சென்ற இதழ் தொடர்ச்சி...
7-ல் ராகு- லக்னத்தில் கேது
பிறர் மனைவியை விரும்பியவர்கள், களத்தி ரத்திற்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள், பெண் பித்தர்கள், கூட்டாளியை ஏமாற்றுதல், சட்டத்திற்குப் புறம்பான செயல்களை ஆதரித் தது போன்ற செயல்களால் தோன்றிய வினைப் பதிவாகும். இதன்பலனாக திருமண வாழ்வில் குழப்பம், தம்பதியினர் கருத்து வேறுபாட்டுடன் வாழ்வது, கூட்டாளிகளால் ஏமாற்றப்படுதல், பணத்தைப் பறிகொடுத்தல் ஆகிய நிகழ்வுகள் ஏற்படும். கோட்சாரத்தில் 7-ல் ராகு, லக்னத்தில் கேது வரும்போது களத்திரத்தைப் பிரிதல்- வம்பு, வழக்கு, தொழில் கூட்டாளிகளால் பிரிவினை- வம்பு வழக்கு, ஏமாற்றப்படுதல், மரியாதைக்கு பங்கம் எற்படும். ஒருசிலர் சந்நியாசம் சென்றுவிடுவார்கள்.
பரிகாரம்
சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு மாலை வேலையில் அறுகம்புல் அர்ச்சனை செய்வதுடன், ஞாயிறுதோறும் ராகு வேளையில் காலபைரவருக்கு உளுந்து வடைமாலை சாற்றி வழிபாடுசெய்ய வேண்டும். சுமங்கலிப் பெண்களிடம் நல்லாசி பெறவேண்டும்.
8-ல் ராகு- 2-ல் கேது
பேராசையைத் தூண்டி ஒருவரின் வாழ்வைக் கெடுத்தல், தவறான வார்த்தைகளால் பிறருக்கு மனவேதனை செய்தல், பொய் சொல்லி பணம் பறித்தல், நம்பிக்கைத் துரோகம், நம்பிக்கை மோசடி ஆகிய செயல்களால் தோன்றிய கர்ம வினையாகும். இதன்பலனாக அடிக்கடி விபத்து, கண்டம், தற்கொலை உணர்வு, பண இழப்பு ஏற்படும். கோட்சாரத்தில் 8-ல் ராகு, 2-ல் கேது வரும்போது வருமானக்குறைவு, வருமானம் நின்றுபோதல், கொடுத்த பணம் வராமல்போவது, குடும்பத்தில் நிம்மதியின்மை, வறுமை, தகுதிக் குறைவான இடத்தில் வேலை பார்க்கும் நிலை, விபத்து ஏற்படும்.
பரிகாரம்
தினமும் மாலை 4.30 மணிமுதல் 6.00 மணி வரை நித்தியப் பிரதோஷ வேளையில் சிவதரி சனம் செய்வதுடன், சனிக்கிழமைகளில் உண வில் கொள்ளு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
9-ல் ராகு- 3-ல் கேது
தந்தை- மகனைப் பிரித்தல், ஒருவரை ஆதரவிழக்கச் செய்தல், ஒருவரின் உயர்கல்விக் குத் தடை செய்தவர்கள், குருத் துரோகம், குரு தட்சணையில் குறைவைப்பது, பிற மதத்தை இழிவுபடுத்துவது போன்ற குற்றம் செய்தவர் களுக்கு இந்த கிரக அமைப்பு ஏற்படும். இதனால் இந்த ஜென்மத்தில் கற்ற வித்தை பலிதமில் லாமல் போவது, படிப்பிற்குத் தொடர்பான வேலையின்மை, முறையான அங்கீகார மின்மை, மரியாதைக் குறைவு ஆகியவை ஏற்படும். கோட்சாரத்தில் 9-ல் ராகு, 3-ல் கேது வரும்போது தந்தை, தந்தைவழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடு, பூர்வீகத்தைவிட்டு வெளியேறும் நிலை, பதவி இழப்பு ஏற்படும்.
பரிகாரம்
சித்தர்கள் ஜீவசமாதி வழிபாடு நல்ல பலன் தரும். காசி, கயா, ராமேஸ்வரம், தேவிப் பட்டினம் போன்ற புனிதத் தலங்களில் நீத்தார் கடன் தீர்க்க வேண்டும். அமாவாசை நாட்களில் உணவு, தண்ணீர் தானம்செய்து வரவேண்டும்.
10-ல் ராகு- 4-ல் கேது
நிலமோசடி, தவறான முறையில் அபகரித்த பொருள், தவறான நடத்தை, ஒருவரின் தவறான நடத்தைக்குக் காரணமாக இருப்பவர், தவறான கர்மவினைப் பரிகாரம் செய்து வைத்தல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றுக்கான வினைப் பதிவு. இந்த அமைப்புடையவருக்கு ஆரம்பக் கல்வித் தடை, உடல்நலக் கோளாறு, சரிசெய்ய முடியாத வாஸ்துக் குறை பாடுள்ள வீட்டில் வாழும் நிலை அல்லது விருத்தியில்லாத வீடு, மனை வாங்கும் நிலை ஏற்படும். கோட் சாரத்தில் 10-ல் ராகு, 4-ல் கேது வரும்போது, ஒருவர் தனது தந்தைக்கு கர்ம காரியம் செய்யமுடியாத நிலை, தவறான நில முதலீடு, பூர்வீக சொத்து அரசால் அபகரிக் கப்படுதல் போன்ற நிலை உருவாகும்.
