ஜோதிட உலகையே மிரட்டும் இந்த ராகு- கேதுக்கள், ஜாதகத்தில் 12 பாவகங்களில் ஏதேனும் இரண்டு பாவகத்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்து, கர்மவினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைத்து விடுகிறார்கள்.

Advertisment

ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலை பிரம் மாண்டப்படுத்தும்; கேது சுருக்கும். ராகு- கேது வினால்தான் ஒருவர் மிகப்பெரிய யோகத்தையோ அவயோகத்தையோ சந்திக்கிறார்.

மனிதனுடைய வாழ்வியல் மாற்றங்களை வழிநடத்தக்கூடிய கர்ம அதிகாரியாக ராகு- கேதுவைக் கூறலாம். ஏற்கெனவே கடந்துவந்த ஜென்ம வாசனையின் அனைத்து நல்ல- கெட்ட சம்பவங்களையும் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற ஜென்மத்தில் நடக்கும் அனைத்து நல்ல- கெட்ட செயல்களுடன் இணைத்து, புதிய பதிவுகளைப் பதிவுசெய்யும் வினைப் பதிவாள ராகவும், அதற்கேற்றபடி கர்மவினைகளைத் தூண்டும் கர்மவினை ஊக்கியாகவும் ராகு- கேதுவே செயல்படுகின்றன என்றால் அது மிகையாகாது.

இந்த கட்டுரையிலிருக்கும் பலன்கள் வாசகர்கள் தங்களை ராகு- கேது தோஷத்திலிருந்து காத்து, புண்ணியப் பலன்களை அதிகரிக்கவேண்டு மென்ற பிரார்த்தனையுடன் எழுதியது. மேலும், என்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் அனைவரும்,‘ "நான் பாக்கிய பலன்கள் எதையும் அனுபவிக்கவில்லை. நான் என்ன பாவம் செய்தேன் என தெரியவேண்டும்' என்று ஆதங்கப் படுகிறார்கள். அத்துடன், தங்களின் வாரிசுகளுக்கு முன்னேற்றமில்லை அல்லது தங்களின் வாரிசு களால் தங்களுக்கு பிரயோஜனமில்லை என்னும் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். ராகு- கேதுக்கள் நிழலாகத் தொடரும் நிழல் கர்மா. முன்னோர்கள் செய்த பாவம் வாரிசுகளைத் தொடரும் என்ற கருத்தைத் தெரிவித்து, பலரின் கேள்விக்கு இந்த கட்டுரை விடைதரும் என நம்புகிறேன்.

Advertisment

12 பாவகங்களில் ராகு- கேதுக்கள் அமர்ந்த கர்மவினைப் பதிவுகளுக்கான விளக்கங் களைக் கொடுத்திருக்கிறேன். இவையனைத்தும் முன்ஜென்மத்தில் அவரவர் செய்த வினைகளுக்கேற்ப இந்தப் பிறவியில் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்கள், பலன்கள் அனைத்தும் லக்னத்திற்கே. ராசிக்கு அல்ல.

லக்னத்தில் ராகு- 7-ல் கேது ஒருவரை வாழவிடாமல் செய்வது, தவறாக வழிநடத்துவது, கெட்ட பழக்கங்கள் ஏற்படக் காரணமாக இருப்பது, தொழில் கூட்டாளியை ஏமாற்றிய குற்றம், திருமண விஷயத்தில் கணவன்- மனைவியர் ஒருவரையொருவர் ஏமாற்றிய வினையைத் தீர்க்க எடுத்த பிறப்பு என்று கூறலாம். இதன்பலனாக இந்த ஜென்மத்தில்- கோட்சாரத்தில் லக்னத்தில் ராகு, 7-ல் கேது வரும்போது சம்பந்தமே இல்லாத நபரால் பாதிக்கப்படுவது, மன வேதனை, தொழில் கூட்டாளியால் ஏமாற்றப் படுவது, களத்திரத்துடன் கருத்து வேறுபாடு, திருமணம் தள்ளிப்போவது போன்ற பலன்கள் நடக்கும். ஜனன ஜாதகத்தில் இத்தகைய அமைப்புள்ளவர்களுக்கு நடக்கும் திருமணம் வம்ச விருத்திக்காகவும், தனிமையை நீக்கிக்கொள்வதற்காகவும் இருக்கிறது. திருமண வாழ்வு நரகவேதனையாகவே இருக்கும்.

பரிகாரம்

இதுபோன்ற பிரச்சினையை அனுபவிப்பவர்கள் பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைப்பதுடன், இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகரை செவ்வாய்க்கிழமை காலை 8.00-9.00 மணிக்குள் வழிபாடு செய்துவர நல்ல மாற்றம் தெரியும்.

2-ல் ராகு- 8-ல் கேது

Advertisment

நல்ல கணவன்- மனைவியைப் பிரித்தவர்கள், தம்பதியினரை வாழவிடாமல் செய்தவர்கள், பொய்சாட்சி சொல்லி ஒரு குடும்பத்தைக் கெடுத்த வினையைத் தீர்க்கப் பிறந்த கர்மவினைப் பிறப்பாகும். மேலும், ஒருவரைக் கெடுக்க மாந்த்ரீகம் செய்தவர்கள், உழைத்த கூலியைக் கொடுக்காதவர்கள், பொய் சொல்ல அஞ்சாதவர்களுக்கு இத்தகைய அமைப்பு ஏற்படுகிறது. இந்த அமைப்புள்ளவர்களுக்கு கோட்சாரத்தில் 2-ல் ராகு, 8-ல் கேது வரும்போது குடும்பத்தைவிட்டுப் பிரியும் நிலை, தவறான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது அல்லது வாழ்நாள் முழுவதும் மனவேதனை தரும் மறுவிவாகம் ஏற்படும். இதன்பலனாக இந்த அமைப்புடையவரின் திருமண வாழ்க்கையில் நெருடல், மனவேதனை, களத்திரத்துடன் பிரச்சினை இருக்கும்.

raghu-kethu

பரிகாரம்

இதற்குப் பரிகாரமாக பொருளாதாரப் பற்றாக்குறையால் திருமணம் செய்யமுடியாமல் இருப்பவர்களின் திருமணத்திற்கு உதவிசெய்வதுடன், ஊரின் வடக்குப் பகுதியிலுள்ள புற்றை செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடுசெய்ய வேண்டும் .

3-ல் ராகு- 9-ல் கேது

உடன்பிறந்தவர்களுக்குரிய பங்கை அபகரித்தவர், உதவி செய்யக்கூடிய சக்தியிருந்தும் உடன்பிறந்தவர் களுக்கு உதவி செய்யாதவர், அவர்களின் வாழ்க்கை அழியக் காரணமாக இருந் தவர், வீண்வதந்தியைப் பரப்புதல், பேய், பிசாசு, செய்வினை என்றுகூறி பணம் பறித்த குற்றம், நல்லவர் மனதை நடுங்கவைப்பது, தானம் கொடுப்போரைத் தடுப்பது போன்ற குற்றங்கள் அடங்கும். இதன்பலனாக இந்தப் பிறவியில் தங்களின் உடன்பிறந்தவர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்மை செய்தால் அவப்பெயரே மிஞ்சும். கோட்சாரத்தில் 3-ல் ராகு, 9-ல் கேது வரும்போது உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் முன்னோர்களின் சாபமும் ஏற்படும்.

பரிகாரம்

உடன்பிறந்தவர்களின் வாரிசுகளுக்குத் தேவையான உதவியைச் செய்தல், வயதானவர்களுக்கு உணவு, ஆடை தானம் செய்தல், முன்னோர்களுக்கு முறையான திதி, தர்ப்பணங்களைச் செய்துவர நல்ல முன்னேற் றம் கிடைக்கும்.

4-ல் ராகு- 10-ல் கேது

தாயைப் பராமரிக்காத குற்றம், தாய்வழி உறவினர்களை அவமதித்த குற்றம், வீட்டில் வாடகைக்கு இருப்பவரை துன்புறுத்துதல், அதிக வாடகை வாங்குதல், தன்னிடம் வேலை பார்ப்பவரை அடிமைப்படுத்தி முன்னேற்றத்தை முடக்குதல், ஒருவரின் தொழிலை பாதிக்கச் செய்தல், ஊரைவிட்டு வெளியேறக் காரணமாக இருத்தல், மண் புற்றுக்களை இடித்தல் ஆகிய குற்றமுடைய அமைப்பாகும். இதன்பலனாக இந்த ஜென்மத்தில் சொந்த வீடு பாக்கியமின்மை, பல வீடு இருந்தும் வாடகை வீட்டில் வாழும் நிலை, தனது சொத்துகளைப் பயன்படுத்த முடியாமல் வைத்து வேடிக்கை பார்க்கும் நிலை, அடிமைத் தொழில் செய்து கஷ்டஜீவனம் செய்யும் நிலை, சாதாரண தொழிலைக்கூட கடும் போராட்டத்துடன் நடத்த வேண்டிய நிலை வரும். கோட்சாரத்தில் 4-ல் ராகு, 10-ல் கேது வரும்போது வீடு, வாகனப் பராமரிப்பால் இழப்பு அல்லது சொந்த வீட்டை இழத்தல், தொழிலை இழுத்துமூடும் நிலை போன்றவை ஏற்படும்.

