Advertisment

12 லக்னப் பலன்கள்!

/idhalgal/balajothidam/12-laknam-palans

டக லக்னத்தில் பிறந்தவர்களின் 2-ஆம் பாவங்கள் வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

கடக லக்னம் 3-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீட்டைக்கொண்டு முயற்சி, சகோதர சிறப்பு போன்றவற்றைப் பற்றி அறியலாம்.

ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீட்டதிபதி புதன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபர் சேர்க்கை பெற்று அமையப்பெற்றாலும் புதன் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், சனி சேர்க்கை பெற்று அமையப்பெற்றாலும், 3-ஆம் வீட்டில் சனி, ராகு, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமையப்பெற்று சுபகிரகப் பார்வை பெற்றாலும் சொந் தமுயற்சியால் முன்னேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். புதன் பாவ கிரகங்களின் பார்வை பெறாமல் அமையப் பெற்றால். எதிலும் தனித்து வத்துடன் செயல்பட்டு முன்னேறும் வாய்ப்பு உண்டாகும்.

l

Advertisment

ஆண் கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் 3-ல் இருந்தாலும், 3-ஆம் அதிபதி புதனின் சேர்க்கைப் பெற்று கேந்திர, திரிகோண ஸ்தானங் களில் அமையப்பெற்றிருந் தாலும் இளைய சகோதர யோகம் உண்டாகும். புதன்- செவ்வாய் இணைந்து பலமாக

டக லக்னத்தில் பிறந்தவர்களின் 2-ஆம் பாவங்கள் வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.

கடக லக்னம் 3-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீட்டைக்கொண்டு முயற்சி, சகோதர சிறப்பு போன்றவற்றைப் பற்றி அறியலாம்.

ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீட்டதிபதி புதன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபர் சேர்க்கை பெற்று அமையப்பெற்றாலும் புதன் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், சனி சேர்க்கை பெற்று அமையப்பெற்றாலும், 3-ஆம் வீட்டில் சனி, ராகு, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமையப்பெற்று சுபகிரகப் பார்வை பெற்றாலும் சொந் தமுயற்சியால் முன்னேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். புதன் பாவ கிரகங்களின் பார்வை பெறாமல் அமையப் பெற்றால். எதிலும் தனித்து வத்துடன் செயல்பட்டு முன்னேறும் வாய்ப்பு உண்டாகும்.

l

Advertisment

ஆண் கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் 3-ல் இருந்தாலும், 3-ஆம் அதிபதி புதனின் சேர்க்கைப் பெற்று கேந்திர, திரிகோண ஸ்தானங் களில் அமையப்பெற்றிருந் தாலும் இளைய சகோதர யோகம் உண்டாகும். புதன்- செவ்வாய் இணைந்து பலமாக இருந்தால், சகோதரர்களுடன் இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு, சகோதரர்களால் முன்னேற்றம் அடையும் யோகம் ஏற்படும்.

கடக லக்னத்திற்கு 3-ஆம் வீடு சுக்கிரனுக்கு நீச வீடு என்பதால், இளைய சகோதரி பாக்கியம் பெரும்பாலும் இருக்காது. சுக்கிரன்- சந்திரன் பலமாக அமையப் பெற்று, புதன் சேர்க்கை பெற்று, செவ்வாய் வலுவிழந்திருந்தால் சகோதரி யோகம் உண்டாகும். புதன் ரிஷபம், கடகம், துலாத்தில் அமையப் பெற்று சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்றால் இளைய சகோதரியால் உயர்வுகள் ஏற்படும்.

3-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்று, சகோதர காரகன் செவ்வாய் சனி- ராகு சேர்க்கை பெற்றாலும், செவ்வாய் வீடான மேஷம்- விருச் சிகத்தில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும் சகோதர தோஷம் உண்டாகும். சகோதரர்கள் இருந்தாலும் ஒற்றுமை, அனுகூலம் இருக்காது.

கடக லக்னம் 4-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் பாவத்தைக் கொண்டு தாய், கல்வி, அசையும்- அசையா சொத்துகள், சுகவாழ்வு பற்றி தெளிவாக அறியலாம்.

கடக லக்னத்திற்கு தாய் காரகன் சந்திரன் லக்னாதிபதியாகும். சந்திரனும், 4-ஆம் அதிபதி சுக்கிரனும் பலமாக அமைந்து குரு, புதன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்றால் தாய்க்கு நீண்ட ஆயுள், தாய்வழியில் சொத்து யோகம், பொருளாதார மேன்மை ஏற்படும்.

