மேஷம்
அஸ்வினி: மாதத்தின் முதல் வாரம் சீராகத் தென்படவில்லை. மூன்றாவது வாரம் பிரச்சினைகள் மொத்தமாக விடைகொடுக்கும். மாணவர்கள் உற்சாகமடையலாம். சூரியன் உங்கள் ராசியிலேயே இருப்பதால், "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என செயல்படவேண்டும். குருவும் கேதுவும் தனுசில் இருப்பதால் நல்ல எண்ணங்கள் நற்பலன் தரும். 9-ல் கேதுவுடன் சனியும் இருப்பதால், குடும்பமாக கூட்ட நெரிசலில் போகும்போது, சிறுவர்கள்மீது தனி கவனம் தேவை; காணாமல் போகலாம். பளிச்சென்ற ஆடை அணியுங்கள்.
பரணி: ராசிக்கு 4, 10-ல் எந்த கிரகமும் காணப் படவில்லை. தாய்- தந்தையரைப் பேணுதல் நன்று. பார்வையற்றோருக்கு உதவிபுரிவதால் சூரியனின் பேராதரவைப் பெறலாம். ராகு பகவான் எழுத்தாளர்களை ஊக்குவிப்பார். பாட்டிகள் இம்மாதம் பேரன் பிறந்தால், நூறு நாட்களுக் குப்பின் பார்ப்பது நல்ல செயல். திங்கட்கிழமை வில்வம், அல்லி, மரிக்கொழுந்து ஆகியவற்றால் சிவனுக்கு அர்ச்சனை செய்வது கூடுதல் பலம். கண் உபாதை வந்தால் குடுமியுள்ள தேங்காயை திருஷ்டி சுற்றி தெற்கிலிருந்து வட திசை நோக்கிப் போகும் நீரில் போடவும். கிருத்திகை முதல் பாதம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் வயது 35, 50 அல்லது 56 எனில் தொழில் மாற்றம், இடமாற்றம், பணிமாற்றம் வரும். எட்டில் இருக்கும் மூவர் கழுத்துவலி, எலும்புத் தேய்மானம், தொண்டைவலியை உருவாக்குவார்கள். டர்குவிஸ் என்ற ராசிக்கல் மோதிரம் அணியலாம். கொடுக்கல்- வாங்கலில் கோபத்தை அடக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை, மிளகு வடைமாலை அணிவித்து, மனக்குறைகளை காலபைரவரிடம் கொட்டித்தீர்த்து வணங்கிவந்தால் அருள்புரிவார்.
ரிஷபம்
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: முதல் இரண்டு வாரங்கள் நிறைவேறாத ஆசைகளை கிரகநாதர்கள் தீர்த்து வைப்பார்கள். வியத்தகு நல்லவை நடக்கும். 2-ல் செவ்வாய்- மூத்த சகோதரர் திருமணத்தின்போது வரதட்சணைப் பிரச்சினை இருந்தால், சுக்கிரன் மீனத்தில் இருப்பதால் சீர்செய்து வைக்கப்படும். துணி வியாபாரிகள் காட்டில் மழைதான். தனுசில் இருக்கும் சனி, கேது சில தடைகளைத் தருவார்கள். சனிக்கிழமை மர நாற்காலியில் உட்கார்ந்து தலையில் சிறிது நல்லெண்ணெய் பூசியபின், பூமியில் பாதம் படாதவாறு காலைத் தூக்கிவைத்து ஸ்நானம் செய்யவும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
ரோகிணி: இம்மாதம் இரண்டாவது வாரத்திற்குமேல் எவருக்கும் கடன்தர வேண்டாம். பணம்வரத் தயங்கும். யாரை எங்கே வைப்பது போன்ற மனப் போராட்டம் இருக்கும். விலையுயர்ந்த பொருளை அடகு அல்லது ஈடுவைத்துப் பணம் வாங்கியிருந்தால் அவை வந்துவிடும். நெடுநாள் தொல்லைகள் தொடர்ந்தால், தேய்பிறை அஷ்டமியில் நிலவொளியின்கீழ் உட்கார்ந்து காலபைரவரரை வேண்டிக்கொண்டால் தீர்க்கமுடியாத தொல்லை நீங்கும். தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றவேண்டும். இயலாவிடில் வளர்பிறை அஷ்டமியில் வழிபடுவது உத்தமம்.
மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்: சுக்கிரன் மீனத் தில் தன்னந்தனியாய்க் காணப்படுகிறார். சுக்கிலம் (விந்து) சார்ந்த பின்னடவு வரும். வாலிபர்கள் இரவில் எலுமிச்சை ரசம் சாப்பிட்டால் சொப்பன ஸ்கலிதமாகும். எனவே வல்லாரைக் கீரை சாப்பிடல் நன்று. 26, 27, 28 தேதிகளில் பணவரவு இருக்கும். பணி ஓய்வு பெற்றோருக்கு பென்ஷன் தடைப்படும் வாய்ப்புள்ளது. திருமணத் தடைக்கு சிவப்புடன் கருமை நிறம் கலந்த பசு, கன்றினை ஆலயத்துக்கு அர்ப்பணிப்பது நற்பலன்தரும். ஞாயிறன்று ஸ்ரீசொர்ண பைரவர் காயத்திரி கூறல் நன்று.
"ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷண பைரவ ப்ரசோதயாத்.'
மிதுனம்
மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள்: ராசியிலேயே ராகுவும் செவ்வாயும் இருக்கிறார்கள். மமதையான எண்ணங்களால் தம்பதி யரிடையே வீண் மனத் தாங்கல்கள் உருவாகும். ஒரு சிவப்புநிற ஆப்பிளில் கோமேதக ராசிக்கல் மோதிரத்தை உள்ளே புதைத்துவைத்து, 24 மணி நேரம் சென்றபின் அதை வெளியே எடுத்துவிட்டு ஆப்பிளை ச
மேஷம்
அஸ்வினி: மாதத்தின் முதல் வாரம் சீராகத் தென்படவில்லை. மூன்றாவது வாரம் பிரச்சினைகள் மொத்தமாக விடைகொடுக்கும். மாணவர்கள் உற்சாகமடையலாம். சூரியன் உங்கள் ராசியிலேயே இருப்பதால், "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என செயல்படவேண்டும். குருவும் கேதுவும் தனுசில் இருப்பதால் நல்ல எண்ணங்கள் நற்பலன் தரும். 9-ல் கேதுவுடன் சனியும் இருப்பதால், குடும்பமாக கூட்ட நெரிசலில் போகும்போது, சிறுவர்கள்மீது தனி கவனம் தேவை; காணாமல் போகலாம். பளிச்சென்ற ஆடை அணியுங்கள்.
பரணி: ராசிக்கு 4, 10-ல் எந்த கிரகமும் காணப் படவில்லை. தாய்- தந்தையரைப் பேணுதல் நன்று. பார்வையற்றோருக்கு உதவிபுரிவதால் சூரியனின் பேராதரவைப் பெறலாம். ராகு பகவான் எழுத்தாளர்களை ஊக்குவிப்பார். பாட்டிகள் இம்மாதம் பேரன் பிறந்தால், நூறு நாட்களுக் குப்பின் பார்ப்பது நல்ல செயல். திங்கட்கிழமை வில்வம், அல்லி, மரிக்கொழுந்து ஆகியவற்றால் சிவனுக்கு அர்ச்சனை செய்வது கூடுதல் பலம். கண் உபாதை வந்தால் குடுமியுள்ள தேங்காயை திருஷ்டி சுற்றி தெற்கிலிருந்து வட திசை நோக்கிப் போகும் நீரில் போடவும். கிருத்திகை முதல் பாதம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் வயது 35, 50 அல்லது 56 எனில் தொழில் மாற்றம், இடமாற்றம், பணிமாற்றம் வரும். எட்டில் இருக்கும் மூவர் கழுத்துவலி, எலும்புத் தேய்மானம், தொண்டைவலியை உருவாக்குவார்கள். டர்குவிஸ் என்ற ராசிக்கல் மோதிரம் அணியலாம். கொடுக்கல்- வாங்கலில் கோபத்தை அடக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை, மிளகு வடைமாலை அணிவித்து, மனக்குறைகளை காலபைரவரிடம் கொட்டித்தீர்த்து வணங்கிவந்தால் அருள்புரிவார்.
ரிஷபம்
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: முதல் இரண்டு வாரங்கள் நிறைவேறாத ஆசைகளை கிரகநாதர்கள் தீர்த்து வைப்பார்கள். வியத்தகு நல்லவை நடக்கும். 2-ல் செவ்வாய்- மூத்த சகோதரர் திருமணத்தின்போது வரதட்சணைப் பிரச்சினை இருந்தால், சுக்கிரன் மீனத்தில் இருப்பதால் சீர்செய்து வைக்கப்படும். துணி வியாபாரிகள் காட்டில் மழைதான். தனுசில் இருக்கும் சனி, கேது சில தடைகளைத் தருவார்கள். சனிக்கிழமை மர நாற்காலியில் உட்கார்ந்து தலையில் சிறிது நல்லெண்ணெய் பூசியபின், பூமியில் பாதம் படாதவாறு காலைத் தூக்கிவைத்து ஸ்நானம் செய்யவும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
ரோகிணி: இம்மாதம் இரண்டாவது வாரத்திற்குமேல் எவருக்கும் கடன்தர வேண்டாம். பணம்வரத் தயங்கும். யாரை எங்கே வைப்பது போன்ற மனப் போராட்டம் இருக்கும். விலையுயர்ந்த பொருளை அடகு அல்லது ஈடுவைத்துப் பணம் வாங்கியிருந்தால் அவை வந்துவிடும். நெடுநாள் தொல்லைகள் தொடர்ந்தால், தேய்பிறை அஷ்டமியில் நிலவொளியின்கீழ் உட்கார்ந்து காலபைரவரரை வேண்டிக்கொண்டால் தீர்க்கமுடியாத தொல்லை நீங்கும். தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றவேண்டும். இயலாவிடில் வளர்பிறை அஷ்டமியில் வழிபடுவது உத்தமம்.
மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்: சுக்கிரன் மீனத் தில் தன்னந்தனியாய்க் காணப்படுகிறார். சுக்கிலம் (விந்து) சார்ந்த பின்னடவு வரும். வாலிபர்கள் இரவில் எலுமிச்சை ரசம் சாப்பிட்டால் சொப்பன ஸ்கலிதமாகும். எனவே வல்லாரைக் கீரை சாப்பிடல் நன்று. 26, 27, 28 தேதிகளில் பணவரவு இருக்கும். பணி ஓய்வு பெற்றோருக்கு பென்ஷன் தடைப்படும் வாய்ப்புள்ளது. திருமணத் தடைக்கு சிவப்புடன் கருமை நிறம் கலந்த பசு, கன்றினை ஆலயத்துக்கு அர்ப்பணிப்பது நற்பலன்தரும். ஞாயிறன்று ஸ்ரீசொர்ண பைரவர் காயத்திரி கூறல் நன்று.
"ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷண பைரவ ப்ரசோதயாத்.'
மிதுனம்
மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள்: ராசியிலேயே ராகுவும் செவ்வாயும் இருக்கிறார்கள். மமதையான எண்ணங்களால் தம்பதி யரிடையே வீண் மனத் தாங்கல்கள் உருவாகும். ஒரு சிவப்புநிற ஆப்பிளில் கோமேதக ராசிக்கல் மோதிரத்தை உள்ளே புதைத்துவைத்து, 24 மணி நேரம் சென்றபின் அதை வெளியே எடுத்துவிட்டு ஆப்பிளை சாப்பிட்டால், ராகு நல்லதைச் செய்வார். சனி பகவான் தனுசில் இருக் கிறார். மகனால் தந்தைக்குப் பெருமை சேரும். பொதுநலத் தொண்டர்கள் பாராட்டை அடையலாம்.
திருவாதிரை: ராகு 11-ல்; செவ்வாய், புதன் இணைந்து மேஷத்தில். இம்மாதம் பெண்கள் கணவருடைய கவனத்துக்கு வராது எந்த சேமிப்பும் செய்யவேண்டாம். பணம் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட நிலையாகும்; உஷார்! கணவன்- மனைவிக்கு திருஷ்டி ஏற்படலாம். மாடப்புறா அல்லது ஜோடிப் புறாவுக்கு தானியம் தூவலாம். இளம் காதலர்கள் கைபேசி உரையாடலை இம்மாதம் தவிர்ப்பது நன்று. கல்வியறிவில் கணவர்- மனைவிக்குள் ஏற்றத்தாழ்வு இருந்தால் சுட்டிக்காட்டுவது வேண்டாம். ராகு காலத்தில் சம்பங்கி மாலையால் பைரவரை வணங்கவும்.
புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: அரசியல், பொதுநலத் தொண்டர்களே, இம்மாதத்தின் கடைசி வாரம் 24, 25 தேதிகளில் எல்லாமே தடையாகும். மேடைகளில் பரிகசிக்கப்படலாம். ஆனால் 27, 28 தேதிகளில் எல்லாமே சக்கஸ். குரு- சனி, கேதுவால் வீட்டில் எதைத்தொட்டாலும் ரிப்பேராகிவிடும். வாகனம் வைத்திருப்போர் இம்மாதம் சர்வீசுக்கு அனுப்பாதிருத்தல் நல்லது. டிரைவிங் சீட்முன் சிறிது நவதானியத்தை வைத்துக்கொண்டு, நீர்நிலைகளைக் கடக்கும்போது அதில் வீசிவிடவும். தீமை அகலும்.
