கர லக்னம் 2-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்களைக் காணலாம்.

3-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீட்டைக்கொண்டு சுயமுயற்சி, இளைய சகோதரம், வீரம், விவேகத்தைப் பற்றி அறியலாம்.

mm

Advertisment

மகர லக்னத்திற்கு 3-ஆம் அதிபதியான குரு கேந்திர, திரிகோணங்களில் பலமாக அமையப்பெற்றாலும்; ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும்; சூரியன், செவ்வாய் வீடான மேஷம், சிம்மம், விருச்சிகத்தில் அமையப்பெற்றாலும்; செவ்வாய் பலம்பெற்று 3-ஆம் வீட்டைப் பார்வை செய்தாலும் ஆண் உடன்பிறப்பும், அவர்கள்மூலம் உன்னத உயர்வும் உண்டாகும்.

குரு, பெண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும்; சந்திரன், சுக்கிரன் வீடான ரிஷபம், கடகம், துலாத்தில் அமையப்பெற்றாலும்; ஆண் கிரகங்கள் பலம் பெறாமல் 3-ல் சந்திரன், சுக்கிரன் அமையப் பெற்றாலும்; சந்திரன், சுக்கிரன் 3-ஆம் வீட்டைப் பார்வை செய்தாலும் வலுவான சகோதரி யோகமும், சகோதரிகளால் அனுகூலம் மிகுந்த பலன்களும் உண்டாகும். 3-ஆம் வீட்டில் ராகு, கேது போன்ற பாவிகள் அமையப்பெற்று குரு பலமிழந்தோ, சூரியனுக்கு மிக அருகில் அமைந்திருந்தோ, செவ் வாயும் பலமிழந்திருந்தால் இளைய சகோதர, சகோதரி இல்லாத அமைப்புண்டாகும். குரு பகவானும், சகோதரகாரகன் செவ்வாயும் சுபகிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் உடன்பிறந்தவர்களால் அனுகூலங்கள் ஏற்படும்.

3-ஆம் வீடு முயற்சி ஸ்தானம். 3-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு, சூரியன் போன்ற கிரகங்கள் அமையப்பெற் றால் முயற்சிகளில் அனுகூலங்களும், ஏற்றங்களும் உண்டாகும். 3-ல் பாவிகள் அமையப்பெற்றால் உடன் பிறப்புக்கு தோஷம் என்றாலும், முயற்சியில் வெற்றி, சொந்த முயற்சி யால் பல்வேறு சாதனைகள் செய்யும் அமைப்புண்டாகும். குரு தனித்து அமையாமல் கிரகச் சேர்க்கை யுடன் அமைவது நல்ல அமைப்பாகும்.

Advertisment

3-ஆம் வீடு காதுகளில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிக் குறிப்பிடும் ஸ்தானமாகும். புதன் 3-ஆம் வீட்டில் அமையப்பெற்றால்- புதனுக்கு நீச ஸ்தானம் என்பதால் காதுகளில் பாதிப்புகள் ஏற்படும்.

சுக்கிரனுக்கு 3-ஆம் வீடு உச்ச ஸ்தானமாகும். 3-ல் சுக்கிரன் அமையப் பெற்று உடன் சந்திரன் இருந்தாலும்; 3-ஆம் அதிபதி- குரு, சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தாலும் கலை, இசை போன்றவற்றில் அதிக நாட்டம் உண்டாகும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001