12 லக்னப் பலன்கள்! 47 - முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/12-lucknow-benefits-47-dr-murugu-balaamurugan

கர லக்னம் வரையிலான 1 முதல் 12 பாவங்களைச் சென்ற இதழ்களில் பார்த் தோம். இனி, கும்பல லக்னப் பலன்களைக் காணலாம்.

கும்ப லக்னம்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருப்பார்கள். நியாய- அநியா யங்களை பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத இவர்கள் முரட்டுப் பிடிவாதக்காரர்கள். மனதை ஒரேநிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்கள். தனக்குப் பிடித்தவர்களிடம் நெருங்கிப் பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.

எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும், பிடிக்க வில்லையென்றால் துச்சமாக நினைத்து அவற்றை தூக்கியெறிவார்கள். உண்மை பேசுவதையே குறிக்கோளாகக்கொண்ட இவர்களின் பேச்சிற்கு எந்த இடத்திலும் மதிப்பிருக்கும். pillaiyarதவறு செய்பவர்களை தயவுதாட்சண்யம் பாராமல் கண்டிப் பார்கள். தன்னிடம் பழகுபவர்களைத் துல்லியமாக எடைபோடுவதில் சாமர்த்தியசாலி.

பரந்த நோக்கம் கொண்டவர் என்பதால், தம்மு டைய சொந்தப் பொருட்களையும் பிறருக்குத் தான மளிக்கத் தவறமாட்டார்கள். மற்றவர்களை எளிதில் திருத்தக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள். பிறர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் தேவை யின்றி தலையிடாத நியாயவாதியாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் எளிதில் செய்துமுடிப்பார்கள். மன தைரியம் உள்ளவர்கள். எவ்விதக் கஷ்டங் களையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட வர்கள். உடல் வலிமையுடையவர்கள். உடலமைப்பு சற்று குண்டாக இருக்கும். மாநிறமாக இருப் பார்கள். பல உலக விஷயங்களை அறிந்தவராகவும், அதனைக் கொண்டு சமுதாயத்தில் நல்லதொரு நிலையினை அடைந்தவராகவும் இருப்பார்கள். பிறர் செய்த உதவியை மறக்காத இயல்புடையவர்கள

கர லக்னம் வரையிலான 1 முதல் 12 பாவங்களைச் சென்ற இதழ்களில் பார்த் தோம். இனி, கும்பல லக்னப் பலன்களைக் காணலாம்.

கும்ப லக்னம்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருப்பார்கள். நியாய- அநியா யங்களை பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத இவர்கள் முரட்டுப் பிடிவாதக்காரர்கள். மனதை ஒரேநிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்கள். தனக்குப் பிடித்தவர்களிடம் நெருங்கிப் பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.

எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும், பிடிக்க வில்லையென்றால் துச்சமாக நினைத்து அவற்றை தூக்கியெறிவார்கள். உண்மை பேசுவதையே குறிக்கோளாகக்கொண்ட இவர்களின் பேச்சிற்கு எந்த இடத்திலும் மதிப்பிருக்கும். pillaiyarதவறு செய்பவர்களை தயவுதாட்சண்யம் பாராமல் கண்டிப் பார்கள். தன்னிடம் பழகுபவர்களைத் துல்லியமாக எடைபோடுவதில் சாமர்த்தியசாலி.

பரந்த நோக்கம் கொண்டவர் என்பதால், தம்மு டைய சொந்தப் பொருட்களையும் பிறருக்குத் தான மளிக்கத் தவறமாட்டார்கள். மற்றவர்களை எளிதில் திருத்தக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள். பிறர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் தேவை யின்றி தலையிடாத நியாயவாதியாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் எளிதில் செய்துமுடிப்பார்கள். மன தைரியம் உள்ளவர்கள். எவ்விதக் கஷ்டங் களையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட வர்கள். உடல் வலிமையுடையவர்கள். உடலமைப்பு சற்று குண்டாக இருக்கும். மாநிறமாக இருப் பார்கள். பல உலக விஷயங்களை அறிந்தவராகவும், அதனைக் கொண்டு சமுதாயத்தில் நல்லதொரு நிலையினை அடைந்தவராகவும் இருப்பார்கள். பிறர் செய்த உதவியை மறக்காத இயல்புடையவர்கள். எதிர்பாலினத்தவர்கள்மேல் அதிகப் பிரியமுடைய வராக இருப்பார்கள்.

இவர்களுக்கு வாதம், பித்தம் போன்ற நோய்கள், நீர்த்தொடர்புடைய உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும். 7, 11-ஆம் வயதுகளில் வாகன விபத்து களால் கண்டமும், 19-ஆவது வயதில் மனக்கவலை தரும் சம்பவங்களும் நடக்கும்.

லக்னத்தை சுபர் பார்த்தாலும், சுபர் லக்னத்தில் இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். இவர் களுக்கு நாக்கு, கண் போன்றவற்றிலோ, முகத்திலோ ஏதாவது ஒரு அடையாளக்குறி இருக்கும்.

1-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்தைக்கொண்டு ஒருவரது தோற்றம், உடலமைப்பு, ஆயுள், ஆரோக்கியத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம்.

கும்ப லக்னத்திற்கு அதிபதியான சனி கேந்திர- திரிகோண ஸ்தானத்தில் அமைவதும்; ஆட்சி, உச்சம் பெற்று சஞ்சரிப்பதும்; தனக்கு நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதும் நற்பலனை உண்டாக்கும். சனி பலமாக அமைந்து, நட்பு கிரகச் சேர்க்கையுடன் இருந்தால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ், நீண்ட ஆயுள் உண்டாகும்.

சனியே ஆயுள்காரகன் என்பதால்- சனியும் அஷ்டமா திபதியான புதனும் வலுவுடன் அமைந்தால் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு உண்டாகும்.

சனி, புதன் வலுவாக அமைந்து, சுபர் பார்வை- சுபர் வீடுகளில் அமைந்துவிட்டால் நோயற்ற வாழ்க்கை, நல்ல ஆரோக்கியம் உண்டாகும். சனி இயற்கையிலேயே அசுப கிரகம் என்பதால், உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11-ல் அமைவது நற்பலனை உண்டாக்கும்.

சனி 3-ல் நீசம் பெறுவதால், வலுவான நீசபங்க ராஜயோகம் பெறுவது கெடுதலைக் குறைக்கும். சனி- சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்று வலுவாக அமைந்தாலும்; குரு பார்வை பெற்றாலும் நல்ல உடலமைப்பு, நீண்ட ஆயுள் உண்டாகும். சனி சுபர் பார்வையுடன் இருந்தால் கௌரவமான வாழ்க்கை அமையும்.

சனி- குரு, சந்திரன் ஆகிய சுபகிரகச் சேர்க்கை பலத்துடன் அமைந்து, பாவகிரக சம்பந்தம் இல்லாமலிருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும்.

கும்ப லக்னத்திற்கு சந்திரன் 6-ஆம் அதிபதி என்பதாலும், மனோகாரகன் என்பதாலும் சந்திரன் பலம்பெற்று அமைந்தால் நல்ல உடல மைப்பு, மன வலிமை, நோயற்ற வாழ்க்கை உண்டாகும்.

லக்னாதிபதி சனி, செவ்வாய்- ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தால், கடுமையான சோதனைகளை சந்திப்பது மட்டுமின்றி, தீய பழக்கவழக்கங்கள், விபத்துகளை சந்திக்கும் சூழ்நிலை உண்டாகும். சனி பலமிழந்திருப்பதும், வக்ரம் பெற்றிருப்பதும், பாவிகளுக்கிடையே அமைந்திருப்பதும், ஜென்ம லக்னத்திற்கு இருபுறமும் பாவிகள் அமைவதும் நல்லதல்ல. கும்ப லக்னத்திற்கு சனி லக்னாதிபதி என்பதால், சனி பார்வை கெடுதலை ஏற்படுத்துவதற்கு பதில் நற்பலனை உண்டாக்கும்.

கும்ப லக்னத்திற்கு 4, 9-க்கு அதிபதியான சுக்கிரன் பாதகாதிபதி என்றாலும் ஏற்றம்மிகு பலனை உண்டாக்கும். புதன் பஞ்சமாதிபதி என்பதாலும்; சனிக்கு நட்பு கிரகம் என்ப தாலும் அனுகூலமான பலன்களைத் தரும்.

குரு தன லாபாதிபதி என்பதால், சில நேரங் களில் சிறுசிறு சோதனைகளை தந்தாலும் ஏற்றத் தைத் தரும். சனிக்கு பகை கிரகமான சூரியன் 7-ஆம் அதிபதி என்பதால், மணவாழ்விலும், கூட்டாளிகளாலும் நிம்மதியற்ற பலனை உண்டாக்கும். செவ்வாய் 3, 10-க்கு அதிபதி என்பது மட்டுமின்றி, சனிக்கு பகை கிரகம் என்பதால் பல்வேறு சோதனைகளை ஏற்படுத் தினாலும், சில நேரங்களில் அனுகூலப்பலனைத் தருவார். செவ்வாய் 10-ஆம் வீட்டில் அமைந்தால் உயர்பதவிகளை வகிக்கக்கூடிய யோகத்தை உண்டாக்கும்.

கும்பம் ஸ்திர லக்னம் என்பதால், 3, 8-க்கு அதிபதியான செவ்வாய், புதன் மாரகாதிபதிகள் ஆகும். இதனால் செவ்வாய், புதன் தசாபுக்திக் காலங்களில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

2-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தைக் கொண்டு ஒருவரது பொருளாதாரநிலை, குடும்பம், வாக்கு, பேச்சாற்றல், வலது கண் போன்றவற்றைப் பற்றி அறியலாம்.

கும்ப லக்னத்திற்கு தனகாரகன் குருவே தன ஸ்தானமான 2-ஆம் வீட்டிற்கும் அதிபதியாக விளங்குகிறார். குரு தனித்து அமையாமல் கிரகச் சேர்க்கையுடன் இருந்தால் செல்வம், செல்வாக் குடன் வாழமுடியும். குரு தனக்கு நட்பு கிரகமான சூரியன், சந்திரன், செவ்வாய் போன்றவர்கள் சேர்க்கை பெற்றோ, லக்னாதிபதி சனி சேர்க்கை பெற்றோ, கேந்திர- திரிகோணங்களில் அமைந் தால் சிறப்பான பொருளாதாரநிலை உண்டாகும்.

மேற்கூறிய கிரகச் சேர்க்கை மட்டுமின்றி, குரு ஆட்சி, உச்சம் பெற்றால், வாழ்நாள் முழுவதும் தாராள தனச்சேர்க்கையுடன், பணக்கஷ்ட மின்றி வசதிவாய்ப்புடன் வாழக்கூடிய அமைப் புண்டாகும்.

2-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் அமைந் தாலும்; கும்ப லக்னத்திற்கு யோகாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றாலும்; குருவுக்கு 2-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் அமைந்தாலும் தாராள தனசேர்க்கை உண்டாகும். குரு பலம்பெற்று, சூரியன், புதன் சேர்க்கை பெற்றால் பூர்வீகவழியிலும், தந்தைவழியிலும் பொருளாதாரரீதியான அனுகூலங்கள் உண்டாகும். குரு, சந்திரன் சேர்க்கை பெற்றால் தாய்வழியிலும்; குரு, செவ்வாய் சேர்க்கை பெற்றால் உடன்பிறந்த வர்களாலும் பொருளாதாரரீதியான அனு கூலங்கள் உண்டாகும்.

குரு நீசம் பெற்றோ, அஸ்தங்கம் அடைந்தோ, வக்ரம் பெற்றோ, பாவிகள் சேர்க்கை பெற்றோ, 2-ஆம் வீட்டில் சர்ப்ப கிரகங்களான ராகு- கேது அமையப்பெற்றோ இருந்தால் பொருளாதாரரீதியான சங்கடங்கள் உண்டாகும். சுக்கிரன் கும்ப லக்னத்திற்கு யோக காரகன் என்றாலும், பாதகாதிபதி என்பதால்- குரு, சுக்கிரன் சோக்கைபெற்ôல் பெண்களால் பொருளாதாரரீதியான இழப்புகள் ஏற்படும்.

பெண்களிடம் கொடுக்கல்- வாங்கல் விஷயத் திலும், பண விஷயத்திலும் எச்சரிக்கையாக இருப்பது உத்தமம்.

2-ஆம் வீடு வாக்குஸ்தானம் என்பதால், குரு கல்விகாரகன் புதன் சேர்க்கை பெற்றாலும்; புதன், குரு பலம்பெற்றாலும் சிறப்பான பேச் சாற்றல், வாக்கால்- பேச்சால் முன்னேற்றம் உண்டாகும். 2-ஆம் வீட்டில் குரு, சந்திரன், சுக்கிரன் போன்ற கிரகங்கள் அமைந்தால் நல்ல பேச்சாற்றல், அமைதியான குடும்ப வாழ்க்கை உண்டாகும்.

2-ல் செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமைந்தால் முன்கோபம், எதிலும் அதிகாரத் துடன் பேசக்கூடிய அமைப்புண்டாகும். 2-ஆம் வீட்டில் ராகு அமைந்தால் குடும்பத்தில் வாக்குவாதம் உண்டாகும். 2-ல் சனி, செவ்வாய், ராகு- கேது போன்ற பாவிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் அமைந்து, சுபர் பார்வையின்றி இருந்தால் கடுமையான வார்த்தைகளைப் பேசும் சுபாவமும், பேச்சில் விஷத்தன்மையும் இருக்கும்.

ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீட்டைக் கொண்டு வலது கண்ணைப் பற்றிக் கூறலாம்.

சூரியன், சுக்கிரன் இருவரும் கண்களுக்குக் காரணகர்த்தா. 2-ல் சூரியன் அல்லது சுக்கிரன் அமைந்து, சனி, செவ்வாய், ராகு உடனிருந் தாலும்; 8-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் அமைந்து, 2-ஆம் வீட்டைப் பார்வை செய்தாலும்; குரு நீசம் பெற்று ராகு- கேதுவுடன் அமைந் தாலும்; 6, 12-ல் சூரியன், செவ்வாய், ராகு போன்ற பாவிகள் அமைந்து சுபர் பார்வை யின்றி இருந்தாலும், மேற்கூறிய கிரகங்களின் தசாபுக்தி வருகிற சமயத்தில் கண்களில் பாதிப் புண்டாகும்.

( மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001

bala061219
இதையும் படியுங்கள்
Subscribe