கடகம்
புனர்பூசம் 4-ஆம் பாதம்: இம்மாதம் எல்லா கோணங்களிலும் கிரகநாதர்கள் உயர்வையே பெற்றுத் தருவார்கள். எனினும் இம்மாதம் மட்டும் நம்பிக்கையானவர்களிடமும் பணத்தைக் கொடுத்துவைக்கவேண்டாம். சுயசம்பாத்தியத்தில் வீடு வைத்திருப்போர் இம்மாதம் அதனை ஈடாக வைத்துக் கடன் பெறுதல் வேண்டாம். ஐந்து செவ்வாய்க்கிழமைகள் செவ்வாய் ஹோரையில் ஒரு டீஸ்பூன் தேனை நீரில் கலந்து பருகினால், புறம்போக்கு, பட்டா இல்லா நிலம் வைத்திருப்போர், கோவில் நிலம், பினாமி நிலம் வைத்திருப்போர் நிம்மதி பெறலாம்.
பூசம்: குருவும் கேதுவும் தனுசில் இருப்பதால், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள் தேவையில்லா விவகாரங்களில் தலையிடக்கூடாது. மான நஷ்ட வழக்கு போன்ற தண்டனைக்குரிய பொறியில் சிக்க நேரிடும். கேதுவின் கெடுதல் மறைய பச்சைக் கற்பூரம் கலந்த பாலை இரவில் அருந்தலாம். தொழிலதிபர்கள், தொழிலாளர் பிரச்சினைகளில் சிக்க நேரிடும். சனி பகவான் அல்லது காலபைரவருக்கு கருவேப்பிலை சாதம் படைத்து வணங்குவது நல்லது. தென்மேற்கில் லேபர் குவாட்டர்ஸ் கூடாது.
ஆயில்யம்: சூரியனும் புதனும் ரிஷபத்தில் இருப்பதால், பூர்வீக வீட்டில் குடியிருக்கும்போது கெடுதல் வராதிருக்க கருநொச்சி இலையை சனிக்கிழமை மேற்கு வாசலில் தொங்கச்செய்து, அடுத்தநாள் அகற்றிவிடலாம். விலை போகாத பூமி, அதிக விலை போவதற்கு கிரகநாதர்கள் நல்வழிப்படுத்துவார்கள். இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் ஹெல்மெட் இன்றி பயணிக்கக்கூடாது.
சிம்மம்
மகம்: "படித்ததையெல்லாம் பயன்படுத்தாதவன் முதல்தர கோமாளி' என்பர். இம்மாதம் தெரிந்த கலை யாவும் வெற்றியை நோக்கிச் செல்லும். இரண்டாவது வாரம் கவலைகள் தாண்டவமாடும். மனைவின் ஆரோக்கியத்தை சுக்கிரன் கெடுப்பார். ஒரு சமச்சதுர வெள்ளி உலோகத்துண்டை, வேப்பமர வேரின் அருகே மண்ணில் புதைத்து மூடி நீர் ஊற்றி வரவும். சனி பகவானுக்கு எள் தீபமேற்றக்கூடாது. நெய் தீபமேற்றவேண்டும். வேதனைகள் விடைகொடுக்கும்.
பூரம்: இம்மாதம் மாணவர்களே, உஷார். சனியும் குருவும் இருப்பது சீராகக் காணப்படவில்லை. வீட்டில் கல்விகற்ற பெரியோர் இருந்தால், அவர்கள் அறிவுரை நல்வழிகாட்டும். ஆசிரியர்களிடம் நன்னடத்தையுடன் செயல்படவேண்டும். கருவுற்ற பெண்கள், இம்மாதம் 2, 4, 5, 8-ஆம் தேதிகளில் மருத்துவர்களின் அறிவுரையைக் கடைப்பிடிக்க வேண்டும். சனிக்கிழமை ஒரு பாக்கெட் எள்ளுருண்டை வாங்கி திருஷ்டி சுற்றி மீனுக்குப் போடவும்.
உத்திரம் 1-ஆம் பாதம்: குடும்பத்திலும், சொந்த விவகாரங்களிலும் பணப்பற்றாக்குறை வரும். பெண்கள் துர்க்கையை வேண்டுவதால் நற்பலன் மிகுதியாகும்.
"தாரித்ரிய சைல தம்போளி:
க்ஷுத்ர பங்கஜ சந்த்ரிகா
ரோகாந்தகாரா சண்டாம்ஸு:
பாபத்ரும குடாரிகா'
என்னும் மந்திரத்தை காலையில் 11 முறை பாராயணம் செய்வது நன்று. அமிதிஸ்ட் ராசிக்கல் மூன்று காரட்டில் அணிதல் நன்று.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கன்னி
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: ராசிக்கு 4-ல் சனி, கேது இணைந்திருக்கிறார்கள். கேது கெடுதலை உருவாக்க சனி பகவான் அனுமதிக்க மாட்டார். இரவில் இம்மாதம் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மூட்டு வலி (ஜாயின்ட் பெயின்) தொல்லை தந்தால் சிவாலயத்தில் பாலாபிஷேகம் செய்தல் நன்று. அரசு வேலை முடங்கும். நீங்கள் நவகிரக சுலோகம் கூறுவது போதுமானது. மகாகணபதியையும் வணங்கலாம்.
