12 லக்னப் பலன்கள்! - முனைவர் முருகு பாலமுருகன் 33

/idhalgal/balajothidam/12-lucknow-benefits-dr-muruku-balaamurugan-33

துலாம் வரையிலான 1 முதல் 12 பாவங்களை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி விருச்சிக லக்னப் பலன்களைக் காணலாம்.

விருச்சிக லக்னம்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் நியாய, அநியாயங்களைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

குறும்புத்தனமும், விஷமத்தனமும் அதிகமிருக்கும். தனக்குப் பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக்கொண்டே இருப் பார்கள். பார்ப்பதற்கு அப்பாவிபோல இருந் தாலும் விளையாட்டுப்போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர் என்பதால் இவர்களை மாற்றுவது அரிதாகும். பிறருக்கு எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னு டைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். துப்பறியும் தொழி லைத் திறமையாகச் செய்வார்கள். இவர் களிடம் எளிதில்பேசி வெற்றிபெற்றுவிட முடியாது. முன்கோபமும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாகவும் இருப்பதால், இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பது நல்லது.

12lagnam

முன்பின் யோசிக்காமல் த

முன்பின் யோசிக்காமல் தூக்கியெறிந்து பேசிவிடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும், அதில் உண்மை யிருக்கும் என்பதை மறுக்கமுடியாது. எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல் வியை சந்தித்தாலும், முயற்சிகளில் விட்டுக் கொடுக்காமல் வெற்றிபெறுவார்கள். மற்றவர்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும்வகையில் முன்னேறுவார்கள்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் அன்பு காட்டுவார்கள். கருணை உள்ளம் கொண்டவர்கள். எடுத்த காரியத்தில் பிடிவாதத்துடன் செயல்பட்டு சாதிக்கும் செயல்திறன் கொண்டிருப்பார்கள். தாய்ப்பாசம் மிக்கவர்கள். இயற்கையிலேயே சிறப்பான நிர்வாகத்திறமை அமைந்திருக்கும். கம்பீர மான உடலமைப்பும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் வலிமையும் இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் ரத்த சம்பந்தப் பட்ட பாதிப்புகள் உண்டாகும். நான்கு வயதில் உடல்பாதிப்பால் கண்டமும், ஐந்து வயதில் கால்களில் பாதிப்பும், பத்து வயதில் ஜுரத் தால் பாதிப்பும், 12 மற்றும் 18-ஆவது வயதில் நெருப்பால் கண்டமும், 40-ஆவது வயதில் ஜுரம் மற்றும் ஜன்னியால் கண்டமும் உண்டாகும். ஜென்ம லக்னத்தை சுபகிரகங்கள் பார்வை செய்தால் 80 வயதுவரை தீர்க்கமான ஆயுள் உண்டாகும்.

1-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்தைக்கொண்டு ஒருவரது உடலமைப்பு, தோற்றம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைத் தெளிவாகக் கூறலாம்.

செவ்வாய் பலம்பெற்று அமையப்பெற்றால் நல்ல உடலமைப்பு, சிறப்பான தேக ஆரோக் கியம், ஒழுக்கம், பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்.

லக்னாதிபதி செவ்வாய் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமைவதும், ஆட்சி, உச்சம் பெற்று சஞ்சரிப்பதும், தனக்கு நட்பு கிரகமான சூரியன், சந்திரன், குரு சேர்க்கை பெற்றிருப் பதும் நற்பலனை உண்டாக்கும். விருச்சிக லக்னத்திற்கு 2, 5-க்கு அதிபதியான குரு மிகச் சிறந்த யோகக்காரகர். அதுபோல 10-ஆம் அதிபதி சூரியனும் ஏற்றமிகு பலன்களை உண்டாக்கும். 9-ஆம் அதிபதி சந்திரன் பாதகாதிபதி என்றாலும் அனுகூலமான பலனையே உண்டாக்கும். சுக்கிரன் 7, 12-க்கு அதிபதி என்பதால், சில நேரங்களில் நற்பலனை உண்டாக்கினாலும் சங்கடங்களையும் ஏற்படுத்தும். லக்னாதிபதி செவ்வாய்க்கு சனி பகைகிரகம் என்பதால், ஒருபுறம் நற்பலனை உண்டாக்கினாலும் சிலசமயங்களில் சோதனையைத் தரும்.

லக்னாதிபதி செவ்வாய் பலமாக அமைந்து குரு, சந்திரன், சூரியன் போன்ற நட்பு கிரகச் சேர்க்கை பெற்று அமையப்பெற்றால் நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உண்டாகும். அஷ்டமாதிபதி புதன் பலத்துடன் அமையப்பெற்றால் நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்க்கையும் உண்டாகும்.

லக்னாதிபதி செவ்வாய் கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்று, 8-ஆம் அதிபதி புதனும் சுபகிரக வீடுகளில் அமையப் பெற்று, லக்னத்திற்கு நட்பு கிரகமான சந்திரன், சூரியன், குரு பலத்துடன் அமையப்பெற்றிருந் தால் நீண்ட ஆயுள் உண்டாகும். சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, புதன் ஆகிய கிரகங் களுடன் பாவகிரகங்கள் சேர்க்கை பெற்றால் நோய்நொடிகள் ஏற்படும் என்றாலும், பெரிய கெடுதியில்லை. செவ்வாய் பாவகிரகம் என்பதால் உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11-ல் அமையப்பெற்றால் நற்பலனை உண்டாக்கும். லக்னாதிபதி செவ்வாயும், குருவும் பாவிகள் சேர்க்கை பெற்று, புதனும் பலமிழந்திருந்தால் மத்திம ஆயுள் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 2, 12 ஆகிய ஸ்தானங் களில் சூரியன், சனி, ராகு, கேது ஆகிய பாவிகளின் சேர்க்கை, செவ்வாய் அமையப் பெற்றால் இளம்வயதில் கண்டம் உண்டாகும்.

செவ்வாய், புதன், குரு மூவரும் அவர்களுக் குரிய நட்பு கிரகச் சேர்க்கை பெற்று, பலத்துடன் அமையப்பெற்று, பாவகிரக சம்பந்தமில் லாமல் இருந்தால் பூரண ஆயுள் உண்டாகும்.

சூரியன், புதன் சேர்க்கை பெற்று ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பத்தில் அமையப் பெற்று, சுபர் பார்வை பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும். சந்திரன் பலம்பெற்றிருப்பது நல்ல மனவலிமையை உண்டாக்கும். லக்னா திபதி செவ்வாய் குரு வீடாகிய தனுசு, மீனத்தில் இருப்பதும், சூரியன் வீடாகிய சிம்மத்தில் இருப்பதும் நற்பலனை உண்டாக்கும். செவ்வாய் நீசம்பெற்று, பகைபெற்று இரு பாவிகளுக்கிடையே- அதாவது சனி, ராகு போன்ற பாவிகளுக்கிடையே அமைவது கடுமையான சோதனையை உண்டாக்கும்.

விருச்சிகம் ஸ்திர லக்னம் என்பதால், 3, 8-க்கு அதிபதியான சனி, புதன் மாரகாதிபதிகள் ஆகும். இதனால் சனி, புதனின் தசா, புக்திக் காலங்களில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001

bala060919
இதையும் படியுங்கள்
Subscribe