டக லக்னத்தில் பிறந்தவர்களில் 1 முதல் 12-ஆம் பாவங்கள் பற்றி சென்ற இதழ்களில் பார்த்தோம். அடுத்து சிம்ம லக்னத்தாரின் பன்னிரண்டு பாவங்கள் பற்றிக் காணலாம்.

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வீரமும், தைரி யமும் நிறைந்தவராக இருப்பார்கள். இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சாநெஞ்சம் இருக்கும். அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடைய வர்கள். சூதுவாது அறியாமல் அனைவரை யும் எளிதில் நம்பிவிடுவர். முகஸ்துதிக்கு அடிமையாவர் என்பதைப் புரிந்துகொள்ளும் உடனிருப்பவர்கள், இவர்களைப் புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்துக்கொண்டு, பின்னால் திட்டுவார்கள். ஆனால், பிறர் பழிச்சொற்களுக்கு செவிசாய்க்காமல், தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்வார்கள். இவர்களின் அமைதியான தோற்றத்தைக்கண்டு ஏமாற்றிவிட முடியாது.

வீண்சண்டைக்குப் போகாதவர்கள் என்றாலும், வந்த சண்டையை விடாமல் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார்கள். அதிலும் தனக்கு இடையூறு செய்பவர்களை வேரோடு களைந்தபின்தான் நிம்மதியடை வார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவ தைத் தவிர்ப்பார்கள். வாழ்க்கை யில் பல தோல்விகளைக் கண்டாலும், இறுதியில் வெற்றி இவர்களுக்கே. நீதி, நேர் மைக்குக் கட்டுப்பட்டவரா தலால், தன்னைப்போலவே பிறரும் நடந்துகொள்ள வேண்டுமென நினைப் பார்கள். இவர்களுக்கு நியாயமாகத் தோன்றும் எல்லாமும் மற்றவர்களுக்கு நியாயமாகத் தோன்றவேண்டிய அவசிய மில்லை என்பதால், நிறையபேரின் பகை மையை எளிதில் சம்பாதித்துவிடுவார்கள்.

என்றாலும் தங்களுடைய திறமை, சாமர்த் தியம் போன்றவற்றால், எதிலும் தனித்துநின்று போராடி வெற்றிபெறுவார்கள். முன்கோபப் பட்டாலும் தான் செய்தது தவறு என தெரிந் தால், உடனே மன்னிப்பு கேட்பார்கள். மற்றவர் செய்யும் பெரிய தவறுகளையும் எளிதில் மன்னிக்கும் சுபாவம்கொண்ட இவர்கள், சிறிய விஷயங்களைப் பெரிதாக்கிவிடுவார்கள்.

Advertisment

முரட்டுக்குணம் கொண்டவராகவும், முன்கோபம் மிக்கவராகவும், பழகுவதற்கு குழந்தைகுணம் கொண்டவராகவும் இருப் பார்கள். பலவகை உணவு சாப்பிடுவதில் பிரியர்கள். தெய்வ பக்தி, தரும சிந்தனை, மற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவர்கள். செயல்களில் ஒரு அதிகாரத் தோரணை காணப்படும். எளி தில் மற்றவர்களுக்கு அடிமையாகமாட் டார்கள். சில நோய்கள் வந்துசென்றாலும், எப்பொழுதும் உழைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். 5, 10, 27 ஆகிய வயதுக் காலத்தில் ஜாதகருக்கு ஜுரம், நீரால் ஆபத்து போன்றவை உண்டாகும்.

சூரியனின் ஆதிக்கம்கொண்ட இவர் களுக்கு குருவின் பார்வை இருந்தாலும், சூரியன், குரு கேந்திர- திரிகோண ஸ்தானங் களில் அமையப்பெற்றாலும் வளமான வாழ்வு அமையும்.

சிம்ம லக்னம் 1-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்தைக்கொண்டு ஒருவரின் உடலமைப்பு, தேக ஆரோக்கிய நிலை, செல்வம், செல்வாக்கு போன்றவற்றைத் தெளிவாக அறிலாம்.

சிம்ம லக்னத்திற்கு அதிபதி சூரியன். இவர் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற் றாலும், சுபகிரகப் பார்வை பெற்றிருந்தாலும், சுபகிரக வீட்டில் சூரியன் வலுவாக அமையப் பெற்றாலும் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக் கியம், அழகிய முகத்தோற்றம், கம்பீரமான உடலமைப்பு, அதிகாரம் செய்யும் மனவலிமை உண்டாகும்.

da

லக்னாதிபதி சூரியன் சனி, ராகு- கேது சேர்க்கை பெற்றோ, சனி பார்வை பெற்றோ இருந்தாலும், சனி ஜென்ம லக்னத்தைப் பார்வை செய்தாலும், ஜென்ம லக்னத்தில் சனி, ராகு- கேது அமையப்பெற்றாலும் தேக ஆரோக்கியம் பாதிக்கும் நிலை, மூர்க்க குணம் உண்டாகும்.

நவகிரகங்களில் அரச கிரகமாக விளங்கும் சூரியன் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாகும். சூரியன் மற்ற கிரகங்களை சுட்டெரிக்கும் வலிமை கொண்டது. (மற்ற கிரகங்களை அஸ்தங்கமாக்கும்). ஆனால் சூரியனையே வலுவிழக்கச் செய்யும் கிரகமாக விளங்குவது நிழல்கிரகமான ராகு. ராகுவுக்கு மிக அருகில் சூரியன் அமைவது நல்லதல்ல. சூரியன் ராகுவுக்கு மிக அருகில் அமையப் பெற்றாலும், லக்னத்தில் ராகு அமையப் பெற்றாலும் வாழ்வில் சோதனைகளை சந்திக்க நேரிடும். சூரியன் சனியின் வீடான மகரம், கும்பத்தில் இருப்பதும், சனி ராகுவின் சாரம் பெறுவதும் நல்லதல்ல.

லக்னாதிபதி சூரியன், அஷ்டமாதிபதி குரு இருவரும் வலுப்பெற்றிருந்தாலும், சனி ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், சூரியன், குரு போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்று கேந்திர- திரிகோணத்தில் இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். குரு, செவ்வாய், சுக்கிரன் கேந்திர திரிகோணங்களில் அமையப்பெற்றாலும், சந்திர கேந்திரத்தில் குரு, சனி அமையப் பெற் றாலும் நீண்ட ஆயுள் உண்டாகும்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, லக்னாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகங்களான குரு, செவ்வாய், சந்திரன் சாதகமான பலன் களைத் தரும். புதன், சுக்கிரன் சுபகிரகம் என்ப தால், ஓரளவுக்கு நற்பலன்களைத் தரும் அமைப்புண்டு.

சிம்ம லக்னம் ஸ்திர லக்னம் என்பதால், 3-ஆம் அதிபதி சுக்கிரனும், அட்டமாதிபதி குருவும் மாரகாதிபதிகள். சுக்கிரன், குரு தசாபுக்திக் காலங்களில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

2-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு இரண்டாம் பாவத்தைக்கொண்டு தனம், குடும்பம், வாக்குவலிமை, கண்கள் போன்றவற்றைத் தெளிவாக அறியலாம்.

சிம்ம லக்னத்திற்கு தன ஸ்தானாதிபதி புதன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், லக்னாதிபதி சேர்க்கை பெற்று கேந்திர- திரிகோணத்தில் இருந்தாலும், குரு போன்ற சுபகிரகப் பார்வை பெற்றாலும், சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் அமையப் பெற்றாலும் தாராள தனயோகம், நல்ல வசதிவாய்ப்பு உண்டாகும். புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று கன்னியில் இருந்தாலும், லக்ன கேந்திரம் அல்லது சந்திர கேந்திரம் பெற்றாலும் தாராள தனச்சேர்க்கை உண்டாகும். சூரியன், புதன் சேர்க்கை பெற்று, தனகாரகன் குரு கேந்திர ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும், சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர ஸ்தானங்களிலோ இருந்தாலும் கோடி கோடியாகப் பணம் சேரும் அற்புத அமைப்புண்டாகும்.

புதன் பாவகிரகச் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் மறையப்பெற்றாலும், வக்ரம் பெற்றாலும், குரு பலமிழந்தோ, வக்ரம் பெற்றோ அமையப் பெற்றிருந்தாலும் பொருளாதார ரீதியாக பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.

புதன், குரு, சுக்கிரன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்று, கேந்திர- திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும், புதன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், புதனையும் 2-ஆம் வீட்டையும் குரு பார்வை செய்தாலும் அமைதி யான குடும்ப வாழ்க்கை உண்டாகும்.

கல்வி, அறிவாற்றலுக்குக் காரகனாக புதன் 2-ஆம் அதிபதி என்பதால், இயற்கையாகவே நல்ல அறிவாற்றல், சிறப்பான பேச்சுத்திறமை, மற்றவர்களை வழிநடத்தும் ஆற்றல் இருக்கும்.

லக்னாதிபதி சூரியனுடன் புதன் இணைந்து பலம் பெற்றாலும், குரு பலம் பெற்றாலும் நல்ல வாக்குவலிமை, சிறப்பான பேச்சாற்றல், பேச்சால்- வாக்கால் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

2-ஆம் வீட்டில் சனி, ராகு- கேது போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும், சனி, செவ் வாய் போன்ற பாவிகள் 2-ஆம் வீட்டைப் பார்வை செய்தாலும் முரட்டுத்தனமாகப் பேசும் குணம், பேச்சால் பல்வேறு சிக்கல் களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை, அமைதி யற்ற குடும்ப வாழ்வு உண்டாகும். 2-ஆம் வீட்டில் சனி- ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்று அதன் தசாபுக்தி நடைபெற்றால், குடும்ப வாழ்வில் ஒற்றுமையில்லாத நிலை உண்டாகும்.

சுக்கிரன், சூரியன் இணைந்து 2, 6, 8, 12-ல் இருந்தாலும், சனி, ராகு போன்ற பாவிகளின் சேர்க்கை பெற்றாலும் கண்களில் பாதிப்பு உண்டாகும். சுக்கிரன், சூரியன் இணைந்து அமையப்பெற்று செவ்வாய் பார்வை செய்தாலும், 2, 12-ஆம் வீடுகளைப் பாவிகள் பார்வை செய்தாலும் கண் பார்வை பாதிக்கும். 2-ஆம் வீட்டை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தால், கண்களில் பாதிப்பு ஏற்பட்டாலும் நிவர்த்தி உண்டாகும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001