பரிகாரம்
முறையான பட்டா இல்லாத நிலத்தை பட்டா செய்துகொள்ள வேண்டும். வாஸ்துக் குறைவான இடத்திற்கு வாஸ்து சாந்தி பூஜைசெய்ய வேண்டும். ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு புத்தகம், நோட் தானம் செய்ய வேண்டும். ஊரின் மேற்குப் பகுதியிலுள்ள புற்றை வழிபாடுசெய்ய வேண்டும்.
11-ல் ராகு- 5-ல் கேது
கருச்சிதைவு செய்தவர்கள்- அதற்குக் காரணமாக இருந்தவர்கள், கோவில் சிலை யைத் திருடியவர்கள், புற்றை இடித் தவர்கள், ஒருவரை மனநோயாளியாகச் செய்து அதன்மூலம் பொருள் ஈட்டிய வர்கள், நல்ல காதலைப் பிரித்தவர்களுக்கு இந்த அமைப்பு ஏற்படும். இதன்பலனாக இந்த பிறவியில் ஆசைப்பட்டதை அடைய முடியாமை, குழந்தையின்மை, குழந்தை களைப் பிரியும் நிலை, பூர்வீகத்தைவிட்டு வெளியேறுதல், உழைப்பிற்குரிய ஊதிய மின்மை ஏற்படும். கோட்சாரத்தில் 11-ல் ராகு, 5-ல் கேது வரும்போது குழந்தைகளால் அவமானம், பூர்வீகத்தைவிட்டு வெளியேறும் நிலை, தியாகியாக வாழவேண்டிய நிலை உருவாகும்.
பரிகாரம்
குலதெய்வ வழிபாட்டை வலிமைப்படுத்து வதுடன், சர்ப்பமுள்ள புற்றை வழிபாடு செய்துவர வேண்டும்.
12-ல் ராகு- 6-ல் கேது
தனது முரட்டுப் பிடிவாதத்தால் ஒருவரை அடிமைப்படுத்துவது, காயம் ஏற்படுத்துவது, நோய் ஏற்படக் காரணமான உணவுப் பொருள் விற்பவர், நோய் பரவக் காரணமாக இருந்தவர்களுக்கு இந்த கிரக அமைவு ஏற்படும். இதன்பலனாக இந்தப் பிறவியில் இனம்புரியாத நோய்கள், இனம்புரியாத பிரச்சினைகள், உரிமையை நிலைநாட்ட முடியாமை ஏற்படும். கோட்சாரத்தில் 6-ல் கேது, 12- ல் ராகு வரும்போது நோய்த்தாக்கம், கடன் தொல்லை, வம்பு வழக்கு, ஈடு செய்யமுடியாத இழப்பிருக்கும்.
பரிகாரம்
விநாயகர், லட்சுமி நரசிம்மர் வழிபாடு நல்ல பலன் தரும். ஆசைக்கு அளவுகோல் வைத்திருப்பவருக்கு இந்த கிரக அமைப்பு பாதிப்பை ஏற்படுத்தாது. 6-ல் கேது- 12-ல் ராகு வரமா- சாபமா என்பது ஜோதிட உலகிற்கே சவால் விடும் கேள்வி. திறம் பட்ட ஜோதிடர்களைக்கூட திணறவைக்கும் கேள்வி. என் அனுபவத்தில் சர்ப்ப தோஷத்தைவிட, கிரகண காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் வினைப்பதிவு மிகவும் கடுமையாக இருக்கிறது. கிரகண காலத்தில் பிறந்து ராகு- கேது, சூரியன்- சந்திரன் இவர்களுடன் மாந்தி, செவ்வாய்- சனி தொடர்பு பெற்றவர்கள் அசுபப் பலனையும், குரு, லக்ன சுபரின் தொடர்பு பெற்றவர்கள் எதையும் வென்று வெற்றிவாகை சூடுபவர்களாகவும் இருக்கிறார்கள். மேலேகூறிய அனைத்தும் தசாக்காலங்களில் அதிகமான, புக்திக்காலங்களில் மிதமான சுப- அசுபப் பலனைத் தருகின்றன. மற்ற நேரங்களில் எந்த பாதிப்பும் நேராது. கோட்சார கிரகங்கள் தசாபுக்தியுடன் தொடர்பு பெறும்போது மட்டுமே சம்பவம் நடக்கும். அத்துடன் 9-ஆம் அதிபதி பெற்ற வலிமைக்கேற்ப சுப- அசுபத் தன்மையில் மாற்றம் இருக்கும்.
செல்: 98652 20406