1-6-2019, சனிக்கிழமை கிரகங்களின் சஞ்சார நிலை: மேஷத்தில் சுக்கிரன், சந்திரன்; ரிஷபத்தில் சூரியன்; மிதுனத்தில் செவ்வாய், புதன், ராகு; விருச்சிகத்தில் குரு (வ); தனுசில் சனி, கேது.
மேஷம்
அஸ்வினி: இம்மாதம் எல்லா முயற்சிகளும் தங்குதடையின்றி நிறைவேறும். மேற்கல்விக்கான தேர்வு வெற்றிக்கு வழிவகுக்கும். ஒரு ரகசிய ஒப்பந்தம் மனநிறைவு தரும். சுக்கிரனும் சந்திரனும் மேஷத்தில் இருப்பதால் மனைவியின் ஆரோக்கியத்தில் பின்னடைவு வரும். நீண்டநாட்களாகவே வேதனைப்பட்டு வந்தால், அவர் எடைக்கு (துலாபாரம்) நெல் அல்லது கோதுமை கொடுப்பது நல்ல பலன் தரும். திங்கட்கிழமைகளில் வெள்ளி உலோகப் பாத்திரத்தில் தண்ணீர், பால் அருந்துவதால் கிரகசாந்தி கிடைக்கும்.
பரணி: இரண்டாவது வாரம் 11, 12 தேதிகளில் அரசியல் வாதிகள், பொதுநலத்தொண்டர்கள் வெற்றிச் செய்திகளை எதிர்பார்க்கலாம். உடல் உபாதை அடியோடு விடைகொடுக்கும். குடும்பத்தில் சில மாறுதல்கள் கட்டாயமாகும். எதிரிகளை சமாளிக்க நேரிடும். காமதேனுவை வணங்கவேண்டும். இம்மாதம் வெள்ளி உலோகம் வாங்குவது கூடாது. வெள்ளைத்துணியில் பார்லி அரிசியை சிறுபொட்டலமாகக் கட்டி, கிழக்கு நோக்கி நின்று திருஷ்டிசுற்றி நீர்நிலையில் போடவேண்டும். கிருத்திகை 1-ஆம் பாதம்: சந்திரனால் சில பின்னடைவுகள் வரும். வாகனம் வைத்திருப்போர் கவனமாக ஓட்டுவது நன்று. அசையா சொத்து வாங்கல்- விற்றலில் எச்சரிக்கை வேண்டும். பணமுதலீட்டுக்கு செவ்வாய், சனிக்கிழமையைத் தவிர்க்க வேண்டும். சனிக்கிழமை இரவில் தனிப்பயணம் கூடாது.
சுக்கிரனும் சந்திரனும் சிறுநீர்த் தொல்லை தருவார்கள். தர்பூசணி, செந்நிற நீரை அதிகம் பருகலாம். செவ்வாயின் செந்நிறம், புதனின் பச்சை, சனியின் கருநிற வித்து, வெள்ளை இணைந்து சூட்டைத் தணிக்கும்.
ரிஷபம்
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: முதல் வாரம் உடல் அசதியாக இருக்கும். பிறரின் அந்தரங் கங்களை அறிய முயல்வது கூடாது. மனைவியின் சொத்து சார்ந்த வில்லங்கங்கள் இருந்தால் இம்மாதம் கவனத்தில் கொள்ள வேண்டாம். பெண்கள் புகுந்த வீட்டில் சமையலறை தென்மேற்கில் அமைந் திருந்தால், ஏதோ காரணத்திற்காக மறந்து அங்கு நகைகளை கழற்றிவைப்பது கூடாது. திருட்டுப்போகும் வாய்ப்புள்ளது. பொதுவில் இம்மாதம் ராகு காலங்களில் நகைமீது கவனம் வைத்தல் வேண்டும். சரஸ்வதியை வணங்கவேண்டும்.
ரோகிணி: மாதத்தின் முதல் வாரம் 4-ஆம் தேதிவரை புதுவேலை, புது வீடு, புது வாகனம் என ஏதாவது ஒரு கவலை தொடரத்தான் செய்யும். அரசியல்வாதிகள் 14, 15-ஆம் தேதிக்குமேல் பதவிக்காகப் போராடி னால் வெற்றிகிட்டும். மூன்றாவது வாரம் வியாபாரிகளுக்கு லாபம் குறையும். ராசிக்கு 12-ல் சுக்கிரன் இருப்பதால், மனைவியின் உடல் உபாதை தொடர்ந் தால் ஒரு பசுங்கன்றினை ஆலயத்திற்குத் தருதல் நல்ல பரிகாரம். அவ்வாறு செய்ய இயலாதோர், ஏழு களிமண் உருண்டையை அரசமர வேரில் போட்டு நீர் தெளித்து வரவும்.
மிருகசீரிடம்: 1, 2-ஆம் பாதங்கள்:
அரசு சார்ந்த எல்லா ஒப்பந்தங்களும் லாபத்தைப் பெற்றுத் தரும். அரசு உத்தியோகம் பார்ப்போருக்கு, பணி நிரந்தரம், பணிமாற்றம் நிகழும். இம்மாதம் விருந்துகளில் கலந்துகொள்ளும்போது உணவில் கவனம் தேவை. பீசா, பர்கர் போன்ற உணவு ஒத்துவராது. இம்மாதம் தெய்வத்தின்பேரால் நன்கொடை பிரிப்பது கூடாது. கோவில் தர்மகர்த் தாக்கள் பணவிவகாரங்களில் கவனமாக செயல்பட வேண்டும். இம்மாதம் ஐந்து ஞாயிற்றுக்கிழமையும் காலை சூரிய வணக்கத்துடன் செயல்பட வேண்டும். கால் கிலோ கோதுமை அல்வா தானம் நன்று.
மிதுனம்
மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்: ராகுவும் செவ்வாயும் ராசியிலேயே இருப்பதால், பிறருக்காக அதிக செலவினங்களை ஏற்பது கூடாது. உறவினர் களின் நெருக்கடி 4-ஆம் தேதிக்குமேல் 6-ஆம் தேதிவரை தொடரும். இரண்டாவது வாரம் எல்லாமே சீராகிவிடும். விளம்பரத்துறை, ஆட்டோ மொபைல், பத்திரிகைத் துறையினருக்கு கெடு தலில்லா மாதம். சுக்கிரன் செவ்வாயின் இடத்தில் இருப்பதால், புதுமணத் தம்பதிகள் இரவில் பால் அருந்துவதால் மலட்டுத்தன்மை அகலும். இம்மாதம் ஆலயங்களுக்கு எண்ணெய் தருதல் நல்ல பரிகாரம். கோவிலில் வடகிழக்கை சுத்தம் செய்யலாம்.
திருவாதிரை: இரண்டாவது வாரம் பலரால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் செழிப்பான சூழ்நிலை உருவாவதை உணரலாம். 20, 21-ஆம் தேதிகளில் எவரையும் நம்பி பொறுப்பினை ஒப்ப டைப்பது கூடாது. கௌரவம் பறிபோகும். தனுசில் இருக்கும் கிரகநாதர்கள் கணவன்- மனைவியரிடையே ஒற்றுமையை சீர்குலைப்பார்கள். புதன் ராசியிலேயே இருப்பதால், வியாபாரிகள் ஒரே இடத்திலிருந்து வியாபாரத்தைப் பார்ப்பதைவிட கிளைகளையும் நிறுவலாம். இம்மாதம் புதன்கிழமைகளில் புலால் மறுப்பது நன்று.
புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: சந்திர பகவானால் சில பின்னடைவுகள் வரும். வாகனம், அசையா சொத்து, வெளிநாட்டு விவகாரங்களில் உன்னிப்பான கவனம் வேண்டும். அரசு சார்ந்த ஒப்பந்த காரர்களுக்கு மெஷின்களால் நஷ்டம் வரும். சனி பகவானை வணங்குவது தடைகளை அகலச் செய்யும். இம்மாதம் சதிகாரர்கள் எந்த உருவில் உங்களைத் தொல்லைக்கு உட்படுத்தினாலும் மன்னிப்பது நல்லது. கால் கிலோ சூரியகாந்தி விதையை ஞாயிறன்று திருஷ்டிசுற்றி நீர்நிலையில் தூவுதல் நல்லது.