பரிகாரம்

தாயைப் பராமரித்தல், தாய்வழி உறவினர்கள், வயதான பெண்களுக்குத் தேவையறிந்து உதவுதல், தெருவோரம் வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு குடிசை அமைக்க உதவுதல், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்தல், ஜீவனத்திற்கு சிரமப் படுபவர்களுக்கு அடிப்படைத் தேவையை நிறைவு செய்ய உதவிவந்தால் முன்னேற்றம் உண்டு.

5-ல் ராகு-11-ல் கேது

குலதெய்வத்தைக் குழிதோண்டிப் புதைத்தவர்கள், கோவில் சொத்தைக் கொள்ளையடித்தவர்கள், குரு காணிக்கை கொடுக்க மறுத்தவர்கள், குருத்துரோகம் செய்தவர்கள், ஒருவரின் பூர்வீக சொத்தை அபகரித்தல், ஒருவருக்கு தொழில் லாபத்தை இழக்கச் செய்தல், காதலித்து ஏமாற்றிய குற்றம், ஒருவருக்கு வாரிசு உருவாகமுடி யாமல் செய்த கர்மவினைப் பதிவாகும். இதன்பலனாக குழந்தைப் பிறப்பில் தடை, உடல்நலக் குறைவுடன் கூடிய குழந்தை பிறப்பது, குலதெய்வம் தெரியா மல்போவது, குலதெய்வ அனுக்கிர கமின்மை, பூர்வீக சொத்தைப் பயன்படுத்த முடியாமை போன்றவை ஏற்படும். இவர்களுக்கு கோட்சாரத்தில் 5-ல் ராகு, 11-ல் கேது வரும்போது குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு, குழந்தைகளுக்கு முன்னேற்றமின்மை, மூத்த சகோதரர் களுக்காக பொருளை இழக்க நேருதல் அல்லது மூத்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு, குலதெய்வ வழிபாடு செய்யமுடி யாமல் போதல் அல்லது வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வரும்போது விபத்து ஏற்படும். தொழிலில் பெரும் பொருள் இழப்பு ஏற்படும்.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போது "ராகு- கேதுப் பெயர்ச்சிப் பலன்கள்' புத்தகம் படித்த வாசகர் ஒருவர், "11-ல் வரும் கிரகம் நன்மைதானே செய்யும்? நீங்கள் 11-ல் கேது வரும்போது பொருள் இழப்பு ஏற்படும் என்று எழுதி இருக்கிறீர்களே?' எனக் கேட்டு, சில விவாதங்களைச் செய்துவிட்டு, "நீங்கள் எழுதிய அனைத்தும் உண்மை. உடன்பிறந்த அண்ணனுக்காக நான் பெரும் பணம் இழந்தேன்' என்றார்.

பரிகாரம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது, வயதில் மூத்தவர்களின் நல்லாசி பெறுவதுடன், தங்களுக்கு தொழிலில் வரும் லாபத்தில் சிறுபகுதியை முதியோர் இல்லங்களுக்குத் தரவேண்டும். பராமரிப்பு இல்லாத கோவில்களைப் பராமரிக்க நிதியுதவி செய்யவேண்டும்.

6-ல் ராகு- 12-ல் கேது

அநியாயமாக ஒருவரின்மீது ஏற்படுத்தும் தவறான வழக்கு, தன் கடனை மற்றவர்மேல் திணிப்பது, அல்லது பண மோசடி ஏற்படுத்துதல், ஒருவரின் நிம்மதியைக் கெடுத்தது, நோயுள்ளவர்களுக்கு உதவாமை, நோய்க்கு தவறான மருந்து கொடுப்பது ஆகிய காரணங்களே இந்த வினைப் பதிவிற் குரிய அமைப்பாகும். இதன்பலனாக இந்த ஜென்மத்தில் வழக்கிற்குமேல் வழக்கு, கடன், நோய், எதிரித்தொல்லை இருந்துகொண்டே இருக்கும். கோட்சாரத்தில் 6-ல் ராகு, 12-ல் கேது வரும்போது கடுமையான கடன் பிரச்சினை, பண இழப்பு, இனம் புரியாத நோய், செய்வினைத் தாக்கம் ஏற்படும்.

பரிகாரம்

கருட வழிபாடு, காளி வழிபாடு, காலபை ரவர் வழிபாடு செய்வதுடன், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கடும் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை செய்பவர் களுக்கு மருத்துவச் செலவுக்கு உதவ வேண்டும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406