12 லக்னப் பலன்கள்! - முனைவர் முருகு பாலமுருகன் 37

/idhalgal/balajothidam/12-lucknow-benefits-dr-muruku-balaamurugan-37

சென்ற இதழ்வரை விருச்சிக லக்னம் 4-ஆம் பாவம்வரை பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காணலாம்.

5-ஆம் பாவம்

ஐந்தாம் பாவத்தைக்கொண்டு புத்திர பாக்கியம், பூர்வீகம், உயர்கல்வி போன்றவற்றைத் தெளிவாகக் கூறலாம்.

விருச்சிக லக்னத்திற்கு புத்திர காரகன் குருவே 5-ஆம் அதிபதியா கிறார். குரு கேந்திர, திரிகோணங்களில் ஆட்சி, உச்சம் பெற்று அமையப்பெற்றாலும், நட்பு கிரகமான சூரியன், சந்திரன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், இவற்றின் வீடுகளில் குரு அமையப் பெற்றாலும், புத்திரவழியில் எல்லா வகையிலும் ஏற்றங்களும், நற்பலன்களும் உண்டாகும்.

குரு, ஆண் கிரகம் என வர்ணிக்கப்படும் சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், 5-ல் சூரியன், செவ்வாய், குரு அமையப் பெற்றாலும் ஆண் குழந்தை யோகம் உண்டாகும். 5-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் அமையப் பெற்றாலும், குரு- சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும், சந்திரன், சுக்கிரன் வீட்டில் அமையப் பெற்றாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும். பொதுவாக 5-ல் ஆண், பெண் கிரகங்கள் இணைந்து அமையப் பெற்றால் ஆண், பெண் குழந்தை யோகம் உண்டாகும்.

5-ஆம் வீட்டில் சனி, புதன், ராகு, கேது அமைவது புத்திர தோஷமாகும். குருவின் வீடான தனுசில் சனி, புதன், ராகு, கேது அமையப்பெற்றால் புத்திர தோஷமும், புத்திரவழியில் அனுகூலமற்ற பலன்களும் உண்டாகும். தனுசு, மீனத்தில் பாவகிரகங்கள் அமைவது, குரு பாவகிரகச் சேர்க்கை பெறுவது, வக்ரம் பெறுவது, இரு பாவிகளுக்கிடையே அமைவது புத்திரவழியில் தோஷத்தை உண்டாக்கும். குருவுக்கு 5-ஆம் அதிபதி பாவிகள் சேர்க்கை பெறுவதும், 5-ல் பாவிகள் இருப்பதும் புத்திர தோஷத்தை உண்டாக்கும். 5-ஆம் வீட்டை சனி, செவ்வாய் பார்ப்பதும், குருவை சனி, செவ்வாய் பார்ப் பதும், 5-ஆம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் இருப்பதும் புத்திர தோஷமாகும். ஜென்ம லக்னத்திற்கு 5-ல் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சந்திரனுக்கு 5-ஆம் இடமும் பலமிழக்காமல் இருப்பது உத்தமம். சந்திரனுக்கு 5-ல் ராகு, சனி, புதன் போன்றவை அமையப்பெற்றால் புத்திர தோஷம் உண்டாகும்.

5-ஆம் பாவத்தைக்கொண்டு பூர்வ புண்ணியத்தைப் பற்றி மிகத்தெளிவாக அறியலாம். 5-ல் குரு, சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள் அமையப்பெற் றாலும், குரு கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்று சூரியன், செவ்வாய் போன்ற நட்பு கிரகச் ச

சென்ற இதழ்வரை விருச்சிக லக்னம் 4-ஆம் பாவம்வரை பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காணலாம்.

5-ஆம் பாவம்

ஐந்தாம் பாவத்தைக்கொண்டு புத்திர பாக்கியம், பூர்வீகம், உயர்கல்வி போன்றவற்றைத் தெளிவாகக் கூறலாம்.

விருச்சிக லக்னத்திற்கு புத்திர காரகன் குருவே 5-ஆம் அதிபதியா கிறார். குரு கேந்திர, திரிகோணங்களில் ஆட்சி, உச்சம் பெற்று அமையப்பெற்றாலும், நட்பு கிரகமான சூரியன், சந்திரன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், இவற்றின் வீடுகளில் குரு அமையப் பெற்றாலும், புத்திரவழியில் எல்லா வகையிலும் ஏற்றங்களும், நற்பலன்களும் உண்டாகும்.

குரு, ஆண் கிரகம் என வர்ணிக்கப்படும் சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், 5-ல் சூரியன், செவ்வாய், குரு அமையப் பெற்றாலும் ஆண் குழந்தை யோகம் உண்டாகும். 5-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் அமையப் பெற்றாலும், குரு- சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும், சந்திரன், சுக்கிரன் வீட்டில் அமையப் பெற்றாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும். பொதுவாக 5-ல் ஆண், பெண் கிரகங்கள் இணைந்து அமையப் பெற்றால் ஆண், பெண் குழந்தை யோகம் உண்டாகும்.

5-ஆம் வீட்டில் சனி, புதன், ராகு, கேது அமைவது புத்திர தோஷமாகும். குருவின் வீடான தனுசில் சனி, புதன், ராகு, கேது அமையப்பெற்றால் புத்திர தோஷமும், புத்திரவழியில் அனுகூலமற்ற பலன்களும் உண்டாகும். தனுசு, மீனத்தில் பாவகிரகங்கள் அமைவது, குரு பாவகிரகச் சேர்க்கை பெறுவது, வக்ரம் பெறுவது, இரு பாவிகளுக்கிடையே அமைவது புத்திரவழியில் தோஷத்தை உண்டாக்கும். குருவுக்கு 5-ஆம் அதிபதி பாவிகள் சேர்க்கை பெறுவதும், 5-ல் பாவிகள் இருப்பதும் புத்திர தோஷத்தை உண்டாக்கும். 5-ஆம் வீட்டை சனி, செவ்வாய் பார்ப்பதும், குருவை சனி, செவ்வாய் பார்ப் பதும், 5-ஆம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் இருப்பதும் புத்திர தோஷமாகும். ஜென்ம லக்னத்திற்கு 5-ல் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சந்திரனுக்கு 5-ஆம் இடமும் பலமிழக்காமல் இருப்பது உத்தமம். சந்திரனுக்கு 5-ல் ராகு, சனி, புதன் போன்றவை அமையப்பெற்றால் புத்திர தோஷம் உண்டாகும்.

5-ஆம் பாவத்தைக்கொண்டு பூர்வ புண்ணியத்தைப் பற்றி மிகத்தெளிவாக அறியலாம். 5-ல் குரு, சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள் அமையப்பெற் றாலும், குரு கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்று சூரியன், செவ்வாய் போன்ற நட்பு கிரகச் சேர்க்கை பெற்றிருந் தாலும் பூர்வீகவழியில் அனுகூலங்கள் உண்டாகும். குரு நீசம் பெற்றோ, பகை பெற்றோ இருந்தாலும், 5-ல் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் பூர்வீகவழியில் அனுகூலங்கள் இருக்காது. 5-ஆம் வீட்டில் சுபர் அமையப் பெற்றாலும், குரு பலமாக அமையப் பெற்றாலும், 5-ல் பாவிகள் இல்லாமலிருந் தாலும் உயர்கல்வி, மேற்படிப்பு யோகம் உண்டாகும்.

6-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் பாவத்தைக் கொண்டு எதிர்ப்பு, ருணம், ரோகம், கடன் பற்றித் தெளிவாகக் கூறமுடியும்.

6-ஆம் வீடு உபஜெய ஸ்தானம் என்பதால், விருச்சிக லக்னத்திற்கு 6-ல் செவ்வாய், சூரியன், ராகு அமையப்பெற்று சுபகிரகப் பார்வை பெற்றிருந்தால், எதிரிகளை எளிதில் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

6-ல் பாவிகள் அமையப் பெற்றால், எதிரிகளின் செயல்பாட்டால் ஏற்றம் உண்டாகும்.

6-ஆம் வீட்டை சனி, செவ்வாய் பார்த்தால் பல்வேறு எதிர்ப்புகள் உண்டாகும். 6-ஆம் அதிபதி செவ்வாய் என்பதால் சகோதரவழியில் எதிர்ப்புகள் உண்டாகும். 6-ஆம் அதிபதி பலமிழந்து கிரகச் சேர்க்கையுடன் அமையப்பெற்றால், அக்கிரகத்தின் இயல்புக்கேற்ப எதிர்ப்புகள் உண்டாகும்.

6-ஆம் அதிபதி செவ்வாய் சுபகிரகச் சேர்க்கை பெற்று ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால், சிறப்பான உடலமைப்பு, நல்ல ஆரோக்கியம் உண்டாகும். 6-ஆம் அதிபதி பலம்பெறுவது ஆரோக்கியரீ தியான அனுகூலத்தை உண்டாக்கும்.

6-ஆம் வீட்டில் பாவிகள் அமையப் பெறுவதும், 6-ஆம் அதிபதி பாவகிரகச் சேர்க்கை பெற்று, பலமிழந்து 6, 8, 12-ல் அமையப்பெறுவதும் ஆரோக்கிய பாதிப் புகளை ஏற்படுத்தும். 6-ல் சூரியன் அமையப்பெற்றாலும், செவ்வாய், சூரியன் சேர்க்கை பெற்று பலமிழந்தாலும், உஷ்ண நோய்கள், கண்களில் பாதிப்பு, பித்தம், தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். 6-ல் சந்திரன் வலுவிழந் திருந்தாலும், சந்திரன், செவ்வாய் சேர்க்கை பெற்று 8, 12-ல் இருந்தாலும் நீர்த்தொடர் புள்ள பாதிப்புகள், வாத நோய்கள் உண்டாகும். செவ்வாய் பாவிகள் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் அமையப்பெற்றால் ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்.

6-ல் புதன் அமையப்பெற்றால் காச நோய், ஞாபக சக்தி குறையும் அமைப்பு, நரம்புத் தளர்ச்சி, கால், கை வலிப்பு நோய் உண்டாகும். சுக்கிரன் வலுவிழந்தால் ரகசிய நோய், வாத நோய், சர்க்கரை வியாதி, கண்களில் பாதிப்பு உண்டாகும். சனி 6-ல் நீசம் பெற்றாலும், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் வாதம், பித்தம், எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் உண்டாகும். செவ்வாய், குரு சேர்க்கை பெற்றால் வயிற்றுக் கோளாறு ஏற்படும். ராகு, செவ்வாய் சேர்க்கை பெற்று வலுவிழந்து அமையப்பெற்றால், அலர்ஜி, அஜீரணக் கோளாறு, உண்ணும் உணவு விஷமாகும் அமைப்பு ஏற்படும். செவ்வாய், கேது சேர்க்கை பெற்றால் ரத்தம் சம்பந்தப் பட்ட நோய், சித்த பிரம்மை உண்டாகும்.

6-ஆம் வீடு கடன்களைப் பற்றிக் கூறும் பாவமாகும். 6-ஆம் அதிபதி செவ்வாய், நட்பு கிரகமான சூரியன், சந்திரன், குரு போன்றவர்கள் சேர்க்கை பெற்று பலமாகக் காணப்பட்டால், கடன்களை அடைக்கக்கூடிய வலிமை, வல்லமை உண்டாகும். 6-ல் சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் அமையப்பெற்று, பாவகிரகங்கள் 6-ஆம் வீட்டைப் பார்வை செய்தால் தீராத கடன்கள் உண்டாகும். 6-ஆம் வீட்டில் அமையும் கிரகங்கள், 6-ஆம் அதிபதி சேர்க்கை பெறும் கிரகங்கள் பலமிழந்து அமையப்பெற்று, அந்த கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் காலங்களில் நோய், கடன் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

mmm

7-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டைக்கொண்டு ஒருவருக்கு அமையும் மணவாழ்க்கை, கூட்டுத்தொழில் போன்றவற்றைத் தெளிவாக அறியலாம்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, 7-ஆம் அதிபதி சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் குரு போன்ற சுபகிரகப் பார்வையுடன், கிரகச் சேர்க்கையின்றி இருந்தால் மணவாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்கும். களத்திரகாரகன் சுக்கிரனே விருச்சிக லக்னத்திற்கு 7-ஆம் அதிபதியாக வருவதால், சுக்கிரன் பலத்துடன் அமைந்தால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சுக்கிரன், சுபகிரகம் என வர்ணிக்கப் படக்கூடிய குரு, புதன் சேர்க்கை பெறுவதும், தனக்கு நட்பு கிரகமான சனி, புதன் வீட்டில் அமைவதும் மணவாழ்வில் மேன்மையை ஏற்படுத்தும். 7-ஆம் வீட்டில் கிரகங்கள் எதுவுமின்றி, சுக்கிரனும் கிரகச் சேர்க்கையின்றி பலமாக இருந்தால், மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை அமையும். கிரகங்கள் அமைகிற நட்சத்திரங்களும் மிகவும் முக்கியமாகும். சுக்கிரன், பாவ கிரகங்களான ராகு, கேது சாரம் பெறா மலிருப்பது மிகவும் நல்லது. சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் பலம்பெற்று அமையப்பெற்றால், நல்ல அழகான மனைவியும், மனைவிமூலமாக பொருளா தாரரீதியான அனுகூலங்களும் உண்டாகும்.

சுக்கிரன்- சனி, செவ்வாய், சூரியன், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றால், களத்திரதோஷம், தாரதோஷம் உண்டாகும். குரு போன்ற சுபகிரகப் பார்வை சுக்கிரனுக்கு இருந்தால், மணவாழ்வில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இருக்காது. சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும், வக்ரம் பெற்றாலும், சூரியனுக்கு மிக அருகில் அமையப்பெற்று அஸ்தங்கம் பெற்றாலும், கேது சாரம் பெற்றாலும், கடுமையான களத்திர தோஷம் உண்டாகி மணவாழ்க்கை அமைவதே கேள்விக்குறியாகிவிடும். 7-ஆம் வீட்டில் பாதகாதிபதி சந்திரன் அமைவது மணவாழ்வில் கடுமையான தோஷத்தை உண்டாக்கும். 7-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்று, அக்கிரகங்களின் தசை, புக்தி நடைபெறும் காலங்களில் திருமண வாழ்வில் நிம்மதிக்குறைவு உண்டாகும்.

சுக்கிரன்- குரு, சூரியன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்றிருந்தால், நல்ல வசதி படைத்த வரன் அமையும். சுக்கிரன்- சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றியிருந்தால், பல பெண் தொடர்பு உண்டாகும். 7-ல் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் இணைந்து ஒரு பெண் ஜாதகத்தில் இருந்தால், கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

சுக்கிரன்- அசுரகுரு. குரு- தேவகுரு. குரு, சுக்கிரன் சேர்க்கை பெறுவது சிறப் பல்ல. விருச்சிக லக்னத்திற்கு குரு, சுக்கிரன் இணைந்து 6, 8, 12-ல் மறைந்திருந்து, அசுபர் சாரம் பெற்று அமையப்பெற்றால் பெண் தொடர்பு ஏற்படும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெறுவதும், பாவிகளுக்கிடையே அமைவதும் மணவாழ்வில் சோதனையை உண்டாக்கும். 7-ஆம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமையப்பெற்றாலும் மணவாழ்க்கை சிறப்பாக இருக்காது.v 7-ஆம் வீட்டைக்கொண்டு கூட்டுத் தொழிலைப் பற்றி அறியலாம். விருச் சிக லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன், குரு போன்ற சுபகிரகப் பார்வை மற்றும் சேர்க்கையுடன் சூரியன் சேர்க்கை பெற்றிருந்தாலும், 10-ஆம் வீட்டில் அமையப் பெற்றாலும் கூட்டுத்தொழில்மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சுக்கிரன் பலம் பெற்றிருந்தால், மனைவிமூலமும், நெருங்கியவர்கள்மூலமும் எல்லா வகையிலும் ஏற்றங்கள் உண்டாகும்.

8-ஆம் பாவம்

8-ஆம் பாவத்தைக்கொண்டு ஆயுள், ஆரோக்கியம், எதிர்பாராத தனவரவுகள், திருமணத்தின்மூலம் உண்டாகக்கூடிய உறவுகள் பற்றி அறியலாம்.

விருச்சிக லக்னத்திற்கு 8-ஆம் அதிபதி புதன் சுபர் சேர்க்கையுடன் கேந்திர, திரிகோண ஸ்தானத்தில் அமையப்பெற் றாலும், ஆயுள்காரகன் சனி ஆட்சி, உச்சம் பெற்றாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். சனி தனக்கு நட்பு கிரகங்களின் வீடான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனது வீடான மகரம், கும்பத்தில் அமைகிறபோது சிறப் பான ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் உண்டாகும். புதன், சுக்கிரன், சனி போன்றவர்கள் சேர்க்கை பெற்றிருப்பதும், குரு பார்வை மற்றும் சேர்க்கை பெற்றிருப்பதும் நீண்ட ஆயுளை உண்டாக்கும்.

புதன் பாவிகள் சேர்க்கை பெறாமலிருந்து, 8-ஆம் வீட்டில் செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற பாவிகள் அமையாமல் இருந்தால், நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் உண்டாகும். புதன் பாவகிரகச் சேர்க்கை பெற்றிருந்தாலும், 8-ஆம் வீட்டில் பாவிகள் அமையப்பெற்றிருந்தாலும் கிரகங்களின் இயல்பிற்கேற்ப உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும். 8-ல் பாவிகள் இல்லாமலிருப்பது,

8-ஆம் வீட்டை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்வது நற்பலனை உண்டாக்கும்.

8-ஆம் வீட்டில் சூரியன் பாவகிரகச் சேர்க்கை பெற்றிருந்தால், இதய நோய், உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். புதன் 8-ஆம் அதிபதி என்பதால், புதன் பாவிகள் சேர்க்கை பெற்று பலமிழந்தால், நரம்புத் தளர்ச்சி, உடல் பலவீனம், கால், கை வலிப்பு போன்ற நரம்புத் தொடர்புடைய நோய்கள் உண்டாகும். சந்திரன் 8-ல் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தால், நீர்த்தொடர்புள்ள உடல்நிலை பாதிப்பு உண்டாகும்.

செவ்வாய் 8-ல் பாவிகள் சேர்க்கை பெற்றால், விபத்தால் உடலுறுப்புகள் இழப்பு, வெட்டுக் காயம், ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். 8-ல் செவ்வாய்- சனி, செவ்வாய்- ராகு சேர்க்கை பெற்றால் எதிர்பாராத விபத்துகள் ஏற்படும். குரு 8-ல் பலமிழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால், வாயு சம்பந்தபட்ட பாதிப்புகள், வயிற்றுக் கோளாறு உண்டாகும். சுக்கிரன் 8-ல் பலமிழந்தால் ரகசிய நோய்கள் உண்டாகும். சனி 8-ல் அமையப்பெற்றால்- புதனின் வீடு என்பதால் நீண்ட ஆயுள் உண்டாகும். ராகு, கேது 8-ல் அமையப்பெற்றால், அஜீரணக் கோளாறு, எதிர்பாராத உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும். ராகு- சூரியன், செவ்வாய் போன்ற கிரகச் சேர்க்கை பெற்றால், தவறான சேர்க்கை, விஷத்தால் கண்டம் உண்டாகும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001

bala170919
இதையும் படியுங்கள்
Subscribe