Advertisment

12 லக்னப் பலன்கள்! - முனைவர் முருகு பாலமுருகன் 51

/idhalgal/balajothidam/12-lucknow-benefits-dr-muruku-balaamurugan-51

கும்ப லக்னம்வரையிலான 1 முதல் 12-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மீன லக்ன பாவங்களைக் காணலாம்.

மீன லக்னம்

Advertisment

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்குக் கற்பனை சக்தி அதிகமாக இருக்கும். நல்ல மனத்தெளிவும், தயாள குணமும், பொறு மையும், தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலியாக இருப்பார்கள். மற்றவர்களின் சுகதுக்கங்களைத் தன்னுடைய சுகதுக்கங்களாக நினைப்பார்கள். தன்னிட முள்ள எந்த ரகசியத்தையும் மறைக்கத் தெரியாது. சமயத்திற்கேற்றாற்போல மாறி விடும் சுபாவம் கொண்டவர்கள் என்பதால், துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங் களுக்கும் எளிதில் அடிமையாகிவிடு வார்கள்.

nn

எவ்வளவு சீக்கிரத்தில் ஒருவரிடம் அன்பாகப் பழகுகிறாரோ, அவ்வளவு சீக்கிரத்தில் விலகிடவும் செய்வார். பயந்த சுபாவம் கொண்டவர்கள். தன்னுடைய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள காலநேரம் பார்க்காமல் உழைப்பார்கள்.

Advertisment

பேச்சாற்றல் மிக்கவர்கள் என்பதால், இவர் களிடம் பேசும்போத

கும்ப லக்னம்வரையிலான 1 முதல் 12-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மீன லக்ன பாவங்களைக் காணலாம்.

மீன லக்னம்

Advertisment

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்குக் கற்பனை சக்தி அதிகமாக இருக்கும். நல்ல மனத்தெளிவும், தயாள குணமும், பொறு மையும், தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலியாக இருப்பார்கள். மற்றவர்களின் சுகதுக்கங்களைத் தன்னுடைய சுகதுக்கங்களாக நினைப்பார்கள். தன்னிட முள்ள எந்த ரகசியத்தையும் மறைக்கத் தெரியாது. சமயத்திற்கேற்றாற்போல மாறி விடும் சுபாவம் கொண்டவர்கள் என்பதால், துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங் களுக்கும் எளிதில் அடிமையாகிவிடு வார்கள்.

nn

எவ்வளவு சீக்கிரத்தில் ஒருவரிடம் அன்பாகப் பழகுகிறாரோ, அவ்வளவு சீக்கிரத்தில் விலகிடவும் செய்வார். பயந்த சுபாவம் கொண்டவர்கள். தன்னுடைய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள காலநேரம் பார்க்காமல் உழைப்பார்கள்.

Advertisment

பேச்சாற்றல் மிக்கவர்கள் என்பதால், இவர் களிடம் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். சின்னச்சின்ன விஷயங்களில்கூட குற்றம் கண்டுபிடிப் பதில் வல்லவர்கள். சமயம் பார்த்து காலை வாரிவிடுவார்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு, அனைவரையும் அனுசரித்துச் செல்லப் பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிமை நிறைந்ததாக இருக்கும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவாற்றல், புத்திக்கூர்மை, ஞானம் உடைய வர்கள். பூக்கள்மீது அதிகம் விருப்பம் இருக்கும்.

அழகிய கண்களும், நல்ல உடலமைப்பும் கொண்ட வர்கள். சிறப்பான தனவரவைப் பெற்று செல்வம், செல்வாக்குடன் வாழ்வார்கள். மற்றவர்கள் வளர்ச்சியைக்கண்டு பொறாமைப்படும் குணம் கொண்டவர்கள். அனைத்துவிதமான உணவு களையும் விரும்பி உண்பார்கள். தானதர்மங்கள் செய்வதிலும், ஆன்மிகம், தெய்வீக விஷயங் களிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். எந்த விதமான சிக்கலையும் நிதானமாக எதிர்கொள் வார்கள். மற்றவர்களின் வளர்ச்சிக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வார்கள். உடல் ஆரோக் கியத்தில் வாயு சம்பந்தப்பட்ட நோய்கள், உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.

