உங்கள் ஜாதகத் தில் சந்திரனோடு ராகு சேர்ந்திருந்தாலும் அல்லது கடகத்தில் ராகு இருந்தாலும், கணவன்- மனைவியரிடையே வீண் சந்தேகம் ஏற்படும். திருப்தியற்ற மணவாழ்க்கை இருந்தால், தலைய ணையின் அடியில் ஏழு ஒரு ரூபாய் நாண யத்தை வைத்துத் தூங்கி, அடுத்த நாள் அதனை நீர்நிலையில் போடுவது போதுமானது; திருஷ்டி அகலும்.

அனுஷம்: ராசிக்கு 2-ல் சுக்கிரன் இருப் பதால், சுபச்செலவு கூடுதலாகும். வெள்ளிக் கிழமைகளில் இரவு ஏழு மணிக்குப் பிறகு பிறருக்கு அதிக தானம் தர்மம் கூடாது. தெற்கு திசை நோக்கிய வீட்டில் குடியிருந்தால், தலைவா சலில் மஞ்சள் நிறத்தின்மேல் குங்குமம் பூசி திலகம்போல் இருக்கச் செய்வது நன்று.

கேட்டை: செவ்வாய் மீனத்தில் இருப் பதால், குழந்தைகளின் கவனக்குறைவால் நெருப் பால் விபத்து வரலாம். அவர்களிடம் எரியும் பொருளைக் கொடுப்பது கூடாது. இம்மாதம் கருவுற்ற பெண்களுக்கு இரவில் ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தையின் யோகத்தால் பொருளாதாரம் அதிகரிக்கும். அங்காரகனை செவ்வாய்க்கிழமை வணங்குதல் நல்லது.

தனுசு

மூலம்: ராகு தன்னந்தனியாய் கடகத்தில் உள்ளார். நேர்மையில்லா வருமானத்தில் ஆசை வைப்பது கூடாது. முக்கோண வடிவில் சிறு வெள்ளி உலோகத் துண்டு கைவசம் இருப்பது வருமுன் காக்கும். புதன் மகரத்தில் இருப்பதால் தந்தையிடமிருந்து எதுவும் இம்மாதம் எதிர் பார்க்க இயலாது. ஐந்து புதன்கிழமை பெரு மாள் உண்டியலில் ஐந்து ரூபாய் காணிக்கை போடவும்.

பூராடம்: டிராவல் ஏஜென்சி நடத்து வோர், குத்தகை நிலத்தில் பயிரிடுவோர், பழத் தோட்டம் வைத்திருப்போருக்கு லாபம் தரும் மாதம் இது. சுக்கிரன்- சனியுடன் இருப்பதால் எதிர்பாராத லாபச்செய்தி வரும். பத்து ரூபாய்க்கு நவதானியம் வாங்கி, திருஷ்டி சுற்றி, வெள்ளிக்கிழமையன்று பறவைகளுக்குப் போடல் நன்று.

உத்திராடம் 1-ஆம் பாதம்: செவ்வாய் மீனத்தில் இருப்பதால், பூர்வீகச் சொத்து இருந்தால் இம்மாதம் உங்களை நாடிவரும். திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் அவை சார்ந்த கோரிக்கை வைத்தால் வெற்றி கிட்டும். வாயுத்தொல்லை, பெரியவர் கட்கு ரத்த அழுத்தத் தொல்லை வந்து மறையும்.

ஆஸ்துமாவால் அவதிப்படுவோர்க்கு உதவி புரிதல் நன்று.

மகரம்

உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: குயில் களின் இருப்பிடத்தை இசையால் அறியலாம். அதனைப்போலவே, சூரியன் மகரத்தில் இருப் பதால் நல்ல மார்க்கத்தைத் தருவார். பெற்ற தந்தையின் மனம்கோணாமல் நடக்கவேண்டும். தற்போது வயது 24 எனில் திருமணம் சார்ந்த முயற்சி இம்மாதம் வேண்டாம். அரசு உத்தியோ கஸ்தர்கள் அதிக நன்மைகளைத் தனதாக்கலாம்.

திருவோணம்: ராசிக்கு பன்னிரண்டில் சனி பகவான் இருப்பதால் 12 பாதாம் பருப்பை ஒரு கருப்புத்துணியில் பொட்டலமாகக் கட்டி இருட்டான இடத்தில் வைத்துக்கொள்ளவும். தனவரவைத் தக்கவைக்கலாம். பெண்கள் கருநிற வளையல் மூன்றை வலது கையில் போடுவதும் நல்ல பலன்தரும். "ஓம் சனீஸ்வராய நமஹ' என உச்சரிப்பது நன்று.

அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்: பூமியின் தேவதையை புழுதி மண்மூடியதுபோல, உங்கள் நல்ல மனதில் தீய எண்ணம் இம்மாதம் படையெடுக்கும். அரசமரத்தின் தெற்கு நோக்கிப் போகும் வேரில் பச்சைப்பாலும், வெள்ளை சர்க் கரையையும் இட்டு, சுட்டுவிரலால் கிளறி, அந்த மண்ணைத் திலகமாக இடவும். அத்தனைக் கெடுதலும் அடியோடு மறைந்துவிடும்.

கும்பம்

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: சாஸ்திர சம்பிரதாயங்களை இம்மாதம் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். சூரியன் மகரத்தில் உள்ளார். நீங்கள் தடம்புரளும் சந்தர்ப்பம் வரலாம். அரசியல்வாதியெனில் கட்சி தாவும் எண்ணம் பாடாய்ப்படுத்தும். மூன்று சனிக் கிழமை, ஒரு தட்டில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் சிறிது கருப்பு எள்ளைத் தூவுங்கள். உங்கள் பிம்பத்தை அதில் பார்த்துவிட்டு வாஷ் பேஸினில் ஊற்றவும்.

சதயம்: செவ்வாய் இடத்தில் குரு இருக்கிறார்.

வியாபாரத்தில் மிகுதியான லாபத்தைப் பெருக்கலாம். எதிரிகளும் உங்களை நாடிவருவார்கள். ஆலயம் சென்று, வடகிழக்கு மூலையிலுள்ள இடத்தை உங்கள் கையால் சுத்தம் செய்து வந்தால் குருவருள் பெறலாம். வேருக்கும், மரத்திற்கும் இடைவெளியுள்ள இடத்தில் (அரசமரத்திற்கு) தண்ணீர் பாய்ச்சல் நல்லது.

பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்: இம்மாதம் சிம்ம ராசியினரை குருவாக ஏற்றுக்கொண்டால், அதிக விவரங்களை அவர்கள் மூலம் பெறலாம். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறலாம். சனியன்று மூன்று ஆரஞ்சு நிற கேரட்டை தலையணை அடியில் வைத்துத் தூங்கி, அடுத்த நாள் அதனை பசுவுக்குக் கொடுத்தால் கல்வித்தடை அகன்று மதிப்பெண் பெறலாம்.

மீனம்

பூரட்டாதி 4-ஆம் பாதம்: மீனத்தில் செவ்வாய், கடகத்தில் ராகு. இருதாரம் வைத்திருப்போரின் முதல் தார ஆண் குழந்தைமீது கவனம் தேவை. இப்போது 21 வயது எனில் திருக்கடையூர் சென்று ஆயுஷ் ஹோமம் செய்தல் நன்று. இயலாதெனின் கோமேதக ராசிக்கல் மூன்று காரட்டில், வெள்ளி உலோகத்தில் பதித்து அணிவது போதுமானது. இது நல்ல பரிகாரம்.

உத்திரட்டாதி: 11-ல் சூரியன் மற்றும் கேது இம்மாதம் இருக்கிறார்கள். தந்தை பாடுபட்டு சேர்த்தவற்றை விரயம் செய்ய முற்படுவார் மகன். நாய் வளர்போர் இரவில் காரணமின்றி நாய் சப்தம் செய்தால், நீண்ட தூரப்பயணத்தைத் தவிர்க்க வேண்டும். பசு மாட்டுக் கோமியத்தை வாசலில் தெளிப்பதால் தோஷம் அகலும். கிராமத்தில் வசிப்போர் மூன்று ஊமத்தங்காயை வாசலில் தொங்கச் செய்யலாம்.

ரேவதி: பத்தில் சுக்கிரன், சனி. இம்மாதம் மருமகனிடம் பணவிஷயத்தில் எச்சரிக்கை நிலையைக் கடைப்பிடிக்கவும். பிற மாதர்க ளோடு பழகும் நபர்கள், அவர்களுக்காக உத்தர வாதம் கொடுப்பது கூடாது. மதுப்பிரியர்கள் மதி மயக்கத்தில் பொறியில் சிக்கிய எலிபோல் துயரத்தை தாமே தேடிக்கொள்ள நேரிடும். மிதியடியில்லாமல் ஆலயம் சென்று சனி பகவானை வணங்கவும்.

செல்: 93801 73464

bala010219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe