ஜாதகரீதியாக பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு- பொருத்தில் முக்கியத்துவம் தரப்படவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதில் பலவிதமான நெருடல்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மிகக் குறிப்பாக, பொருத்தமான நட்சத்திரத்தை எவ்வாறு தேர்வுசெய்வது போன்ற சந்தேகங்கள் நிலவிவருகிறது.
தற்போது, திருமண பந்தத்தை நிர்ணயிப்ப தைப் பொருத்தவரை தம்பதிகளாக இணையப் போகின்ற இரு குடும்பங்களின் நிதிநிலை, சமூக, பொருளாதார அந்தஸ்து, இரு குடும்பங் களின் சொத்துகள், தனிப்பட்ட கலாச்சார பழக்க வழக்கங்கள், இனம். மதம், இருவரின் கல்வித் தகுதி, தொழில், உத்தியோகம், சொத்து மதிப்பு, இருவரின் தோற்றம் என இதுபோன்ற விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.
மேற்கண்ட விஷயங்களுக்கு முக்கியத் துவம் கொடுத்து திருமணம் செய்து வைத்தா லும் அவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? எப்படி செல்லும் என்பது இருவருடைய தனிப்பட்ட ஜாதகம் மற்றும் அடுத்தடுத்து வரக்கூடிய தசாபுக்தியைப் பொருத்தே அமையும் என்பதை பலரும் உணர்வதில்லை.
திருமணமாகி தம்பதியினராக மாறப்போகின்ற இவர்கள் ஒருவரையொருவர் எவ்வாறு புரிந்துகொள்வார்கள்? இருவரின் தனிப்பட்ட குணநலன்கள், மேலும், ஒருவரின் நடத்தை மற்றும் எண்ணங்கள், தனிப் பட்ட விருப்பங்கள், மற்றவருக் குப் பிடிக்குமா? இருவருக்கும் இடையேயான புரிதல்கள், இந்த திருமண வாழ்க்கை நீண்ட காலத்திற்கு நல்லபடியாக செல்லுமா? இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள், உரசல்கள் ஏற்பட் டாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து குடும்ப பந்தத்தை நீண்ட காலத்திற்கு எடுத்துச் செல்வார்களா என்பனபோன்ற விஷயங்களை இருவரின் ஜாதகரீதியாக ஆராய்ந்து இணைப்பதே சாலச் சிறந்தது.
அதேபோல் திருமணத்தின்போது, பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தம் இருந்தாலும், கட்டப் பொருத்தம் இல்லை யென்றால் திருமணம் செய்யக்கூடாது. இன்றும் பலரிடம் பத்து பொருத்தம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. "பத்துக்கு எட்டு பொருத்தம் இருக்கு, ஒன்பது பொருத்தம் இருக்கு' என்பதைத்தான், முதல் திருமண பொருத்தமாக கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இது முற்றிலும் தவறு.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த குழந்தை மற்றும் குடும்பம் சார்ந்த அமைப்பு களில், பிரச்சினை வராமலிருக்க, ஜாதகத்தை சரியான அமைப்பில் இணைப்பது புத்திசாலித் தனமாகும். அதன்படி- வது, வரன் ஜாதகத்தில் 7-ஆம் பாவகம், 7-ஆம் பாவகாதிபதி, நல்ல அமைப்பில் இருக்கவேண்டும்.
களத்திரகாரன் சுக்கிரன் சுபத்துவம் பெறவேண்டும். புத்திர ஸ்தானமான 5-ஆமிடம், 5-ஆமதிபதி மற்றும் குருவும் பலமாக இருக்கவேண்டும்.
குடும்ப ஸ்தானம் எனும 2-ஆமிடம் மற்றும் 2-ஆமதிபதி ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.
எட்டாமிடமான ஆயுள் ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் பலம் பொருந்தி இருக்க வேண்டும்.
அத்துடன் இருவருக்கும், நல்ல யோக தசைகள் நடைமுறையில் இருக்க வேண்டும்.
ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8-ல் தோஷம் இருந்தால் ஏழரை, அஷ்டமச்சனி காலகட்டங்களில் திருமணத்தைத் தவிர்ப்பது நல்லது.
ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் பிரச்சினைக்குரிய தசா புக்தி முடிந்திருக்கவேண்டும் அல்லது வயோதிக காலத்தில் வரவேண்டும் போன்றவை முக்கிய மாக கவனிக்கப்பட வேண்டும். அத்துடன் வது, வரனுக்கு பொருந்தமான நட்சத்திரங் களைந் தேர்வுசெய்வது மிக முக்கியம்.
எனவே இதுபோன்ற சில முக்கிய விதி களைக் கடைப்பிடிப்பதுடன் லக்னரீதியாக ஒருவரின் 1, 2, 7, 8-ஆம் அதிபதிகள் வாழ்க் கைத் துணையின் ராசியாதிபதியாக, லக்னாதி பதியாக அல்லது நட்சத்திராதிபதியாக இருக்கும்போது வாழ்க்கை இன்பமாக அமையும். இதுவே பூர்வஜென்ம தொடர்ச்சி யான வாழ்க்கையாக இருக்கும். இந்த விதி யின்படி பன்னிரண்டு லக்னத்திற்கும் பொருத்தமான லக்னாதிபதி, ராசியாதிபதி நட்சத்திரங்களைப் பார்க்கலாம். இந்த விதி ராசிக்கு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
மேஷ லக்னம்
இவர்களின் வாழ்க்கைத் துணைக்கு மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம் போன்றவை லக்னாதிபதியாகவோ அல்லது ராசியதிபதியாகவோ அல்லது மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும்.
ரிஷப லக்னம்
இந்த லக்னத்திற்கு வாழ்க்கைத் துணை ரிஷபம், மிதுனம், விருச்சிகம், தனுசு போன்றவை ராசியாதிபதியாகவோ அல்லது லக்னாதிபதியாகவோ அல்லது பரணி, பூரம், பூராடம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்திலோ பிறந்திருக்க வேண்டும்.
மிதுன லக்னம்
இந்த லக்னத்தில் பிறந்தவர்களின் துணை மிதுனம், கடகம், தனுசு, மகரம் ஆகியவை ராசியாதிபதியாகவோ அல்லது லக்னாதிபதி யாகவோ அல்லது ஆயில்யம், கேட்டை, ரேவதி, ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரத்திலோ பிறந் திருக்க வேண்டும்
கடக லக்னம்
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை கடகம், சிம்மம், மகரம், கும்பம் ஆகியவை ராசியாதிபதி யாகவோ அல்லது லக்னாதிபதியாகவோ அல்லது ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், கிருத்திகை, உத்திரம், உத்திராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத் திரத்தில் பிறந்திருக்க வேண்டும்
சிம்ம லக்னம்
இந்த லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைத் துணை சிம்மம், கன்னி, கும்பம், மீனம் போன்றவை ராசியாதிபதியாகவோ அல்லது லக்னாதிபதியாகவோ அல்லது கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட் டாதி, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கன்னி லக்னம்
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கன்னி, துலாம், மீனம், மேஷம் ஆகியவை வாழ்க்கைத் துணையின் ராசியாதிபதியாகவோ அல்லது லக்னாதிபதியாகவோ அல்லது ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், புனர் பூசம், விசாகம், பூரட்டாதி, மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும்.
துலா லக்னம்
இவர்களின் வாழ்க்கைத் துணை துலாம், விருச்சிகம், மேஷம், ரிஷபம் போன்றவை லக்னாதிபதியாகவோ அல்லது ராசியாதி பதியாகவோ அல்லது பரணி, பூரம், பூராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்திலோ பிறந்திருக்க வேண்டும்.
விருச்சிக லக்னம்
இந்த லக்னத்திற்கு வாழ்க்கைத் துணை விருச்சிகம், தனுசு, ரிஷபம், மிதுனம் போன்றவை ராசியாதிபதியாகவோ அல்லது லக்னாதிபதியாகவோ அல்லது மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி பரணி, பூரம், பூராடம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, நட்சத்திரத்திலோ பிறந் திருக்க வேண்டும்.
தனுசு லக்னம்
இந்த லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைத் துணை தனுசு, மகரம், மிதுனம், கடகம் போன்றவை ராசியாதிபதியாகவோ அல்லது லக்னாதிபதியாகவோ அல்லது புனர் பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஆகிய நட்சத்திரத்திலோ பிறந்திருக்க வேண்டும்.
மகர லக்னம்
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை மகரம், கும்பம் கடகம், சிம்மம் ஆகியவை ராசியாதிபதியாக அல்லது லக்னாதிபதியாக அல்லது பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ரோகிணி, ஹஸ்தம், திருவோ ணம், கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ஆகிய நட்சத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கும்ப லக்னம்
இந்த லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைத் துணை கும்பம், மீனம், சிம்மம், கன்னி போன்றவை ராசியாதிபதியாகவோ அல்லது லக்னாதிபதியாகவோ அல்லது பூசம், அனுஷம், உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும்.
மீன லக்னம்
இந்த லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைத் துணை மீனம், மேஷம் கன்னி, துலாம் ஆகியவை ராசியாதிபதியாகவோ அல்லது லக்னாதிபதியாகவோ அல்லது புனர் பூசம், விசாகம், பூரட்டாதி, மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும்.
திருமணமான பன்னிரண்டு லக்னத்தினரும் தங்கள் சுய ஜாதகத்தில் இதைப் பொருத்திப் பார்த்தால் இது பெரும்பான்மையாக பொருந்தி வரும். உங்கள் குடும்ப உறுப்பினர் களின் வரன், வதுவின் ராசியாதிபதி, லக்னாதி பதி, நட்சத்திரத்தை மேலே கூறியபடி எளிமை யாகக் கண்டறிய முடியுமென்று நம்புகிறேன்.
செல்: 98652 20406