"மஹா கணபதிர் புத்தி ப்ரியா: க்ஷிப்ர ப்ரஸாததந:
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோசக நாசுந:'
ஹஸ்தம்: உங்களை ஆட்சிசெய்யும் கடவுள் அவித்தார்- சூரிய கடவுள் ரிஷபத்தில் இருப்பதால், வேண்டாத- தேவையற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுதல் கூடாது. அரசியல் பிரச்சாரகர்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தி பணத்தை அறுவடை செய்யலாம். அப்படியும், இப்படியும் என எதற்கும் குரல் கொடுக்கும் பட்டிமன் றத்தினருக்கு வாய்ப்புகள் சுலபமாகும். ஐந்து ஞாயிற்றுக்கிழமை ஒருபொழுது உப்பு கலவா உணவு உத்தமம். குரு வக்ரகதியை சமாளிக்க டோபாஸ்- புஷ்பராக மோதிரம் அணிவது நற்பலன் தரும்.
சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்: உங்களுடைய சொந்த ஜாதகத்தில் 2, 4, 7-ஆம் இடங்களில் (ஆணோ, பெண்ணோ) சுக்கிரன் இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவைத் தரமாட்டார். ஆனால் சுக்கிரன் இப்போதுள்ள நிலையில், வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு மனம் பேதலிப்பால் இன்னொரு உறவை இணைக்க முயல்வார் என்கிறது சாஸ்திரம். கல்வி பயிலும் மாணவர் களுக்கும் பொருந்தும். 24, 25 தேதிகளில் புதுப்பாதை தெரியவரும். "இரண்டு மனம் வேண்டும்- நினைத்து வாழ ஒன்று; மறந்து வாழ ஒன்று' எனப் பாடத்தோன்றும்.
துலாம்
சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: இந்த மாதம் முதல் வாரமே கிரகநாதர்கள் கைகோர்த்து மகிழ்ச்சியடையச் செய்வார்கள். பாட்டன், முப்பாட்டன் சேர்த்து வைத்துவிட்டுப்போன அசையா சொத்துகள் அதிக வருவாயைப் பெற்றுத்தரும். மூன்றாமிட கேது, சனி சொந்த வருமானத்தில் வீடு கட்டத் துணைவருவர். பார்வையற்றோருக்கு உதவுங்கள். உங்களுக்கான மரம் ராசிரீதியாக வில்வம். தடைகள் தெரியவந்தால் வில்வ மரத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுங்கள். தெற்கு நோக்கிய தலைவாசல் வீடு எனில், கதவில் சிவப்பு வட்ட ஸ்டிக்கர் ஒட்டிவைப்பது நன்று. அல்சர் இருந்தால் விளாம்பழம் உண்ணவும். மருத்துவ குணம் உள்ளது.
ஸ்வாதி: செவ்வாய் மனைவியால் செல்வத்தை அதிகரிக்கச் செய்வார். வரவேண்டிய பணம் தடைப்பட்டிருந்தால் 13, 14 தேதிக்குமேல் வந்துவிடும். 15-ஆம் தேதி தேவையற்ற சேதி மனவருத்தமடையச் செய்யும். பரசுராம ஜெயந்தியன்று பரசுராமரை வணங்குதல் நன்று. அட்சய திரிதியையின்போது, சிறுதுளி தங்கமாவது வாங்க முயற்சி செய்யுங்கள். வெள்ளியிலான முத்து மோதிரம் அணியலாம். நீண்டநாள் மனக்குறை அகல அமாவாசைக்குப்பின் 3 அல்லது 6-ஆவது பிறையன்று சந்திரனை வணங்கவும். பார்வதி அருள்பாலிப்பார்.
விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: இம்மாதக் கடைசி வாரம் வியாபாரத்தில் முதலீடுகள் வேண்டாம். 26, 28 தேதிகளில் மறைமுக எதிர்ப்பை சமாளிக்கவேண்டும். நீலநிறச் செடி ஊமத்தங்காயை ஞாயிறன்று வாசலில் தொங்கச் செய்து, மறுநாள் குப்பைத்தொட்டில் வீசிவிடவும். பசுங்கன்றை குளிக்கச் செய்து நெற்றில் குங்குமப் பொட்டு வைப்பது நன்று. புதன்கிழமை புதன் ஹோரையில் உப்பு கலந்த நீரால் குதிங்காலை சுத்தம் செய்யவும். கெடுதல் போய்விடும்.
விருச்சிகம்
விசாகம் 4-ஆம் பாதம்: உங்களுடைய கடின உழைப்பு முதல்வாரமே வெற்றிகளுக்கு வழிவகுக்கும். கேதுவும் சனியும் ராசிக்கு இரண்டில் இருப்பதால் போதைப் பழக்கமுடைய வயோதிகர்கள் அளவோடு அருந்துதல் நன்று. கோர்ட் கேஸ் என்ற சிக்கலில் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் குலதெய்வங்களை வணங்கவேண்டும். ஐயனார், முனியாண்டி சாமி, கருப்பசாமி ஆகியோரை நாடினால் நன்மைகள் பெருகும். இரண்டாவது வார இறுதியில், முதல் நபராக விழாக்களில் கௌரவிக்கப்படுவீர்கள். 27, 28 தேதிகளில் எவரையும் நம்பி ஏமாறவேண்டாம்.
அனுஷம்: மாமனார், மைத்துனருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால், எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிக நன்று. இருக்கும் வாகனத்தை மாற்றம் செய்ய விரும்பினால் மூன்றாம் வாரம் கெடுதலில் லாதது. சூரியனும் சுக்கிரனும் இணைந்து காணப்படுவதால், மகளிர் வலதுகையில் தங்க வளையல் அணிந்துகொண்டால் குருவருள் பெறலாம். இயலாதோர், சிறிது பார்லி அரிசியையும், மூன்று எலுமிச்சம் பழத்தையும் மஞ்சள் துணியில் முடித்து, மேற்கு திசை நோக்கி நின்று திருஷ்டிசுற்றி ஓடும் நீரில் போடவேண்டும்.
கேட்டை: மிகவும் பொலிவுடன் காணப்படுவீர்கள். புதுவகையான பண வரவு பெருகும். இம்மாதம் பிறருக்கு பணத்தைக் கடனாகக் கொடுப்பது கெடுதலைத்தரும். ராகுவும் செவ்வாயும் மிதுனத்தில் இருப்பதால் சிறுநீர் (யூரின்) சார்ந்த தொல்லை ஏற்படும். ராகுவுக்காக ஒருபொழுது உணவை சமையல்கூடத்தில் இருந்து உண்ணவேண்டும். கோமேதக ராசிக்கல் இருந்தால் அணிந்துகொள்ளவும். புதன்கிழமை ராகு காலத்தில் நீர் குடிப்பது கூடாது. பானங்கள் பருகலாம்.
தனுசு
மூலம்: சனியும் கேதுவும் ராசியில் இருக்கிறார்கள். மீனத்தில் மூவர் உள்ளனர். மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய், ராகு மிதுனத்தில், குரு பன்னிரண்டில். பேய்ப்படம் எடுப்போர், மர்மக்கதை எழுதும் எழுத்தாளர்களுக்கு ஆரோக்கியமான மாதம். ரகசியங்களை வெளிப்படுத்தும் செய்தி சேகரிப்பாளர்களை சனி, கேது ஊக்குவிப்பர். மூக்கு, கண், தொண்டை, பல், நாக்கு என உபாதைகள் வந்து மறையும். மாணவர்களின் உயர்கல்விக்காக தாய்- தந்தையருக்கு செலவினை குரு மிகையாக்குவார். கெடுதல் வரும் வாய்ப்பில்லை.
பூராடம்: இம்மாதம் 18-ஆம் தேதிக்குமேல் நன்மைகள் அடுக்கடுக்காய் வரும். உடன் பிறப்புகள் இருந்தால் அவர்களும் போதிய ஆதரவு தருவார்கள். வீடு இல்லையே என்ற கவலையை சுக்கிரன் தீர்த்துவைக்க முயல்வார். பகையுடன் இருக்கும் தூரத்து உறவுகள் நாடிவரும். ஆண்கள் மனைவிக்கு தங்கள்மேல் எந்தவித சந்தேகமும் எழா வண்ணம் நடந்துகொள்வதால் அதிக அன்பைப்பெற இயலும். சமையல்கூடம் தென்கிழக்கில் இருந்தால் அங்கு முடங்கியிருக்கும் தேவையற்ற பொருளை அகற்றுவதால் சுக்கிரனின் பேராதரவைப் பெறலாம்.
உத்திராடம் 1-ஆம் பாதம்: அரசு ஊழியர்கள், பொதுநலத் தொண்டர்கள் இம்மாதம் அதிக புகழைச் சம்பாதிக்கலாம். அரசியல் பிரமுகர்கள் இம்மாதம் கட்சிதாவ முயற்சிப்பது கெடுதலை உருவாக்கும். சுயவேலை, சுயமாகப் பணம் சம்பாதிப்போருக்கு அதிக நன்மைகளை சூரியன் பெற்றுத்தருவார். தடைகள் ஏற்பட்டால், கால் கிலோ கோதுமை ஹல்வா வாங்கி, ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யவும். காலையில் ஒரு பாத்திரத்தில் தூய நீர்நிரப்பி, ஐந்து செம்பருத்தி அல்லது ரெட் ரோஸ் பூவை மிதக்கவிட்டு சூரிய நமஸ்காரம் செய்வது இம்மாதம் அதிக அளவில் நன்மைதரும். பெற்ற தந்தையிடம் ஞாயிறன்று வாக்குவாதம் கூடாது.
மகரம்
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: மாமியார், மருமகளிடையே மனபேதம் ஏற்படுத்த கிரகநாதர்கள் முயல்வார்கள். ஆர்வமில்லா வேலையில் சோம்பேறியாக இருக்கவே மனம் துணைவரும். எல்லா தடைகளும் நீங்கி சுபிட்சமாக, உங்கள் ராசிமரமான பலா மரக்கன்றை வாங்கி தானம் செய்து, அது வளரவளர சுபிட்சம் கிடைக்கப் பெறும். ராகு, செவ்வாய் இணைப்பால் தோல் சார்ந்த கெடுதல் வந்தால் பழுப்பு, கருப்பு நிறம் கலந்த நான்குகால் பிராணிக்கு உணவூட்டலாம்.
"ஓம் விஸ்வே தேவாய வித்மஹே
மஹாஷாடாய தீமஹி
தந்நோ உத்ரஷாடா ப்ரசோதயாத்'
என்னும் மந்திரம் கூறவும்.
திருவோணம்: இம்மாதம் தியாகத்திற்கு மதிப்பு தரவேண்டிய சூழ்நிலை உருவாகும். மூன்றாவது வாரம்- அதாவது 17, 18-ஆம் தேதிகளில் அரசு சார்ந்த நல்ல சலுகைகள், உத்தியோக உயர்வுகள் வரும். ராகு 6-ல், கேது 12-ல், செவ்வாய் மிதுனத்திலும் இருப்பதால் ஒரு சமச்சதுர செம்பு உலோகத் துண்டை பர்சில் வைத்துக்கொள்ளவும். உங்களின் ராசிச் செடியே எருக்கம்தான். அதன் வடக்கு நோக்கிச்செல்லும் வேரை மந்திரம் சொல்லி வெட்டியெடுத்து, வெயிலில் காயவைத்து தாயத்தாக அணியவும். "மணிமய பூவித சாந்த சொரூபிணி, திருவோண தேவி, சஹாயக் கிருபே' என்னும் சுலோகம் ஜபிக்கலாம்.
அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்: உங்கள் நட்சத்திரத்திற்கு விகாரி வருடத்தின் முற்பகுதி சிறப்பைத்தரும். ஆபரணச் சேர்க்கையும் உண்டு. இம்மாதம் சனீஸ்வரர், மஹாவிஷ்ணுவை வழிபடல் நன்று. சனீஸ்வரரின் தலைமைப் பீடம் பத்தாவது இடம். அவர் தற்சமயம் 12-ல் உள்ளார். சொந்த பந்தங்கள் துணைவரும். உதவி வேண்டின் செய்வார்கள். 26, 27, 28 தேதிகள் ஊக்கம் தருபவை. புது வேலைக்காகக் காத் திருப்போர் பட்டியலில் நீங்கள் இருந்தால், மாதக் கடைசியில் நற்செய்திவரும். உங்கள்வீட்டுத் தோட்டத்தில் வேப்பமரத்தில் காகம் கூடுகட்டியிருந்தால் நற்செய்தி வரும்.
கும்பம்
அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: இம்மாதம் எவரிடத்திலும் காழ்ப்புணர்ச்சி வேண்டாம். புதன், சந்திரன், சுக்கிரன் இருக்கும் இடம் உங்களை ஆதரிப்பதாகத் தெரியவில்லை. பைசாவுக்குப் பஞ்சமில்லை. மூளை பலத்தால் தேடிக்கொள்ளலாம். 6, 7 ஆகிய தேதிகளில் வில்லங்கங்கள் வரலாம். இத்துடன் குடும்பத்தாரின் மருத்துவச் செலவையும் சீர்செய்ய நேரிடும். இம்மாதம் மஞ்சள்நிற ஆடை தவிர்க்கவும். சாதுக்களுக்கு உதவி கூடாது. கொடுப்பவர்- வாங்குபவரை குரு பகவான் ஏற்றுக்கொள்ளமாட்டார். வீட்டுத் தலைவாசல் தெற்கு நோக்கியிருந்தால் ஒரு சிறு ஆலமர விழுதை தொங்கச்செய்யவும்.
சதயம்: இம்மாதம் இரண்டாவது வாரம் நெருங்கியவர்கள் சதி செய்வார்கள். புத்திக் கூர்மையால் அதனை சீர்செய்து விடலாம். ராகு மிதுனத்தில் இருப்பதால், உங்கள் சொந்த ஜாதகத்திலும் ராகு மிதுனத்தில் இருந்தால், இம்மாதம் திருமண நாள் வந்தால் இன்னுமொரு தாலி- அதாவது மஞ்சள் துண்டை தாலிபோல் நினைத்துக்கட்டிக்கொள்வதால், ராகு மற்றும் செவ்வாய் உருவாக்கும் கஷ்டங் களை அகலச் செய்யலாம் அல்லது மனைவி பெயரில் அன்னதானம், குழந்தைகளுக்கு உதவி புரியலாம்.
பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்: அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு சில பின்னடைவுகள் வரும் வாய்ப்புள்ளது. கோப்புகள் இடம் மாறலாம்; காணாமல் போகலாம். 28, 30 தேதிகளில் நல்ல சூழ்நிலைகள் மகிழ்வைத்தரும். சிலருக்கு குடும்ப விவகாரங்களால் தூக்கமின்மை ஏற்படும். கட்டிலின் அடியில் அல்லது தலையின் பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீரை வைத்துக்கொண்டு தூங்கிய பின், அதனை மறுநாள் வீதியில் கொட்டினால், உடலில் தொற்றியுள்ள கெட்ட சக்திகள் அகலும். அல்லது நான்கு எலுமிச்சை நான்கு செம்புக் காலணாவை திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடவும். செல்லாத ஒரு ரூபாய் நாணயமும் போதும்.
மீனம்
பூரட்டாதி 4-ஆம் பாதம்: சந்திரனின் பேராதரவால் தொப்புள் கொடி உறவுகள் மேன்மையடையும். அரசியல் பேச்சாளர்களின் தனித்தன்மை வெளிப்படும். இரண்டாவது வாரம் சில சதிகாரர்களை சமாளிக்க நேரிடும். வாகனம் வைத்திருப்போர் கவனமாக செயல்படவேண்டும். அண்ணன்- தம்பி பாசத்தில் நெருக்கம் ஏற்படும். சனி, கேதுவின் சேர்க்கை சரியில்லை. இம்மாதம் வயது 48 எனில், புது வீடு வாங்க, கட்ட முயற்சிக்க வேண்டாம். நன்னடத்தையில் ஸ்திரத்தன்மை வேண்டும். கேது பகவான் நேசக்கரம் நீட்டுவார்.
உத்திரட்டாதி: பகையுள்ளம் கொண்டவர்கள் இம்மாதம் உங்களை நாடிவருவார்கள். 19, 20 தேதிகளில் கிடப்பில் போடப்பட்ட பல காரியங்கள் துரித நிலையில் செயல்பட ஆரம்பிக்கும். பொது வாழ்வில் பணவசதி பெருகும் விதமாக நல்லவை நடக்கும். கேதுபகவான் 10-ல் குருவின் இடத்தில் இருப்பதால், எழுத்துத் துறையினருக்கு மனநிறைவான சூழ்நிலை அமையும். திங்கட்கிழமை, ராகுகாலத்தில் -அதாவது காலை 7.30 மணிமுதல் 9.00 மணிவரை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, பச்சைப் பால் கலந்து ஸ்நானம் செய்தால் எல்லாத் தடைகளும் விடைபெறும்.
ரேவதி: இம்மாதம் தொலைபேசி, கைபேசி, வாட்ஸ்-அப் பல நல்லசெய்திகளை அடுக்கடுக்காய்த் தரும். 26, 27, 28-ஆம் தேதிகளில் சில பின்னடைவுகளும், உடல் உபாதையும் வரும் வாய்ப்புள்ளது. கன்னி மூலை கணபதிக்கு செந்தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வது நல்லது. அல்லது வியாழனன்று சிவன் கோவிலுக்குச் சென்று, வடகிழக்கு மூலையில் காணப்படும் இடத்தை சுத்தம் செய்யலாம். மூன்று ஞாயிற்றுக்கிழமை ஒருபொழுது உப்புகலவாத உணவு உட்கொள்வதும் போதுமானது.
செல்: 93801 73464