மேஷம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 9, 10, 19, 20, 28, 29. பாதக நாட்கள்: 4, 5, 11, 12, 26, 27.

அஸ்வினி: செல்வத்தைப் பெருக்கிதான் செலவுசெய்ய வேண்டும் என்பது உங்கள் பிறவிக் குணம். இம்மாதம் முதல் வாரமே கிரகநாதர்கள் உறவினர்கள்மூலம் ஒரு அசுபச்செய்தியைத் தரலாம். 9-ல் சனி, கேது இருப்பதால் இளம்தலைமுறைகளுக்கு சொந்தத்தில் திருமணம் மகிழ்வைத் தரும். கேது தசை, கேது அந்தரம் நடைபெற்றால், விபத்தில் எலும்பு சோதனைக்குட்படும். நடுவிரலில் நகசுத்தி வரலாம்; நகம் கடிக்கும் சுபாவத்தினர் உஷார். சுண்டுவிரல், மோதிர விரல், நடு (சனி) விரல், குரு விரல் நான்கையும் சிவப்பு நூலால் அளந்து, அந்த அளவுநூலை வேப்பமரக்குச்சியில் சுற்றி, திருஷ்டிசுற்றி ஓடும் நீரில் போடவும்.

Advertisment

பரணி: ஓயாத உழைப்புதான் உங்கள் மூலதனம்.

செவ்வாய், சந்திரன் நிலை திருப்தியாக இல்லை. உங்கள் வீட்டு எண் 3, 8, 13, 18 என்று இருந்து, வீட்டையடுத்து இனிப்புக்கடை இருந்து அதற்கு சீரான புகைபோக்கி இல்லாவிட்டால், வாஸ்து தோஷம் உங்களைக் கலங்கச் செய்யும். உத்தியோகம் பார்ப்போருக்கு புது உறவுகள் நல்வழிப்படுத்தும். 9, 10 தேதிகளில் பணவிவகாரங்களில் கவனம் சிதறவேண்டாம். பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படலாம். 18, 20 தேதிகளில் ஒரு நல்ல சந்தர்ப்பம் கைநழுவக்கூடும். பார்வதியை வணங்கவும். கிருத்திகை 1-ஆம் பாதம்: மாதத்தின் கடைசி வாரம் 27, 28 தேதிகளில் உஷார்நிலையில் செயல்படவும். வாக்குவாதம் கூடாது. கையொப்பம் இடுவதிலும் கவனம் தேவை. கடகத்தில் நால்வர் இருக்கிறார்கள். சுக்கிரன் கருவுற்ற பெண்களைக் குறைப் பிரசவத்திற்கு உட்படுத்துவார். வைர மோதிரம் அணிந்திருந்தால் தவிர்ப்பது நல்லது. வெள்ளிக்கிழமை தூய ஆடை உடுத்தவும். முதிர்ந்த எலுமிச்சை செடி முள்ளை பிரண்டைத் துண்டில் செலுத்தி, மேற்குநோக்கி நின்று திருஷ்டிசுற்றி குப்பைத்தொட்டியில் வீசிவிடவும். தடைகள் அகன்றுவிடும்.

ரிஷபம்

Advertisment

ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 11, 12, 21, 22, 30. பாதக நாட்கள்: 1, 7, 8, 14, 15, 28, 29.

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: இம்மாதம் குடும்ப சொத்தை பாகப்பிரிவினை செய்தால், நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். உங்களுடைய அனுபவங்கள் ஓரங்கட்டப்படும். 7-ஆம் தேதிக்குமேல் வீடு, வாகனம் வாங்க நல்ல தருணம். வாலிப உள்ளங்களின் திருமணப்பேச்சில் சுணக்கம் ஏற்படும். ராசிக்கு எட்டில் சனி, கேது. வயோதிகர்கள் இம்மாதம் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம். முன்பே தேதி குறித்திருந்தால் கைவசம் ஒரு சமச்சதுர வெள்ளி உலோகத்துண்டு இருக்கட்டும். வீட்டின் சுற்றுப்புற மண்ணில் மேற்குப் பாகம் பள்ளம் எடுத்து அதில் மூன்று முட்டையை வைத்து மூடிவிடவும்.

ரோகிணி: 11, 13 தேதிகளில் மூளைத்திறன் பளிச்சிட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகளும், பணவிரயமும் மிகை யாகும். பெண்களுக்கு திருவிழாக் கொண்டாட்டங்கள் மகிழ்வை மிகையாக்கும். குழந்தைகளின் கல்வி சார்ந்த பிறரின் விமர்சனங்கள் தலைக்குனிவை ஏற்படுத்தும். எல்லா இடர்களும் அகல கூறவேண்டிய மந்திரம்:

"அநவத்யாநேக ஹஸ்தா நேக மாணிகியபூஷணா

அநேக விக்ந ஸம்ஹர்தரீ த்வநேகாபரணாந்விதா'

பத்துமுறை ஜெபித்து இதனை வந்தால் நல்லவை நடந்தேறும்.

மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்: உங்களுக்கு துன்பம் விளைவிக்கும் சக்தி பிறருடைய தூண்டுதல்களுக்குக் கிடையாது. இம்மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகள் கவலையும் ஏமாற்றத்தையும் தரும்.

சூரியன், சுக்கிரன், செவ்வாய் இணைந்து கடகத்தில் இருப்பதால் இருதார அமைப்பில் இரண்டு குடும்பம் நடத்துவோர் மனைவி கள்மேல் பாசத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் பின்விளைவு மிகையாகும். ஒரு ஆலமர இலை, ஒரு அரச மர இலை, வில்வ இலை, துளசி, வேப்பிலை இவற்றுடன் ஒரு எலுமிச்சைக்கனியை வெள்ளைத்துணியில் முடிந்து தென்கிழக்கில் தொங்கச் செய்யவும். மாதக்கடைசியில் தண்ணீரில் போடலாம்.

மிதுனம்

ராசிக்கு சிறந்த நாட்கள் 4, 5, 14, 15, 23, 24, 25. பாதக நாட்கள்: 2, 3, 9, 10, 16, 17, 30, 31.

மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்: புதுமையும் டென்ஷனும் இரண்டறக்கலந்த மாதம். வயிற்று உபாதை வரலாம். இல்லத்தரசியின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதுமையைப் புகுத்தல் நன்று. சூரியன் ராசிக்கு இரண்டில். சுய சம்பாத்தியம் மேன்மை தரும். இம்மாதம் பிறர் தரும் பொருளாதார உதவியைத் தவிர்க்கவும். சந்திரனின் இடத்தில் சுக்கிரன் உள்ளதால் மாதர்கள் தங்கள் கணவரின் இயலாமையை அனுசரித்து நடத்தல் சிறப்பு. கேதுவின் உச்ச பலம்பெற இடக்கையில் தங்க மோதிரம் அணிதல் நல்லது. குழந்தைகளின் நலன் கருதி பிற சிறுவர்களுக்கு பிஸ்கட் வாங்கிக் கொடுத்தால் சூரியன் அருளைப் பெறலாம். வீட்டில் சிங்க உருவ பொம்மை இருந்தால் தூய்மைசெய்து வைத்தல் நன்று.

திருவாதிரை: வேலைக்கான நேர்காணல், துறைசார்ந்த தேர்வு எல்லாவற்றிலுமே சாதகமான பலனைப் பெறலாம். திருமணத் தடை விலகும். அரசியல், பொதுவாழ்வில் இருப்போருக்கு 19, 20 தேதிகள் உயர்வான நாட்கள். செய்தி சேகரிப்போர், புகைப்பட நிபுணர்கள் எதிரியின் சதிவலையைக் கடந்து முன்னேற வேண்டும். புதனை வணங்கலாம். பழைய நேர்த்திக்கடன் இருந்தால் இம்மாதம் நிறைவேற்றிவிடவும். இப்போது வயது 48 எனில் விநாயகரை செந்தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும். ஜேட் அல்லது எமரால்ட் மோதிரம் அணிவது நல்லது.

புனர்பூசம்: 1, 2, 3-ஆம் பாதங்கள்: ஒரு முக்கிய பயணம் மனநிறைவைப் பெற்றுத்தரும். 26, 27 தேதிகளில் சந்திரன் பக்கபலமாக செயல்படுவார். காட்டு தெய்வங்கள், காவல் தெய்வங்களைப் பூஜிக்கும்போது நெறிதவறி நடப்பது கூடாது. வீட்டில் அல்லது ஊரின் வடகிழக்குப் பகுதியில் மூங்கில் செடி இருந்தால் தண்ணீர் ஊற்றவும். வசதி படைத்தோரின் பூரண ஆதரவு 28, 29 தேதிகளில் கிடைப்பதோடு, உயர்வான நல்லவை நடந்தேறும். காலையில் வடதிசை நோக்கி குபேரனை வணங்குதல் பணவரவை அதிகரிக்கச்செய்யும். பெண்கள் பூச நட்சத்திரத்தன்று பஞ்சு நூலால் தொடுக்கப்பட்ட வெள்ளை கனகாம்பர மாலை சூடினால் திருமணத்தடை போகும்.

கடகம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 16, 17, 26, 27. பாதக நாட்கள்: 4, 5, 11, 12, 19, 20.

புனர்பூசம் 4-ஆம் பாதம்: மாதத்தில் முதல் வாரம் 6-ஆம் தேதிவரை அமை திக்காக கடும்முயற்சி எடுக்கவேண்டும். சத்துள்ள ஆகாரம் இன்றியமையாதது. வீடு மாற்றம், பணி மாற்றம், இருக்கை மாற்றம் சிலருக்கு கவலைக்கு வழிவகுக்கும்.

பங்குச்சந்தைப் பிரியர்கட்கு இரண்டாவது வாரம் கைகொடுக்கும். ராசியிலேயே நால்வர் உள்ளனர். இரு மனைவி இருந்தும் குழந்தை இல்லாதோருக்கு குடும்பத்தில் புதுக்குழந்தைக்கான அறிகுறி தெரியவரும். 8, 10 தேதிகளில் புதுமுயற்சிகள் வேண்டாம். நடனம், தெருக்கூத்து, கிராமப்புறப் பாடல் கலைஞர்களுக்கு செவ்வாயும் சுக்கிரனும் வாய்ப்பையும் பணத்தையும் அள்ளித்தரு வார்கள். வைர வியாபாரிகட்குப் பொற்காலம். திருட்டு வியாபாரியும் தப்பிக்கலாம்.

பூசம்: கடன் வாங்கியாவது வியாபாரத் தைப் பெருக்கலாமா என்ற எண்ணமுடை யோர் அந்த முயற்சியில் ஈடுபடலாம். 54 வயதுவரை கடன் பெற்று வாழ்வாதாரத் தைப் பெருக்கலாம். அதன்பின் மனதும் உடலும் துணைபுரிவது கடினம். குழந்தைகளின் கல்விக்கான கவலை 19, 20-ஆம் தேதிவரை தொடரும். 21, 23 தேதிகளில் முக்கிய திருப்பம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலையாகும். விளையாட்டு வீரர்களுக்கு கேதுவும் சனியும் இணைந்து புகழை நிலைநாட்டுவார்கள். தடைகள் தெரியவந்தால் மூன்று கருநீல ஊமத்தங்காயை மேற்கு நோக்கி நின்றவாறு திருஷ்டிசுற்றி நீர்நிலையில் போடவும். வைடூரிய மோதிரம் அணிதல் நன்று. வரவேண்டிய மனைவியின் சொத்து வரத்தயங்கும்.

ஆயில்யம்: சொந்த பந்தங்களுடன் நெடுநாட்களாக நடந்துவரும் பாசப் போராட்டம் முடிவுறும். அது காதல் விவகாரமாகவும் இருக்கலாம். அடுக்குமாடியில் குடியிருப்போர் வயதுவந்த பிள்ளைகள்மேல் கவனம் செலுத்துவது நன்று. 26-ஆம் தேதி உச்சிவேளைக்குப்பின் பொதுவாழ்வில் புகழ் ஓங்கும். கெட்ட பெயர் மறையும். 6-ல் உள்ள சனியும் கேதுவும் இன்னும் சில மாதங்கள் சற்று சோதிப்பார்கள். குலதெய்வத்துக்கு காணிக்கை செலுத்துவதால் கெடுதல் மறையும். ஒரு பாக்கெட் எள்ளுருண்டை, சிறிது நவதானியத்தைப் பறவைகள் கூடும். இடங்களில் தூவினால் பஞ்சபட்சிகளின் பலன் பெறலாம்.

சிம்மம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 9, 10, 19, 20, 28. பாதக நாட்கள்: 7, 8, 14, 15, 21, 22.

மகம்: மாணவர்களுக்கு அனுபவம் நிறைந்தோரின் அறிவுரை பேருதவியாக இருக்கும். நல்ல டியூசன் சென்டர் நல்வழிகாட்டும். குரு விருச்சிகத்தில் இருப்ப தால் தாய் சொல்லைத் தட்டவேண்டாம். வியாபாரிகளுக்கு 8-ஆம் தேதிக்குமேல் 10-ஆம் தேதிவரை நல்ல சூழ்நிலைகளை எதிர் பார்க்க இயலாது. செந்திலாண்டவரை மனதில் நிலைநிறுத்தி வணங்கவும். ராகு பகவான் சொகுசான வாழ்க்கைக்கு செலவினத்தை அதிகரிப்பார். நான்கு நாட்கள் ஒருவேளை உணவு சமையற்கூடத்தில் உட்கொள்ள வேண்டும். மலச்சிக்கல், செரியாமை, வாயுத் தொல்லை வேதனை தரும். அதிக கடன் தொல்லை பிரச்சினை இருந்தால் தனிமை யைத் தவிர்க்கவும்.

பூரம்: 11-ஆம் தேதிக்குமேல் 16-ஆம் தேதிவரை எச்சரிக்கையாக செயல்படவும். ஏதோ ஒரு சூழ்நிலை உங்களை ஏமாற்றமடையச் செய்யும். குறிப்பாக அலுவலகப்பணியில் கவனம் சிதறுதல் வேண்டாம். மூன்றாவது வாரம் மிக பிசியாகக் காணப்படுவீர்கள். பெண் அதிகாரியின் ஆதரவால் ஆடவர்கள் பதவி உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். சிலருக்கு சுக்கிரன் தடையை ஏற்படுத்துவார். ஊதா நிற தில்லி கனகாம்பரப்பூவை சுக்கிரனுக்கு சமர்ப்பித்து மனக்குறைகளைக் கூறினால் எல்லாம் வெற்றிதான். திருமணப் பேச்சை இம்மாதம் தவிர்ப்பது மிக நல்லது. அதிகாலை 3.00 மணிமுதல் 4.00 மணிவரை வாகனம் ஓட்டுதல் வேண்டாம்.

உத்திரம் 1-ஆம் பாதம்: அரசியல்வாதிகள் தலைநிமிர்ந்து வீரநடை போடலாம். கட்சி தாவ ஏற்ற தருணம். செவ்வாய் ராசியிலேயே உள்ளார். பெண்கள் 26, 27 தேதிகளில் பல நன்மைகள் பெறலாம். கணவன்- மனைவி பிரிவு ஏற்பட்டிருந்தால் இம்மாதம் சுமுகப்பேச்சு ஒத்துவராது. ஒரு குழந்தையுடன் பிரிந்த மனைவியின் பிடிவாதம் தளரும் வாய்ப்பில்லை. 28 வயது வாலிப உள்ளங்கள் திருமண முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. இப்போது 48 வயதெனில் அசையா சொத்து வாங்க முயல்வது கூடாது. ஒரு சனிக்கிழமை, கல்லின்மீது மேற்கு நோக்கி உட்கார்ந்து நீராடல் நன்று. சனி தோஷம் போகும். கருங்கல் உத்தமம்.

கன்னி

ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 11, 12, 21, 22, 30, 31. பாதக நாட்கள்: 9, 10, 16, 17, 23, 24.

உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: நீங்கள் விழித்திருந்தாலும், தூங்கிக்கொண்டிருந் தாலும் ஓய்வின்றி- களைப்பின்றி வேலை செய்ய வேண்டிய மாதம். சில தேவை யில்லாத தலையீடுகளை கிரகநாதர்கள் தரப் போகிறார்கள். இரண்டாவது வாரம் 11, 13 தேதிக்குமேல் எல்லாமே வெற்றி. தனவரவும் வந்துவிடும். விரயத்தில் செவ்வாய். கண் உபாதை அல்லது அரசு சார்ந்த தொல்லை வரலாம். பார்லி அரிசியை பாலில் ஊறவைத்து திருஷ்டிசுற்றி செடியில் ஊற்றவும். வெள்ளி அரளிச்செடிக்கு நீர்பாய்ச்சலாம். "ஓம் மஹா பகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தந்நோ உத்ர பால்குநீ ப்ரசோதயாத்' என்னும் மந்திரம் கூறலாம்.

ஹஸ்தம்: 16, 17 தேதிகளுக்குமேல் வியாபாரம், உத்தியோகம், குழந்தை களின் கல்வி எல்லாமே மேன்மையடையும். 21, 23 தேதிகளில் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்; பாதிக்காது. பயணத்தின் போது அல்லது வீட்டில் திருட்டுப் போகலாம். வெளியூர் போகும்போது வீட்டின் தலை வாசல் உட்பாகத்தில் ஒரு செப்புக்குடத்தில் நீரை நிரப்பி, அதனுள் ஒரு இரும்புச் சாவியைப் போட்டுச் செல்லவும். சுக்கிரன் 11-ல் இருப்பதால், திருமணம் ஈடேறினால் கருப்பு அல்லது செந்நிறப் பசுவை கோவிலுக்கு தானம் தருதல் நன்று. மூன்று கிணற்று நீரைக்கலந்து குளிப்பது போதுமானது.

piii

சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்: ராகு ராசிக்கு பத்தில். எந்தத் தொழில், உத்தியோகம், வியாபாரம் செய்தாலும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வது நன்று. சனி பகவானின் தடைகள் அகல, காலில் செருப்பு அணியாமல் ஆலயத்துக்குச் சென்று அவரை தரிசித்து வரலாம். வில்வங்காயை வீட்டின் ஈசானியத்தில் வைத்து, செம்பருத்திப் பூவை சுற்றிப் பரப்பிப் பூஜித்து, மாதக்கடைசியில் ஆற்றில் அல்லது மரத்தடியில் போடுதல் நல்லது. 28, 29 தேதிகளில் எல்லாவிதமான கேடும் அகன்று, மனதில் பூரண தெளிவு பிறக்கும். கோமேதக ராசிக்கல் மோதிரம் சிறப்பானது.

துலாம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 4, 5, 14, 15, 23, 24, 25. பாதக நாட்கள்: 11, 12, 19, 20, 26, 27.

சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: பணம் சார்ந்த விவகாரங்களில் இம்மாதம் முகமலர்ச்சியுடன் விளங்கலாம். ஆனால் குடும்ப பாரம் சோர்வைத் தரும். செவ்வாய் பகவான் வாழ்க்கைத்துணையின்மூலம் நல்லதையே செய்வார். 70 வயதைக் கடந்தவர்களுக்கு கேதுவும் சனியும் இன்னும் ஆயுளை அதிகரிப்பார்கள். ராகு மிதுனத்தில் இருப்பதால் சொந்தபந்தங்களுடன் பணப்பரிவர்த்தனை வேண்டாம். நாய் வளர்ப்பவர்கள் உங்கள் கையால் உணவூட்டல் நன்று; காலபைரவர் கருணை காட்டுவார். வீட்டில் தென்மேற்கு மூலையில் செவ்வரளிப் பூவை தாமரை இலையில் இருக்கச் செய்தல் நல்லது.

சுவாதி: மாணவர்களுக்கு மிக உற்சாகமான மாதம். ஒரு குடும்பக் குதூகல நிகழ்வில் கலந்து மனம் மகிழ்வாக இருக்கலாம். உயர்ரக ஹோட்டல் விருந்து உற்சாகத்தைத் தரும். ஈகோ இல்லாமல் யாவரிடமும் முகமலர்ச்சியோடு பழகவேண்டும். சூரியன், புதன், சுக்கிரன் கடகத்தில் காணப்படு கிறார்கள். 40 வயதில் இருக்கும் ஆண்கள் மனைவிமீது வெறுப்பைக் காட்டுவது கூடாது. சிலருக்கு அவர்கள் உங்களைவிட்டு வெகுதூரம் செல்லும் சூழ்நிலை நேரிடும். மனைவியின் சகோதரருடன் வீண்வாக்குவாதம் வேண்டாம்; நீண்ட பசையாகிவிடும். மும்மூர்த்திகளின் ஆலயம் சென்று வணங்கிவருவது மிக நன்று.

விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்:அரசு மற்றும் தனியார் ஸ்தாபனங்களில் பணிபுரிவோருக்கு பின்னடைவான தருணம். உங்கள் இலாகா ரகசியம் பிறரால் திருடப்பட்டு நீங்கள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படலாம். 26, 27 தேதிகளில் ஒரு கெட்ட செய்தி மனதை வாட்டும். மாத இறுதி மகிழ்வைத் தரும். அரசியல்வாதிகள் உயர் வாகப் பேசப்படுவீர்கள். சந்திரன் நிலை யால் பந்தயக் குதிரை வைத்திருப்போருக்கு கெடுதல் நிகழும். பார்த்தசாரதியை வணங்கு தல் உத்தமம். நாகபஞ்சமியன்று நாகதேவதையை வணங்வதும் நல்லது. ராகு காலத்தில் நெடுந்தூரப்பயணம் தவிர்க்கவேண்டும். கோமேதக மோதிரம் நற்பலன் தரும்.

விருச்சிகம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 16, 17, 26, 27. பாதக நாட்கள்: 1, 14, 15, 21, 22, 28, 29.

விசாகம் 4-ஆம் பாதம்: முதல் வாரம் 4, 5 தேதிகள்வரை சந்திரனின் வேகத்தால் சில பின்னடைவுகள் வரும். குழந்தைகளின் கல்விக்காக நேரம் ஒதுக்க நேரிடும். பெண் களுக்கு மிக யோகமான மாதமாகும். சமையல் கலையில் பாராட்டைப் பெறலாம். தொலைக் காட்சிக்கு முயற்சித்தாலும் சந்தர்ப்பம் சுலபமாகும். 6-ஆம் தேதி மாலைக்குமேல் 7-ஆம் தேதிவரை மிக யோகமான காலம். உத்தியோகம், வியாபாரத்தில் உயர்வான- நிலையான மாற்றம் தெரியவரும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவதை இம்மாதம் தவிர்க்கலாம். ராகு மிதுனத்தில். செல்லப்பிராணியாக நாயை வளர்த்தால்- கருப்பு நாய் எனில் காணாமல் போகலாம். கைவேலைக் கலைஞர்கள் லாபம் பெறலாம். பணம் வரும்.

அனுஷம்: மூன்றாவது வாரம் கவலையே இல்லாமல் காணப்படும். வயோதிகர்கள் இருந்தால் மூத்தோரின் உடல் சார்ந்த கவலை மறையும். 21, 23 தேதிகளில் குடும்பம் மிக உற்சாகமாகத் திகழும். வியாபாரத்தில் புது உத்தி மேன்மை தரும். புதனால், மனைவி யின் தங்கை இருந்தால் திருமணச்செய்தி மகிழ்வைத் தரும். இளம்பெண்கள் வெள்ளி மோதிரம் இடக்கையில் அணிதல் நல்லது. வரன் சுலபமாகக் கைகூடும். பழைய துணிகளை மூட்டையாக வீட்டில் வைத்திருந்தால் அப்படியே வெளியேற்றிவிடவும். மேய்ச் சலுக்குச் சென்ற மாடுகள் காணாமல்போனால் காவல் தெய்வங்களுக்கு காணிக்கை செலுத்த வேண்டும்.

கேட்டை: நீங்கள் நெடுநாட்களாக விரும்பி வைத்திருந்த பொருள் திருட்டு அல்லது காணாமல் போகலாம். ஆனால் அவை திரும்ப வந்துவிடும். 26, 27 தேதிகளில் வீண்வாக்குவாதம் வேண்டாம்- தேவைக்கேற்ப கடன் வாஙக நேரிடும். எவரையும் நம்பி கைமாற்றுக் கொடுப்பது கூடாது. குறிப்பாக நகைகள். குழந்தைகள் வளர்ச்சியால் பெருமிதம் கொள்ளலாம். ஐந்து ஞாயிறன்று உப்பு கலவா உணவு ஒருவேளை உண்பதால் சூரிய பகவானின் அருளைப் பெறலாம். செவ்வாய், சனி மகாதேவரை வணங்கவும். விதை நெல் தானம் செய்தால் குழந்தை பாக்கியம் பெறலாம்.

தனுசு

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 9, 10, 19, 28, 29. பாதக நாட்கள்: 2, 3, 16, 17, 23, 24, 25, 30.

மூலம்: நெடுநாட்கள் நோய்வாய்ப்பட் டோர் குடும்பத்தில் இருந்தால் அவர்கள் நிலை உச்சக்கட்டத்தை எட்டலாம். முதல் வாரம் நெருக்கடிகள் கூடினாலும், பின்னாளில் படிப்படியாக சமநிலையாகும். 7-ஆம் தேதியைக் கடந்துவிட்டால் எல்லாமே தூள்! சனியும் கேதுவும் ராசியில் இருப்பதால், பரிகாரமாக ஒரு பாக்கெட் எள்ளுருண்டை வாங்கி மீனுக்குப் போடல் நல்லது. இம்மாதம் மட்டும் கருவுற்ற மாதர்கள் இரவில் பால் அருந்துவது கூடாது. ஏழு மாமரக்கன்றை தானமாகத் தரலாம். அல்லது நட்டுவைக்கலாம். மகளிர் மசாலா பால் அருந்துவதால் கெடுதல் வராது.

பூராடம்: விருந்தினர் வருகை அதிக மாகும். நீங்கள் பல இடங்களுக்கு சுற்றுலா போகலாம். வருமானத்தில் தொய்வு ஏற்படாது. மூன்றாவது வாரம் குடும்பத்தில் புதுவரவை எதிர்பார்க்கலாம். உடல் உபாதையையும், குழந்தைகளின் கவலைகளையும் சகித்துக் கொள்ள வேண்டும். 21-ஆம் தேதிக்குமேல் எல்லா சூழ்நிலையும் ஆனந்தத்தைப் பெற்றுத்தரும். சிம்மத்தில் சுக்கிரன், செவ்வாய். இல்லாதோருக்கு, இருப்பவர்கள் தானம் செய்வது நல்லது. கருவுற்ற பெண்களுக்கு இயல்பான பிரசவம் கடினம். எனினும், பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஆகஸ்ட் 19, 20, 22, 26, 27, 28 ஆகிய தேதிகள் பிரசவத்திற்கு உயர்வானவை.

உத்திராடம் 1-ஆம் பாதம்: கலைஞர் கட்கும் கற்பனையாளர்கட்கும் மாதத்தின் கடைசிவாரம் ஒப்பந்தங்கள்மூலம் வரவு ஸ்திரமாகும். வியாபாரத்தில் புதுமைகளை இணைக்கவும். திருமணம் கைகூடும். தூரப் பயணம் இம்மாதம் வேண்டாம். குறிப்பாக 28, 29 தேதிகள் ஒத்தே வராது. இம்மாதம் பிறந்தநாள் கொண்டாடினால் பால்கலந் தவை கொடுப்பது மிக நல்லது. (பால் கோவா, பால்பாயசம் போன்றவை). 46, 47, 48 வயது இப்போது நிகழ்கிறதென்றால் சந்திரன் நல்ல திருப்திகரமான வாழ்வைத் தருவார் என்கிறது சாஸ்திரம்.

மகரம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 11, 12, 21, 22, 30, 31. பாதக நாட்கள்: 4, 5, 19, 20, 26, 27.

உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: பொருத்தமான துணையைப் பெற்றிருந் தால் நீங்கள் மெச்சப்படுவீர்கள். ராசிக்கு 7-ல் புதன். மனைவியின் யோகத்தால் பொருளாதார வசதி பெருகும். உங்கள் சொந்த ஜாதகத்தில் 12-ல் கிரகமே இல்லாமல் காலியாக இருந்தால் திண்டாட் டம்தான். பிறரை எதிர்பார்த்தே வாழ நேரிடும். உத்தியோகம் பார்ப்போருக்கு கேது இடமாற்றம் இல்லாத பணி உயர்வைப் பெற்றுத் தருவார். இம்மாதம் வெண்ணிற நான்குகால் பிராணிகளுக்கு உணவூட்டல் சிறப்பானது. ஞாயிறன்று சூரியகாந்தி எண்ணெயில் தீபமேற்றல் நன்று.

திருவோணம்: இம்மாதம் ஒரு மகானைச் சந்திப்பீர்கள். ஆன்மிகரீதியாக உயர்வான சிந்தனைகள் மனப்போராட்டத்தைப் போக்கிவிடும். பணப்பிரச்சினைகள் தீரும். அசையா சொத்து வாங்கல்- விற்றலில் ஏமாற்றமடையலாம். கடினமான செலவினங் களை எதிர்கொள்ளாமல் தவிர்க்கமுடியாது. எதிர்த்துப் போராட வேண்டும். மறைந் திருந்து சதிசெய்யும் ராகுவைத் திருப்திப் படுத்த சரஸ்வதியை நீலநிறப்பூக்களால் அர்ச்சனை செய்யலாம். கருப்புநிறத் துணியில் ஐந்து புளியமரக்கொட்டையை வீட்டின் வடமேற்கில் வைத்திருந்து மாதக்கடைசியில் ஆற்றுநீரில் போடல் நன்று.

அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்: பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளி, கல்லூரியிலிருந்து கடிதம் அல்லது தொலைபேசித் தகவலை எதிர்பார்க்கலாம். உடல் அசதி, சோர்விருந்தால் 25, 26, 27 தேதிகளில் முன்னேற்றம் தெரியவரும். வன்னி மரத்துக்கு நீர் ஊற்றலாம். சிறு மரக்கன்றை ஆலயத்திற்குக் கொடுப்பதுவும் போதுமானது.

அலுவலகம் அல்லது வியாபார ஸ்தலத்தில் தொடர்ந்து வருமானம் தடைப்பட்டால், வெண்சங்கில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் நிரப்பி வடகிழக்குப் பகுதியில் தீபமேற்றுவது நல்லது. அல்லது முத்து, பவளம், அமிதிஸ்ட் ராசிக்கல்லை நீரில் போட்டு வைக்கலாம்.

கும்பம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 4, 5, 14, 15, 23, 24, 25. பாதக நாட்கள்: 1, 7, 8, 21, 22, 28, 29.

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: வேலையில்லாதோருக்கு வேலைவாய்ப் பினை கிரகநாதர்கள் உருவாக்கித் தரப் போகிறார்கள். வியாபாரத்தில் அதிக லாபம் எதிர்பார்க்கலாம். காலநிலை சார்ந்த உடல் உபாதைகள் வரும். முன்பு சட்டத்துக்கு விரோதமாக நடந்து பொய்சாட்சி கூறியிருந் தால் அவை விஸ்வரூபம் எடுக்கும். இரண்டாவது வாரம் சுமாரானது. ராசிக்கு ஐந்தில் ராகு இருப்பதால் முதல் தாரத்தின் ஆண் குழந்தையுடன் பகை வேண்டாம். மொத் தத்தில் ஒரு தார அமைப்பு உடையோருக்கும் குழந்தைகளால் நன்மை கடினம். எல்லா கெடுதலும் போக, இம்மாதம் திருமண நாள் வந்தால், அன்றைய தினம் இன்னும் ஒரு தாலி கட்டுவதால் சூழ்நிலை மாறும்.

சதயம்: 16, 18 தேதிக்குமேல் மிக பிசியாகப் போகிறீர்கள். உங்களுடைய நம்பிக்கையில் வேகம் துணிச்சலைத் தரத்தான் போகிறது. குடும்பம் பாராட்டும். அரசியல் பிரமுகர் களுக்கு புது கார், புது இருப்பிடம், புது அலுவலகம் என சுகத்தை சுக்கிரன் தரப் போகிறார். குடும்பத்தில் ஒரே ராசியினர் பலர் இருந்தால், ஒரு கடம்ப மரத்திலான கட்டிலை வீட்டின் வடமேற்கு அறையில் இருக்கச்செய்து, ஒருவர்பின் ஒருவர் தூங்கிவந்தால் வல்வினை போகும். செப்டம்பர் மாதம் ஏகாதசியில் கடம்ப மரத்திற்கு நீர் வார்த்தல் நன்று. குட்டிச்சாத்தானையும் விரட்டிவிடும்.

பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்: இம்மாதம், ஆலயம் அல்லது பொது இடங்களில் உலா வரும்போது, எவர் எந்தத் தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. வீண்விவாதம் 26, 27 தேதிகளில் ஏற்படும். இம்மாதம் அசையா சொத்தில் விவகாரங்கள் வரும்; பாதிக்காது. காலபைரவருக்கு சாம்பிராணி அல்லது குங்கிலியத்தூளால் தூபமிட்டு வணங்குதல் மிக நன்று. ஆலமரத்தின் மேற்கே செல்லும் வேரில் நீர் பாய்ச்சவும். "ஊர்ஜவா நூர்ஜி தோதார ஊர்ஜிதோர்ஜித ஸாஸந:

ரூஷிதேவ கண ஸ்துத்யோ ருணத்ரய விமோசந:' என்னும் மந்திரத்தை 40 நாட்கள் சொல்லிவர கடன் தொல்லை போய்விடும்.

மீனம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 16, 17, 26. பாதக நாட்கள்: 2, 3, 9, 10, 23, 24, 30, 31.

பூரட்டாதி 4-ஆம் பாதம்: எந்தவித போட்டியானாலும் உங்கள் வெற்றி உறுதியாகிவிடும். வீடு, அலுவலகம், கடை போன்றவற்றில் மாறுதல் செய்ய மனம் உந்துதலைத் தரும். கணவன்- மனைவி உறவில் புதுத்தாக்கம் தெரியவரும். முதல் வாரக்கடைசியில் செலவினம் கூடும். 9, 10 தேதிகளில் உற்றார்- உறவினர்கள் மனச் சுமையை அதிகரிக்கச் செய்வார்கள். உத்தியோகத்தில் 14, 15 தேதிகளில் புதுப்பொறுப்பு உஷார்நிலையில் செயல்பட வைக்கும். கார்த்திகேயனை வணங்குதல் நல்லது. சுக்கிரன் சிம்மத்தில் இருப்பதால் ஐந்து நந்தியாவட்டைப்பூ அல்லது ஏழடுக்கு மல்லிப்பூ அல்லது வெள்ளை பாரிஜாத மலரைத் திருஷ்டிசுற்றி நீர்நிலையில் போடுவது நல்லது.

உத்திரட்டாதி: குழந்தைகளின் கல்வி சார்ந்த நெருக்கடிகள் மூன்றாவது வாரம் தெரியவரும். மின்சார உபகரண உற்பத்தியாளர்களுக்கு சில பின்னடைவுகள் வந்து 19, 20-ல் சீரடையும். அரசியல்வாதிகள், பொதுநலத் தொண்டர்களுக்கு புகழ் ஓங்கும். எதிரிகளின் தொல்லை அகல சூரிய பகவானை வணங்குதல் போதுமானது. சந்திரனின் உதவிக்கரமும் சீராகத் தெரியவில்லை. பெண்கள், துர்க்கை அல்லது பார்வதியை வணங்குதல் போதுமானது. புத்தாடை உடுக்கும்போது சிறிது ஆற்றுநீரை இரண்டு சொட்டுகளாவது தெளித்து உடுப்பது நல்லது. கோவில் குளங்களில் வடகிழக்கு மூலையில் காலை நனைப்பது போதுமானது.

ரேவதி: உங்களிடம் தேங்கிக்கிடக்கும் அத்தனைத் திறனையும் இம்மாதம் வெளிப்படுத்தும்விதமாக சூழ்நிலை பாதை அமைக்கும். 26, 27 தேதிகளில் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகள் நெருக்கடியைத் தரும். எழுத்தாளர்கள், பதிப்பகத்தார், ஊடகக் கலைஞர்கட்கு 28, 29 தேதிகளில் நன் மதிப்பைப் பெற்றுத்தரும். கலைஞர் களின் வருமானம் பெருகும்விதமாக புது ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும். சனி தனுசில் இருப்பதால் பார்வையற்றோருக்கு உதவுவது மேலானது. கேதுவின் அருளால் கருப்பு, வெள்ளைக் கறவை மாடுகள் அதிக பலனைத் தரும்.

செல்: 93801 73464