மேஷ லக்னத்தில் பிறந்தவர் களில் 3, 4-ஆம் பாவங்கள் பற்றி கடந்த இதழில் கண்டோம். மற்ற பாவங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
5-ஆம் பாவம் (மேஷ லக்னம்)
5-ஆம் பாவத்தைக் கொண்டு உயர் கல்வி, பூர்வ புண்ணியம், பூர்வீக வழி சொத்துகள், புத்திர பாக்கியம் போன்றவற்றைப் பற்றி அறியலாம்.
5-ஆம் வீட்டதிபதி சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றாலும், நட்பு கிரகமான சந்திரன், குரு, செவ்வாய் சேர்க்கை மற்றும் சாரம் பெற்றாலும் நல்ல அறிவாற்றல், உயர் கல்வியில் மேன்மை, பூர்வ புண்ணிய வழியில் சாதகமான பலன்கள், பெரியோர்களின் ஆசி உண்டாகும். சூரியன், சந்திரன் சேர்க்கைப் பெற்றாலும், பலம் பெற்றாலும் பூர்வீக வழியில் சொத்துகள் கிடைக்கும்.
சூரியன்- சனி, ராகு சேர்க்கைப் பெற்றாலும், சாரம் பெற்றாலும், சூரியன் வீடான சிம்மத்தில் சனி அல்லது ராகு அமையப்பெற்றாலும் பூர்வ புண்ணிய தோஷமும், பூர்வீகவழியில் சாதகமற்ற பலன்களும், தந்தையிடம் கருத்து வேறுபாடும், தந்தைவழி உறவினர்களிடையே ஒற்றுமைக்குறைவும் உண்டாகும்.
சூரியன்- குரு, செவ்வாய் சேர்க்கைப் பெற்றாலும், சாரம் பெற்றாலும் அழகிய ஆ
மேஷ லக்னத்தில் பிறந்தவர் களில் 3, 4-ஆம் பாவங்கள் பற்றி கடந்த இதழில் கண்டோம். மற்ற பாவங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
5-ஆம் பாவம் (மேஷ லக்னம்)
5-ஆம் பாவத்தைக் கொண்டு உயர் கல்வி, பூர்வ புண்ணியம், பூர்வீக வழி சொத்துகள், புத்திர பாக்கியம் போன்றவற்றைப் பற்றி அறியலாம்.
5-ஆம் வீட்டதிபதி சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றாலும், நட்பு கிரகமான சந்திரன், குரு, செவ்வாய் சேர்க்கை மற்றும் சாரம் பெற்றாலும் நல்ல அறிவாற்றல், உயர் கல்வியில் மேன்மை, பூர்வ புண்ணிய வழியில் சாதகமான பலன்கள், பெரியோர்களின் ஆசி உண்டாகும். சூரியன், சந்திரன் சேர்க்கைப் பெற்றாலும், பலம் பெற்றாலும் பூர்வீக வழியில் சொத்துகள் கிடைக்கும்.
சூரியன்- சனி, ராகு சேர்க்கைப் பெற்றாலும், சாரம் பெற்றாலும், சூரியன் வீடான சிம்மத்தில் சனி அல்லது ராகு அமையப்பெற்றாலும் பூர்வ புண்ணிய தோஷமும், பூர்வீகவழியில் சாதகமற்ற பலன்களும், தந்தையிடம் கருத்து வேறுபாடும், தந்தைவழி உறவினர்களிடையே ஒற்றுமைக்குறைவும் உண்டாகும்.
சூரியன்- குரு, செவ்வாய் சேர்க்கைப் பெற்றாலும், சாரம் பெற்றாலும் அழகிய ஆண் குழந்தை பாக்கியம் அமையும். 5-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் அமையப்பெற்றால் பெண் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
சூரியன்- புதன், சனி சேர்க்கைப் பெற்று 5 ,9, 10-ல் இருந்தால் தத்துப் புத்திர யோகமும், இதனை குரு பார்த்தால் தத்துப்பிள்ளை எடுத்தபிறகு குழந்தை பாக்கியமும் உண்டாகும்.
புத்திர ஸ்தானமான 5-ஆம் வீட்டிலும், குரு வீடான தனுசு, மீனத்திலும் சனி, ராகு இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகத் தடை ஏற்படும். சூரியன் பாவிகள் சேர்க்கைப்பெற்று (சனி, ராகு) 6-ல் இருந்தால் புத்திரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.
6-ஆம் பாவம் (மேஷ லக்னம்)
ருணம், ரோகம், எதிர்ப்பு ஆகியவற்றை விளக்குவது 6-ஆம் பாவமாகும்.
மேஷ லக்னத்திற்கு 6-ஆம் அதிபதியான புதன் ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர திரிகோணத்தில் அமைந்தோ சுபர் பார்வையுடன் இருந்தாலும், கடன்களுக்குக் காரகனான சனியும் பலமாக இருந்தாலும் கடன் இல்லாத கண்ணிய வாழ்க்கை உண்டாகும். சனி, புதன் பலவீனம் பெற்றாலும், வக்ரம் பெற்றாலும் அதன் தசை புக்திக் காலத்தில் அதிகப்படியாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை- அதனை அடைப்பதில் நெருக்கடிகள் ஏற்படும்.
புதன் பலமாக சுபர் பார்வையுடன் இருந்தால் நோய், நொடி இல்லாத வாழ்க்கை அமையும். புதன் பலவீனமாக இருந்து அத்துடன் இணையும் கிரகத்தின் காரகத்து வத்திற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். புதனுடன் சூரியன் இருந்தால் உஷ்ணம் சம்பந்தபட்ட பாதிப்பு, கண்களில் பிரச்சினை உண்டாகும். சந்திரனாக இருந்தால் நீர் தொடர்புள்ள நோய், காச நோய் உண்டாகும். செவ்வாயானால் ரத்தம் சம்பந்தபட்ட பாதிப்புகள், வெட்டுக் காயங்கள், சிறுநீரக் கோளாறு, உஷ்ண நோய்கள், தீயால் கண்டம் ஏற்படும். குருவாக இருந்தால் இரண்யா கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்பு, வாயுத்தொல்லை உண்டாகும். சுக்கிரனானால் மர்ம உறுப்புகளில் நோய்கள் உண்டாகும். சனியாக இருந்தால் பித்தம், வாதம், எலும்பு சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகும். ராகுவானால் புண்கள், குஷ்டம், அலர்ஜி, கண்டுபிடிக்க முடியாத உடல்நிலை பாதிப் புகள் உண்டாகும். கேதுவானால் மனநிலை பாதிப்பு, வலிலிப்பு உண்டாகும். 6, 8-ஆம் பாவங் களை குரு பார்வை செய்தால் நோய்கள் ஏற்பட்டாலும் உடனடியாக நிவர்த்தியா கிவிடும்.
6-ஆம் வீடு உபஜெய ஸ்தானம் என்பதால் பாவ கிரகங்கள் 6-ல் இருந்தாலும் சுப கிரகப் பார்வை பெற்றாலும் எந்த எதிர்ப்பையும் சமாளிக்க முடியும். பாவிகளின் பார்வை 6-ஆம் வீட்டிற்கு இருந்தால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். புதனுடன் இணையும் கிரகத்தின் காரகத்து வத்திற்கு ஏற்ப எதிர்ப்புகள் ஏற்படும்.
எடுத்துக்காட்டாக மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் குடும்பம், களத்திர ஸ்தானாதிபதி என்பதால் புதன், சுக்கிரன் இணைந்திருந்தால் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.
7-ஆம் பாவம் (மேஷ லக்னம்)
களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டைக் கொண்டு மணவாழ்க்கை, கூட்டுத் தொழில் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
மேஷ லக்னத்திற்கு களத்திரகாரகன் சுக்கிரனே 7-ஆம் அதிபதி என்பதால் சுக்கிரன் கேந்திர, திரிகோணத்தில் அமையப்பெற்றாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும், பாவ கிரகப் பார்வை இல்லாமல் இருந்தால் அழகான மனைவி அமைவதுடன், அமைதி யான மணவாழ்க்கையும் உண்டாகும். 7-ஆம் வீட்டில் பாவிகள் அமையப் பெறா மலிருந்தால் மணவாழ்க்கை நன்றாக இருக்கும்.
சுக்கிரன் சுப கிரகமான குரு, சந்திரன் சாரம் பெறுவது, சேர்க்கைப் பெறுவது மணவாழ்வில் மகிழ்ச்சியை உண்டாக் குவதோடு, பொருளாதார ரீதியாகவும் மேன்மையை ஏற்படுத்தும். செவ்வாய் லக்னாதிபதி என்பதால் சுக்கிரன், செவ்வாய் சேர்க்கைப் பெறுவது மணவாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்தும்.
சுக்கிரன் நீசம், வக்ரம் பெற்றாலும், சூரியனுக்கு மிக அருகில் அமைந்து அஸ்தங்கம் பெற்றாலும் மணவாழ்க்கை நன்றாக இருக்காது. மேஷ லக்னத்திற்கு களத்திர ஸ்தானமான துலாம் சூரியனுக்கு நீச வீடு என்பதால் 7-ல் சூரியன் இருப்பது நல்லதல்ல. சூரியன் 5-ஆம் அதிபதியாகி 7-ஆம் வீடான துலாத்தில் நீசம் பெறுவதால் காதல் திருமணம் நடைபெறும் அமைப்பு- அதனால் பெற்றோர் மற்றும் உறவினர் களிடையே பகை உண்டாகும்.
சனி, ராகு போன்ற பாவிகள் 7-ல் இருந் தால் மணவாழ்வு பாதிக்கும். சுக்கிரன்- புதன் சேர்க்கை பெற்றிருந்தால் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
சுக்கிரன்- சனி, ராகு, கேது சாரம் பெற்றாலும், சேர்க்கை பெற்றாலும் திருமணம் நடைபெறத் தாமதநிலை, மணவாழ்வில் மகிழ்ச்சிக்குறைவு ஏற்படும்.
7-ஆம் வீடு கூட்டுத்தொழில் ஸ்தானம் என்பதால் சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்று, சுக்கிரன் கேந்திர, திரிகோணத்தில் இருந்தால் கூட்டுத்தொழில்மூலம் லாபம் கிட்டும். மனைவியுடன் கூட்டுசேர்ந்து தொழில் செய்தாலும் நல்ல மேன்மைகளை அடையமுடியும்.
மேஷ லக்னத்தின் மற்ற பாவங்கள்
அடுத்த இதழில்...
செல்: 72001 63001