கடகம்
புனர்பூசம் 4-ஆம் பாதம்: முதல் வாரம் புது நண்பர்கள், புது சினிமா, புது உல்லாசம் என யாவும் சிறப்பாக அமைந்துவிடும். சூரியன் ரிஷபத்தில் இருப்பதால், உங்கள் வீட்டில் நீங்கள் மூத்த வாரிசு என்றால் அரசு சார்ந்த நன்மை அதிகமாகும். வீட்டில் நோய்வாய்ப்பட்ட குழந்தை இருந்தால், தூங்கும்போது தலை யணை அடியில் மூன்று சிவப்பு முள்ளங்கி, ஐந்து பாதாம் பருப்பை வைத்துக்கொள்ளவும். அடுத்த நாள் காலை அதை கோவில் குளத்தில் போட்டால் நோயின் வேகம் தணியும். மந்தமான மாணவர்கள் சுறுசுறுப்பாகிவிடுவார்கள். இளம்காதலருக்கு 22, 23-ஆம் தேதிகள் முக்கியமானவை; நல்ல நாட்கள்.
பூசம்: இம்மாதம் இரண்டாவது வாரம் 10, 12-ஆம் தேதிக்குமேல் நீண்டநாட்களாக மனதை வாட்டிய கவலை விடை கொடுக்கும். மாண வர்களுக்கு 15-ஆம் தேதிக்குமேல் படிப்பில் அதிக கவனம் தேவை. குடும்பம் சில குழப் பத்தை சந்திக்கநேரிடும். கேதுவும் சனியும் தனுசில் இருப்பதால், ஆணானாலும் பெண்ணா னாலும் தொப்புளுக்குக் கீழ்பாகத்தில் பின்ன டைவு ஏற்படும். கருவுற்ற மாதர்கள் கேட்ஸ்-ஐ (வைடூரியம்) மோதிரம் அணியலாம். வியா பாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். தெற்கு வாசல் கட்டடத்தில் குடியிருப்போர் செந்நிறப் பூந்தோரணம் தொங்கவிடல் நல்லது. கேடுகள் அகலும். ஆயில்யம்: 24-ஆம் தேதிக்குமேல் கிரக நாதர்கள் அசுபச்செய்தியைவிட சுபச்செய்தி யைத் தருவார்கள். குலப்பெருமை உங்களால் நிலைநாட்டப்படும். எழுத்தாளர்களுக்கு கற்பனை பீறிட்டெழும். புதனும் ராகுவும் மிதுனத்தில் இருப்பதால் வெளிநாட்டில் பணி புரிவோர், பணவிவகாரங்களில் உன்னிப்பான கவனமுடன் செயல்பட வேண்டும். பொது மேடைப் பேச்சாளர்களுக்கு நாவடக்கம் அவசியம். கடுஞ்சொல் சட்டச்சிக்கலை ஏற்படுத்தும். நெல்லை மாவட்டத்தினர் சங்கரன் கோவில் சென்று புன்னைமரப்பட்டை பிரசாதம் பெற்று சுபிட்சமாகலாம். மற்ற பகுதியினர் சிவாலய வழிபாடு மேற்கொள்ளலாம்.
சிம்மம்
மகம்: எவ்வாறான வழக்கு விவகாரங்கள், சட்டச் சிக்கல்கள் இருந்தாலும் எல்லாமே வெற்றிதான். அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்து உயரும். இம்மாதம் விருச்சிக ராசியினரிடம் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர் களுக்கும் யோகமான மாதம். நேர்காணலுக்குப் போகும்போது சிறிது பன்னீரால் முகத்தைத் தூய்மைசெய்து சென்றால் சூரியன் அருளைப் பெறலாம். சனியும் கேதுவும் தனுசில் இருப்ப தால், கருவுற்ற மாதர்களுக்கு காலநிலை சார்ந்த உடல் உபாதை வரும். 48 வயதுக்கு முன்னால் சொந்த வீடு கட்டியிருந்தால், வாரிசுகள் அதனைப் பங்குபோட முயல் வார்கள்.
பூரம்: மாதத்தில் இரண்டாவது வாரம் 10, 12-ஆம் தேதிக்குமேல் நீண்டநாள் வாட்டிய மனக்கவலை மறையும். மாணவர்கள் 15-ஆம் தேதிக்குமேல் கல்வியில் முழுகவனம் வேண்டும்.
எந்த பாடத்தைத் தேர்வு செய்யலாம் என்பதில் முரண்பாடு நீடிக்கும். சுக்கிரன் குடும்பத்தில் பல சுபநிகழ்ச்சிக்கு வேகத்தடை ஏற்படுத்துவார். இளம்தம்பதி எனில், மனைவியின் காலுக்கு வெள்ளிக்கொலுசு வாங்கித் தந்து மகிழ்விப்பது நன்று. பெண் வேட்பாளர்கள் பட்டம், பதவி பெறலாம்.
உத்திரம் 1-ஆம் பாதம்: கடந்த சில மாதங்களாகவே உங்களுடைய அன்பை சோதிக் கும்விதமாக சில பின்னடைவுகள் ஏற்பட்டி ருக்கும். சிலர் தனிமையை விரும்பி வாழ்ந் திருக்கலாம். 24, 26-ஆம் தேதிகளில் ஜோடியாக இருசக்கர வாகனத்தில் போகும்போது கவனம் தேவை. வழக்கு விவகாரங்கள் இருந்தால் அப்ரூவ ராக மாறுவது கூடாது. காலபைரவர் சந்நிதி யில் உங்கள் ஜாதகத்தை வைத்து, அதன்மேல் ஒரு எலுமிச்சை பழத்தைவைத்து வணங்கி, பின் அதன் சாறைப் பருகவும்.
கன்னி
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: மாதத்தில் முதல்வாரம் முகத்தில் புத்தொளி வீசும். செலவினங்களைக் கட்டுப்படுத்த நேரிடும். இரண்டாவது வாரம் ஒரு முக்கிய ஒப்பந்தம் நிறைவேறும். உஷார்நிலையில் செயல்பட வேண்டும். கேதுவுக்காக விநாய கரை வணங்கிச்செல்வது நன்று. சூரியன் ரிஷபத்தில் இருப்பதால், இம்மாதம் வெள்ளி உலோகத்திலான எதையும் தானமாகப் பெறுதல் வேண்டாம். வீட்டிலிருக்கும் செப்புப் பாத்திரங்களை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். திருமணத்தடை இருந்தால், வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு துணி தானம் நன்று. திருமணத்தடை விலகும்.
ஹஸ்தம்: மாமியார்- மருமகள், மாமனார்- மருமகளிடையே மனபேதம் உருவாகும். புது உத்தியால் சீர் செய்யப்பட்டுவிடும். மூத்த குடிமக்களின் தேவை அதிகமாகும். தனுசு ராசியினரிடம் இம்மாதம் நெருக்கமான பழக்கம் வேண்டாம். மகாவிஷ்ணு, தன்வந்திரி பகவானை வணங்குவது நல்ல வழிகாட்டலாக அமையும். வாடகை வீட்டில் குடியிருப்போர், வீட்டின் சொந்தக்காரரிடம் பகையுணர்வைத் தவிர்க்கவேண்டும். புதன்கிழமை அதிகாலை மூன்று மணிக்குமேல் நான்கு மணிக்குள்ளாக புதனை வணங்கினால் சொந்த மனையாவது வந்துவிடும்.
சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்: ஏதோ ஒரு கெட்டப்பழக்கம் உங்களை திசைமாற வைக்கும். மாதத்தின் கடைசி வாரம் தனிமையில் சிந்திப்பதைத் தவிர்க்கவும். சுக்கிரன் இருக்குமிடம் சீராகத் தென்படவில்லை. அருள் வாக்கு கூறுவோர், திருமணத் தரகர்கள் நல்வழியில் நடப்பது நன்று. அந்நிய மாதரோடு தொடர்பு வைத்திருப்போர் இம்மாதம் தவிர்த் தல் நல்லது. பால்வினை நோய் போன்றவற்றை எதிர்கொண்டு அவஸ்தை ஏற்படும். சொந்த ஜாதகத்தில் சுக்கிரனுடன் சனி இருந்தால், இம்மாதம் இல்லற சுகம் தவிர்த்தல் நன்று.