சுக்கிரன் வலு இழந்து சனி, ராகு சேர்க்கை பெற்றாலும், சந்திரன் வலு இழந்து சனி, ராகு, கேது சேர்க்கை பெற்றாலும், கடகம், துலாத்தில் சனி, ராகு அமையப் பெற்றாலும் தாய்க்கு தோஷங்கள் உண்டாகும். சந்திரனுக்கு 4-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும், சந்திரனுக்கு 4-ஆம் அதிபதி பாவிகள் சேர்க்கை பெற்று அமையப் பெற்றாலும் தாய்க்கு பாதிப்பு ஏற்படும்.

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி சுக்கிரன் சுபகிரகச் சேர்க்கையுடன் பலமாக அமையப் பெற்றால் சொந்த வீடு யோகம் உண்டாகும். சுக்கிரன்- குரு, சந்திரன், புதன் சேர்க்கை பெற்றிருந்தால் அசையாச் சொத்து வகையில் நல்லதொரு விருத்தி உண்டாகும்.

சுக்கிரன்- சூரியன், செவ்வாய் சேர்க்கை யுடன் வலுவாக இருந்தால் தந்தை வழியில் சொத்து யோகம், பூர்வீக சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். கடக லக்னத் திற்கு சுக்கிரன் பாதகாதிபதி என்பதால், திரிகோண ஸ்தானம் மற்றும் 6, 8, 12-ல் சுபகிரகத் தொடர்போடு அமைகின்றபோது அசையாச் சொத்து வகையில் அனுகூலம் மிக்க பலன் ஏற்படும். துலா ராசி சனியின் உச்ச வீடு என்பதால், 4-ல் சனி உச்சம் பெற்று, சுக்கிரன், குரு, புதன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்றிருந்தால், அசையாச் சொத்து வகையில் அபரிமிதமான நற்பலனும் வண்டி, வாகன யோகமும் உண்டாகும். குறிப்பாக கட்டிய வீடு மற்றும் பழைய வாகனங்களை வாங்கி அனுபவிக்கும் வாய்ப்பு அமையும்.

சுக்கிரன் வலு இழந்து 4-ஆம் வீட்டில் சூரியன், ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும், சுக்கிரன் வலு இழந்து துலா ராசியில் சுபர் அமையப் பெறாமல் இருந்தாலும் அசையும், அசையா சொத்துகள் அமைவதில் இடையூறுகள் உண்டாகும்.

கடக லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி சுக்கிரன் என்பதால் கலைத் துறையில் நாட்டம் உண்டாகும். சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கை பெற்று வலுவாக இருந்தால் கட்டடக்கலை, வரைகலை நிபுணராகும் கல்வி அமையும். 4-ல் புதன் வலுப்பெற்று உடன் சூரியன், சுக்கிரன் இருந்தால் கணக்கு, கம்ப்யூட்டர், பொறியியல் சம்பந்தப்பட்ட கல்வி உண்டாகும். சூரியன் வலுப்பெற்று, 4-ஆம் வீட்டில் செவ்வாய், சந்திரன், கேது வலுப்பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் தொடர்புள்ள கல்வி உண்டாகும். 4-ல் சனி, செவ்வாய் அமையப் பெற்றால் தொழில் நுட்பக் கல்வி உண்டாகும். குரு, புதன் 4-ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், மற்றவர்களை வழிநடத்தும் பண்பு, ஆசிரியர் பணி, வணி கவியல் கல்வி, வழக்கறிஞர் கல்வி போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். 4-ஆம் வீட்டில் செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றிருந் தால் நிர்வாகம் சார்ந்த கல்வி உண்டாகும்.

புதன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், சூரியன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங் களில் அமையப் பெற்றாலும், சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், சுக்கிரன், புதன் வலுப்பெற்று குரு பார்வை செய்தாலும் பல்வேறு வித்தைகளைக் கற்கும் ஆற்றலும், தெய்வ பக்தியும், சமுதாயத்தில் பெயர், புகழுடன் வாழும் திறமையும் உண்டாகும். புதன், சூரியன் இணைந்து மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, மீனத்தில் இருந்தால் பல மொழிகளைக் கற்கும் திறன் இருக்கும்.

4-ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்று, சுபர் பார்வையின்றி இருந்து, படிக்கும் வயதில் பாவ கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால் கல்வியில் இடையூறுகள் ஏற்படும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்...)

செல்: 72001 63001

bala260419
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe