சென்ற இதழ்வரை விருச்சிக லக்னம் 8-ஆம் பாவம்வரை பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காணலாம்.

9-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் வீட்டைக்கொண்டு தந்தை, செல்வம், செல்வாக்கு, வசதிவாய்ப்புகளைப் பற்றித் தெளிவாக அறியலாம்.

விருச்சிக லக்னத்திற்கு 9-ஆம் வீடு பாதக ஸ்தானமாகும். விருச்சிக லக்னம் ஸ்திர லக்னம் என்பதால், 9-ஆம் பாவரீதியாக அனுகூலமான பலன்கள் எளிதில் அமைவதில்லை.

Advertisment

விருச்சிக லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி சந்திரன்- குரு, சூரியன், செவ்வாய் போன்ற நட்புகிரகச் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும், சூரியன் கேந்திர, திரிகோணங் களில் அமையப்பெற்று பாவ கிரகச் சேர்க்கையின்றி இருந் தாலும் தந்தைக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் உண்டாகும். சூரியன் தந்தைக்காரகன் என்ப தால், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெறுவதும், சனி வீட்டில் சூரியன் அமைவதும், சூரியன் வீடான சிம்மத்தில் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமை வதும் தந்தைக்கு நல்லதல்ல.

9-ஆம் வீடான கடகத்தில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமைவதும், 9-ஆம் அதிபதி சந்திரன்- சனி, ராகு சேர்க்கை பெறுவதும், 9-ஆம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமை வதும், சந்திரனுக்கு இருபுறமும் பாவிகள் அமைவதும் தந்தைக்கு நல்லதல்ல.

சூரியன் தனக்கு நட்பு கிரக மான குரு, செவ்வாய் சேர்க்கை பெற்றிருப்பதும், குரு, செவ் வாய் வீடுகளில் சூரியன் அமை யப்பெற்று பாவிகள் சேர்க்கை யின்றி இருப்பதும் தந் தைக்கு நீண்ட ஆயுளும், தந்தை வழியில் பொருளாதார ரீதியான அனுகூலங்களும் உண்டாக்கும்.

Advertisment

9-ல் பாவிகள் அமையப் பெற்று அதன் தசாபுக்தி நடை பெறுகிறபோது தந்தைக்கு கண்டம் உண்டாகும். சந்திரன்- குரு போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்று 5, 9-ல் அமையப் பெற்றால், தந்தைவழியில் பொருளாதாரரீதியான ஏற்றங்கள் உண்டாகும்.

சூரியனுக்கு 9-ல் பாவிகள் அமைவதும் தந்தைக்கு நல்லதல்ல. சூரியன், சந்திரன் பலமிழந்து, 9-ல் சனி, ராகு அமையப்பெற்றால், இளம்வயதில் தந்தையை இழக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சந்திரன், குரு இணைந்து சுபர்சேர்க்கை யுடன் பலம்பெற்று, 5, 9-ல் பாவிகள் இல்லாமலிருந்தால், தந்தைவழியில் பூர்வீக சொத்துரீதியான எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். சூரியன், சந்திரன்- குரு சேர்க்கை பெற்று பலமாக இருந்தால், தந்தைவழியில் சொத்துகள் சேரும்.

விருச்சிக லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி சந்திரன் என்பதால், பிறந்த ஊரைவிட வெளியூர்மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சந்திரன் பயணங்களுக்கு அதிபதி மட்டுமல்லாமல் 9-ஆம் வீட்டிற்கும் அதிபதி என்பதால், அதிகமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்று அமையப்பெற்றால், வெளியூர், வெளிநாடுமூலமாக எதிர்பாராத யோகங்கள், வெளிநாடு செல்லக்கூடிய அமைப்பு உண்டாகும். சந்திரன், ராகு சேர்க்கை பெற்றாலும், 9-ல் ராகு அமையப்பெற்றாலும் தந்தைக்கு கெடுதி என்றாலும், வெளியூர், வெளிநாடுமூலமாக எதிர்பாராத யோகங்களை அடையக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

10-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத் தைக்கொண்டு தொழில், உத்தியோகத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம்.

விருச்சிக லக்னத்திற்கு சூரியன் 10-ஆம் அதிபதியாகும். சூரியன் ஒருவீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகமாகும். சூரியனை ஜீவன ஸ்தானாதிபதியாகப் பெற்ற பெருமை விருச்சிக லக்னத்திற்கு மட்டுமே உண்டு.

சூரியன் ஆட்சி, உச்சம் பெற்று, லக்னாதிபதி செவ்வாயின் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்றிருந்தாலும், தனக்கு நட்பு கிரகங்களான செவ்வாய், சந்திரன், குரு போன்றவற்றின் வீடுகளில் அமைந்திருந்தாலும், சமுதாயத்தில் கௌரவமான பதவிகளை வகிக்கக்கூடிய யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில் அதிகாரம்மிக்க பதவிகளை வகிக்கக்கூடிய வாய்ப்பு சிறப்பாக அமையும். சூரியன் குரு, செவ்வாய் சேர்க்கையுடன் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் பலம்பெற்று அமைந் திருந்தாலும் நற்பலன்களை அடையமுடியும்.

10-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் இணைந்திருந்தாலும், சூரியன், சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகச் சேர்க்கை 9, 10, 12-ஆம் வீடுகளில் அமையப்பெற்றிருந்தாலும் கடல்கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு, சூரியன், சுக்கிரன் சேர்க்கை பெற்று 10-ல் அமைந்து, குரு பார்வை பெற்றால் கூட்டுத்தொழில்மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு, சுக்கிரன் 10-ல் அமையப்பெற்றால் ஆடை, ஆபரணம், கலைத்துறை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

சூரியன், புதன் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்று 10-ல் அமையப்பெற்றால், கணக்கு, வழக்கு தொடர்புடைய தொழில், வணிகத்தொழிலில் ஏற்றம் ஏற்படும். சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று பலம்பெற்றால், நிர்வாகத் தொடர்புடைய தொழில், அதிகாரப் பதவி, பூமி, மனை, ரியல்எஸ்டேட், மருந்து போன்ற துறைகளில் ஏற்றம் உண்டாகும்.

சூரியன், செவ்வாய் பலமாக சேர்க்கை பெறுவதுடன், சனி ஆட்சி, உச்சம் பெற்றிருந் தால், மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவி தேடிவரும். சூரியன்- சந்திரன், செவ்வாய், கேது போன்ற கிரகச் சேர்க்கை பெற்றிருந்தால், மருத்துவத்துறையில் பல சாதனைகள் செய்யக்கூடிய அமைப்பு ஏற்படும்.

குரு, புதன் இணைந்து 10-ஆம் வீட்டில் அமைந்தால், வாக்கால்- பேச்சால் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். 10-ஆம் வீட்டில் சந்திரன், ராகு அல்லது சந்திரன், கேது சேர்க்கை பெற்றிருந்தால், மருந்து, இரசாயனம் போன்ற துறைகளில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிக லக்னத்திற்கு ஜீவனாதி பதியாகிய சூரியன் கேந்திர, திரிகோணங் களில் அமைந்து சுபர் பார்வையுடன் இருந்தால், சமுதாயத்தில் கௌரவமான நிலை, கைநிறைய சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

1222

10-ஆம் அதிபதி சூரியன் தனக்கு பகை கிரகங்களான சனி, ராகு சேர்க்கை பெற்றால், சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்யும் அமைப்பு, சுபர் பார்வையின்றி இருந்தால் சட்டத்திற்கு விரோதமான வகையில் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி, ராகு சேர்க்கையுடன் சூரியன் 8, 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமைந்தாலும், நிலையான வருமானமில்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

11-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 11-ஆம் வீட்டைக் கொண்டு லாபம், மூத்த உடன்பிறப்பு, நட்பு போன்றவற்றைப் பற்றி அறியலாம்.

விருச்சிக லக்னத்திற்கு லாப ஸ்தானமான 11-ஆம் அதிபதி புதன் கேந்திர, திரிகோணங்களில் பலம்பெற்று சுபர் பார்வை, சுபர் சேர்க்கை பெற்றால், தாராளமான தனலாபம் உண்டாகும். புதன்- சுக்கிரன், சனி, ராகு போன்ற நட்புகிரகச் சேர்க்கை பெற்றால், தாராளமான தனவரவு ஏற்படுவது மட்டுமின்றி திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும்.

புதன் பலமிழந்திருந்தால், அதிக லாபங்களை எதிர்பார்க்க முடியாது. சனியின் வீடான கும்பத்திலும், சுக்கிரனின் வீடான ரிஷபத்திலும் புதன் அமையப்பெற்று சுபர் பார்வை பெற்றால், செல்வம், செல்வாக்கு சேர்ந்தபடி இருக்கும். விருச்சிகம், தனுசு, சிம்மத்தில் அமையப் பெற்றாலும் பொருளாதாரரீதியான அனுகூலங்கள் இருக்கும்.

புதன்- சூரியன், குரு சேர்க்கை பெற்று வலுவாக அமையப்பெற்றால், ஜீவனத்திலும், பொருளாதாரரீதியாக சொந்த முயற்சியிலும், தந்தை மற்றும் பூர்வீகவழியிலும் தனலாபங்களை அடையமுடியும்.

11-ஆம் வீடு மூத்த சகோதர, சகோதரி ஸ்தானமாகும். 11-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், குரு போன்ற ஆண் கிரகங்கள் பலமாக அமையப்பெற்றால், மூத்த சகோதரர்மூலம் நல்ல தனலாபமும், பல்வேறுவகையிலும் அனுகூலங்களும் உண்டாகும்.

11-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் அமையப் பெற்றால், மூத்த சகோதரி யோகமும், கிரக நிலைக்கேற்ப அவர்கள்மூலம் ஏற்றத் தாழ்வுகளும் உண்டாகும். சுக்கிரன் 11-ல் நீசம் என்பதால், பலமான நீசபங்க ராஜயோகம் இருந்தால் மட்டுமே நற்பலன் ஏற்படும். சனி, ராகு போன்ற பாவிகள் 11-ஆம் வீட்டில் அமையப்பெற்றாலும், 11-ஆம் வீட்டை பாவிகள் பார்த்தாலும் உடன்பிறப்பு வகையில் பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டாகும்.

12-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 12-ஆம் வீட்டைக் கொண்டு விரயங்கள் பற்றியும், கட்டில் சுகம், தூக்கம், மோட்சம் போன்றவற்றைப் பற்றியும் தெளிவாக அறியலாம்.

விருச்சிக லக்னத்திற்கு 12-ஆம் அதிபதி சுக்கிரன் சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வை யுடன் பலமிழக்காமல் இருந்தால், சுபவிரயங் களாக இருக்கும். சுக்கிரன் பலமிழந்து சனி, ராகு, செவ்வாய் போன்ற பாவிகளுடன் சேர்க்கை பெற்றால், வீண்விரயங்கள் ஏற்படுவது மட்டு மின்றி, ஆணாக இருந்து சுக்கிரன் பலமிழந்திருந் தால், தவறான பெண் சேர்க்கை, மது போன்ற பழக்கங்களாலும் விரயங்கள் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெறுவது சிறப்பல்ல.

சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந் தாலும், பாவிகளுக்கிடையே இருந்தாலும் விரயங்கள் அதிகமாகும். சுக்கிரனுக்கு 12-ஆம் அதிபதி பலமிழந்திருந்தால், வீண்செலவுகளும், கடன்களும் உண்டாகும். சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்று, பாவிகள் பார்வை பெற்றிருந் தால், எவ்வளவு பணம் வந்தாலும் செலவா கிவிடும். சுக்கிரன் நட்பு கிரகமான சனி, புதன் சேர்க்கை பெற்றிருந்தாலும், 3, 8-ல் அமையப் பெற்றிருந்தாலும் வீண்விரயமின்றி எதிர்பா ராத லாபங்களை அடையமுடியும்.

12-ஆம் வீட்டதிபதி சுக்கிரன்- சனி, சந்திரன், ராகு போன்ற கிரகச்சேர்க்கை பெற்று பலமாக அமையப்பெற்றாலும், 12-ஆம் வீட்டில் சனி, சந்திரன், ராகு போன்ற கிரகங்கள் அமையப்பெற்று அதன் தசை நடைபெற் றாலும், கடல்கடந்து அந்நிய நாடு செல்லக் கூடிய யோகம் உண்டாகும்.

12-ஆம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால், தூக்கம் பாதிக்கப்படுவதோடு கட்டில் சுகமும் பாதிக்கும்.

(அடுத்த இதழில் தனுசு லக்னம்)

செல்: 72001 63001