துலாம்
சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: இம்மாதம் பிறரால் ஏமாறவேண்டிய கட்டாயம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு மனநிறைவான சூழ்நிலை மகிழ்வைத் தரும். 7-ஆம் தேதிக்குமேல் அசையா சொத்து சார்ந்த கவலை விடை கொடுக்கும். சனியும் கேதுவும் ராசிக்கு மூன்றில் இருப்பதால், இப்போது மூன்றாவது பேறுகாலம் எனில் சனிக்கிழமை எமகண்ட வேளையில் கடினமான பொருட்களைத் தூக்குவது கூடாது. நீலநிற ஊமத்தங்காயை வாசலில் தொங்கச் செய்யலாம். சூடம், குங்குமப்பூவைக் கலந்து திலகமிடல் நன்று.
சுவாதி: இம்மாதம் 11-ஆம் தேதிமுதல் 14-ஆம் தேதிவரை எந்த புதுமுயற்சியும் வேண்டாம். பணவிரயம், காலவிரயம் கஷ்டத் தைத் தரும். சந்திரனும் குருவும் இணைந்து பொருளையும் செலவினத்தையும் தருவார்கள். சூரியன் ராசிக்கு 8-ல் இருக்கிறார். தென்திசை தலைவாயில் வீட்டில் குடியிருப்போர் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு கோதுமை அல்லது பச்சரிசி, சர்க்கரை 800 கிராம் கொடுப் பது நல்லது. அல்லது கால்கிலோ கோதுமை அல்வா ஞாயிறன்று தானம் செய்தல் சிறப் பானது.
விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: விருந்தினர் வந்தால் இம்மாதம் முகம் மலர வரவேற்க வேண்டும். அவர்களின் பக்கத்துணை இம்மாதம் மகிழ்வைத் தரும். 20, 30-ஆம் தேதிகளில் சூழ்நிலை நெருக்கடிக்கு உள்ளாக்கும். சனி பகவான் தனுசில் இருப்பதால், பணத்தை இருட்டான இடத்தில் வைத்துப் பாதுகாக்கவும். புதன் 9-ல் இருப்பதால், இம்மாதம் புத்தாடை உடுத்தும்போது சிறிது ஆற்று நீரைத் தெளித்து உடுத்துவது நல்லது. நீண்டநாள் தொடர் கடன்தொல்லை இருந்தால் ஒரு சிறு வெண்கலக் கிண்ணத்தை பெருமாள் கோவிலுக்கு தானமாகக் கொடுப்பது சிறப் பானது.
விருச்சிகம்
விசாகம் 4-ஆம் பாதம்: மாதத்தில் முதல் வாரம் சந்திரன், சுக்கிரன் இணைப்பால் உடல் உபாதை, எதிரித்தொல்லை இருந்தாலும் சீராகிவிடும். சிலருக்கு திருமணம் சார்ந்த சுபச்செய்திகள் மகிழ்வைத் தரும். உத்தியோ கத்தில் இருப்போர் 9, 10-ஆம் தேதிகளில் உயரதிகாரியை அனுசரித்து நடந்துகொள்வது சிறப்பானது. ராகுவும் புதனும் ராசிக்கு எட்டில். எனவே டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் ஆகியவற்றில் கவனம் சிதறுதல் கூடாது. ஆண்கள் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையுடன் முதலீடு செய்வது பாதுகாப்பானது. 36 வயதைக் கடந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அனுஷம்: தெய்வீக ஈடுபாடு, பக்திப் பரவசம் மிகையாகும். துறவிகள், துறவறம் பூண்டோருக்கு மனபேதலிப்பு அகலும். வியாபாரிகளுக்கு 20, 21-ஆம் தேதிகளில் லாபகரமாக இருக்கும். மாணவர்கள் விருப் பம்போல் பள்ளி, கல்லூரியில் இடம்பிடிக்க லாம். இளஞ்ஜோடிகளில், பெண்கள் துணிச்ச லான முடிவுடன் செயல்படும் வாய்ப்புள்ளது. அலுவலகப் பெண்களில் சிலர் பசப்பு வார்த்தையை நம்பி ஏமாறலாம்; உஷார். லோன் சேங்ஷனில் உஷார் நிலை முக்கியம். வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானை வணங்குவதால் தப்பிக்கலாம். கேட்டை: வரவுக்கு அதிகமான செலவினம் மனசஞ்சலத்தை உண்டாக்கும். மனநிறைவான மாற்றங்கள் நிகழும். குழந்தைகளால் நற்செய்தி வரும். கணவன்- மனைவி உறவில் நெருக்கம் மிகையாகும். எனினும் ராசிக்கு இரண்டில் சனி, கேது. எழுத்தாளர்களுக்கு கேதுவால் வேகத் தடை ஏற்படும். அரசியலில் முழு ஈடுபாடு உடையோர் கட்சிமாற, கொள்கை மாற்றம் செய்ய கிரகநாதர்கள் முற்படுவார்கள். அவசர முடிவுகள் வேதனைக்கு உட்படுத்தும். டர்குவிஸ் கிரீன் மோதிரம் வைடூரியத்துடன் இணைத்து அணிந்தால் கெடுதல் போகும்.
தனுசு
மூலம்: மாதத்தின் முதல் வாரம் உங்களு டைய தனித்தன்மை வெளிப்படும். 5, 6-ஆம் தேதிகளில் புதுமுயற்சிகள் வேண்டாம். கலைஞர்கள் அதிக அபிமானிகளைப் பெறலாம். புதுமுக நடிகர், நடிகைக்கும் உரிய சந்தர்ப்பம் வரும். 13, 14-ஆம் தேதிகள் மிக அனுகூலமானவை. ராசிக்கு 7-ல் புதன், ராகு. வரதட்சணை சார்ந்த கொடுக்கல்- வாங்கலில் இம்மாதம் ஆலோசனை கூடாது. ஆன்லைன் டிரேடிங்கில் பின்னடைவு மிகையாகும். சனி பகவானின் தடைகளை சீர்செய்ய காலில் செருப்பு அணியாமல் ஆலயம் சென்று வணங்கிவருதல் நல்லது.
பூராடம்: நீண்டநாட்களாக பாராமுகமாக இருந்தவர்கள் உங்களை நாடி வருவார்கள்.
அரசியல், பொதுநலத் தொண்டர்களுக்கு பணம் வரும்விதமாக பதவி உயர்வு, சமூக அந்தஸ்து அதிகரிக்கும். சூரியனின் இருக்கையால் ரத்தம் சார்ந்த பல நோய்கள் விடுபடும். சுயசம்பாத்தியம் செய்வோர் இம்மாதம் காலையில் சூரிய நமஸ்காரம் மிகமிக அவசியம். ஞாயிறன்று ஒருபொழுது உப்பு கலவா உணவுண்ண வேண்டும். பார்வையற்றோருக்கு இயன்ற உதவி புரிதல் மிக நல்லது. தந்தைவழிப் பாட்டனைப் பேணுதல் நன்று.
உத்திராடம் 1-ஆம் பாதம்: ஆமையானது தன்னுடைய உறுப்புகளைத் தன்னுடைய ஓட்டுக்குள் அடக்கிக்கொள்வதுபோல், ஐம்புலன்களையும் அடக்கிக்கொள்ள வேண்டும் என்று இராமகிருஷ்ணர் கூறியுள்ளார். இம்மாதம் இது உங்களுக்கு மிகப்பொருத்தமானது. புதுவியாபாரம், புது உத்தியோகம் இவை யாவிலும் அனுபவம் தான் அருமருந்து. தெய்வீக அருளை ராசிக்கு 12-ல் இருப்பவர் தருவார். எட்டில் இருக்கும் செவ்வாய்க்காக- கணவரை இழந்த மாதர் களுக்கு உதவி செய்வதால், திருமணங்கள் நிறைவேறும். தடையை அகற்றுவார் அங்கார கன். சிவப்புநிறப் பொருட்கள் தானம் நற்பலன் தரும்.
மகரம்
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: "நன்மைக்கு நன்மை செய்; தீமைக்கு நீதி வழங்கு' என இங்கர்சால் என்ற மேதை சொல்லிவைத்துள்ளார். இம்மாதம் இந்த நீதிபோதனை முதல் வாரம் 7-ஆம் தேதிக்குமேல் 10-ஆம் தேதிக்குள் உங்களுக்கு அமையும். 12-ஆம் தேதி கோபத்தை அடக்கவேண்டும். தனுசில் சனி, கேது. எனவே கண் உபாதை உண்டு. 72 வயதைக் கடந்தவர்கள் இம்மாதம் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யவேண்டாம். சிலருக்கு 48 வயதிலிருந்தே கண்ணாடி அணியநேரிடும். வயதுக்குவந்த பெண்களை இம்மாதம் கண்டிப்பதைத் தவிர்த்தல் நல்லது.
திருவோணம்: சூழ்நிலைக்கேற்ப வாழ்ந்துகாட்ட வேண்டிய மாதம். அதிர்ஷ்டத்தை சோதிக்கும்விதமாக சூது, லாட்டரி போன்றவை வேண்டாம். 18, 19-ஆம் தேதிகளில் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும். அம்மாவின் உறவுக்காரர்களுடன் வீண்பகை ஏற்படும். ராகு, புதன் இணைந்து செயல்படுவதால், செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் அசையா சொத்து சார்ந்த எந்த இறுதிமுடிவும் வேண்டாம். அங்காரகனை வணங்குவதும், செவ்வாய் அதிகாலை ஒரு டீஸ்பூன் தேனை நீருடன் பருகுதலும் நல்லது.
அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்: இந்த மாதம் பிறரின் சொந்த விவகாரங்களில் தலையீடு வேண்டாம். மாதத்தின் மூன்றாவது வாரம் 22, 23-ஆம் தேதிகளில் புது முயற்சிகளில் ஈடுபடலாம். சொந்தபந்தங்களின் பூரண ஆதரவால் கவனக்குறைவான செயல்கள் சீர்செய்யப்படும். சுக்கிர பகவானின் இருக்கை சீராகத் தென்படவில்லை. பெற்றோர் சம்மத மின்றி காதல் திருமணம் வேண்டாம். திருமண மானோர் பிற மாதருடன் அலுவலகங்களில் நெருக்கம் தவிர்ப்பது நல்லது. உத்தியோக உயர்வு கேள்விக் குறியாகும். கருப்பு நிறப் பசுவுக்குப் புல் அல்லது ஆலயத்துக்கு பசு தானம் சிறப்பானது.
கும்பம்
அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: உங்களு டைய புகழ், அந்தஸ்து, கௌரவம் உயர்வடையும். 5, 6-ஆம் தேதிகளில் வியாபாரத்தில் கவனம் வேண்டும். உயர்கல்விக்கான சரியான பாதை மாணவர்களுக்குத் தெரியவரும். 10-ஆம் தேதி மாலைக்குமேல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ராகு, செவ்வாய் இணைப்பால் குழந்தையின் பள்ளி விளையாட்டு மைதா னத்தில் கெடுதல் நேரும். அல்லது குழந்தை சேர்க்கையின்போது குளறுபடி ஏற்படலாம்; உஷார். செவ்வாய்க்கிழமை செந்திலாண்ட வனை மனதார வேண்டுதல் போதுமானது.
சதயம்: 18, 19-ஆம் தேதிகளில் சந்திரனும் சனியும் இணைந்து டென்ஷனைத் தருவார்கள். இப்போது இருக்கும் வீட்டில் மாற்றம், எதிரிகளால் தடை போன்றவை நிகழும். கடின உழைப்பிற்கேற்ற நல்ல பலன்களை கிரக நாதர்கள் தருவார்கள். தனுசில் கேது, சனி இருப்ப தால், தொழிற்சாலை வைத்திருப்போர் பணியாட்கள்மூலமாக சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். வலம்புரிச் சங்கில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகியவற் றுடன் நெய் கலந்து சனிக்கிழமை தீபமேற்றி னால் வாஸ்து தோஷம் போகும்.
பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்: இம்மாதம் கடைசி வாரம் இளம் காதலர்கள், தம்பதியர்கள் மனஅமை தியைப் பறிகொடுத்து திண்டாட நேரிடும். சொந்தபந்தங்களே வில்லங்கத்திற்கு வித்திடும்.
நீண்டநாளைய உடல் உபாதை தகுந்த வைத் தியரால் வேகமாக குணமடையும். வெளிநாட்டு வாணிபம், எக்ஸ்போர்ட், இம்போர்ட் போதிய லாபம் தரும். புதனை வணங்குதல் நன்று. சுக்கிரனை நாடுதல் மிக நல்லது.
"ஓம் ஹம்ஸத் வஜாயை வித்மஹே;
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ: பிராம்மீ ப்ரசோதயாத்'
என்னும் ஸ்ரீபிராம்ஹி தேவி காயத்திரி மந்திரத்தைக் கூறுவது போனதுமானது.
மீனம்
பூரட்டாதி 4-ஆம் பாதம்: அலுவலங் களில் பணிபுரியும் பெண்களுக்கு யோகம் தரும் மாதம். வீட்டிலும் புகழ் ஓங்கும். இருப் பினும் மனவேதனை வரும் விதமாக பிரிவும் தெரியவரும். இரண்டாவது வாரம் முதல் நாள் நல்ல சேதிகள் அணிவகுக்கும். ராகுவும் செவ்வாயும் மிதுனத்தில் இருப்பதால், செரிமானம் சார்ந்த வயிறு உபாதை வரும். கடத்தல், பதுக்கல், வெளிநாட்டிலிருந்து பிறரின் பொருட்களை எடுத்துவருதல் ஆகியவை யாவும் சட்டச்சிக்கலுக்கு உட்படுத்தும்; தவிர்ப்பது நன்று. கோமேதக ராசிக்கல் அணிவது நல்லது.
திங்களன்று தாயிடம் சினம் கொள்ளல் கூடாது.
உத்திரட்டாதி: அரசியல்வாதிகள், பொதுநலத் தொண்டர்கள், சமூகநலத் தியாகிகளுக்கு புகழ் சுலபமாகும். உடல்நலம் குன்றியவர்கள் இம்மாதம் தென்திசை நோக்கிய நீண்ட பயணத்தைத் தவிர்ப்பது நன்று. மாண வர்கள் எல்லா கோணங்களிலும் நன்மையை அனுபவிக்கலாம். சிலருக்கு வாழ்க்கையில் புது அத்தியாயம் தொடங்கும். விநாயகரை செந்தா மரை மலராலும், சனி பகவானை கருங்குவளை மலராலும் பூஜித்தல் மிக நல்லது.
"ஓம் காம காமாய வித்மஹே; சர்வஜித்யை ச தீமஹி;
தந்நோ தேனு ப்ரசோதயாத்'
என்னும் காமதேனு காயத்ரி கூறவும்.
ரேவதி: மாதத்தின் கடைசி வாரம் வீட்டை அலங்கரித்தல், பொருட்களை இடமாற்றம் செய்வதில் கவனமாக செயல்படவேண்டும். குடும்பப் பெண் களுக்கு பாராட்டு கிடைக்கப்பெறும். தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர் களுக்கு பணிக்காலத்தில் பணிமுறிவு, மெமோ போன்றவை முன்பு இருந்தால் இம்மாதம் எல்லாமே சீர்செய்யப்பட்டுவிடும். சுக்கிரனின் இருக்கை கணவன்- மனைவியரிடையே குழப்பத்தை உருவாக்கும் தன்மை தெரிகிறது. சுக்கிர ஹோரையில், பால், தயிர் போன்ற உணவுகளை இணைத்துக் கொள்வது நன்று. "காஜ்கட்வி' என்ற முந்திரி கலந்த இனிப்பை காலபைரவருக்குப் படைத்து உண்பது நன்று.
செல்: 93801 73464