1-ஆம் பாவம்

ஜென்ம லக்னாதிபதி குரு திரிகோண ஸ்தானங் களில் அமைந்து கிரகச்சேர்க்கையுடன் இருந் தால் நீண்ட ஆயுள் உண்டாகும். ஆயுள்காரகன் சனியும், மீன லக்னத்திற்கு அஷ்டமாதிபதி சுக்கிரனும் பலம்பெறுவது விஷேசப்பலனை உண்டாக்கும். லக்னாதிபதி குரு தனக்கு நட்பு கிரகமான சூரியன், சந்திரன், செவ்வாய் சேர்க்கை பெறுவதும்; நட்பு கிரகங்களின் வீடான மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனத்தில் கிரகச்சேர்க்கையுடன் அமை வதும் சிறப்புமிக்க பலனை உண்டாக்கும். லக்னாதிபதி குரு தனித்தமைவதைவிட கிரகச் சேர்க்கையுடன் அமைவது சிறப்பான பலனை உண்டாக்கும். மீன லக்னத்திற்கு கேந்திர ஸ்தா னங்கள் சுபகிரகங்களின் வீடு என்பதால்- கேந்திரங் களில் குரு அமைந்தால் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படும் என்பதால்- கேந்திரங்களில் அமையாமல் மற்ற ஸ்தானங்களில் அமைந்தால் அனுகூலம் மிகுந்த பலன்களை உண்டாக்கும்.

குரு, சந்திரன் பலமாக அமைந்து, அஷ்டமா திபதி சுக்கிரனும் கேந்திர, திரிகோணங்களில் அமைந்து, சனி, ராகு போன்ற பாவிகள் பார்வை பெறாமலிருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெறாமலிருப்பதும், குருவுக்கு இருபுறமும் பாவிகள் அமையாமலிருப்பதும், சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங் கள் லக்னத்திற்கு 8-ஆம் வீட்டிலோ, சந்தி ரனுக்கு 8-ஆம் வீட்டிலோ அமையாமலிருப் பதும் நீண்ட ஆயுளை உண்டாக்கும். குரு, சனி, சந்திரன் பலமிழந்திருப்பதும், 1, 8-ல் சனி, ராகு போன்ற பாவிகள் அமைவதும் கண்டத்தையும், பல்வேறு பிரச்சினைகளையும் உண்டாக்கும்.

மீன லக்னத்திற்கு சூரியன் 6-ஆம் அதிபதி என்றாலும், லக்னாதிபதிக்கு நட்பு கிரகம் என்பதால், சிறுசிறு சோதனைகளைக் கொடுத் தாலும் அனுகூலப்பலனை உண்டாக்கும். 5-ஆம் அதிபதி சந்திரன் மிகவும் சாதகப் பலன்கள் தரும். தன பாக்கியாதிபதியான செவ்வாயும் குருவுக்கு நட்பு கிரகம் என்பதால், பல்வேறு யோகங்களை உண்டாக்கும்.

3, 8-க்கு அதிபதியான சுக்கிரன் அதிகக் கெடுதலை ஏற்படுத்தும். புதன் 4, 7-க்கு அதிபதியாகி பாதகாதிபதியா வதால், திரிகோண ஸ்தானங் களில் இருந்தால் மட்டுமே ஓரளவுக்கு சாதகப் பலனைத் தரும். சனி லாபாதிபதி என் றாலும், விரயாதிபதியாகவும் வருவதால் பெரிய யோகத்தைத் தருவதில்லை.

செவ்வாய், சந்திரன் யோகத்தைத் தரும். புதன், சுக்கிரன், சனி கெடுதலை ஏற்படுத்தக்கூடிய கிரகங்களாகும்.

குருவாக லக்னாதிபதியும், 5, 9-க்கு அதிபதி யாக சந்திரன், செவ்வாயும் வருவதால், பல்வேறு சமூகநலப் பணிகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு அமையும். மற்றவர்களை வழிநடத்தக்கூடிய யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் எளிதில் உண்டாகும்.

மீனம் உபய லக்னம் என்பதால், 7, 11-க்கு அதிபதி யான புதன், சனி மாரகாதிபதிகள் ஆகும். இதனால் புதன், சனி தசாபுக்திக் காலங்களில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001

bala100120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe